Author: admin

பெங்களூரு: கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள கார்வார் தொகுதியின் எம்எல்ஏ சதீஷ் கிருஷ்ணா சைல் (59) சட்ட விரோதமாக ரூ.38 கோடி மதிப்பிலான கனிம வளங்களை ஏற்றுமதி செய்ததாக சுரங்க மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு பெங்களூருவில் மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அமலாக்கத்துறை வழக்கு பதிந்து, சதீஷ் கிருஷ்ணாவுக்கு சொந்தமான 15 இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், ‘‘சதீஷ் கிருஷ்ணா சைல் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான 15 இடங்களில் 2 தினங்கள் சோதனை நடத்தப்பட்டது. அதில் ரூ.1.68 கோடி ரொக்கம், 6.75 கிலோ தங்கம், 268 கிலோ வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. பல்வேறு வங்கி கணக்குகளில் இருந்த ரூ.14.13 கோடி முடக்கப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு, அவரது மகனும் பழநி எம்எல்ஏவுமான இ.பெ.செந்தில்குமார் வீடு, அவரது மகள் இந்திரா வீடு ஆகிய இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று (சனிக்கிழமை) காலை 7.15 மணியளவில் திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டுக்கு மூன்று வாகனங்களில் வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். வீட்டுக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின்போது அமைச்சர் ஐ.பெரியசாமி அவரது வீட்டில் இருந்தார். இதே நேரத்தில் திண்டுக்கல் சீலப்பாடியில் அமைச்சரின் மகனும் பழநி தொகுதி எம்எல்ஏவுமான இ.பெ.செந்தில்குமார் வீட்டுக்கு மூன்று வாகனங்களிலும், அசோக்நகரில் உள்ள அமைச்சரின் மகள் இந்திரா வீட்டுக்கு மூன்று வாகனங்களிலும் வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனை நடைபெறும் வீடுகளில் சிஆர்பிஎப் போலீஸார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புபணியில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர்…

Read More

நம் பாரத தேசம், 79-வது சுதந்திர தினத்தை கொண்டாடியிருக்கிறது. இந்த நன்னாளில், டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில், 2047-ம் ஆண்டுக்குள் ‘விக் ஷித் பாரத்’ என்ற இலக்கை அடைய, இளைஞர்களின் திறன் மேம்பாடு, தொழில்நுட்ப புரட்சி, மற்றும் பொருளாதார தன்னிறைவு ஆகியவற்றை மையப்படுத்தி பேசினார். இந்தப் பின்னணியில், ‘வேலைவாய்ப்பு’ என்ற வெற்றுச் சொல்லை மீறி, ‘வேலை உத்தரவாதம்’ என்ற தொலைநோக்கு பார்வையை நாம் உருவாக்க வேண்டிய தருணம் இது! தமிழ்நாடு, கல்வியில் முன்னோடியாகத் திகழ்கிறது. ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் மாணவர்கள் பல்வேறு துறைகளில் பட்டம் பெறுகின்றனர். இதில், பொறியியல் துறையில் 2.5 லட்சம், மருத்துவத் துறையில் 20,000 – 25,000, கலை மற்றும் அறிவியல் துறைகளில் தலா 1.15 – 1.7 லட்சம், மற்றும் தொழில்துறை பயிற்சி நிறுவனங்களில் (ITI) 40,000-க்கும் மேற்பட்டோர் பட்டதாரிகளாக வெளிவருகின்றனர். ஆனால், இவர்களில் 40% பேருக்கு மட்டுமே தற்போது வேலைவாய்ப்பு கிடைக்கிறது.…

Read More

கிரேட் இந்தியன் பஸ்டார்ட் சரணாலயம் இந்தியாவில் மிகச்சிறிய வனவிலங்கு சரணாலயம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த சரணாலயம் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் அமைந்துள்ளது மற்றும் சுமார் 2 சதுர கிலோமீட்டர் மட்டுமே உள்ளடக்கியது. இது ஒரு அமைதியான, வெயிலில் நனைந்த புல்வெளி, இது மிகவும் ஆபத்தான பறவை இனங்களை பாதுகாக்கிறது-பெரிய இந்திய பஸ்டார்ட். இந்த இடம் பறவைக் கண்காணிப்பாளர்களுக்கு ஒரு சொர்க்கம்.இடம்இந்த சரணாலயம் கட்சின் பெரிய ரான்ஸின் அரை வறண்ட புல்வெளிகளில் அமைந்துள்ளது. புல்வெளிகளும் சதுப்புநில சதுப்பு நிலங்களும் கிரேட் இந்தியன் பஸ்டர்டுக்கு சரியான வாழ்விடத்தை வழங்குகின்றன, இது இனப்பெருக்கம் செய்வதற்கான பெரிய இடங்களை விரும்புகிறது.சரணாலயத்தின் நோக்கம்இந்த சரணாலயம் சில அற்புதமான உயிரினங்களை அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் கவனிப்பதற்கான தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. இந்த சரணாலயம் கிரேட் இந்தியன் பஸ்டர்டை இன்னும் காணக்கூடிய சில இடங்களில் ஒன்றாகும். இந்த பறவை இனங்கள் மிகப்பெரிய மற்றும் மிகப் பெரிய பறக்கும் பறவைகளில் ஒன்றாகும்,…

Read More

புதுடெல்லி: குவைத் நாட்​டில் இந்​தி​யர்​கள் உட்பட ஆசிய நாடு​களைச் சேர்ந்த ஏராள​மானோர் தொழிலா​ளர்​களாக வேலை செய்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில் அங்கு நேற்று விஷ சாரா​யம் குடித்த நிலை​யில் 63 பேர் உடல் நலம் பாதிக்​கப்​பட்​டனர். இவர்​களில் பெரும்​பாலான​வர்​கள் இந்​தி​யர்​கள் என்று தெரிய​வந்​துள்​ளது. இதைத் தொடர்ந்து பாதிக்​கப்​பட்ட 63 பேரும் உடனடி​யாக மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டனர். அவர்​களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பலனின்றி 23 பேர் உயி​ரிழந்​தனர். இவர்​கள் அனை​வரும் ஆசிய நாட்​டைச் சேர்ந்​தவர்​கள் என்று தெரிய​வந்​துள்​ளது. இறந்​தவர்​களின் பெயர் விவரங்​கள் இது​வரை வெளி​யிடப்​பட​வில்​லை. மற்ற அனை​வருக்​கும் தீவிர சிகிச்​சைப் பிரி​வில் தொடர்ந்து சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. இதில் 21 பேருக்கு நிரந்​தர​மாக கண் பார்வை பறி​போய் உள்​ளது.

Read More

சென்னை: பொறி​யியல் படிப்​பு​களுக்​கான துணைக் கலந்​தாய்வு ஓரிருநாட்​கள் தள்​ளிப்​போக வாய்ப்​பு​கள் இருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன. தமிழகத்​தில் அண்ணா பல்​கலைக்​கழகத்​தின்​கீழ் இயங்​கும் 423 பொறி​யியல் கல்​லூரி​களில் இளநிலைப் படிப்​பு​களுக்கு ஒரு லட்​சத்து 87,227 அரசு ஒதுக்​கீட்டு இடங்​கள் உள்​ளன. இவற்றை நிரப்​புவதற்​கான மாணவர் சேர்க்கை கலந்​தாய்வு கடந்த ஜூலை 7-ம் தேதி தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. சிறப்​புப் பிரிவு மற்​றும் பொதுப் பிரிவுக்​கான கலந்​தாய்​வில் 1.48 லட்​சம் இடங்​கள் நிரம்​பி​யுள்​ளன. எஞ்​சி​யுள்ள சுமார் 40 ஆயிரம் இடங்​களை நிரப்​புவதற்​கான துணைக் கலந்​தாய்வு ஆகஸ்ட் 21-ல் நடை​பெறும் என்று தொழில்​நுட்​பக் கல்வி இயக்​குநரகம் சார்​பில் அறி​விப்பு வெளி​யிடப்​பட்​டது. இதற்​கான இணை​யதள விண்​ணப்​பப் பதிவு முடிந்​து​விட்ட நிலை​யில் துணைக் கலந்​தாய்​வில் பங்​கேற்க 15 ஆயிரத்​துக்​கும் அதி​க​மான மாணவர்​கள் விண்​ணப்​பித்​துள்​ளனர். தற்​போது மாணவர்​களின் சான்​றிதழ்​கள் சரி​பார்க்​கும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. அடுத்​த​தாக தரவரிசைப் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டு, கலந்​தாய்வு ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்​கும் என்று எதிர்​பார்க்​கப்​பட்​டது. ஆனால்,…

Read More

மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் (அம்மா) தலைவராக மோகன்லால் இருந்து வந்தார். ஹேமா கமிட்டி அறிக்கை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சைகள் காரணமாகத் தலைவர் பதவியிலிருந்து அவர் ராஜினாமா செய்தார். மற்ற நிர்வாகிகளும் பதவி விலகியதை அடுத்து, புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல், கொச்சியில் நேற்று நடைபெற்றது. தலைவர், 2 துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர் உட்பட 6 முக்கிய பதவிகள் மற்றும் 11 செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இது. இதில் தலைவர் பதவிக்கு ஸ்வேதா மேனனும் நடிகர் தேவனும் போட்டியிட்டனர். இதில் ஸ்வேதா மேனன் வெற்றிபெற்றார். பொதுச் செயலாளராக, குக்கு பரமேஸ்வரன் ,பொருளாளராக உன்னி சிவபால், துணைத் தலைவர்களாக லட்சுமி பிரியா, ஜெயன்சேர்த்தலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இணைச் செயலாளராக அன்சிபா ஹாசன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மலையாள நடிகர் சங்க வரலாற்றில் பெண் ஒருவர் தலைவராவது இதுதான் முதன்முறை. முக்கிய நிர்வாகிகள் அனைவரும் பெண்களாகத்…

Read More

மேலக்கோட்டையூர்: விஐடி பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு மேலக்கோட்டையூர் பல்கலை. வளாகத்தில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் எம்.பி, ‘சோதனைகளை சாதனைகளாக மாற்ற பழகிக்கொள்ள வேண்டும்’ என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூரில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆவதையொட்டி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பல்கலை.வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜி.வி. செல்வம் முன்னிலை வகித்தார். இணை துணைவேந்தர் தியாகராஜன் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் எம்.பி. கலந்து கொண்டார். முன்னதாக வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பயின்று பல்வேறு நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் பணியாற்றும் 5 பேருக்கு சிறப்பு விருதுகளை கமல்ஹாசன் வழங்கி பாராட்டினார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியதாவது: வி.ஐ.டி.…

Read More

7 அன்பான செயல்கள் ஒவ்வொரு பெற்றோரும் மகிழ்ச்சியான, நம்பிக்கையான குழந்தைகளை வளர்க்க பயிற்சி செய்ய வேண்டும் (படம்: இஸ்டாக்) பெற்றோருக்குரியது சரிசெய்ய முடியாத அழகு மற்றும் ஆழ்ந்த சவால்களின் பயணம். நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தவுடன், உங்கள் வாழ்க்கை என்றென்றும் மாற்றப்படுகிறது – உங்கள் இதயம் மென்மையாக்கப்படுகிறது, உங்கள் பொறுமை ஆழமானது மற்றும் உங்கள் மனம் மேலும் அணுகப்படுகிறது. நீங்கள் இனி உங்களுக்காக வாழவில்லை; நீங்கள் ஒரு சிறிய ஆன்மாவை கவனித்துக்கொள்கிறீர்கள், ஒரு வாழ்க்கையை வடிவமைத்து, அதை அன்பு, அர்ப்பணிப்பு மற்றும் எல்லையற்ற கவனிப்புடன் வழிநடத்துகிறீர்கள். ஒவ்வொரு புன்னகையும், ஒவ்வொரு கண்ணீரும், ஒவ்வொரு சிறிய சாதனையும் ஒரு பெரிய பொறுப்பு மற்றும் குழந்தையின் எல்லையற்ற சந்தோஷங்களுக்கு ஒரு சாட்சி.உணர்ச்சிபூர்வமான பாதுகாப்பு மற்றும் இணைப்பை வளர்க்கும் போது உங்கள் குழந்தையின் “பாதுகாப்பான இடமாக” மாறுவதற்கான வழிகளை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், ஜான் பவுல்பி இணைப்பு கோட்பாடு ஒரு பராமரிப்பாளரை ஒரு “பாதுகாப்பான தளமாக”…

Read More

புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் மேலும் கூறியதாவது: ஆபரேஷன் சிந்​தூரின்​போது இந்​தி​யா​வின் தொழில்​நுட்ப திறனை பார்த்து உலகம் வியந்​தது. பாகிஸ்​தான் ராணுவம், நமது ராணுவ தளங்​கள், விமானப் படைத்தளங்கள்,வழி​பாட்​டுத் தலங்​கள் மற்​றும் மக்​களை குறி​வைத்து ஏவு​கணை​கள் மற்​றும் ட்ரோன்​கள் மூலம் மிகப்​பெரிய தாக்​குதல்​களை நடத்​தி​யது. அனைத்து ஏவு​கணை​களும் ட்ரோன்​களும் நடு​வானில் அழிக்​கப்​பட்​டன. பாகிஸ்​தா​னால் சிறிய சேதத்​தைக்​கூட ஏற்​படுத்த முடிய வில்​லை. வரும் 2035-ம் ஆண்​டுக்​குள் மருத்​து​வ​மனை​கள், ரயில்வே கட்​டமைப்​பு​கள், வழி​பாட்​டுத் தலங்​கள் பொது​மக்​கள் வசிக்​கும் பகு​தி​களுக்கு புதிய தொழில்​நுட்ப தளங்​கள் மூலம் முழு​மை​யான பாது​காப்பு வழங்​கப்​படும். மகா​பாரத போர் நடந்​த​போது கிருஷ்ணர் தனது சுதர்சன சக்​கரத்​தால் சூரிய ஒளியைத் தடுத்து பகலை இரவாக்​கி​னார். சுதர்சன சக்​கரத்​தால் சூரிய ஒளி தடுக்​கப்​பட்​டது, அர்​ஜுனன், ஜெயத்​ரதனை கொல்ல எடுத்த சபதத்தை நிறைவேற்ற முடிந்​தது. இது சுதர்சன சக்​கரத்​தின் வலிமை ஆகும். இதே​போல நாட்​டின் வான் பாது​காப்​புக்​காக சுதர்சன சக்கர திட்​டம்…

Read More