தமிழகம் முழுவதும் அனைத்து மின் கம்பங்களிலும், கேபிள் மற்றும், தனியார் இன்டர்நெட் வயர்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றால் உயிரிழப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பர் என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் உள்ள மின்கம்பங்கள் மற்றும், மின்பாதைகளில் இடையூறாக கேபிள் வயர்கள், விளம்பர பதாகைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் மின்வாரிய பணியாளர்கள் மின்தடை பராமரிப்பு பணி மேற்கொள்ளும் போது மின்கம்பத்தில் கட்டப்பட்டுள்ள கேபிள் வயர்கள்மற்றும், விளம்பர பதாகைகள் காலில் சிக்கி விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. பல சமயங்களில் சாலைகளில் தொங்கியபடி கிடக்கும் வயர்கள் வாகனங்களில் சிக்கும் போது வாகன ஓட்டிகளுக்கும், அவ்வழியாக கடந்து செல்பவர்களுக்கும் ஆபத்தை உண்டாக்குகின்றன. சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தான விபத்துகளையும் ஏற்படுத்துகின்றன. கம்பங்களை நட்டு கேபிள்களை கொண்டு செல்லாமல், மரங்களில் தொங்க விட்டும், வீடுகளின் மீது அனுமதி இல்லாமலும் கேபிள் வயர்களை எடுத்துச் செல்கின்றனர். இதில் எத்தனை கேபிள்கள் உரிய அனுமதி பெற்று கொண்டு…
Author: admin
நீண்ட காலம் வாழ்வதற்கான ரகசியம் விலையுயர்ந்த உணவுகள் அல்லது தீவிரமான உடற்பயிற்சிகளிலும், ஆனால் வாழ்விலும், தற்செயலாக உலகின் தொலைதூர மூலைகளிலும் பகிரப்பட்டால் என்ன செய்வது?ஆச்சரியம் என்னவென்றால், நீல மண்டலங்கள், மக்கள் பெரும்பாலும் 100 ஐ கடந்த பகுதிகள் என்ற கருத்தின் பின்னணியில் உள்ள ரகசியம் இதுதான். இது அதிசயம் அல்ல; அதற்கு பதிலாக, இது அன்றாட வாழ்க்கையில் எளிமையான வாழ்க்கை வழிகளைப் பற்றியது.இந்தியாவில் மூத்த வாழ்க்கை- புராணங்கள், யதார்த்தங்கள் மற்றும் நோக்கமான வயதான எதிர்காலம்நீல மண்டலங்கள் என்றால் என்னஅமெரிக்க எழுத்தாளர், எக்ஸ்ப்ளோரர், கதைசொல்லி மற்றும் நீண்ட ஆயுள் ஆராய்ச்சியாளர் டான் பியூட்னர் ஒரு தேசிய புவியியல் பயணத்தில் சென்றிருந்தார், மேலும் வியக்கத்தக்க வகையில் நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வது பற்றிய ஒரு பெரிய கண்டுபிடிப்பாக மாறியது.விஞ்ஞானிகள், மானுடவியலாளர்கள் மற்றும் மக்கள்தொகைகளால் ஆன பியூட்னரும் அவரது குழுவினரும் 100 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் என்று மக்கள் தவறாமல் வாழும் பகுதிகளை ஆராய புறப்பட்டனர்.…
புதுடெல்லி: சவுதி அரேபியாவில் 1999-ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை குற்றத்துக்காக 26 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி விமான நிலையத்தில் ஒருவர் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார். கனரக மோட்டார் மெக்கானிக்காக பணியாற்றிய தில்ஷாத், 1999 அக்டோபரில் ரியாத்தில் தனது பணியிடத்தில் ஒருவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த கொலைக்குப் பின்னர் அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்று 20 ஆண்டுகளுக்கு மேலாக கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருந்துள்ளார். சவுதி அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில், சிபிஐ ஏப்ரல் 2022-ல் அந்தக் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்தது. இதனையடுத்து சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையில், உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள தில்ஷாத்தின் சொந்த கிராமத்தைக் கண்டுபிடித்து, லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டனர். அதன் பின்னரும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. விசாரணையில், தில்ஷாத் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கத்தார், குவைத் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்குப் பயணம் செய்து வந்தது…
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் 2025-க்கான இணையதள முன்பதிவு (online registration) செய்திட ஆக.20 வரை கால அவகாசம் நீட்டிக்கபட்டுள்ளது என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “2025 – 2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ / மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பிரிவு என ஆண் பெண் இருபாலருக்கும் மாவட்ட அளவில் 5 பிரிவுகளில் 25 வகையான விளையாட்டு போட்டிகளும், மண்டல அளவில் 7 வகையான விளையாட்டு போட்டிகளும், மாநில அளவில் மொத்தமாக 37 வகையான விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படவுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படவுள்ளது. முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் அனைவரும் தமிழ்நாடு…
பராமரிப்பு பணி காரணமாக நிறுத்தப்படும் மின்சார ரயில்களின் காலிபெட்டிகளை சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடைகளில் நிறுத்தி வைப்பதால், அரக்கோணம், திருவள்ளூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்து செல்லும் மின்சார ரயில்கள் தாமதமாகின்றன. இதனால், பயணிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டத்தில் முக்கிய வழித்தடங்களில் அவ்வப்போது ரயில்வே பராமரிப்பு மற்றும் பொறியியல் பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக, ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. அதிலும், குறிப்பாக, சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் அடிக்கடி பொறியியல் பணி நடைபெறுகிறது. அந்தவகையில், சென்னை சென்ட்ரல் கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில், பொன்னேரி – கவரைப்பேட்டை இடையே மூன்று நாட்களுக்கு (ஆக.14,16,18) பொறியியல் பணியால், இவ்வழித் தடத்தில் 17 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை சென்ட்ரலில் உள்ள 5 நடைமேடைகளில் (பிளாட்பாரம்) 3 நடைமேடைகளில், ரத்து செய்யப்பட்ட மின்சார ரயில் பெட்டிகள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டன.…
நிகழ்வு நட்சத்திர சக்தியைப் பற்றியது அல்ல; இது சினிமா ஈர்ப்பு பற்றி இருந்தது. விருந்தினர் பட்டியலில் நகைச்சுவை நடிகர்-நடிகர் விர் தாஸ், கலைஞர்கள் டிலோடாமா ஷோம், ஜிம் சர்ப், மற்றும் அதிதி ராவ் ஹைடாரி ஆகியோர் அடங்குவர், பாராட்டப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர்களான ஷூஜித் சிர்கார், அஸ்வினி ஐயர் திவாரி, ஆர்.எஸ். ஒவ்வொரு வருகையும் மறக்க முடியாத திருவிழாவின் வாக்குறுதியை எடுத்தது.
அடுத்த மாதம் டப்ளினில் அயர்லாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஜேக்கப் பெத்தேல் அறிவிக்கப்பட்டுள்ளார். 21 வயது ஆல்ரவுண்டரான ஜேக்கப் பெத்தேல் அனைத்து வடிவங்களிலும் இங்கிலாந்து அணியின் இளைய கேப்டன் ஆனார். இதன் மூலம் 136 ஆண்டுகால வயது சாதனையை முறியடித்துள்ளார். 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபி கடும் சவாலான கடும் உடலுழைப்பைக் கோரிய டெஸ்ட் தொடரில் ஆடிய பிறகே ரெகுலர் டி20 கேப்டன் ஹாரி புரூக் இந்தத்ட் தொடரில் ஆடவில்லை என்பதால் பெத்தேல் கேப்டனாக உயர்த்தப்பட்டுள்ளார். ஆனால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆடப்படவிருக்கும் ஒருநாள், டி20 தொடருக்கு ஹாரி புரூக் கேப்டனாகத் திரும்புவார். அயர்லாந்தில் டி20 தொடர் செப்டம்பர் 17, 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் டப்ளினில் உள்ள மலாஹைடில் நடைபெறும். இங்கிலாந்தில் தென்னாப்பிரிக்காவின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் செப்டம்பர் 2 முதல்…
வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உடனான சந்திப்பை அடுத்து, வரும் திங்கள்கிழமை உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கியை, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சந்திக்க உள்ளார். இது தொடர்பாக ட்ரம்ப் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “அலாஸ்காவில் நிகழ்ந்த சந்திப்பு சிறப்பானது, வெற்றிகரமானது. ரஷ்ய அதிபர் விளாடிதிர் புதினுடனான சந்திப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, மிகுந்த மதிப்புக்குரிய நேடோ பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய தலைவர்களுடன் நேற்றிரவு தொலைபேசியில் பேசினேன். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான கொடூரமான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சிறந்த வழி, நேரடியாக அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதுதான் என்று அனைவராலும் தீர்மானிக்கப்பட்டது. இது போரை (தற்காலிகமாக) முடிவுக்குக் கொண்டு வரும் வெறும் போர் நிறுத்த ஒப்பந்தம் அல்ல. அவ்வாறு ஒன்று நடந்தால் அது நிலைக்காது. அதிபர் ஜெலன்ஸ்கி திங்கள்கிழமை மதியம் வெள்ளை மாளிகைக்கு வருவார். அனைத்தும் சரியாக நடந்தால், நாங்கள் ரஷ்ய அதிபர்…
தீபாவளி வெளியீட்டில் இருந்து சூர்யாவின் ‘கருப்பு’ படம் பின்வாங்கி இருக்கிறது. சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் ‘கருப்பு’. இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பை தவிர்த்து, மீதமுள்ள அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்டன. தற்போது இதன் வெளியீடு எப்போது என்பது பெரும் கேள்வியாக இருந்தது. முதலில் தீபாவளி வெளியீடாக இருக்கும் என்று கருதப்பட்டது. இதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வந்தன. இதன் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமம் விற்பனை குறித்து தயாரிப்பு நிறுவனமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் இறுதிகட்டப் பேச்சுவார்த்தையின் படி இந்த ஆண்டு இப்படம் வெளியீடு இருக்காது என்று கூறப்படுகிறது. ஏனென்றால், இந்த ஆண்டுக்கான படங்கள் அனைத்தும் ஓடிடி நிறுவனங்கள் வாங்கி முடித்துவிட்டார்கள். ஆகையால், ‘கருப்பு’ தீபாவளி வெளியீட்டில் இருந்து பின்வாங்கிவிட்டது. மேலும், இன்னும் சில காட்சிகள் படப்பிடிப்பு வேறு பாக்கி இருக்கிறது. தற்போதைய சூழலில் அக்டோபரில் தீபாவளி வருகிறது. அதனால் வெளியீடு சாத்தியமே இல்லை என்பது தெரிகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்…
சென்னை: “‘வாக்கு திருட்டு’ என்ற சட்டவிரோத பரிமாற்றத்தை திசை திருப்ப அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் ஒன்றிய பாஜக அரசின் எடுபிடி அமலாக்கத் துறை சோதனை என்ற பெயரில் அத்துமீறுகிறது. திமுகவினர் மோடிக்கும் அஞ்ச மாட்டார்கள், ஈடி-க்கும் அஞ்சமாட்டார்கள்” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கையில், “ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருக்கிறார்கள். 2006 – 2011 திமுக ஆட்சியில் வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சராக ஐ.பெரியசாமி இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக சொல்லி, பழிவாங்கும் நடவடிக்கையாக அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கில் இருந்து 2012-ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் அவரை விடுவித்து உத்தரவிட்டது. இதனை சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்த நிலையில்தான், இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம்…