Author: admin

விழுப்புரம்: மகன் அன்புமணி கூட்டிய பொதுக்குழு குறித்த கேள்விக்கு நான் சொல்வதற்கு ஏதும் இல்லை என விரக்தியுடன் கூறிவிட்டு பூம்புகார் மாநாட்டுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஆக. 9) புறப்பட்டு சென்றார். பாமக தலைவரான மகன் அன்புமணிக்கு கடிவாளம் போட நினைக்கும் நிறுவனர் ராமதாஸின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மகன் அன்புமணி கூட்டிய பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்ற ராமதாசின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று (ஆக. 8) இரவு தள்ளுபடி செய்தது. மேலும் பொதுக்குழுவை நடத்தவும் அனுமதி வழங்கியது. இதையடுத்து மாமல்லபுரத்தில் பாமக பொதுக்குழுக் கூட்டம் இன்று (ஆக. 9) நடைபெற்றது. இப்பொதுக்குழுவில் ‘பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ், பொது செயலாளராக வடிவேல் ராவணன், பொருளாளராக திலகபாமா’ ஆகியோர் மேலும் ஓராண்டுக்கு பதவியில் நீடிப்பார்கள் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் பூம்புகாரில் நாளை(10-ம் தேதி) நடைபெற உள்ள வன்னிய மகளிர் பெருவிழா மாநாட்டுக்கு, திண்டிவனம்…

Read More

மதுரை: திமுகவிடமிருந்து ஒரு பொதுத்தொகுதியை கேட்டுப்பெற திருமாவளவன் என்ன பாடுபடுகிறார் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மதுரை விமான நிலையத்தில் தெரிவித்தார். மதுரை விமான நிலையத்திற்கு இன்று வருகை தந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் தமிழர்களால் வாக்கு செலுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ளது. இதில் எங்கிருந்து திராவிட மாடல் ஆட்சி வருகிறது. தமிழர் அறம் சார்ந்த ஆட்சி என திமுகவால் சொல்ல முடியவில்லை. திராவிடம் என்பது தமிழ்ச்சொல் அல்ல. அது சமஸ்கிருதத்திலிருந்து வந்தது. பிராமண எதிர்ப்பை காட்டி திராவிட இருப்பை காட்டியவர்கள் திமுக. பெரியார், அண்ணா வழியில் வந்தவர்கள் செய்யாதததை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செய்தார். திமுகவில் ஆ.ராசா வெற்றி பெற்ற பெரம்பலூர் தொகுதி பொதுத்தொகுதியானபோது அங்கு ஆ.ராசாவை நிறுத்தாமல் நீலகிரி தனித்தொகுதியில் போட்டியிடுமாறு கருணாநிதி செய்தார். ஆனால் ஜெயலலிதா, திருச்சி…

Read More

நாசா வழங்கிய இந்த படம், இடமிருந்து, நாசாவின் ஸ்பேஸ்எக்ஸ் குழு -10 உறுப்பினர்கள் ஜாக்சா நான்கு விண்வெளி வீரர்கள் ஐந்து மாதங்கள் கழித்த பின்னர் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியுள்ளனர் சர்வதேச விண்வெளி நிலையம் (ஐ.எஸ்.எஸ்). அவர்களின் ஸ்பேஸ்எக்ஸ் காப்ஸ்யூல் சனிக்கிழமை தெற்கு கலிபோர்னியா கடற்கரையில் பசிபிக் பெருங்கடலில் தெறித்தது, சுற்றுப்பாதை ஆய்வகத்தை விட்டு வெளியேறிய ஒரு நாள் கழித்து.நாசாவின் அன்னே மெக்லெய்ன் மற்றும் நிக்கோல் ஐயர்ஸ், ஜப்பானின் டகுயா ஒனிஷி மற்றும் ரஷ்யாவின் கிரில் பெஸ்கோவ் ஆகியோர் மார்ச் மாதத்தில் தொடங்கினர், இது தோல்வியுற்ற சோதனை பணியைத் தொடர்ந்து போயிங்கின் ஸ்டார்லைனரில் சிக்கித் தவிக்கும் இரண்டு நாசா விண்வெளி வீரர்களையும் மாற்றியது. “வரவேற்பு இல்லம்,” ஸ்பேஸ்எக்ஸில் உள்ள மிஷன் கட்டுப்பாடு காப்ஸ்யூல் தண்ணீரில் பாராசூட் செய்ததால் வானொலியில் வந்தது.ஸ்டார்லைனரின் செயலிழப்புகள் புட்ச் வில்மோர் மற்றும் சுனி வில்லியம்ஸ் ஆகியோர் திட்டமிட்ட வாரத்திற்கு பதிலாக ஒன்பது மாதங்களுக்கும் மேலாக சுற்றுப்பாதையில் இருக்கும்படி கட்டாயப்படுத்தினர்.…

Read More

ராமநாதபுரம்: ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இன்று மீன்பிடிக்கச் சென்ற ஏழு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மதுரை-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மீனவர்கள்,உறவினர்கள் கைக்குழந்தையுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரத்துக்கும் மேலாக மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இன்று (ஆக.09) காலை 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இந்நிலையில் தங்கச்சிமடத்தை சேர்ந்த டல்லஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு இலங்கை மன்னார் வடக்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அந்த படகை சிறைபிடித்தனர். பின்னர் படகிலிருந்த டல்லஸ்(56), சிலைடன் (26), அருள் ராபர்ட் (53), லொய்லன் (45), ஆரோக்கிய சான்ரின் (20), பாஸ்கர் (45),ஜேசு ராஜா (32) ஆகிய ஏழு மீனவர்களை கைது செய்து, மன்னார்…

Read More

கோவை: அமெரிக்க அதிபர் மேற்கொண்டு வரும் அதிக வரி விதிப்பு உள்ளிட்ட இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளால் சிறிது காலம் சிரமத்தை எதிர்கொண்டாலும், தடைகளை உடைத்தெறிந்து இந்தியா முன்னேறும் என கோவை தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். வார்ப்பட தேசிய அமைப்பான ‘தி இன்ஸ்டியூட் ஆப் இந்தியன் பவுண்டரிமென்’ (ஐஐஎப்) கோவை கிளை முன்னாள் தலைவர் விஸ்வநாதன் கூறும்போது, “பொருளாதாரத்தில் மிக உச்சியில் உள்ள வல்லரசு நாடுகள் கூட மற்ற நாடுகளின் உதவி இல்லாமல் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாது. மற்ற நாடுகளின் நிலத்தை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லாத ஒரு நல்லரசு நாடு நமது இந்தியா. எனவே எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற வகையில் முடிவுகள் எடுக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது மேற்கொள்ளும் அதிக வரி விதிப்பு போன்ற நடவடிக்கைளால் சிறிது காலம் சிரமப்பட்டாலும் கூடிய விரைவில் இந்த தடைகளை உடைத்தெறிந்து இந்தியா முன்னேறும் என்பதில் எள் முனை…

Read More

அனிமேஷன் திரைப்படமான ‘மகா அவதார் நரசிம்மா’ உலகம் முழுவதும் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. ‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’, ‘காந்தாரா’ போன்ற பான் இந்தியா படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மகா அவதார் நரசிம்மா’. அனிமேஷன் திரைப்படமான இதை அஸ்வின் குமார் இயக்கியுள்ளார். கடந்த ஜூலை 25 வெளியான இந்த படம் இரண்டு வாரங்களில் உலகம் முழுவதும் ரூ.150 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. பொதுவாக இந்தியாவில் அனிமேஷன் படங்கள் வரவேற்பை பெறுவது குறைவு. ஹாலிவுட் அனிமேஷன் படங்கள் மட்டுமே இந்தியாவில் வரவேற்பை பெற்று வந்த நிலையில், தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அனிமேஷன் படம் நல்ல வசூல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த படம் 14வது நாளான நேற்று ரூ.5 கோடி வசூலித்துள்ளது. கன்னடத்தில் ரூ.15 லட்சம், தெலுங்கில் ரூ.1.03 கோடி, இந்தியில் ரூ.4.1 கோடி, தமிழில் ரூ.6 லட்சம், மலையாளத்தில் ரூ.1 லட்சம் இப்படம் வசூலித்துள்ளது.…

Read More

விருதுநகர்: வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் கிராமத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர், நிவாரண நிதியுதவியையும் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், ‘விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், விஜயகரிசல்குளம் கிராமத்தில் இன்று (09.08.2025) காலை 11.30 மணியளவில் தனியார் ஒருவருக்கு சொந்தமான வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் மேற்படி கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி (வயது 65) க/பெ.பாண்டியதேவர், சண்முகத்தாய் (வயது 60) க/பெ.பாண்டி மற்றும் கீழ கோதைநாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசன் (வயது 20) த/பெ.மாரீஸ்வரன் ஆகிய மூன்று நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாரியம்மாள் (வயது 55) க/பெ.ராஜபாண்டியன் என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும்…

Read More

கோவை: ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கிய வகையில் இந்தியாவுக்கு 2022 மே மாதம் முதல் 2025 மே மாதம் வரை 17.2 மில்லியன் டாலர், அதாவது ரூ.1,49,989 கோடி சேமிப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கவில்லை என்றால், இந்தக் காலக்கட்டத்தில் மட்டும் மொத்த இழப்பு ரூ.15,29,000 கோடியாக இருந்திருக்கும். ஆண்டுக்கு ரூ.96,923 கோடி இழப்பு ஏற்படும். மத்திய அரசின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என அனைத்து தொழில்முனைவோர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ஜெயபால் கூறியது: “நாடு சுதந்திரம் பெற்றது முதல் தற்போது வரை 78 ஆண்டு காலமாக நம்பிக்கைக்குரிய நட்பு நாடு ரஷ்யா. அன்று முதல் இன்று வரை வர்த்தக உறவு மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு உரிய உதவிகளால் இந்த உறவு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. இந்தியா சுதந்திரம் பெற்று 44 ஆண்டுகளுக்கு பின் 1991 முதல் அமெரிக்காவுடன் வர்த்தக உறவு…

Read More

சென்னை: மாநில கல்விக் கொள்கை, இளைய தலைமுறையினர் எதிர்காலம் முன்வைக்கும் சவால்களை எளிதில் எதிர் கொள்ளும், திறனையும், தன்னம்பிக்கையினையும் ஊக்கப்படுத்தும் திசை வழியில் அமைந்துள்ளது என இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் இரா.​முத்​தரசன் தெரி​வித்​துள்​ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் மாநில கல்விக் கொள்கையை நேற்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். மாநில கல்விக் கொள்கை தமிழ்நாட்டின் தனித்துவப் பண்புகளை உள்வாங்கி உருவாக்கப்பட்டுள்ளது. மொழிக் கொள்கை குறித்து விரிவாக ஆய்வு செய்து இரு மொழிக் கொள்கையை மீண்டும் உறுதி செய்துள்ளது. அனைத்து வகைப் பள்ளிகளிலும் 10 ஆம் வகுப்பு வரை தமிழ்மொழி கட்டாயம் பயிற்றுவிக்க வேண்டும் என பணித்துள்ளது. மூன்று, ஐந்து, எட்டு ஆகிய வகுப்புகளுக்கும், பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு நீக்கப்பட்டிருப்பது வளர்ந்து வரும் குழந்தைகள் அச்சம் இல்லாமல், கற்கும் ஆர்வத்தை அதிகரிக்க செய்யும். அதே சமயம், தனியார் கல்வி நிறுவனங்களில் பிளஸ் 1 வகுப்புக்கான…

Read More

புதுடெல்லி: பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி 2024-25 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவாக ரூ.1.51 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாதுகாப்பு உற்பத்தி 2024-25 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1,50,590 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த மைல்கல் முந்தைய நிதியாண்டின் உற்பத்தியான ரூ.1.27 லட்சம் கோடியை விட 18% வலுவான வளர்ச்சியை அடைந்துள்ளது. 2019-20 நிதியாண்டில் இந்த மதிப்பு ரூ.79,071 கோடியாக இருந்தது என்பதைக் கணக்கில் கொண்டு பார்க்கும் போது 90% அதிரடியான வளர்ச்சியைக் குறிக்கிறது. இந்த மைல்கல்லை அடைவதில் பங்கு வகித்த பாதுகாப்பு உற்பத்தித் துறை, பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை உற்பத்தியாளர்கள் மற்றும் தனியார் துறையின் கூட்டு முயற்சிகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார். இந்தியாவின் பாதுகாப்பு தொழில்துறை வலுவடைந்து வருவதற்கான தெளிவான அம்சமாக இந்த வளர்ச்சியை அவர் குறிப்பிட்டார். பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள்…

Read More