Author: admin

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் பாகிஸ்தானிலும் உலகெங்கிலும் உள்ள இந்துக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். அதிபர் ஆசிப் அலி சர்தாரி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "இருளை ஒளி வெற்றி கொள்வதையும், தீமையை நன்மை வெற்றி கொள்வதையும் தீபாவளி அனைவருக்கும் நினைவூட்டுகிறது. நம்பிக்கை, நேர்மறை எண்ணம் மற்றும் ஒற்றுமையை இது வெளிப்படுத்துகிறது.

Read More

ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக அறிமுகமான ‘டார்லிங்’, ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’, அதர்வா நடித்த ‘100’ உள்பட சில படங்களை இயக்கியவர் சாம் ஆண்டன். இவர் அடுத்து இயக்கும் படம் ‘அன்கில்_123’.மனோதத்துவ த்ரில்லர் படமான இதில் அனுராக் கஷ்யப் முக்கிய கதாபாத்திரத்திலும் சங்கீதா உணர்ச்சிகரமான கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். ஜெரார்ட் ஃபெலிக்ஸ் இசையமைக்கும் இப்படத்துக்குக் கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

Read More

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திராவிட இயக்கத்தை அழித்துவிடலாம் என சனாதன சக்திகளும், ஆர்எஸ்எஸ், இந்துத்வாவும் முயற்சி செய்கின்றன. திராவிட இயக்கத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கடமை என் கண் முன்னால் நிற்பதாலும், 61 ஆண்டுகள் திராவிட இயக்கத்தில் பாடுபட்டிருப்பதாலும், திராவிட இயக்கத்தை பாதுகாப்பது ஒன்றுதான் வாழ்நாள் கடமை என 9 ஆண்டுகளுக்கு முன்பு முடிவு எடுத்து திமுகவுடன் கூட்டணி அமைத்தோம். அதில் உறுதியாக இருக்கிறோம்.தமிழக அரசியலில் புதிது புதிதாக சலசலப்புகள் ஏற்படுகின்றன. புதிதாக ஒருவர் வந்துள்ளார். கூட்டத்தை கூட்டி, 41 பேர் மடிந்த பிறகு கொஞ்சமும் பொறுப்பு, குற்ற உணர்வின்றி சென்னைக்கு ஓடிவிட்டார். பாதிக்கப்பட்டவர்களை தனது இருப்பிடத்துக்கு அழைத்து அனுதாபம் தெரிவித்த சம்பவம் தமிழக வரலாற்றிலேயே இல்லாதது. ஊருக்குள் ஒரு கி.மீ. தூரம் நடந்துவிட்டு, அடுத்த ஊருக்கு காரில் சென்று நடைபயணம் மேற்கொள்ளும் பித்தலாட்ட நடைபயணத்தை நாங்கள் மேற்கொள்ளவில்லை. முழுமையாக நடைபயணம் மேற்கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Read More

அதன்படி இன்று (புதன்கிழமை) 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.300 குறைந்து ஒரு கிராம் ரூ.11,700-க்கும், பவுனுக்கு ரூ.2,400 குறைந்து, ஒரு பவுன் ரூ.93,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இன்று வெள்ளி கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.180-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read More

தாகத்தைத் தணிக்க ஒரு பெரிய கிளாஸ் தண்ணீரை ஒரு சில விரைவிலேயே குடிப்பது ஆரோக்கியமான வழி என்று நம்மில் பெரும்பாலோர் கருதுகிறோம். உடற்பயிற்சிக்குப் பிறகு, ஒரு சூடான நாளின் போது அல்லது உணவோடு சேர்த்து, தண்ணீர் பருகுவது வேகமாகவும் திருப்தியாகவும் இருக்கும். ஆனால் ஆரோக்கிய வல்லுநர்கள் இப்போது வேகம் உண்மையில் உதவியாக இருக்கிறதா என்று கேள்வி எழுப்புகின்றனர். நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ அதே அளவு தண்ணீர் குடிக்கும் முறையும் முக்கியம் என்கிறார்கள். “மெல்லும் நீர்” பழக்கம் எனப்படும் ஒரு அதிகரித்து வரும் போக்கு பிரபலமடைந்து வருகிறது, ஏனெனில் இது சீரான செரிமானத்தை ஆதரிக்கிறது, நீரேற்றத்தின் செயல்திறனை மேம்படுத்துகிறது மற்றும் மிக விரைவாக குடித்த பிறகு வரும் கனமான அல்லது வீங்கிய உணர்வைத் தடுக்கிறது. இது ஆரம்பத்தில் விசித்திரமாகத் தோன்றலாம், ஆனால் அதை முயற்சிக்கும் பலர் இது வியக்கத்தக்க வகையில் அமைதியாகவும் உடலுக்கு வசதியாகவும் இருப்பதாகக் கூறுகிறார்கள்.டெய்லர் & பிரான்சிஸ் ஆன்லைனில்…

Read More

புதுடெல்லி: கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா டெல்லிக்கு பயணமாக சென்றுள்ளார். இந்த பயணத்தில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பயிர் சேதம் ஏற்பட்ட நிலையில் விவசாயிகளுக்கு நிவாரணம் கோரியும், மேகதாது அணை விவகாரம் குறித்தும் மத்திய அரசின் உதவியை அவர் கோரவுள்ளதாக தகவல். இந்நிலையில், சனிக்கிழமை அன்று டெல்லியில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். “அமைச்சரவை மாற்றம் குறித்து எங்கள் அமைச்சர்கள் யாரும் எதுவும் பேசவில்லை. பிரதமர் மோடியை இன்று நான் சந்தித்திருக்க வேண்டும். பிஹார் தேர்தல் காரணமாக அவரை சந்திக்க முடியவில்லை. வரும் திங்கட்கிழமை அன்று அவரை சந்திப்பேன் என்று நம்புகிறேன்.

Read More

சென்னை: ஏறத்தாழ 11 லட்சத்து 48 ஆயிரம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி குருப்-4 தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி இன்று (புதன்கிழமை) பிற்பகல் வெளியிட்டது. தேர்வர்கள் தங்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசையை தேர்வாணையத்தின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் உள்பட பல்வேறு பதவிகளில் 3,935 காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு குரூப்-4 தேர்வு கடந்த ஜூலை 12-ம் தேதி நடத்தப்பட்டது. டிஎன்பிஎஸ்சி நடத்திய இத்தேர்வை தமிழகம் முழுவதும் 11 லட்சத்து 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.

Read More

புதுடெல்லி: ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வரும் நவம்​வர் 25 முதல் டிசம்​பர் 13 வரை சிலி நாட்​டில் உள்ள சான்​டி​யாகோ நகரில் நடை​பெறுகிறது. இந்​தத் தொடரில் கலந்து கொள்​ளும் 18 பேர் கொண்ட இந்​திய அணி அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. ஜோதி சிங் கேப்​ட​னாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். இந்​தத் தொடரில் இந்​திய அணி ‘சி’ பிரி​வில் இடம் பெற்​றுள்​ளது. இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் டிசம்​பர் 1-ல் நமீபி​யா​வுடன் மோதுகிறது. தொடர்ந்து டிசம்​பர் 3-ம் தேதி ஜெர்​மனி​யுட​னும், டிசம்​பர் 5-ம் தேதி அயர்​லாந்​துட​னும் இந்​திய அணி பலப்​பரீட்சை நடத்​துகிறது. லீக் சுற்​றின் முடி​வில் ஒவ்​வொரு பிரி​விலும் முதலிடம் பிடிக்​கும் அணி​கள் நாக் அவுட் சுற்​றுக்கு முன்​னேறும். நாக் அவுட் சுற்று டிசம்​பர் 7 முதல் 13 வரை நடை​பெறுகிறது.

Read More

வாஷிங்டன்: கடந்த எட்டு மாதங்களில் உலக நாடுகளுக்கு இடையிலான எட்டு போர்களை நிறுத்தி உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க நாட்டின் அதிபராக டொனல்டு ட்ரம்ப் பதவியேற்றார். அப்போது முதல் அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். அதில் அமெரிக்காவின் வளர்ச்சி அமைந்துள்ளதாக அவர் கூறி வருகிறார். அந்த வகையில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவது, வெளிநாடுகள் அமெரிக்காவில் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.

Read More

நடிகர் ரவி மோகன், தான் தயாரிக்கும் படத்துக்கு ‘புரோ கோட்’ என்று தலைப்பு வைத்துள்ளார். இதை கார்த்திக் யோகி இயக்குகிறார். இந்நிலையில் ‘இண்டோ-ஸ்பிரிட் பிவரேஜஸ்’ என்ற மதுபான நிறுவனம் ‘புரோ கோட்’ என்ற பெயரை தங்களது வர்த்தக சின்னமாகப் பதிவு செய்து பயன்படுத்தி வருகிறது. இந்நிறுவனம் ‘புரோ கோட்’ தலைப்பை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.பிரபலமான வணிக நிறுவனப் பெயரைத் திரைப்படத்துக்குப் பயன்படுத்துவது வர்த்தக சின்ன விதிமீறல் என அந்நிறுவனம் வாதிட்டது. இதையடுத்து திரைப்படத்துக்கு ‘புரோ கோட்’ பெயரைப் பயன்படுத்த டெல்லி உயர் நீதிமன்றம் இடைக் காலத் தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து ரவி மோகன் ஸ்டூடியோஸ் சார்பில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப் பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதிக்க மறுத்து தடையை உறுதி செய்து உத்தரவிட்டது. விசாரணை டிசம்பர் முதல் வாரத்துக்குத் தள்ளிவைக்கப்பட்டது.

Read More