Author: admin

இந்த போதைப் பொருட்​கள் நுழைந்​திருந்​தால், 25,000 அமெரிக்​கர்​கள் இறந்​திருப்​பர். கடத்​தலில் தொடர்​புடைய​தாக சந்​தேகிக்​கப்​படும் இரு​வரும் வழக்கு விசா​ரணைக்​காக அவர்​களின் சொந்த நாடான ஈக்​கு​வ​டார் மற்​றும் கொலம்​பி​யா​வுக்கு திருப்பி அனுப்​பப்​பட்​டனர். இவ்​வாறு ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார். போதைப் பொருள் ஏற்றி வந்த நீர்​மூழ்கி கப்​பல் எந்த நாட்​டில் இருந்து புறப்​பட்​டது என்​பதை அமெரிக்கா தெரிவிக்​க​வில்​லை. இந்த நீர்​மூழ்கி கப்​பல் ரகசிய கப்​பல் கட்​டும் தளத்​தில் உரு​வாக்​கப்​பட்டு கொலம்​பி​யா​விலிருந்து மத்​திய அமெரிக்கா அல்​லது மெக்​சிகோவுக்கு போதைப் பொருள் கடத்​தலுக்கு நீண்​ட​கால​மாக பயன்​படுத்​தப்​பட்​டிருக்​கலாம்​ என கூறப்​படு​கிறது.

Read More

குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள ‘கிணறு’ படம் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நாளை வெளியாகிறது. ஹரிகுமார் இயக்கியுள்ள இப்படத்தை மெட்ராஸ் ஸ்டோரிஸ் என்ற நிறுவனம் சார்பில் சூர்யா நாராயணன் மற்றும் வினோத் சேகர் தயாரித்துள்ளனர். கவுதம் வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். புவனேஷ் செல்வநேசன் இசை அமைத்துள்ளார்.“ஒரு கிராமத்தில் 4 சிறுவர்கள், அருகிலுள்ள வீட்டுக் கிணற்றில் விளையாடுவதற்காகச் செல்கிறார்கள்.

Read More

சட்டப்பேரவை தேர்தலுக்கு யாருடன் கூட்டணி அமைக்கப்படும் என்று விரைவில் அறிவிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.ராணிப்பேட்டை பாமக கிழக்கு மாவட்டம் சார்பில் நெமிலியில் நேற்று பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: மதுப் பழக்கத்தை ஒழித்தால்தான் சமுதாயமும், நாடும் முன்னேறும். விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு சரியான விலை கிடைக்க வேண்டும். ஏழைக்கு ஒரு கல்வி, நடுத்தர மக்களுக்கு ஒரு கல்வி, பணக்காரர்களுக்கு ஒரு கல்வி என்பதுபோல கல்வியின் நிலைமை உள்ளது.வன்னியர்களுக்கு மட்டுமின்றி மாநிலத்தில் உள்ள அனைத்து சாதிகளுக்காகவும் போராடி வருகிறது பாமக.

Read More

சென்னை: தமிழகத்தில் தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய சனி, ஞாயிற்றுக்கிழமையையும் சேர்த்து 3 நாட்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தற்போது 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. தினமும் சராசரியாக ரூ.150 கோடிக்கு மது விற்பனையாகிறது. சனி, ஞாயிறு உள்ளிட்ட வார இறுதி நாட்களில் ரூ.200 கோடிக்கும் பண்டிகை காலங்களில் ரூ.250 கோடிக்கும் மது விற்பனை நடைபெறும்.

Read More

இந்தியாவின் கலாச்சார மற்றும் மொழியியல் பன்முகத்தன்மை அதன் பண்டிகைகள், உணவுகள் அல்லது பாரம்பரியங்களை மட்டும் வடிவமைக்கவில்லை, அது அதன் மாநிலங்களின் பெயர்களிலும் பிரதிபலிக்கிறது. பல மாநிலப் பெயர்கள் உள்ளூர் மொழிகளிலிருந்து பெறப்படுகின்றன, மற்றவை சமஸ்கிருதம், பண்டைய இராச்சியங்கள், பிராந்திய நிலப்பரப்புகள், ஆளும் வம்சங்கள் மற்றும் பல நூற்றாண்டுகள் பழமையான கலாச்சார அடையாளங்கள் ஆகியவற்றிற்கு அவற்றின் வேர்களைக் கண்டறிந்துள்ளன. இந்த மாநிலங்களின் பெயர்கள் எவ்வாறு தோன்றின என்பதை இங்கே தெளிவாகக் காணலாம். ஹிமாச்சல பிரதேசம்சமஸ்கிருதத்தில் இருந்து இந்த பெயர் வந்தது: ஹிமா என்றால் ‘பனி’, மற்றும் அச்சல் என்றால் மலை, நிலம் அல்லது உறைவிடம், இமாச்சல பிரதேசத்தை ‘பனி மலைகளின் தாயகம்’ ஆக்குகிறது. பஞ்சாப்அதன் பெயர் பாரசீக வம்சாவளியைச் சேர்ந்தது, இது பஞ்ச் (ஐந்து) மற்றும் அபி (நீர்) ஆகிய இரண்டு சொற்களைக் கலக்கிறது – ஐந்து நதிகளின் நிலத்தைக் குறிக்கிறது. உத்தரகாண்ட் 2000 ஆம் ஆண்டில் உத்தரபிரதேசத்தில் இருந்து உத்தராஞ்சல் என…

Read More

சூரத்: முஸ்லிம் லீக், மாவோயிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகளை நாடு நிராகரித்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் சூரத் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, "பிஹார் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. குஜராத்தில் குறிப்பாக சூரத்தில் வசிக்கும் பிஹார் சகோதரர்கள், இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்க உரிமை உண்டு. குஜராத் மக்கள் என்னை முதல்வராக தேர்ந்தெடுத்தபோது, இந்தியாவின் வளர்ச்சிக்காக குஜராத்தின் வளர்ச்சியை நாங்கள் முன்னிருத்தினோம் என்பது உங்களுக்குத் தெரியும். பிஹார் மக்களும் இதை அறிவார்கள். எங்கள் அடிப்படை சிந்தனை தேசம் முதலில் என்பதுதான்.

Read More

MAHCET (மகாராஷ்டிரம்), TS ICET (தெலங்கானா), AP ICET (ஆந்திரப் பிரதேசம்), OJEE (ஒடிசா), PGCET – இந்தத் தேர்வு கர்நாடக மாநிலத்திலுள்ள அரசு, தனியார் கல்லூரிகளுக்கான எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.டெக். படிப்புகளுக்காக நடத்தப்படு கிறது.TANCET தமிழ்நாடு காமன் என்ட்ரன்ஸ் டெஸ்ட். இந்தத் தேர்வு ஆண்டுதோறும் அண்ணா பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வின் மூலம் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ. / எம்.டெக். போன்ற படிப்புகளுக்கான சேர்க்கை நடை பெறும். 300க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் எம்.பி.ஏ. படிப்புக்கான சேர்க்கைக்கு இதன் மதிப்பெண்களை ஏற்றுக்கொள் கின்றன.

Read More

பனாஜி: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவா​வில் நடை​பெற்று வரு​கிறது. இதில் 82 நாடு​களை சேர்ந்த 206 வீரர், வீராங்​க​னை​கள் கலந்​து​கொண்​டுள்​ளனர். 8 சுற்​றுகளை கொண்ட இந்​தத் தொடரில் முதல் 3 சுற்​றுகள் நிறைவடைந்​துள்​ளன. நேற்று ஓய்வு நாளாக அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இந்​நிலை​யில் 4-வது சுற்று இன்று நடை​பெறுகிறது. நாக் அவுட் முறை​யில் நடத்​தப்​பட்டு வரும் இந்​தத் தொடரில் 4-வது சுற்​றில் விளை​யாடு​வதற்கு இந்​தி​யா​வின் ஆர்​.பிரக்​ஞானந்​தா, அர்​ஜூன் எரி​கைசி, பி.ஹரி​கிருஷ்ணா, வி.பிரணவ், வி.​கார்த்​திக் ஆகியோர் தகுதி பெற்​றுள்​ளனர். இன்று நடை​பெறும் 4-வது சுற்​றில் ஆர்​.பிரக்​ஞானந்​தா, ரஷ்​யா​வின் டேனியல் துபோவுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறார்.

Read More

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் பாகிஸ்தானிலும் உலகெங்கிலும் உள்ள இந்துக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். அதிபர் ஆசிப் அலி சர்தாரி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "இருளை ஒளி வெற்றி கொள்வதையும், தீமையை நன்மை வெற்றி கொள்வதையும் தீபாவளி அனைவருக்கும் நினைவூட்டுகிறது. நம்பிக்கை, நேர்மறை எண்ணம் மற்றும் ஒற்றுமையை இது வெளிப்படுத்துகிறது.

Read More

ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக அறிமுகமான ‘டார்லிங்’, ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’, அதர்வா நடித்த ‘100’ உள்பட சில படங்களை இயக்கியவர் சாம் ஆண்டன். இவர் அடுத்து இயக்கும் படம் ‘அன்கில்_123’.மனோதத்துவ த்ரில்லர் படமான இதில் அனுராக் கஷ்யப் முக்கிய கதாபாத்திரத்திலும் சங்கீதா உணர்ச்சிகரமான கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். ஜெரார்ட் ஃபெலிக்ஸ் இசையமைக்கும் இப்படத்துக்குக் கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

Read More