இந்தப் படத்தின் கதையில் சில இடங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என ஆமிர்கான் கூறியதாகவும் இதனால் படப்பிடிப்பு தாமதமாகி வருவதாகவும் ஏற்கெனவே செய்திகள் வெளியாயின. ஆனால், இதை பால்கேவின் பேரன் சந்திரசேகர் ஸ்ரீகிருஷ்ணா புசல்கர் மறுத்திருந்தார். இதன் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறது என்றும் வித்யா பாலன், பால்கே மனைவியாக நடிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், பலமுறை கதை திருத்தம் செய்த பிறகும், ஆமிர்கானுக்கு திருப்தி இல்லாததால் இப்படத்தைத் தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளனர்.இதற்கிடையே, இயக்குநர் ராஜமவுலியும் பால்கேவின் பயோபிக்கை இயக்க இருப்பதாகக் கடந்த 2023-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதில் ஜூனியர் என்.டி.ஆர். பால்கே கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது.
Author: admin
சென்னை: சென்னையில் இன்று நடைபெறவிருந்த அதிமுக ஆர்ப்பாட்டம் நவ.20-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (SIR) ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி நிகழ்த்தப்படும் பல்வேறு முறைகேடுகளுக்கு காரணமான திமுக அரசுக்கு எதிராக இன்று (நவ.17) ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
தொழில்நுட்ப காரணத்தால், பெங்களூரு-ஓசூர் இடையே மெட்ரோ ரயில் சேவை திட்டம் சாத்தியம் இல்லை என கர்நாடகா அரசிடம் பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓசூரில் உள்ள தொழிற்சாலைகளுக்கு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்தும், பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனங்களுக்கு ஓசூரில் இருந்தும் தினசரி ஆயிரகணக்கானவர்கள் பணிக்கு சென்று வருகின்றனர். ஓசூர்-பெங்களூருக்கு இடையே 40 கிமீ தூரம் உள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையே சாலை போக்குவரத்தில் வாகன நெரிசல் அதிகரித்து வருவதால், தொழிலாளர்கள், பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
உங்கள் மூக்கைத் தேர்ந்தெடுக்கும் அந்த சிறிய குழந்தைப் பழக்கம், பெரியவர்களாக இருந்தாலும், பெரும்பாலான மக்கள் ரகசியமாகத் தொடர்வது, தோன்றுவதை விட மிகவும் குறைவான பாதிப்பில்லாததாக இருக்கலாம். நாசி எரிச்சல், வறட்சி அல்லது மூச்சுத் திணறல் போன்றவற்றுக்கு விரைவான தீர்வாக பலர் இதைத் தவிர்க்கிறார்கள், ஆனால் விஞ்ஞானிகள் இப்போது குழப்பமான சாத்தியத்தை எழுப்புகின்றனர். மீண்டும் மீண்டும் மூக்கு எடுப்பது நாசிப் புறணியை சேதப்படுத்தும் என்று புதிய ஆராய்ச்சி கூறுகிறது, இதனால் ஆபத்தான பாக்டீரியா நேரடியாக மூளைக்குள் பயணிக்க முடியும். இந்த பாதை அல்சைமர் நோய் மற்றும் டிமென்ஷியாவுடன் தொடர்புடைய வீக்கத்திற்கு பங்களிக்கக்கூடும். இது வியத்தகு, கிட்டத்தட்ட நம்பமுடியாததாகத் தெரிகிறது, இருப்பினும் இந்த யோசனையின் பின்னணியில் உள்ள உயிரியல் வழிமுறை புனைகதை அல்ல. இது உண்மையான உடற்கூறியல் மற்றும் வளர்ந்து வரும் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டது, இது அன்றாட நடத்தைகள் மற்றும் நீண்டகால மூளை ஆரோக்கியம் பற்றி நாம் எவ்வாறு சிந்திக்கிறோம் என்பதை மாற்றியமைக்க…
பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தள கட்சியில் இருந்து விலகுவதாக லாலுவின் மகள் ரோகிணி பகிரங்கமாக அறிவித்துள்ளார். ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், ரப்ரி தம்பதியருக்கு 7 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இதில் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப், மிசா பாரதி, ரோகிணி ஆகியோர் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை: தமிழகத்தில் 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகால அட்டவணை அக்டோபரில் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தயாரிப்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் அட்டவணை நவம்பர் முதல் வாரத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறும் போது, ‘‘அட்டவணை தயாரிப்பு பணிகள் முடிந்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும், நவ.4-ல் வெளியிட திட்டமிட்டுள் ளோம். அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலை கருத்தில் கொண்டு தேர்வு தேதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன” என்றனர்.
கெய்ரோ: எகிப்தின் கெய்ரோ நகரில் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சாம்ராட் ராணா 243.7 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். சீனாவின் ஹூஹை 243.3 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும், இந்தியாவின் வருண் தோமர் 221.7 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
நான் பல ஆண்டுகளாக இந்தியாவைப் பார்த்து வருகிறேன். அது ஒரு நம்பமுடியாத நாடு, ஒவ்வொரு ஆண்டும் உங்களுக்கு ஒரு புதிய தலைவர் அங்கு இருப்பார். ஆனால், என் நண்பர் மோடி நீண்ட காலமாக அங்கு தலைவராக இருக்கிறார்” என தெரிவித்திருந்தார்.ட்ரம்ப்பின் கருத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடியாக மறுத்தது. இது தொடர்பாக அதே 16ம் தேதி வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அதிகாரப்பூர்வ பதிவில், “எண்ணெய் மற்றம் எரிவாயுவை கணிசமாக இறக்குமதி செய்யும் நாடு இந்தியா. சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நிலையற்றதாக உள்ள நிலையில், இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதே எங்களின் தொடர்ச்சியான முன்னுரிமையாக இருந்து வருகிறது. இந்த அடிப்படையில்தான் எங்களின் இறக்குமதி கொள்கைகள் செயல்படுத்தப்படுகின்றன.
பவீஷின் நடிப்பில் உருவாகும் படத்துக்கு ‘லவ் ஓ லவ்’ எனப் பெயரிட்டு இருக்கிறார்கள். தினேஷ் ராஜ் மற்றும் தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் படப்பூஜையில் தொடங்கியது. மகேஷ் ராஜேந்திரன் இயக்கி வரும் இப்படத்தில் பவீஷ் நாயகனாக நடித்து வருகிறார். தற்போது இப்படத்துக்கு ‘லவ் ஓ லவ்’ எனப் பெயரிட்டு இருக்கிறார்கள். இதனை ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
சென்னை: சென்னை மற்றும் புறநகர் மக்களின் பொது போக்குவரத்தில் மின்சார ரயில் சேவை முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த மின்சார ரயில் சேவையை பொருத்த வரை, சென்னை கடற்கரை – தாம்பரம், செங்கல்பட்டு, சென்னை கடற்கரை – வேளச்சேரி உட்பட பல வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.இந்நிலையில், பெண்களின் இருக்கைகளை ஆண்களும், முதல் வகுப்பு டிக்கெட் எடுக்காதவர்களும் ஆக்கிரமித்து வருவதால், பெண் பயணிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இது குறித்து, திருநின்றவூர் பயணிகள் பொதுநலச் சங்க தலைவர் முருகையன் கூறியதாவது: மின்சார ரயில்களில் முதல் வகுப்பு பெட்டிகளில் பெண்களுக்கென தனி பகுதி உள்ளது.
