Author: admin

இந்நிலையில், பரிதாபாத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களில் ஒரு பகுதி, இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. போலீஸார், காவல் துறை புலனாய்வு அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள், வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அந்த வெடிபொருட்களை ஆய்வு செய்யும் பணியில் கடந்த 2 நாட்களாக ஈடுபட்டிருந்தனர்.நேற்று முன்தினம் இரவு தடயவியல், ரசாயன ஆய்வில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக வெடிபொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இதில் காவல் நிலைய கட்டிடம் பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் காவல் துறையினர் விரைந்துசென்று, மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். படுகாயமடைந்த நிலையில், 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 5 பேரின் நிலைகவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Read More

ஆண்டியப்பனூர் அணை எப்போதெல்லாம் நிரம்புகிறதோ, அப்போதெல்லாம் எங்களால் நகர் பகுதிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. பாம்பாறு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுவதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து சென்று வருகின்றனர்.கடந்த 2 நாட்களுக்கு முன்பு எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ராதா (45) என்பவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய உடலை சுமந்து நாங்கள் ஆற்று வெள்ளத்தை கடந்து சென்று தான் அடக்கம் செய்தோம். இப்படி, விவசாயம், கல்வி, தொழில், வர்த்தகம் என பல்வேறு தேவைகளுக்காக எங்கள் கிராமத்தில் இருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ள திருப்பத்தூர் நகரை அடைய மழைக்காலங்களில் நாங்கள் எதிர்கொள்ளும் சவாலுக்கு அளவே இல்லை.

Read More

புதுடெல்லி: அமெரிக்​கா​வின் ஸ்பிரிங்ஃபீல்ட் நகரில் புனித ஜேம்ஸ் எக்​ஸ்​பிரஷன் ஓபன் ஸ்கு​வாஷ் போட்டி நடை​பெற்று வந்​தது. இதில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு இறு​திப் போட்​டி​யில் உலகத் தரவரிசை​யில் 51-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் வீர் சோட்​ரானி, 15-ம் நிலை வீர​ரான மெக்​சிகோ​வின் லியோனல் கார்​டெ​னாஸுடன் மோதி​னார். இதில் வீர் சோட்​ரானி 11-13, 11-4, 4-11, 3-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

Read More

பீஜிங்: “சீனா ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்துக்கு முன்வராவிட்டால் அந்நாட்டுப் பொருட்கள் மீது 155% வரி விதிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.முன்னதாக, வெள்ளை மாளிகையில் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையை ட்ரம்ப் நடத்தினார். அதன்பின்னர் பேசிய ட்ரம்ப், “சீனாவை அமெரிக்கா மிகுந்த மரியாதையுடன் நடத்தியது. ஆனால், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை சீனா தொடர்ந்தால் அதனை அமெரிக்கா பொறுத்துக் கொள்ளாது. சீனாவும் எங்களை மதிக்கிறது என்று நான் நம்புகிறேன்.

Read More

பழம்பெரும் ஹாலிவுட் நடிகை சாலி கிர்க்​லேண்ட் (84) உடல் நலக்​குறை​வால் கால​மா​னார்.ஹாலிவுட்​டில் வெளி​யான காமெடி படமான, ‘அனா’, ‘கோல்டு பீட்’, ஹாரர் படமான ‘த ஹாண்​டட்’, ஃபேன்​டஸி படமான `புரூஸ் அல்​மைட்டி’ உள்பட பல படங்​களில் நடித்​திருப்​பவர் சாலி கிர்க்​லேண்ட். `அனா’ படத்​தில் இவர் நடிப்பு மிகுந்த பாராட்​டைப் பெற்​றது. சிறந்த நடிகைக்​கான ஆஸ்​கர் விருதுக்கு அப்படம் பரிந்​துரைக்​கப் ​பட்​டது. ஆனால் அவருக்கு கோல்​டன் குளோப் விருது கிடைத்​தது. சின்​னத்​திரை தொடர்​களி​லும் நடித்து வந்​தார்.

Read More

குஜராத் முதல்வராக இருந்த மோடியை நாட்டின் பிரதமராக உயர்த்த வியூகம் வகுத்தவர், பிஹாரில் நிதிஷ்குமார், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரின் வெற்றிக்கு வியூகம் வகுத்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர். அவருக்கு பேரதிர்ச்சி கொடுத்திருக்கிறது பிஹார் தேர்தல் முடிவு. சொந்த மாநிலமான பிஹாரில் மிகுந்த நம்பிக்கையுடன் தனது ஜன் சுராஜ் கட்சி சார்பில் 238 தொகுதிகளில் வேட்பாளர்களை இறக்கினார். 150 இடங்களில் வெற்றி நிச்சயம் என்றார். ஆனால், போட்டியிட்ட அனைத்திலும் தோல்வி. டெபாசிட்கூட 2 தொகுதிகளில் மட்டும்தான் கிடைத்தது.

Read More

இதற்கு நடு​வே, கடந்த மே மாதம் இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே போர் ஏற்​பட்​டது. அப்​போது பாகிஸ்​தானின் வான் வழி தாக்​குதலை எஸ்​-400 வான் தடுப்பு ஏவு​கணை​கள் வெற்​றிகர​மாக விண்​ணிலேயே தாக்கி அழித்​தன. குறிப்​பாக பாகிஸ்​தானின் 5 முதல் 6 போர் விமானங்​கள் மற்​றும் ஒரு உளவு விமானத்தை 300 கி.மீ. தொலை​வில் வரும் போதே சுட்டு வீழ்த்​தி​யது.இந்த சூழ்​நிலை​யில் பாது​காப்​புத் துறை வட்​டாரங்​கள் கூறும்​போது, “இந்​தி​யா​வின் வான் தடுப்பு திறனை மேம்​படுத்​து​வதற்​காக கூடு​தலாக ரூ.10 ஆயிரம் கோடி​யில் எஸ்​-400 வான் தடுப்பு ஏவு​கணை தொகுப்​பு​களை வாங்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக ரஷ்​யா​வுடன் பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது” என தெரி​வித்​தன.

Read More

பாதுகாப்பாக பயிற்சி செய்ய, ஒருவர் செய்ய வேண்டும்: பின்னால் படுத்து, உங்கள் கால்களை மேலே ஊசலாடவும், சுவரின் அருகில் அமர்ந்து தொடங்கவும். உங்களுக்குத் தேவைப்பட்டால் மடிந்த போர்வையால் இடுப்பு அல்லது கீழ் முதுகை ஆதரிக்கவும். கைகளை உள்ளங்கைகளால் உங்கள் பக்கவாட்டில் தளர்த்தவும் அல்லது உங்கள் வயிற்றில் அல்லது தரையில் வசதியாக ஓய்வெடுக்கவும். கண்களை மூடி மெதுவாகவும் ஆழமாகவும் சுவாசிக்கவும். ஆரம்பத்தில் 3 முதல் 5 நிமிடங்கள் இருங்கள், நீங்கள் வசதியாக உணரும்போது 10 ஆக அதிகரிக்கவும்.உங்களுக்கு ஏதேனும் மருத்துவக் கவலைகள் அல்லது நாட்பட்ட நிலைகள் இருந்தால், முன்னதாக மருத்துவரை அணுகுவதும் புத்திசாலித்தனமாக இருக்கும். உங்கள் உடலில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்த போஸ் வலி அல்லது அசௌகரியம் இல்லாமல் நிதானமாகவும் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

Read More

புதுடெல்லி: பிஹார் தேர்​தல் தோல்வி தொடர்​பாக டெல்​லி​யில் நேற்று காங்​கிரஸ் தலைவர் கார்கேவுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்​கிரஸ் உள்​ளிட்ட கட்​சிகள் அடங்​கிய மெகா கூட்​டணி படு​தோல்வி அடைந்​திருக்​கிறது. குறிப்​பாக 61 தொகு​தி​களில் போட்​டி​யிட்ட காங்​கிரஸ் 6 தொகு​தி​களில் மட்​டுமே வெற்றி பெற்​றிருக்​கிறது.

Read More

சென்னை: ஒமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப் பிரிவுகளில் நேரடி மாணவர் சேர்க்கை மூலம் பயில நவம்.14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "சென்னை, ஒமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் 2025- 2026ம் கல்வியாண்டுக்கான மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப் பிரிவுகளில் மாவட்ட அளவிலான சேர்க்கை வாயிலாகவும், அதனைத் தொடர்ந்து முன் விண்ணப்பமில்லா நேரடி சேர்க்கை முறையிலும் நடைபெறும் அனுமதிக்கான விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.

Read More