கரூர்: தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நாமக்கல் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் சம்பவத்தில் காயமடைந்த தாய், மகளிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். கரூர் வேலுசாமிபுரத்தில் செப். 27-ம் தேதி விஜய் பங்கேற்ற தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.வேலுசாமிபுரத்தில் கடை வைத்திருப்பவர்கள், பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்ட போலீஸார், ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், தவெக வழக்கறிஞர், மின் வாரியத்தினர், பவர் கிரிட் கார்ப்பரேஷன் அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். தற்போது, கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Author: admin
மும்பை: ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் உலகின் கனமான ஆடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. 10.5 கிலோ தங்கத்தில் (24 காரட்) வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆடையின் மதிப்பு ரூ.9.5 கோடி ஆகும். விலை உயர்ந்த, அரிய வகை கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள இது, துபாயின் ஆடம்பரம், கைவினைத்திறன் மற்றும் உயர்தர ஆடைத் துறையில் புதுமைக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது.
14 ஆண்டுகால ஆய்வில், ஆஸ்திரேலியர்கள் வசிக்கும் இடம் அவர்களின் உடல் எடையை கணிசமாக பாதிக்கிறது, உள்ளூர் உணவு சூழல்கள் மற்றும் சுற்றுப்புற வடிவமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. தனிநபர்கள் தங்கள் புதிய சமூகங்களின் எடை சுயவிவரத்தை படிப்படியாக ஏற்றுக்கொள்வதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர், சுமார் 15% பிராந்திய எடை வேறுபாடுகள் தனிப்பட்ட காரணிகள் மட்டுமல்ல, இருப்பிடத்தின் காரணமாகும். உங்கள் அஞ்சல் குறியீடு உங்களின் சமூக நிலை அல்லது உங்கள் ஆன்லைன் ஷாப்பிங் எவ்வளவு விரைவாக டெலிவரி செய்யப்படுகிறது என்பதை மட்டும் தீர்மானிக்கவில்லை; அது உங்கள் உடல் எடையையும் தீர்மானிக்கிறது. ஆம், அது சரிதான். நீங்கள் வசிக்கும் இடம் உங்கள் எடையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கர்டின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான ஒரு புதிய ஆய்வில், ஒரு நபரின் குடியிருப்பு பகுதி உடல் எடை உட்பட அவர்களின் ஆரோக்கிய விளைவுகளை தீர்மானிக்க முடியும் என்று கண்டறிந்துள்ளது. ஆய்வின் முடிவுகள் இதழில் வெளியிடப்பட்டுள்ளன சமூக அறிவியல்…
‘நிதிஷ் குமார் ஒரு மண் குதிரை’ – 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் மகாகட்பந்தன் கூட்டணியை முறித்துக் கொண்டு பாஜகவுடன் அவர் கைகோர்த்தபோது பரவலாக முன்வைக்கப்பட்ட விமர்சனம் இது. ஆனால் ஜோதி பாசு, நவீன் பட்நாயக் போன்றோர் செய்த சாதனையை (தொடர்ந்து 20 ஆண்டுகளாக மாநில முதல்வர் பதவி) சமன் செய்து ‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்’ என தனது அரசியல் ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார் நிதிஷ் குமார்.
புனே: மகாராஷ்டிராவின் புனே நகரை சேர்ந்தவர் நிதின் எஸ்.தர்மாவத். அவரது மகன் அங்குள்ள சிபிஎஸ்இ பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் சமூக வலைதளத்தில் அண்மையில் ஒரு வீடியோவை பகிர்ந்து உள்ளார். அதில், ‘‘பள்ளிகள் பயனற்றவை. தற்போது நள்ளிரவு 12 மணி ஆகிறது. எட்டாம் வகுப்பு படிக்கும் எனது மகன் ஹோம்வொர்க் பாடங்களை முடித்துவிட்டு ‘புராஜெக்ட்’ என்ற பெயரில் ஏதோ முட்டாள்தனமான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்.
பெங்களூரு: இந்தியா ஏ அணிக்கெதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டித் தொடரில் தென் ஆப்பிரிக்க ஏ அணி விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய ஏ அணி வெற்றி பெற்றது. இதையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 6-ம் தேதி தொடங்கியது.
மருத்துவக் காப்பீட்டுப் பலன்களைக் குறைத்தது, அரசு ஊழியர்களை வெகு எளிதாக வேலைநீக்கம் செய்யும்படி சட்டத்திட்டங்களை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வளைத்தது எனக் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளார்.இந்நிலையில் அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் மக்கள் பிரம்மாண்டப் பேரணியில் ஈடுபட்டனர். ‘இங்கு யாரும் மன்னர் இல்லை’ என்று கோஷங்களை மக்கள் எழுப்பினர். லட்சக்கணக்கானோர் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தில், அமெரிக்க மூத்த எம்பி பெர்னி சாண்டர்ஸ், முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் உட்பட ஜனநாயகக் கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.
விஜய் சேதுபதிக்கு நாயகியாக நடிக்க லிஜோ மோல் ஜோஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றி நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக லிஜோ மோல் ஜோஸ் நடித்து வருவது உறுதியாகி இருக்கிறது. இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது. இப்படத்தினை இயக்குநர் அட்லி தயாரித்து வருகிறார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் தவெகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமை தாங்கினார். தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மாவட்டச் செயலாளர்கள் அப்புனு,பாலமுருகன், குமார், சரவணன், தாமு, திலீப் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் பேசியதாவது: தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்: எஸ்ஐஆர் மூலம் வாக்காளர் பெயர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கொத்துக் கொத்தாக நீக்கப்படுவதாக மக்கள் கூறுகிறார்கள். இது அப்பட்டமான துஷ்பிரயோகம். அதேநேரம், போலி வாக்காளர்கள் பெயர்கள் சேர்க்கப்படுவதாக தகவல் வருகிறது. புறவாசல் வழியாக ஆட்சியாளர்கள் வெற்றி பெறப் பார்க்கின்றனர். இது ஆளுங்கட்சிக்கு சாதகமான அரசியல் சூழ்ச்சி.
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தின் சிறு கிராமத்தைச் சேர்ந்தவர் தாதாசாஹிப் பகத். 10-ம் வகுப்பு முடித்த அவர், ஐ.டி.ஐ. படித்துள்ளார். பின்னர் புனே நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ரூ.4 ஆயிரம் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
