சென்னை: மாநகராட்சி சார்பில் சென்னையில் 7 இடங்களில் நேற்று நடைபெற்ற ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமில் 2,552 செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தி, மைக்ரோ சிப் பொருத்தப்பட்டது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சி எல்லைக்குள் செல்லப் பிராணிகள் வளர்ப்பதற்கான உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி இணையதளம் வாயிலாக தங்கள் விவரங்களை பதிவு செய்து, ரேபிஸ் நோய் தடுப்பூசி போட்டுக்கொண்டு, மைக்ரோ சிப் பொருத்திக்கொள்ள வேண்டும். செல்லப் பிராணி உரிமையாளர்கள் வலைதளத்தில் சென்று பதிவுச் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Author: admin
சென்னை: சென்னையில் நேற்று (அக்.22) ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் இரண்டு முறை குறைந்து இன்ப அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், இன்றும் (அக்.23) தங்கம், வெள்ளி விலை குறைந்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக, தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு மொத்தமாக ரூ.3680 குறைந்து, ஒரு பவுன் ரூ.92,320-க்கு விற்பனையானது.
பெரும்பாலான பிரபல மோதிரங்கள் பரிச்சயமான சூத்திரங்களைப் பின்பற்றும் போது – பெரிய சொலிடர்கள், புத்திசாலித்தனமான ஒளிவட்டம் மற்றும் நேரத்தைச் சோதித்த வெட்டுக்கள், சமந்தாவின் மோதிரம் ஒவ்வொரு வடிவத்தையும் உடைக்கிறது. இன்ஸ்டாகிராமில் பிரபலங்களின் ஆபரணங்களை டீகோடிங் செய்வதில் பெயர் பெற்ற ஜூவல்லரி வர்ணனையாளர் பிரியன்ஷு கோயல், மோதிரத்தை கவனமாக ஆய்வு செய்ய நேரத்தை எடுத்துக் கொண்டார், மேலும் அவர் படித்த மிகவும் அசாதாரண வடிவமைப்புகளில் இதுவும் ஒன்று என்று ஒப்புக்கொண்டார். முதல் பார்வையில் மோதிரம் அதன் சிக்கலான தன்மையைக் கொடுக்காததால், ரசிகர்கள் அதன் அமைப்பைப் புரிந்து கொள்ள முயற்சித்து, கருத்துகளை வெள்ளத்தில் மூழ்கடித்தனர். இது நவீனமாகவும், சிற்பமாகவும், கிட்டத்தட்ட அணியக்கூடிய கலைப் பகுதியைப் போலவும் இருக்கிறது.
பெங்களூரு: கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டம் குப்பியை அடுத்துள்ள குனிகலை சேர்ந்தவர் சாலுமரத திம்மக்கா(114). திருமணமாகி குழந்தை பாக்கியம் அமையாததால் தனது கணவருடன் இணைந்து கர்நாடக மாநிலம் முழுவதும் பயணம் செய்து லட்சக்கணக்கான மரங்களை நட்டார். இதனால் மரங்களின் தாய் என சாலுமரத திம்மக்கா அழைக்கப்பட்டார். இவரது சேவைக்காக கர்நாடக அரசின் ராஜ்யோத்சவ விருது, மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது.முதுமையின் காரணமாக திம்மக்கா பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் காலமானார். இதைத்தொடர்ந்து கலா கிராமத்தில் முழு அரசு மரியாதையுடன் திம்மக்காவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சென்னை: நடப்பாண்டு இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ) சேர்க்கைக்கு 82,016 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான குலுக்கல் தேர்வு முறை அக்.31-ல் நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். இதன்படி, தமிழகத்தில் இதுவரை 5 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர். இந்த திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு வழங்காததால், 2025-26-ம் கல்வியாண்டுக்கானமாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வித் துறை நிறுத்தி வைத்திருந்தது. இதுகுறித்த வழக்கில் உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் அறிவுறுத்தியதை யடுத்து மத்திய அரசு நிதியை விடுவித்தது. இதையடுத்து பள்ளிகளில் ஏற்கெனவே சேர்க்கப்பட்ட மாணவர்களில் தகுதியானவர்களை ஆர்டிஇ ஒதுக்கீட்டில் பதிவு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள 7,717 பள்ளிகளில் எல்கேஜிவகுப்பில் 81,927 குழந்தைகளும், ஒன்றாம் வகுப்பில் சேர 89 பேரும் விண்ணப்பித்தனர்.
புதுடெல்லி: பெங்களூருவில் உள்ள மீகோ கார்டோபியா சர்க்யூட்டில் எஃப்எம்எஸ்சிஐ இந்தியன் ரோடாக்ஸ் மேக்ஸ் தேசிய கார்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் டெல்லி பப்ளிக் பள்ளியில் படித்து வரும் 9 வயது மாணவியான அர்ஷி குப்தா சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் தேசிய கார்ட்டிங்கில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை அர்ஷி படைத்தார்.
புதுடெல்லி: ஆன்லைனில் பெண்களுக்கான ஜிகாதி படிப்பை ஜெய்ஷ்-இ-முகம்மது தொடங்கியுள்ளது. காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரித்து பாகிஸ்தானுடன் இணைக்கும் நோக்கத்துடன் கடந்த 2000-ம் ஆண்டு ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு தொடங்கப்பட்டது. கடந்த 1999-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டபோது இந்தியாவால் விடுவிக்கப்பட்ட 3 தீவிரவாதிகளில் ஒருவரான மவுலானா மசூத் அசார் இந்த அமைப்பை தொடங்கினார்.
இந்தப் படத்தின் கதையில் சில இடங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என ஆமிர்கான் கூறியதாகவும் இதனால் படப்பிடிப்பு தாமதமாகி வருவதாகவும் ஏற்கெனவே செய்திகள் வெளியாயின. ஆனால், இதை பால்கேவின் பேரன் சந்திரசேகர் ஸ்ரீகிருஷ்ணா புசல்கர் மறுத்திருந்தார். இதன் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறது என்றும் வித்யா பாலன், பால்கே மனைவியாக நடிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், பலமுறை கதை திருத்தம் செய்த பிறகும், ஆமிர்கானுக்கு திருப்தி இல்லாததால் இப்படத்தைத் தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளனர்.இதற்கிடையே, இயக்குநர் ராஜமவுலியும் பால்கேவின் பயோபிக்கை இயக்க இருப்பதாகக் கடந்த 2023-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதில் ஜூனியர் என்.டி.ஆர். பால்கே கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது.
சென்னை: சென்னையில் இன்று நடைபெறவிருந்த அதிமுக ஆர்ப்பாட்டம் நவ.20-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (SIR) ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி நிகழ்த்தப்படும் பல்வேறு முறைகேடுகளுக்கு காரணமான திமுக அரசுக்கு எதிராக இன்று (நவ.17) ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
தொழில்நுட்ப காரணத்தால், பெங்களூரு-ஓசூர் இடையே மெட்ரோ ரயில் சேவை திட்டம் சாத்தியம் இல்லை என கர்நாடகா அரசிடம் பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓசூரில் உள்ள தொழிற்சாலைகளுக்கு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்தும், பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனங்களுக்கு ஓசூரில் இருந்தும் தினசரி ஆயிரகணக்கானவர்கள் பணிக்கு சென்று வருகின்றனர். ஓசூர்-பெங்களூருக்கு இடையே 40 கிமீ தூரம் உள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையே சாலை போக்குவரத்தில் வாகன நெரிசல் அதிகரித்து வருவதால், தொழிலாளர்கள், பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
