Author: admin

சென்னை: எதிர்வரும் ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 14 முதல் 17-ம் தேதி வரையில் அபுதாபியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது ஆண்டாக இந்தியாவுக்கு வெளியே ஐபிஎல் ஏலம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. வரும் 15-ம் தேதிக்குள் பத்து ஐபிஎல் அணிகளும் தங்கள் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள் குறித்த விவரத்தை வெளியிட வேண்டும். அதன் பின்னர் இந்த ஏலத்தில் பங்குபெறும் வீரர்களின் பட்டியல் பேட்ஸ்மேன், ஆல்ரவுண்டர், பந்து வீச்சாளர் என பிரிவு வாரியாக வெளியாகும். அதை அடிப்படையாக கொண்டு டிசம்பர் மாதம் நடைபெறும் மினி ஏலத்தில் ஐபிஎல் அணிகள் தங்களுக்கான வீரர்கள் தேர்வு செய்வார்கள்.

Read More

சீன கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மத்​திய கமிட்​டி, அந்த நாட்​டின் உயர்​நிலைக் குழு​வாக கருதப்​படு​கிறது. இந்த கமிட்டி ஆண்​டு​தோறும் அக்​டோபர் மாதம் பெய்​ஜிங்​கில் கூடி ஆலோ​சிப்​பது வழக்​கம். இதன்​படி கடந்த 20-ம் தேதி அதிபர் ஜி ஜின்​பிங் தலை​மை​யில் மத்​திய கமிட்​டி​யின் கூட்​டம் பெய்​ஜிங்​கில் தொடங்​கியது. இதில் 350 உறுப்​பினர்​கள் பங்​கேற்​றனர். 3 நாட்​கள் நடை​பெற்ற கூட்​டம் நேற்று நிறைவுப் பெற்​றது. இதன் ​பிறகு மத்​திய கமிட்டி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சீன கம்​யூனிஸ்ட் கட்​சி, ஆட்சி நிர்​வாகம் மற்​றும் ராணுவத்​தில் முக்​கிய பதவி​களில் இருந்த 9 பேர் பணி நீக்​கம் செய்​யப்​பட்டு உள்​ளனர். குறிப்​பாக ஹீ வெய்​டோங்​கின் பதவி நீக்​கத்​துக்கு மத்​திய கமிட்டி கூட்​டத்​தில் ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது. அவருக்கு பதிலாக ராணுவத்​தின் ஊழல் தடுப்பு துறை தலை​வ​ராக ஜாங் ஷெங்​மின் நியமிக்​கப்​பட்டு உள்​ளார். அவர் மத்​திய ராணுவ கமிஷனின் துணைத் தலை​வ​ராக​வும் பதவி வகிப்​பார்.

Read More

துல்கர் சல்மானின் ‘காந்தா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார், பாக்யஸ்ரீ போர்சே. மீடியா மற்றும் வேஃபரர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், ராணா, சமுத்திரக்கனி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில் நடிகர் துல்கர் சல்மானை, உண்மையான நடிப்பு சக்கரவர்த்தி என்று பாக்யஸ்ரீ போர்சே பாராட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறும்போது, “என் மீது நம்பிக்கை வைத்து, என்னைப் போன்ற ஒரு புதுமுகத்துக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்கு இயக்குநர் செல்வமணி செல்வராஜுக்கு நன்றி. அவர்தான் எனது முதல் ஆசிரியர், இயக்குநர். நடிகர் ராணா இந்​தப் படத்​தின் முதல் நாளி​லிருந்தே எனக்கு ஆதரவளித்து வரு​கிறார். ஒரு நடிக​ராக இந்​தப் பயணத்​தில் அவரை எனது வழி​காட்​டி​யாகக் கொண்​டிருப்​பது அதிர்​ஷ்டம். அவர் ஆதர​வும் நிலை​யான வழி​காட்​டு​தலும் இல்​லாமல், என்​னால் சிறப்​பாக நடித்​திருக்க முடி​யாது.

Read More

சென்னை: சென்​னை​யில் ஆதர​வற்​றோர் இல்​லத்​துக்கு வழங்​கப்​பட்ட நிலத்தை வணிக நோக்​கில் பயன்​படுத்​தி​ய​தால், 3.12 ஏக்​கர் நிலத்தை அரசு மீட்டு நடவடிக்கை எடுத்​துள்​ளது.இது தொடர்​பாக, சென்னை மாவட்ட ஆட்​சி​யரகம் வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பு: சமூக சேவைக்​கான நிபந்​தனை​களின் அடிப்படையில் அம்​பத்​தூர், ஒரகடம் பகு​தி​யில் உள்ள அன்னை ஆதர​வற்​றோர் இல்​லத்​துக்கு 3.12 ஏக்​கர் நிலம் அரசு சார்​பில் வழங்கப்பட்டிருந்தது.

Read More

இந்த செய்தியை எல்ஐசி திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக எல்ஐசி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எல்ஐசியின் முதலீட்டு முடிவுகள் வெளிப்புற காரணிகளால் பாதிக்கப்படுகின்றன என வாஷிங்டன் போஸ்ட் சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் தவறானவை, ஆதாரமற்றவை, உண்மைக்குப் புறம்பானவை. கட்டுரையில் கூறப்பட்டுள்ளபடி ஆவணமோ அல்லது திட்டமோ எல்ஐசியால் இதுவரை தயாரிக்கப்படவில்லை.எல்ஐசியின் முதலீட்டு முடிவுகள், வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளின்படி, விரிவான ஆய்வுக்குப் பிறகு சுயமாக எடுக்கப்படுகின்றன. நிதித்துறை அல்லது வேறு எந்த ஒரு அமைப்புக்கும் இதில் எந்தப் பங்கும் இல்லை.

Read More

ஸ்மிருதி மந்தனா மற்றும் பலாஷ் முச்சலின் திருமணம் ஏமாற்று வதந்திகள் மற்றும் ஸ்மிருதியின் அணியினரின் சமூக ஊடக செயல்பாடுகள் என சர்ச்சையில் மூழ்கியுள்ளது. குழு உறுப்பினர்கள் திருமண இடுகைகளை அகற்றிவிட்டு, பலாஷைப் பின்தொடரவில்லை, அதே சமயம் ரகசிய மேற்கோள்கள் மற்றும் பிற பெண்களுடன் மீண்டும் வெளிவந்ததாகக் கூறப்படும் உரையாடல்கள் நாடகத்தை தீவிரப்படுத்தியுள்ளன, இதனால் ரசிகர்கள் ஒவ்வொரு ஆன்லைன் நகர்வையும் பிரித்தெடுக்கிறார்கள். ஸ்மிருதி மந்தனா மற்றும் பலாஷ் முச்சலின் திருமண நாடகம் இணையத்தில் இடம் பெற்றுள்ளது, நேர்மையாக, ஒவ்வொரு மணி நேரமும் ஒரு புதிய திருப்பம் இருப்பதைப் போல உணர்கிறது. இந்த ஜோடிக்கு ஒரு அழகான, கொண்டாட்டமான தருணமாக இருக்க வேண்டிய விஷயம் முழுக்க முழுக்க ஆன்லைன் காட்சியாக மாறியுள்ளது. பலாஷ் பல பெண்களுடன் துரோகம் செய்ததாகக் குற்றம் சாட்டும் வதந்திகள் வரை, திருமணத்தை நல்லபடியாக நிறுத்துவது பற்றிய கிசுகிசுக்கள் வரை, ரசிகர்களால் பேசுவதை நிறுத்த முடியாது. Reddit பற்றிய கலந்துரையாடல் நூல்கள்…

Read More

பாட்னா: பிஹார் தேர்தலில் போட்டியிட்ட 25 அமைச்சர்களில் 24 பேர் வெற்றி பெற்று தொகுதியை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். பாஜகவைச் சேர்ந்த துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய்குமார் சின்ஹா ஆகியோர் முறையே தாராப்பூர், லக்கிசராய் தொகுதிகளில் வெற்றி கண்டனர். தற்போது முதல்வராக உள்ள நிதிஷ் குமார், மேலவை உறுப்பினராக(எம்எல்சி) இருக்கிறார். அதனால் அவர் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை.

Read More

சென்னை ஐஐடியில் நடைபெற்ற மாணவர்களின் புத்தொழில் – அறிவியல் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த புதுமையான தயாரிப்புகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் ‘சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுப்போம்’ என்ற தலைப்பில் மாணவர்களுக்கான புத்தொழில் மற்றும் அறிவியல் சார்ந்த சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையிலான கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதில், இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 38 தயாரிப்புகள் மற்றும் அறிவியல் சிந்தனைகள் மூலம் உருவாக்கப்பட்ட புதுமையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

Read More

குமாமோட்டோ: ஜப்​பானின் குமாமோட்டோ நகரில் குமாமோட்டோ மாஸ்​டர்ஸ் பாட்​மிண்​டன் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் ஒற்​றையர் பிரி​வில் நடை​பெற்ற தகுதி சுற்​றில் இந்​தி​யா​வின் நைஷா கவுர் பட்​டோயே, நியூஸிலாந்​தின் ஷவுனா லியுடன் மோதி​னார். இதில் 17 வயதான நைஷா கவுர் பட்​டோயே 17-21 18-21 என்ற செட் கணக்​கில் போராடி தோல்வி அடைந்​தார். இந்த ஆட்​டம் 32 நிமிடங்​களில் முடிவடைந்​தது.

Read More

லண்டன்: சிறு​வர்​களுக்​கான கதை புத்​தகத்​துக்கு புக்​கர் பரிசு, அடுத்​தாண்டு முதல் தொடங்​கப்​படு​வ​தாக புக்​கர் பரிசு அறக்​கட்​டளை அறி​வித்​துள்​ளது.இங்​கிலாந்து மற்​றும் அயர்​லாந்​தில் ஆங்​கில மொழி​யில் வெளி​யிடப்​படும் சிறந்த புனைக் கதை புத்​தகத்​துக்கு ஒவ்​வொரு ஆண்​டும் புக்​கர் பரிசு என்ற இலக்​கிய விருது வழங்​கப்​படு​கிறது. இதற்கு 50,000 பவுண்ட் பரிசு அளிக்​கப்​படு​கிறது.

Read More