தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியான நிலையில், அதை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திட்டவட்டமாக மறுத்துள்ளார். பிஹார் தேர்தல் வெற்றியால் பாஜக மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளா மாநில தொண்டர்களுக்கு இந்த வெற்றியால் புது சக்தி கிடைத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பார்வை அடுத்ததாக தமிழகம் நோக்கி திரும்பியுள்ளது.
Author: admin
அதன்படி இன்று (புதன்கிழமை) காலையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.300 குறைந்து ஒரு கிராம் ரூ.11,700-க்கு விற்பனையானது. அதேபோல பவுனுக்கு ரூ.2,400 குறைந்து, ஒரு பவுன் ரூ.93,600-க்கு விற்பனையானது.இந்த நிலையில், இன்று இரண்டாவது முறையாக 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.160 குறைந்து ஒரு கிராம் ரூ.11,540-க்கு விற்பனையாகிறது. அதேபோல தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 1,280 குறைந்து, ஒரு பவுன் ரூ.92,320-க்கு விற்பனையாகிறது. இதனால் இன்று மொத்தமாக பவுனுக்கு ரூ.3680 குறைந்து விற்பனையாகிறது.
இந்த இடங்கள் எவ்வாறு மாறுகின்றன என்பதைக் கண்டறியவும், மேலும் நாளின் வெவ்வேறு நேரங்களில் இரண்டு தனித்தனி உலகங்களுக்குள் அடியெடுத்து வைப்பது போல் உணருங்கள்.
இதேபோல், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக பிஹார் எம்எல்சி அசோக் அகர்வாலும், கடிஹார் மாநகராட்சி மேயர் உஷா அகர்வாலும் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மேலிடம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பாஜக மாநில பொறுப்பாளர் அர்விந்த் சர்மா, சஸ்பெண்ட் செய்யப்பட்ட கட்சித் தலைவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைமை மீது முன்னாள் எம்.பி.யான ஆர்.கே.சிங் தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வந்தார். இதைத் தொடர்ந்தே அவர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையைத் தொடர்ந்து ஆர்.கே.சிங் பாஜகவில் இருந்து விலகியுள்ளார்.
சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மைத் தேர்வு ஜனவரி 21 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடத்தப்படுகிறது. இதில் முதன்மைத் தேர்வு, தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2026-27-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட உள்ளன.
நெல்சன்: நியூஸிலாந்து – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி நெல்சன் நகரில் உள்ள சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 6.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் தொடர் மழை காரணமாக போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
“ஹமாஸ் இயக்கத்தினர் சரியாக நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அழிக்கப்படுவார்கள்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இஸ்ரேல் படைகளுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது. கடந்த 13-ம் தேதி எகிப்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அல் சிசி தலைமையில் நடைபெற்ற காசா அமைதி உச்சி மாநாட்டில் இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழில், பூ, மரியான், உத்தமவில்லன், தங்கலான் உள்பட சில படங்களில் நடித்துள்ள மலையாள நடிகை பார்வதி, இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். அவர் அளித்துள்ள பேட்டியில், பார்வையாளர்கள் மொழியைப் பற்றி கவலைப்படுவதில்லை; அவர்கள் உண்மையான கதையை மட்டுமே விரும்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “இந்த மாற்றம் அழகானது. ஏனென்றால் அது எங்களை மேலும் கடினமாக உழைக்கவும், சினிமாவுக்கு உண்மையாக இருக்கவும் தூண்டுகிறது. இந்தி திரைத்துறை, தென்னிந்திய சினிமா போல் இல்லாமல் பெரும்பாலும் ஒரே மாதிரி கதைகளையே படமாக்குவதாக முன்பு நினைத்திருந்தேன். இப்போது அந்த வேறுபாடு இல்லை. இன்று இந்தி சினிமாவில் கதை சொல்லும் முறை, அதிக உண்மையுடனும் சோதனை முயற்சியாகவும் இருக்கிறது.
பிஹார் தேர்தல் முடிவுகள் கதர் கட்சிக்கு சாதகமாக இல்லை என்பதால் அந்தக் கட்சி தங்களுடன் கூட்டணிக்கு வரும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டதாம் பனையூர் தலைவரின் கட்சி. பிஹார் தேர்தல் முடிவுகள் வரட்டும் என்பதற்காகவே, வேட்பாளர் தேர்வு, மாற்றுக் கட்சியினர் சேர்ப்பு நிகழ்வுகளை தள்ளிப் போட்டிருந்த தலைவர், தற்போது அதற்கான வேலைகளை வேகப்படுத்தச் சொல்லி இருக்கிறாராம்.அதன்படி 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேடிப்பிடிக்கும் வேலைகளை தொடங்கி இருக்கிறார்கள் பனையூர் கட்சியின் பொறுப்பாளர்கள். இந்த விஷயத்தில் ஜெயலலிதா பாணியில் வேட்பாளர்களின் ஜாதகங்கள் முதற்கொண்டு வாங்கி சரிபார்த்த பிறகே பட்டியலில் சேர்க்கப் போகிறார்களாம். பட்டியல் தொடர்பான முதல்கட்ட பணிகளை இந்த மாத இறுதிக்குள் முடிக்க உத்தரவிட்டிருக்கும் தலைவர், டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து, மாற்றுக் கட்சிகளில் இருந்து வருவோரை கழகத்தில் சேர்க்கும் வைபவங்களை நடத்தப் போகிறாராம்.
புதுடெல்லி: இந்திய பொருட்களின் மீதான இறக்குமதி வரியை அமெரிக்கா விரைவில் 15 முதல் 16 சதவீதமாக குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான உடன்படிக்கை விரைவில் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: வரி விதிப்பு குறித்து இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே நீண்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இதற்கு சுமுக தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வேளாண்மை, எரிசக்தி ஆகியவை இருதரப்பு ஆலோசனையில் மையப்புள்ளியாக இருந்தன. அதன்தொடர்ச்சியாக, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா படிப்படியாக குறைக்கக்கூடும்.
