Author: admin

பாரிஸ்: பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்​கோலஸ் சர்கோசி, தலைநகர் பாரிசில் உள்ள லா சான்டி சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு பாரிஸ் நீதிமன்றம் கடந்த செப்.25-ம் தேதி 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. பிரான்​ஸில் கடந்த 2007-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்​தலில் நிக்​கோலஸ் சர்​கோசி வெற்றி பெற்று அதிபரானார். அப்​போது தேர்​தல் பிரச்​சா​ரத்​துக்​காக லிபி​யா​வின் அப்​போதைய அதிபர் மாமர் கடாஃபியிடம் இருந்து சட்​ட​விரோத​மாக நிதி பெற்​ற​தாக​வும், இதற்கு பிர​திபல​னாக, தனித்​து​விடப்​பட்ட லிபியா​வுக்கு சர்​வ​தேச அரங்​கில் பிரான்ஸ் ஆதர​வாக செயல்​படும் என நிக்​கோலஸ் சர்​கோசி உறு​தி​ அளித்ததாகவும் தெரியவந்தது.

Read More

மருத்துவமனையில்​ இருந்​து டிஸ்​சார்​ஜ் ஆகியுள்​ள நடிகர்​ தர்​மேந்​தி​ராவுக்​கு வீட்​டிலேயே சிகிச்​சை அளிக்​கப்​படும்​ என்​று கூறப்​பட்​டுள்​ளது. பிரபல ​பாலிவுட்​ நடிகர்​ தர்​மேந்​தி​ராவுக்​கு (89) சு​வாசக்​ கோளாறு ​காரண​மாக மூச்​சுதிணறல்​ ஏற்​பட்​டது. இத​னால்​ மும்​பையின்​ பிரபல தனி​யார்​ மருத்​துவமனையில்​ கடந்​த சில ​நாட்​களுக்​கு முன்​ அனுமதிக்​கப்​பட்​டார்​. அங்​கு அவருக்​குத்​ தீவிரச்​ சிகிச்​சை அளிக்​கப்​பட்​டது. அவரை இந்​தி நடிகர்​கள்​ சிலர்​ மருத்​துவமனையில்​ சென்​று ​பார்​த்​து வந்​தனர்​. பின்​னர்​ அவர்​ உடல்​நிலை கவலைக்​கிட​மாக இருப்​ப​தாகவும்​, அவர்​ வெண்​டி லேட்​டர்​ உதவியுடன்​ சிகிச்​சை பெற்​று வருவ​தாகவும்​ செய்​திகள்​ பரவின. அவர்​ ​கால​மாகிவிட்​ட​தாகவும்​ சில இந்​தி சேனல்​கள்​ செய்​தி வெளியிட்​டன. ஆ​னால்​ அதை அவருடைய மனைவி ஹேம​மாலினி மறுத்​தார்​.

Read More

பிஹாரில் இண்டியா கூட்டணி எடுபடவில்லை. கூட்டணியின் பெயரையும் மகாகட்பந்தன் என மாற்றினர். அவர்களது தோல்வி அங்கேயே தொடங்கிவிட்டது. தேர்தலுக்கு முன்பு பிஹாரில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளில், தேசிய ஜனநாயக கூட்டணிதான் வெற்றிபெறும் என தெரிந்தவுடன், புதிதாக ஏதாவது பிரச்சினையை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே எஸ்ஐஆரை கையில் எடுத்து பூதாகரமாக்கினர். எஸ்ஐஆர்தான் அவர்களது பிரச்சாரத்தின் மையப்பகுதியாக இருந்தது. மக்களின் குறைகளையோ, மக்களுக்கு என்ன செய்ய போகிறோம் என்பதையோ அவர்கள் பேசவே இல்லை. எஸ்ஐஆரை ஆயுதமாக்க நினைத்தனர். ஆனால், அதுவே அவர்களுக்கு எதிராக திரும்பிவிட்டது.அதேநேரம், கூட்டணியை ஒருங்கிணைப்பதிலும், உள்ளூர் பிரச்சினைகளை சரியாக அணுகுவதிலும் பாஜக மிகத் தெளிவாக இருந்தது. இதனால், வெறும் வாயை மெல்லும் எதிர்க்கட்சிகள் வாக்குத் திருட்டு என பொய்யாக குற்றம்சாட்டுகின்றனர். பிஹாரில் முஸ்லிம்கள், யாதவர்களின் ஆதரவு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்திருக்கிறது. குறிப்பாக, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

Read More

மும்பை: பில்​கேட்​ஸ், ஸ்டீவ் பால்​மரை தொடர்ந்து மைக்​ரோ​சாப்ட் நிறு​வனத்​தின் தலை​மைச் செயல் அதி​காரி​யாக (சிஇஓ) சத்யா நாதெள்ளா கடந்த 2014-ம் ஆண்டு பொறுப்​பேற்​றார். இவருக்கு கடந்த 2023-24 நிதி​யாண்​டுக்கு ரூ.694 கோடி சம்​பள​மாக வழங்​கப்​பட்​டது. இந்த நிலை​யில், 2024-25-ல் ரூ.850 கோடி சம்​பளம் வழங்​கப்​பட்​டுள்​ளது. இவரது தலை​மை​யில் மைக்​ரோ​சாப்ட்​டில் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பம் முக்​கிய​மான முன்​னேற்​றத்தை கண்​டுள்​ளது. இது உலகள​வில் அந்த நிறு​வனம் முதலிடத்தை தக்​க​வைத்​துக்​கொள்ள பெரிதும் உதவி​யுள்​ளது. சத்​யா​வின் ஊதி​யம் கணிச​மான அளவுக்கு அதி​கரித்​ததற்கு இது​வும் ஒரு முக்​கிய காரண​மாக பார்க்​கப்​படு​கிறது.

Read More

தினமும் பீட்ரூட் சாறு? சிறந்த ஆரோக்கியத்திற்கான எளிய ஆனால் பயனுள்ள திட்டம் போல் தெரிகிறது, ஆனால் இது உண்மையில் அனைவரும் நம்பும் ரகசியமா? அல்லது அது குறைபாடுகளுடன் வருகிறதா? இதயம், தோல், முடி மற்றும் நமது கல்லீரல் என உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் இறுதி நன்மைகள் காரணமாக பீட்ரூட் கடந்த ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் பிரபலமடைந்துள்ளது, ஆனால் இந்த பானம் சகிப்புத்தன்மையை அதிகரிக்கவும் இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும் முடியும் என்றாலும், மிதமான தினசரி உட்கொள்ளலின் உண்மையான நன்மைகளை ஆராய்ச்சி எடுத்துக்காட்டுகிறது, மேலும் இது ஒரு மேஜிக் புல்லட் அல்ல. எல்லாவற்றிலும் மிகையானது மோசமானது என்பதால், சில மக்கள் அதைத் தவிர்க்க வேண்டும் அல்லது அதன் பக்க விளைவுகளைத் தவிர்க்க அதை மட்டுப்படுத்த வேண்டும்! ஆய்வுகள் மற்றும் நடைமுறை ஆலோசனைகளின் ஆதாரங்களைப் பார்ப்போம்.அறிவியலால் ஆதரிக்கப்படும் முக்கிய நன்மைகள் பீட்ரூட் நமது இதய ஆரோக்கியத்தை உகந்த முறையில் நிர்வகிக்கும் போது ஒரு நட்சத்திரம்,…

Read More

விசாகப்பட்டினம்: ​ஆந்​திர மாநிலம், விசாகப்​பட்​டினத்​தில் கடந்த 2 நாட்​களாக இந்​திய தொழில் கூட்​டாண்மை மாநாடு நடை​பெற்​றது. இதனை குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் தொடங்கி வைத்​தார்.மாநாட்​டில் இந்​தியா மற்​றும் 72 நாடு​களின் தொழில​திபர்​கள், தலைமை நிர்​வாகி​கள் மற்​றும் இயக்​குநர்​கள் கலந்​து​கொண்​டனர்.நிறைவு நாளான நேற்று முதல்​வர் சந்​திர​பாபு பேசி​ய​தாவது: தொழில் கூட்​டாண்மை மாநாட்​டில் சுமார் ரூ.13 லட்​சம் கோடி வரை ஆந்​தி​ரா​வில் முதலீடு செய்ய தொழில​திபர்​கள் முன் வந்​துள்​ளனர். நாங்​கள் ஆட்​சிக்கு வந்த கடந்த 18 மாதங்​களில் மட்​டும் ரூ.22 லட்​சம் கோடி முதலீடு பெற்​றுள்​ளது.

Read More

என் பெயர் கவ்யா ஸ்ரீ. நான் சென்னை ராஜலட்சுமி இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறேன். நான் முதல்வன் நிரல் திருவிழா திட்டத்தின் மூலம் ஒரு புதுமையான படைப்பை உருவாக்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது. எங்கள் குழு தமிழ்நாட்டின் கோயில்களை விஆர் தொழில்நுட்பத்தின் மூலம் டிஜிட்டல் அனுபவமாக மாற்றும் திட்டத்தை உருவாக்கினோம். இந்த திட்டத்தின் நோக்கம் – வரலாற்று சிறப்புமிக்க கோயில்களையும் பாரம்பரிய கட்டிடங்களையும் 3டி வடிவில் காட்சிப்படுத்தி, அவற்றை உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அனுபவமாக வழங்குவது. இதற்காக Gaussian Sampling மற்றும் Polycam போன்ற நவீன 3டி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஒவ்வொரு கட்டிட வடிவமைப்பும் நுணுக்கமாகப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும், கோயிலின் இயல்பான ஒலி சூழல், பல மொழிகளில் வழிகாட்டும் ஏஐ தொழில்நுட்பம், வரலாற்று தகவல்களை வழங்கும் இன்டராக்டிவ் பேனல்கள் என பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

Read More

நேற்று 3-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய தமிழக அணி 70.3 ஓவர்​களில் 195 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. பிரதோஷ் ரஞ்​ஜன் பால் 29, கேப்​டன் சாய் கிஷோர் 16, பாபா இந்​திரஜித் 6, ஆந்த்ரே சித்​தார்த் 33, சோனு யாதவ் 28, வித்​யூத் 2, திரிலோக் நாக் 3 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். ஆந்​திர அணி சார்​பில் சவுரப் குமார் 4, திரிபூர்ண விஜய் 2, பிரித்வி ராஜ் 2 விக்​கெட்​கள் வீழ்த்​தினர்.201 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஆந்​திர அணி 41.2 ஓவர்​களில் 6 விக்​கெட்​களை மட்​டும் இழந்து வெற்றி பெற்​றது. அபிஷேக் ரெட்டி 75 பந்​துகளில், 11 பவுண்​டரி​களு​டன் 70 ரன்​களும் கரண் ஷிண்டே 64 பந்​துகளில், 8 பவுண்​டரி​களு​டன் 51 ரன்​களும் விளாசினர். அஸ்​வின் ஹெப்​பார் 21, கலி​திண்டி ராஜு 20 ரன்​கள் சேர்த்​தனர்.

Read More

வாஷிங்டன்: அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணிபுரிவதற்கு பெற வேண்டிய எச்1 பி விசா கட்டணம் குறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) அமைப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, 2025 செப்டம்பர்-21 க்கு பிறகு புதிதாக எச்1 பி விசா கோரி விண்ணப்பிப்பவர்கள்தான் ஒரு லட்சம் டாலர் செலுத்த வேண்டும். ஏற்கெனவே, எச்1 பி விசா மறுக்கப்பட்டோர், மீண்டும் விண்ணப்பித்தால் அவர்களும் ஒரு லட்சம் டாலர் செலுத்த வேண்டும். அதே நேரத்தில், இந்த அறிவிப்பு வெளியாகும் முன்னர் வழங்கப்பட்ட மற்றும் தற்போது செல்லுபடியாகும் எச்1 பி விசாக்களுக்கும், செப்டம்பர் 21 நள்ளிரவு 12:01 மணிக்கு முன்னர் விசா கோரி விண்ணப்பித்தவர்களும் ஒரு லட்சம் டாலர் செலுத்த வேண்டாம் என விளக்கம் அளித்துள்ளது. மேலும், தற்போது எச்1 பி வைத்திருப்பவர்கள் அமெரிக்காவுக்கு உள்ளேயும் வெளியேயும் பயணிப்பதை இந்த அறிவிப்பு தடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ராஜமவுலி – மகேஷ் பாபு இணைப்பில் உருவாகும் படத்திலிருந்து பிரியங்கா சோப்ராவின் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் படத்தின் அறிமுக விழா ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இப்படத்தில் நாயகியாக நடித்து வரும் பிரியங்கா சோப்ராவின் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. அவர் மண்டாகினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நீண்ட வருடங்கள் கழித்து இந்திய படங்களுக்கு பிரியங்கா சோப்ரா திரும்பியிருப்பதால் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Read More