Author: admin

டோக்கியோ: ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகைச்சியை அந்நாட்டு நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்துள்ளது. பிரதமரை தேர்ந்தெடுக்கும் கீழ் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் லிபரல் ஜனநாயகக் கட்சி (எல்​டிபி) வேட்பாளர் சனே டகைச்சி 237 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். பெரும்பான்மைக்குத் தேவையான வாக்குகளைவிட 4 வாக்குகள் கூடுதலாக சனே டகைச்சி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரதான எதிர்க்கட்சியான அரசியலமைப்பு ஜனநாயகக் கட்சியின் தலைவர் யோஷிகோகோ 149 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார்.

Read More

கிஷோர் முத்​து​ராமலிங்​கம் இயக்​கத்​தில், முனீஷ்​காந்த், விஜயலட்​சுமி உள்​ளிட்ட பலர் நடித்​துள்ள படம் ‘மிடில் கிளாஸ்’. மேலும் ராதா ரவி, காளி வெங்​கட், வேல ராமமூர்த்​தி, குரேஷி உள்பட பலர் நடித்​துள்​ளனர். ஆக்​ஸஸ் ஃபிலிம் ஃபேக்​டரி மற்​றும் குட் ஷோ தயாரித்​துள்ள இப்​படம் நவ. 21-ம் தேதி வெளி​யாகிறது. இதன் டிரெய்​லர் வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. இசையமைப்​பாளர் சந்​தோஷ் நாராயணன், இயக்​குநர்​கள் சுப்​பிரமணிய சிவா, சுசீந்​திரன், சக்​திவேல், ஒப்​பிலி கிருஷ்ணா, ஏ.வெங்​கடேஷ், ரவிக்​கு​மார், விஷால் வெங்​கட், ராஜு முரு​கன், ஏ.ஆர்​.கே.சரவணன் என பலர் கலந்து கொண்​டனர்.

Read More

சிவகாசி தொகுதியில் கடந்த முறைவெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ-வான அசோகன் இம்முறை மீண்டும் சிவகாசியில் சீட் பெற காய் நகர்த்தி வருகிறார். 2024 மக்களவைத் தேர்தலில் சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் 13,850 வாக்குகள் கூடுதலாக பெற்றதாலேயே விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரின் வெற்றி சாத்தியமானது.இந்நிலையில், சிவகாசியின் முதல் மேயர் பதவியை கைப்பற்றியதைப் போலவே, இம்முறை சிவகாசி எம்எல்ஏ பதவியையும் கைப்பற்ற வேண்டும் என திமுக நிர்வாகிகள் தலைமைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அதிமுக-வையும், ராஜேந்திர பாலாஜியையும் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Read More

புதுடெல்லி: இந்​தி​யா​வில் இணை​ய​வழி​யில் மேற்​கொள்​ளப்​படும் ஒட்​டுமொத்த பணப் பரிவர்த்​தனை​யில் யுபிஐ 85% பங்கு வகிக்​கிறது. இது நாளுக்கு நாள் அதி​கரித்து வரு​கிறது. தீபாவளி பண்​டிகை காரண​மாக நடப்பு அக்​டோபர் மாதத்​தில் அதிகபட்சமாக ஒரே நாளில் யுபிஐ பரிவர்த்​தனை எண்ணிக்கை 74 கோடியைத் தாண்டி உள்​ளது. இது​போல, அதி​கபட்​ச​மாக தினசரி யுபிஐ பரிவர்த்​தனை மதிப்பு இது​வரை 6 முறை ரூ.1 லட்​சம் கோடியைத் தாண்டி உள்​ளது. அதே​நேரம் சராசரி தினசரி யுபிஐ பணப் பரிவர்த்​தனை​யின் மதிப்பு இது​வரை இல்​லாத வகை​யில் ரூ.94 ஆயிரம் கோடி​யாக அதி​கரித்து புதிய சாதனை படைக்​கப்​பட்​டுள்​ளது.

Read More

மஞ்சள், ஒரு பிரபலமான மசாலா மற்றும் சப்ளிமெண்ட், ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது ஆனால் அதிகப்படியான உட்கொள்ளல் சிக்கல்களை ஏற்படுத்தும். அதிக அளவு செரிமான கோளாறு, கல்லீரல் திரிபு மற்றும் மருந்து தொடர்புகளுக்கு வழிவகுக்கும். குறைக்கப்பட்ட இரும்பு உறிஞ்சுதல் மற்றும் ஒவ்வாமை எதிர்வினைகள் கூட சாத்தியமாகும். தனிநபர்கள் மருந்தின் அளவைக் கண்காணித்து மருத்துவர்களை அணுக வேண்டும், குறிப்பாக ஏற்கனவே உள்ள சுகாதார நிலைமைகள் அல்லது மருந்துகளை உட்கொள்பவர்கள். மஞ்சள் பரவலாகப் பயன்படுத்தப்படும் இயற்கை மூலப்பொருளாக மாறியுள்ளது, சமையலில் மற்றும் பிரபலமான உணவு நிரப்பியாக கொண்டாடப்படுகிறது. மஞ்சளில் உள்ள முதன்மை உயிரியக்கக் கலவையான குர்குமின், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற விளைவுகளிலிருந்து வளர்சிதை மாற்ற மற்றும் செரிமான ஆரோக்கியத்தை ஆதரிப்பது வரை அதன் சாத்தியமான ஆரோக்கிய நன்மைகளுக்காக அடிக்கடி சிறப்பிக்கப்படுகிறது. இயற்கை வைத்தியத்தில் ஆர்வம் அதிகரிக்கும் போது, ​​பல தனிநபர்கள் மஞ்சளை சாதாரண உணவு அளவுகளுக்கு அப்பாற்பட்ட அளவில் உட்கொள்கின்றனர், பெரும்பாலும் செறிவூட்டப்பட்ட சப்ளிமெண்ட்ஸ்…

Read More

சூரத்: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் சாதி அரசி​யலை மக்​கள் நிராகரித்து உள்​ளனர். இந்த தேர்​தலில் தோல்​வியை தழு​விய​வர்​கள் பேர​திர்ச்​சி​யில் மூழ்கி உள்​ளனர் என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார். பிர்சா முண்​டா​வின் 150-வது பிறந்த தினம் மற்​றும் பழங்​குடி​யினர் கவுரவ தினம் நேற்று கொண்​டாடப்​பட்​டது. இதையொட்டி குஜ​ராத்​தின் நர்​மதா மாவட்​டம், டெடி​யாபடா பகு​தி​யில் உள்ள தேவ​மோக்ரா தேவி கோயி​லில் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று வழிபட்​டார். இந்த கோயில் பழங்​குடி மக்​களின் கோயில் ஆகும்.

Read More

என் பெயர் பு.தீபிகா மாரிமுத்து. நான் வணிகவியல் இளங்கலை (பி.காம்) பட்டம் பெற்ற பட்டதாரி. தற்போது நான் கண்ணகி நகர் பகுதியில் என் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். படித்திருந்தாலும், வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழல் வந்தது. வேலைக்குச் சென்றால், குடும்பத்திற்கான நேரம் சரியாக அமையவில்லை. கணவரின் வருமானத்தால் மட்டுமே வாழ்க்கை நடத்த சிரமம் ஏற்பட்டது. இதனால் மனதில் எப்போதும் வருத்தம் இருந்தது.அந்த நேரத்தில், என் தோழியின் மூலமாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் முதல் தலைமுறை அறக்கட்டளை பற்றி அறிந்தேன். அங்கு கட்டணமில்லா Hand Embroidery பயிற்சி ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் மூலமாக நடைபெறுவது என்பதை அறிந்து, உடனே சேர்ந்தேன். மூன்று மாத பயிற்சியை வெற்றிகரமாக முடித்தேன். இன்று, நான் டைலரிங் மற்றும் ஆரி ஹேண்ட் எம்பிராய்டரி கடை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறேன். இதன் மூலம் என் குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக உறுதியான ஆதரவாக…

Read More

கொல்கத்தா: இந்தி​யா – தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையே 2 டெஸ்ட் போட்​டி, 3 ஒரு​நாள் போட்​டி, 5 டி20 ஆட்​டங்​கள் கொண்ட தொடர் நடை​பெற உள்​ளது. இந்​தத் தொடரில் கலந்​து​கொள்​வதற்​காக தென் ஆப்​பிரிக்க வீரர்​கள் நேற்று இந்​தியா வந்து சேர்ந்​தனர். பாகிஸ்​தான் அணிக்கு எதி​ரான ஒரு​நாள் போட்​டித் தொடரை முடித்​துக் கொண்டு தென் ஆப்​பிரிக்க அணி வீரர்​கள் ஞாயிற்​றுக்​கிழமை இரு பிரி​வாக கொல்​கத்தா வந்து சேர்ந்​தனர். இங்​குள்ள ஈடன் கார்​டன் மைதானத்​தில்​தான் இந்​தியா – தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையி​லான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 14-ம் தேதி தொடங்​கு​கிறது. தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி​யில் இடம் பெற்று இந்​தியா ‘ஏ’ அணிக்கு எதி​ரான 2-வது டெஸ்ட் போட்​டி​யில் விளை​யாடிய தெம்பா பவுமா நேற்று காலை பெங்​களூரு​வில் இருந்து புறப்​பட்டு கொல்​கத்தா வந்து தங்​கி​யுள்ள தென் ஆப்​பிரிக்க அணி​யுடன் இணைந்​தார். அவருடன் ஜுபைர் ஹம்சா உள்​ளிட்ட சில வீரர்​களும்,…

Read More

பாரிஸ்: பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்​கோலஸ் சர்கோசி, தலைநகர் பாரிசில் உள்ள லா சான்டி சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு பாரிஸ் நீதிமன்றம் கடந்த செப்.25-ம் தேதி 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. பிரான்​ஸில் கடந்த 2007-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்​தலில் நிக்​கோலஸ் சர்​கோசி வெற்றி பெற்று அதிபரானார். அப்​போது தேர்​தல் பிரச்​சா​ரத்​துக்​காக லிபி​யா​வின் அப்​போதைய அதிபர் மாமர் கடாஃபியிடம் இருந்து சட்​ட​விரோத​மாக நிதி பெற்​ற​தாக​வும், இதற்கு பிர​திபல​னாக, தனித்​து​விடப்​பட்ட லிபியா​வுக்கு சர்​வ​தேச அரங்​கில் பிரான்ஸ் ஆதர​வாக செயல்​படும் என நிக்​கோலஸ் சர்​கோசி உறு​தி​ அளித்ததாகவும் தெரியவந்தது.

Read More

மருத்துவமனையில்​ இருந்​து டிஸ்​சார்​ஜ் ஆகியுள்​ள நடிகர்​ தர்​மேந்​தி​ராவுக்​கு வீட்​டிலேயே சிகிச்​சை அளிக்​கப்​படும்​ என்​று கூறப்​பட்​டுள்​ளது. பிரபல ​பாலிவுட்​ நடிகர்​ தர்​மேந்​தி​ராவுக்​கு (89) சு​வாசக்​ கோளாறு ​காரண​மாக மூச்​சுதிணறல்​ ஏற்​பட்​டது. இத​னால்​ மும்​பையின்​ பிரபல தனி​யார்​ மருத்​துவமனையில்​ கடந்​த சில ​நாட்​களுக்​கு முன்​ அனுமதிக்​கப்​பட்​டார்​. அங்​கு அவருக்​குத்​ தீவிரச்​ சிகிச்​சை அளிக்​கப்​பட்​டது. அவரை இந்​தி நடிகர்​கள்​ சிலர்​ மருத்​துவமனையில்​ சென்​று ​பார்​த்​து வந்​தனர்​. பின்​னர்​ அவர்​ உடல்​நிலை கவலைக்​கிட​மாக இருப்​ப​தாகவும்​, அவர்​ வெண்​டி லேட்​டர்​ உதவியுடன்​ சிகிச்​சை பெற்​று வருவ​தாகவும்​ செய்​திகள்​ பரவின. அவர்​ ​கால​மாகிவிட்​ட​தாகவும்​ சில இந்​தி சேனல்​கள்​ செய்​தி வெளியிட்​டன. ஆ​னால்​ அதை அவருடைய மனைவி ஹேம​மாலினி மறுத்​தார்​.

Read More