Author: admin

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் தவெகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமை தாங்கினார். தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மாவட்டச் செயலாளர்கள் அப்புனு,பாலமுருகன், குமார், சரவணன், தாமு, திலீப் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் பேசியதாவது: தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்: எஸ்ஐஆர் மூலம் வாக்காளர் பெயர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கொத்துக் கொத்தாக நீக்கப்படுவதாக மக்கள் கூறுகிறார்கள். இது அப்பட்டமான துஷ்பிரயோகம். அதேநேரம், போலி வாக்காளர்கள் பெயர்கள் சேர்க்கப்படுவதாக தகவல் வருகிறது. புறவாசல் வழியாக ஆட்சியாளர்கள் வெற்றி பெறப் பார்க்கின்றனர். இது ஆளுங்கட்சிக்கு சாதகமான அரசியல் சூழ்ச்சி.

Read More

மும்பை: மகா​ராஷ்டிர மாநிலம் பீட் மாவட்​டத்​தின் சிறு கிராமத்​தைச் சேர்ந்​தவர் தாதா​சாஹிப் பகத். 10-ம் வகுப்பு முடித்த அவர், ஐ.டி.ஐ. படித்​துள்​ளார். பின்​னர் புனே நகரில் உள்ள ஒரு தொழிற்சாலை​யில் ரூ.4 ஆயிரம் சம்​பளத்​தில் வேலைக்கு சேர்ந்​துள்​ளார்.

Read More

உங்களுக்குப் பிடித்த வாசனை மெழுகுவர்த்திகள் மற்றும் தூபக் குச்சிகள், அடிக்கடி ஓய்வெடுப்பதற்காகப் பயன்படுத்தப்படுவது, உடல்நல அபாயங்களை ஏற்படுத்தலாம். இந்த பொருட்களை எரிப்பதால் நச்சு இரசாயனங்கள் வெளியாகும், நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் ஹார்மோன்களை சீர்குலைக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இயற்கையான மெழுகு மெழுகுவர்த்திகள் அல்லது அத்தியாவசிய எண்ணெய்களுடன் எண்ணெய் டிஃப்பியூசர்களைத் தேர்வுசெய்து, ஒரு இனிமையான வீட்டுச் சூழலை உருவாக்க பாதுகாப்பான வழி. அவிழ்ப்பது பற்றிய உங்கள் யோசனை என்ன? வெண்ணிலா வாசனை மெழுகுவர்த்திகளின் அமைதியை சுவாசித்து, ஒரு சூடான குளியல். அல்லது சந்தன தூபம் காற்றில் சுருட்டுவது போல, உங்கள் படுக்கையில் அமர்ந்து, சூடான தேநீர் பருகுகிறீர்களா? ஒளிரும் இதய வாசனை மெழுகுவர்த்திகள் மற்றும் தூபத்தின் சூடான நறுமணம் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஓய்வெடுக்க சரியான வழி போல் தோன்றலாம், ஆனால் உண்மையில் அவை இல்லை. சுய பாதுகாப்பு சடங்கு என்று நீங்கள் கருதுவது உங்கள் ஆரோக்கியத்தை ரகசியமாக சேதப்படுத்தும். ஹார்வர்ட்…

Read More

இந்த வெடிவிபத்து காவல் நிலைய கட்டிடத்துக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு, அருகில் உள்ள பிற கட்டிடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. சேத மதிப்பு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவையற்ற ஊகங்களை தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த துயரமான நேரத்தில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் தனது முழுமையான ஆதரவை தெரிவிக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய அனைத்து உதவிகளையும் வழங்கவும் உறுதியுடன் உள்ளது” என தெரிவித்துள்ளார்.முன்னதாக, இந்த விபத்து குறித்து தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீர் டிஜிபி நளின் பிரபாத், “மாநில புலனாய்வு நிறுவன அதிகாரி ஒருவர், மூன்று தடயவியல் ஆய்வக அதிகாரிகள், இரண்டு குற்றப்பிரிவு அதிகாரிகள், இரண்டு வருவாய் அதிகாரிகள் மற்றம் இந்த குழுவுடன் தொடர்புடைய ஒரு தையல்காரர் ஆகியோர் உயிரிழந்தனர். 27 காவல்துறை அதிகாரிகள், இரண்டு வருவாய் அதிகாரிகள், பொதுமக்களில் மூவர் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

Read More

சென்னை: ​நானோ அறி​வியல், தொழில்​நுட்​பம் குறித்து இளநிலை, முது​நிலை மாணவர்​கள், ஆசிரியர்​கள், கல்​வி​ யாளர்​களுக்கு ஆன்​லைனில் 2 வார சிறப்பு பயிற்சி அளிக்​கப்​படும் என்று அண்ணா பல்​கலைக்​கழகம் தெரி​வித்​துள்​ளது.சென்னை அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் ஓர் அங்​க​மாக திகழும் அழகப்பா தொழில்​நுட்​பக் கல்வி நிறு​வனத்​தில் நானோ அறி​வியல், தொழில்​நுட்ப மையம் இயங்கி வரு​கிறது. இங்கு நானோ அறி​வியல், தொழில்​நுட்​பம் தொடர்​பான கருத்​தரங்​கம், பயிலரங்​கம், சிறப்பு பயிற்சி வகுப்​பு​கள் தொடர்ச்​சி​யாக நடத்​தப்​பட்டு வரு​கின்​றன.அந்த வகை​யில், இளநிலை, முதுநிலை பட்​டப்​படிப்பு படிக்​கும் மாணவர்​கள், ஆசிரியர்​கள், கல்​வி​யாளர்​கள், ஆராய்ச்சி மாணவர்​கள் ஆகியோ​ருக்கு நானோ அறி​வியல், தொழில்​நுட்​பம் குறித்த குறுகிய கால பயிற்சி வகுப்​பு​கள் நடை​பெற உள்​ளன. இந்த ஆன்​லைன் பயிற்சி நவம்​பர் 26-ம் தேதி தொடங்கி டிசம்​பர் 9-ம் தேதி நிறைவடை​யும்.

Read More

பனாஜி: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவா​வில் நடை​பெற்று வரு​கிறது. இந்​தத் தொடரில் நேற்று 3-வது சுற்​றின் டை-பிரேக்​கர் ஆட்​டங்​கள் நடை​பெற்​றன. டை-பிரேக்​கர் சுற்​றின் 2-வது ஆட்​டத்​தில் இந்​தி​யா​வின் கார்த்​திக் வெங்​கட்​ராமன், ரொமேனியா​வைச் சேர்ந்த கிராண்ட்​மாஸ்​டர் போக்​டான் டேனியல் டீக்​குடன் மோதி​னார். 43-வது நகர்த்​தலில் போக்​டான் டேனியல் டீக்கை தோற்​கடித்​தார் கார்த்​திக். இதன்​மூலம் 4-வது சுற்​றுக்கு முன்​னேறி​யுள்​ளார் கார்த்​திக் வெங்​கட்​ராமன்.

Read More

இதனை தொடர்ந்து, ‘பேச்சுவார்த்தையின் போது, ​​இரு தரப்பினரும் உடனடி போர்நிறுத்தத்துக்கும், இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் வழிமுறைகளை நிறுவுவதற்கும் ஒப்புக்கொண்டனர்’ என்று கத்தார் தெரிவித்துள்ளது.ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், எல்லையில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் உடனடி நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தும் என்று பாகிஸ்தான் தெரிவித்தது. அதேநேரத்தில், எல்லைப் பகுதிகளில் தாக்குதல்களை நடத்தும் போராளிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை ஆப்கானிஸ்தான் மறுத்துள்ளது.

Read More

இப்படத்தில் பிரபாஸுக்கு அப்பா கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கவிருப்பதாக சில தினங்களாக இணையத்தில் செய்திகள் உலா வந்தன. இதனை பேட்டியொன்றில் சந்தீப் ரெட்டி வாங்கா கேள்வியாக எழுப்பினர். அதற்கு அப்பா கதாபாத்திரம் மட்டுமல்ல, வேறு எந்தவொரு கதாபாத்திரத்திலும் சிரஞ்சீவி நடிக்கவில்லை என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.மேலும், டாங் லீ நடிப்பது குறித்து கேட்டதற்கு உறுதியும் படுத்தாமல், மறுப்பும் தெரிவிக்காமல் பதிலளித்துள்ளார் சந்தீப் ரெட்டி வாங்கா. இதனால் பிரபாஸ் உடன் டாங் லீ நடிப்பது உறுதி என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அடுத்தாண்டு பிப்ரவரியில் ‘ஸ்பிரிட்’ படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த மாதம் இறுதியில் படப்பூஜை நடைபெறவுள்ளது. இதில் பிரபாஸுக்கு நாயகியாக திருப்தி டிம்ரி நடிக்கவுள்ளார்.

Read More

காட்​பாடி: வேலூர் மாவட்​டம் காட்​பாடி காந்தி நகர்ப் பகு​தி​யில் உள்ள இல்​லத்​தில் நீர்​வளத் துறை அமைச்​சர் துரை​முரு​கன் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: மேகே​தாட்டு அணை விவ​காரத்​தில் தமிழகத்​தின் உரிமை​யைத் தமிழக அரசு விட்​டுக்​கொடுப்​ப​தாக அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி மற்​றும் எதிர்க்​கட்​சிகள் விமர்​சனம் செய்​கின்​றனர். அவர்​களின் இது​போன்ற குற்​றச்​சாட்​டு​களுக்​குப் பதில் அளிக்க முடி​யாது. யார் முயற்சி செய்​தா​லும், உச்ச நீதி​மன்​றமோ அல்​லது காவிரி ஒழுங்​காற்று ஆணை​ய​மாகக்​கூட இருந்​தா​லும் தமிழக அரசின் ஒப்​புதல் இல்​லாமல் மேகே​தாட்​டு​வில் கர்​நாடக அரசால் அணை கட்ட முடி​யாது. இது தொடர்​பாக ஏற்​கெனவே விளக்​கம் கூறி​விட்​டாலும், திரும்​பத் திரும்ப பேசுவது எதற்கு என்று புரிய​வில்​லை. இவ்​வாறு துரை​முருகன் கூறி​னார்.

Read More

சிவகாசி: சிவ​காசி பட்​டாசு உற்​பத்​தி​யாளர்​கள் மற்​றும் மொத்த வியா​பாரி​களிடம் இருந்த பட்​டாசுகள் அனைத்​தும் விற்​றுத் தீர்ந்த நிலை​யில், நடப்​பாண்டு தீபாவளி பண்​டிகைக்கு நாடு முழு​வதும் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பட்​டாசு வர்த்​தகம் நடை​பெற்​ற​தாக சிவ​காசி உற்​பத்​தி​யாளர்​கள் தெரி​வித்​தனர். சிவ​காசி பகு​தி​யில் கடந்த ஆண்டு தீபாவளி பட்​டாசு விற்​பனை அமோக​மாக நடை​பெற்​ற​தால், உற்​பத்​தி​யாளர்​கள், மொத்த வியா​பாரி​கள் மற்​றும் சில்​லறை வியா​பாரி​களிடம் இருந்த பட்​டாசுகள் அனைத்​தும் விற்​றுத் தீர்ந்​தன. இதனால், கடந்த டிசம்​பர் மாதமே பட்​டாசு ஆலைகளில் உற்​பத்தி தொடங்​கியது.

Read More