சென்னை: இந்திய-ஜப்பான் தொழில் வர்த்தக சபை சார்பில், ஆன்லைனில் ஜப்பானிய மொழி பயிற்சி அளிக்கப்படுகிறது.இதுதொடர்பாக, சென்னை, தேனாம்பேட்டையில் இயங்கி வரும் இந்திய-ஜப்பான் தொழில் வர்த்தக சபையின் பொதுச்செயலாளர் சுகுணா ராமமூர்த்தி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய-ஜப்பான் தொழில் வர்த்தக சபையின் மொழிப் பள்ளி, ஜப்பானிய மொழி பற்றிய ஆரம்பநிலை பயிற்சியை ஆன்லைன் வாயிலாக அளிக்க உள்ளது. இதில், ஜப்பானிய மொழியில் பேசுவது, எழுதுவது குறித்து சொல்லித் தரப்படும்.
Author: admin
ரியாத்: சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்று வரும் டபிள்யூடிஏ பைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலீனா ரைபாகினா சாம்பியன் பட்டம் வென்றார். 8 முன்னணி வீராங்கனைகள் பங்கேற்ற இந்த போட்டி கடந்த ஒரு வாரமாக ரியாத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிச் சுற்றில் 6-ம் நிலை வீராங்கனையான ரைபாகினா, முதல் நிலை வீராங்கனையும், பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவருமான அரினா சபலெங்காவுடன் மோதினார்.
பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள இலூவா அருங்காட்சியகம். இங்கு மோனோலிசா ஓவியம் உட்பட வரலாற்று சிறப்புமிக்க 33,000 கலைப் பொருட்கள், சிற்பங்கள், நகைகள், ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கலைப் பொருட்கள் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்கள் பல முறை திருடுபோயுள்ளன. கொள்ளை முயற்சி சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் இந்த அருங்காட்சியகத்தில் நேற்று முன்தினம் ஒரு கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. ஸ்கூட்டரில் வந்த கொள்ளையர்கள் அருங்காட்சியகத்தில் கட்டிட பராமரிப்பு நடைபெற்ற இடத்தின் வழியாக ஊடுருவியுள்ளனர்.
அருள்நிதி ஹீரோவாக நடிக்கும் படம் ‘மை டியர் சிஸ்டர்’. இதில், மம்தா மோகன் தாஸ், மீனாட்சி கோவிந்தராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர்.‘என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தை இயக்கிய பிரபு ஜெயராஜ் இயக்கியுள்ள இப்படத்தை ஃபேஷன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. வெற்றிவேல் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசை அமைத்துள்ளார். திருநெல்வேலி பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் மம்தா மோகன் தாஸ் அக்காவாகவும் அருள் நிதி தம்பியாகவும் நடித்துள்ளனர்.
நாம் இடம்பெறும் கூட்டணியே ஆட்சி அமைக்கும். இங்கு உள்ளவர்கள் எம்எல்ஏ ஆகலாம். கூட்டணி அமைச்சரவையில் இடம்பெறும் வாய்ப்பும் கிடைக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தேர்தலில் என்ன நடக்கப்போகிறது என்பதை கணிக்க முடியாது. தேர்தல் முடிவுக்கு பிறகு எதுவும் நடக்கலாம். 2026-ல் கூட்டணி அமைச்சரவை அமையவே நிறைய வாய்ப்பு உள்ளதாக சொல்கின்றனர். மதுரை மத்தி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகள் ஏற்கெனவே தேமுதிக வென்ற தொகுதி என்பதால், அங்கு என்னை போட்டியிடுமாறு கட்சியினர் விரும்புகின்றனர். கடவுள் அருள் இருந்தால் நானோ, எனது மகனோ போட்டியிடுவோம். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்கு நிதிஷ்குமார் மட்டுமின்றி, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் காரணம்.
சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.480 உயர்ந்து, ரூ.96 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப சமீபகாலமாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன்படி, அக்.8-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.90 ஆயிரத்தை தாண்டிய நிலையில், அக்.17-ம் தேதி ரூ.97 ஆயிரம் என்ற புதிய உச்சத்தை தொட்டது.மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்த்த சூழலில் மறுநாள் பவுனுக்கு ரூ.1,600 சரிந்தது. அதன்பின் அக்.20-ம் தேதி பவுனுக்கு ரூ.640 குறைந்திருந்தது.
ரோஸ்மேரி எண்ணெய் முடி மற்றும் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கும், குறிப்பாக முடி உதிர்தலைக் குறைப்பதற்கும், பொடுகை நிர்வகிப்பதற்கும் ஒரு இயற்கை மருந்தாக பெருகிய முறையில் பிரபலமடைந்துள்ளது. வழக்கமான முடி பராமரிப்புப் பொருட்களுக்கான மூலிகை மாற்றுகளை நுகர்வோர் ஆராய்வதால், ரோஸ்மேரி எண்ணெயின் செயல்திறனின் அறிவியல் அடிப்படையைப் புரிந்துகொள்வது மிகவும் பொருத்தமானதாகி வருகிறது. 1,8-சினியோல், கற்பூரம் மற்றும் ஆல்பா-பினீன் உள்ளிட்ட அதன் உயிர்வேதியியல் கலவைகள் உச்சந்தலையில் சுழற்சி, நுண்ணறை செயல்பாடு மற்றும் உச்சந்தலையில் நுண்ணுயிரிகளை பாதிக்கும் என்று நம்பப்படுகிறது. ஆராய்ச்சியின் மூலம் அதன் தாக்கத்தை மதிப்பிடுவது, எந்தெந்த நன்மைகள் ஆதாரங்களால் ஆதரிக்கப்படுகின்றன என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ள அனுமதிக்கிறது. முடி உதிர்தல் மற்றும் உச்சந்தலையில் கோளாறுகள் மக்கள்தொகையில் குறிப்பிடத்தக்க விகிதத்தை பாதிக்கிறது, ரோஸ்மேரி எண்ணெய் என்பது முடி பராமரிப்பு உத்திகளை விரும்புவோருக்கு நெருக்கமான பரிசோதனைக்கு தகுதியான ஒரு இயற்கை விருப்பமாகும்.முடி மற்றும் உச்சந்தலையில் ரோஸ்மேரி எண்ணெயின் முக்கிய நன்மைகள்ரோஸ்மேரி எண்ணெய் பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில்…
இந்த தேர்தல் முடிவு, ராஷ்ட்ரிய ஜனதா தொண்டர்களை மிகவும் சோர்வடையச் செய்துள்ள நிலையில், அக்கட்சியின் முதல் குடும்பத்திலும் பிரச்சினை வெடித்துள்ளது. லாலு பிரசாத் யாதவின் மகளும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவருமான ரோகிணி ஆச்சார்யா, கட்சியில் மிகவும் முக்கியமானவராகக் கருதப்பட்டு வந்தார். இந்த தேர்தலின்போது அவர் தீவிர பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.இந்நிலையில், கட்சியில் இருந்தும், தனது குடும்பத்தில் இருந்தும் விலகுவதாக ரோகிணி ஆச்சார்யா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நான் அரசியலைவிட்டு வெளியேறுகிறேன். மேலும், எனது குடும்பத்தில் இருந்தும் விலகுகிறேன். சஞ்சய் யாதவும், ரமீஸும் இதைத்தான் என்னிடம் கேட்டார்கள். எல்லா பழிகளையும் நான் ஏற்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
பல்வேறு அரசியல் மாற்றங்களும் சூழ்நிலை சவால்களும் எவ்வளவு தீவிரமாக மாறினாலும், தமிழ்ச் சமூகம் வளர்ச்சிக்கான வாய்ப்புகளைத் தொடர்ந்து தேடிக்கொண்டே இருந்தது. இந்த விடாமுயற்சியின் பின்னணியில் கல்வியின் மீதான ஆழமான நம்பிக்கையும், அறிவார்ந்த முன்னேற்றத்தின் மீதான பற்றும் முக்கியக் காரணங்களாக அமைந்தன. கல்விமுறை: 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல்லணை இன்றும் செயல்படுவது நீர்மேலாண்மையில் தமிழர்களின் பொறியியல் திறனுக்குச் சான்று. கல்வி, விவசாயம், வானியல், கட்டிடக்கலை, இலக்கியம் என எந்தத் துறையிலும் தமிழர்களின் பங்களிப்பு துல்லியமாகவும் வியக்கத்தக்கதாகவும் காலம் கடந்து நிற்ப தாகவும் விளங்குகிறது. சங்க இலக் கியங்களிலிருந்து நவீன காலம் வரை, கல்வி மூலம் சமூக முன்னேற் றத்தை அடைவதில் தமிழர்கள் காட்டிய ஈடுபாடு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகும்.
சண்டிகர்: தன்னம்பிகை வைத்து செயல்படும்போது அதற்கான வெற்றிகள் தேடி வரும் என்று இந்திய மகளிர் அணி கிரிக்கெட் வீராங்கனை ஷபாலி வர்மா தெரிவித்தார். கடந்த வாரம் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிச் சுற்றில் ஷபாலி வர்மா சிறப்பாக விளையாடி 87 ரன்கள் குவித்து ஆட்டநாயகி விருதை கைப்பற்றினார். மேலும், பந்துவீச்சின்போது 2 விக்கெட்களைச் சாய்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
