டாக்கா: வங்கதேசத்தில் பிரதமராக இருந்த அவாமி லீக் கட்சித் தலைவர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்த ஆண்டு மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இது வன்முறையாக மாறிய தையடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதன் பிறகு அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. இதையடுத்து, சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் (ஐசிடி) ஹசீனா மீது பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் ஹசீனா ஆஜராக உத்தரவிட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ஐசிடி-யின் தலைவர் நீதிபதி முகமது குலாம் முர்துசா மஜும்தார் தலைமையிலான 3 பேர் அடங்கிய அமர்வு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஹசீனாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி நேற்று தீர்ப்பு வழங்கியது. வங்கதேசத்திலிருந்து தப்பிய பிறகு ஹசீனாவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை என்பது…
Author: admin
திருப்பூர்: அவிநாசியில் இளம்பெண் ரிதன்யா (27) தற்கொலை விவகாரம் தொடர்பாக, அவரது தந்தை அண்ணாதுரை, தாய் ஜெயசுதா மற்றும் குடும்பத்தினர் சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது மகள் ரிதன்யாவுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி, காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவரான ஆர்.கிருஷ்ணனின் மகன் வழி பேரனான கவின்குமார் (29) என்பவருக்கும் திருமணம் செய்து வைத்தோம். எனது மகளை கவின்குமாரும், அவரது பெற்றோரும் கொடுமைப்படுத்தி உள்ளனர். எனது மகள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக, தற்கொலைக்கு முன் அவரே ‘வாட்ஸ்அப்’-ல் ஆடியோ பதிவுகளை அனுப்பி உள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருப்பதால், விசாரணை எந்தளவுக்கு முழுமையாக நடைபெறும் என்பது எங்களுக்கு தெரியாது. எனவே, இவ்விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு, எங்களுக்கு நீதி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், என குறிப்பிட்டுள்ளனர். இதுதொடர்பாக திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.கிருஷ்ணன், ‘இந்து தமிழ்…
சென்னை: ஆயுள் காப்பீட்டு திட்டங்களை விற்பதற்காக ஏ.யு. ஸ்மால் பைனான்ஸ் வங்கி, லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (எல்ஐசி) நிறுவனத்துடன் இணைந்து செயல்படப் போவதாக அறிவித்துள்ளது. இந்த கூட்டு முயற்சி, “2047-க்குள் அனைவருக்கும் காப்பீடு’ என்ற தேசிய தொலைநோக்குப் பார்வையை ஆதரிக்கிறது. இந்த கூட்டாண்மையின் கீழ், டெர்ம் காப்பீடு, எண்டோவ்மென்ட், முழு ஆயுள் காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட எல்ஐசி-யின் திட்டங்களை ஏ.யு. ஸ்மால் பைனான்ஸ் வங்கி விற்பனை செய்யும். நாடு முழுவதும் 21 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள ஏ.யு. ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் 2,456 வாடிக்கையாளர் தொடர்பு மையங்களில் எல்ஐசி திட்டங்கள் கிடைக்கும். இதன்மூலம் கிராமப்புற, சிறுநகரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எல்ஐசி-யின் திட்டங்களால் பயனடைய முடியும். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை தலைமையகமாக கொண்டு செயல்படும் ஏ.யு. ஸ்மால் பைனான்ஸ் வங்கி கடந்த 1996-ல் நிறுவப்பட்டது. 1.13 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டு உள்ளது.
குவாஹாட்டி: அசாம் மாநிலத்தில் 1,000 கிலோ மாட்டிறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து அசாம் ஐஜிபி (சட்டம் ஒழுங்கு) அகிலேஷ் குமார்சிங் கூறுகையில், “செவ்வாய்க் கிழமை இரவு மாநிலம் முழுவதும் 112 உணவகங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில் 1,084 கிலோ மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக 132 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார். துப்ரி, கோல்பாரா, லக்கிம்பூரில் உள்ள கோயில்களுக்கு அருகில் மாட்டிறைச்சி விற்ற 150-க்கும் மேற்பட்டோர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இது அமைதியின்மையை உருவாக்கும் என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றம் சாட்டியிருந்தார். மேலும், அசாம் கால்நடை பாதுகாப்பு சட்டத்தை (2021) கடுமையாக அமல்படுத்தப்போவதாக சர்மா கூறியிருந்தார். இந்தச் சட்டம் மாட்டிறைச்சி உண்பதைத் தடை செய்யவில்லை. என்றாலும், இந்து, ஜெயின், சீக்கிய மற்றும் பிற மாட்டிறைச்சி உண்ணாத சமூகங்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் அல்லது இந்து மதத்தைச் சேர்ந்த எந்தவொரு கோயில் அல்லது பிற மத நிறுவனங்களின் பகுதியிலிருந்து…
அகமதாபாத்: அமெரிக்க அதிபராக 2-வது முறையாக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அதன்பிறகு, அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தினார். அதன்படி இந்தியர்களையும் அவர் ராணுவ விமானங்கள் மூலம் திருப்பி அனுப்பினார். மேலும், அமெரிக்காவில் குடியேறுவதற்கான விசா நடைமுறைகளையும் கடுமையாக்கினார். இதனால் அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டினர் எண்ணிக்கை குறைந்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 70 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவினால் முதலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். அதன்பிறகு, அவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. அந்த நடைமுறையை அதிபர் ட்ரம்ப் ரத்து செய்து விட்டார். இதனால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே வரையில் ஜோ பைடன் அதிபராக இருந்த கால கட்டத்தில் 34,535 இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் ஊடுருவியிருந்தனர். அந்த எண்ணிக்கை தற்போது ட்ரம்ப் அதிபரான…
மலையாள நடிகையான மினு முனீர், கடந்த ஆண்டு ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட 6 பேர் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து இயக்குநரும் நடிகருமான பாலச்சந்திர மேனன் மீதும் பாலியல் புகார் தெரிவித்திருந்தார். மலையாள சினிமாவில் முன்னணி இயக்குநராக இருந்த பாலச்சந்திர மேனன், தமிழில் ‘தாய்க்கு ஒரு தாலாட்டு’ என்ற படத்தை இயக்கியுள்ளார். நடிகை மினு முனீரின் புகாரை மறுத்த அவர், மினு முனீர் மீது காவல் நிலையத்தில் அவதூறு புகார் அளித்தார். இதையடுத்து மினு முனீர் முன்ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மினு முனீரை கொச்சி போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்தனர்.
சிவகங்கை: தனிப்படை போலீஸ் விசாரணையில் மரணமடைந்த திருப்புவனம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் சகோதரருக்கு அரசு பணி, இலவச வீட்டுமனைப் பட்டாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று வழங்கினார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். ஜூலை 27-ம் தேதி அக்கோயிலுக்கு சாமி கும்பிட மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா தனது தாயாருடன் காரில் வந்தார். திரும்பி வந்தபோது, பையில் வைத்திருந்த 10 பவுன் நகை. ரூ.2,500 காணவில்லை என புகார் தெரிவித்தார். இதையடுத்து, அஜித்குமார் உள்ளிட்ட 5 பேரிடம் திருப்புவனம் போலீஸார் விசாரித்தனர். மற்றவர்களை விடுவித்த நிலையில், அஜித் குமாரை மட்டும் மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் வெளியே அழைத்துச் சென்று விசாரித்தனர். ஜூன் 28-ம் தேதி போலீஸார் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். இச்சம்பவத்துக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள்…
லக்னோ: உ.பி.யில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக பூஜ்ய சகிப்புத்தன்மை கொள்கையை முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு பின்பற்றி வருகிறது. வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதற்காக ‘ஆபரேஷன் கன்விக் ஷன்’ நடவடிக்கையை கடந்த 2023, ஜூலை 1-ம் தொடங்கியது. இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டு 2 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. ‘ஆபரேஷன் கன்விக் ஷன்’ நடவடிக்கையில் கடந்த 2 ஆண்டுகளில் 97,158 கிரிமினல்களுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதில் 68 பேருக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையும் அடங்கும்.
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா நடித்துள்ள படம், ‘குபேரா’. இந்தப் படம் தெலுங்கில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து நாகார்ஜுனா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: வெற்றிதான், நடிப்பின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க வைக்கிறது. சினிமாவில் நீண்ட காலம் தாக்குப்பிடிப்பது கடினம். இங்கு வெற்றியும் நடிப்பின் மீதான காதலும் கைகோத்து இருக்கின்றன. என்னைச் சுற்றி வெற்றியும் இருப்பது என் அதிர்ஷ்டம். கிட்டத்தட்ட 36 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்தபோது நான் தோல்விகளைச் சந்தித்திருக்கிறேன். வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தால் பார்வையாளர்கள் விரும்பி ஏற்றுக்கொள்கிறார்கள். நான் நடித்த, ‘சிவா’ (1990) வெளிவந்த போது, மும்பை, டெல்லி உள்பட பல்வேறு பகுதிகளில் நான் வெற்றியை ருசித்தேன். கரோனாவுக்கு பிறகு, எல்லோரும் மற்ற மொழி திரைப்படங்களைப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது. ஆனால், அனைத்து திரைப்படங்களும் பான் இந்தியா படமாக ஆகிவிடாது. ஒரு பான் இந்தியா படத்தை உருவாக்க, அதிக திட்டமிடலும் சக்திவாய்ந்த…
சிவகங்கை: போலீஸ் விசாரணையில் மடப்புரம் அஜித் குமார் உயிரிழந்த வழக்கில், தனிப்படை போலீஸ் விசாரணைக்கு அழுத்தம் கொடுத்த உயர் அதிகாரி யார்? என காவல் துறை தெளிவுபடுத்த வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்த கோயில் காவலாளி அஜித்குமார் (27), நகை திருடுபோன விவகாரம் தொடர்பான விசாரணையில் தனிப்படை போலீஸார் கடுமையாகத் தாக்கியதில் உயிரிழந்தார். முதல்கட்டமாக, அஜித்குமார் இறப்பு குறித்து தனிப்படை காவலர் கண்ணன் அளித்த புகாரின் பேரில் பிஎன்எஸ்எஸ் 196 (2) (ஏ) பிரிவின் கீழ் திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) பதிவு செய்தார். அதில், மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அஜித் குமார் முன்னுக்குப் பின் முரணாக தகவல் கூறியதாக மானாமதுரை டிஎஸ்பி மற்றும் திருப்புவனம் ஆய்வாளரிடம் தகவல் தெரிவித்ததாகவும், அவர்கள் தொடர்ந்து அஜித்…