Author: admin

போபால்: இந்​திய ஏ அணி வீரரும், ராயல் சேலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) ஐபிஎல் அணி​யின் கேப்​ட​னு​மான ரஜத் பட்​டி​தார் காயம் அடைந்​துள்​ளார். நடுவரி வரிசை ஆட்டக்காரன ரஜத் பட்டிதார், ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் மத்திய பிரதேச அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், இந்தியா ‘ஏ’- தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டிக்கான இந்தியா ‘ஏ’ அணி​யில் ரஜத் பட்டி​தார் இடம் பிடித்​திருந்​தார்.

Read More

காசா: காசாவில் ஒரு பேருந்தின் மீது இஸ்ரேல் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் பாலஸ்தீனிய குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்ததாக காசா சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் காசாவின் சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பஸ்ஸல், “ஜெய்துன் பகுதிக்கு கிழக்கே இடம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் அபு ஷபான் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஜெய்துன் பகுதியில் இருந்த தங்கள் வீட்டை கண்டறிய முயன்றபோது அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்" என்று கூறினார்.

Read More

அரசு கவின் கலைக் கல்லூரியில் பயின்ற தோட்டா தரணி, இந்தியாவில் இருந்து இவ்விருது பெற்ற மிகப்பெரும் ஆளுமைகளின் வரிசையில் இணையவுள்ளது பெருமையளிக்கிறது. பார் போற்றும் உங்கள் சாதனைக்குப் பாராட்டுகள்.” எனத் தெரிவித்துள்ளார்.நாளை விருது விழா: தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிப் படங்கள் மட்டுமின்றி பிரெஞ்சு, இத்தாலியப் படங்களுக்கும் கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ள தோட்டாதரணி, ‘நாயகன்’ படத்துக்காகப் மும்பை தாராவி செட், ரஜினி நடித்த ‘சிவாஜி’, மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ போன்ற படங்களுக்காக பிரம்மாண்ட செட்கள் அமைத்து அசத்தியவர்.

Read More

சென்னை: வங்​கக் கடலில் நில​வும் காற்​றழுத்த தாழ்வு பகுதி காரண​மாக சென்னை உள்​ளிட்ட 7 மாவட்​டங்​களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், 15 மாவட்​டங்​களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: இலங்கை கடலோரப் பகு​தி​களுக்கு அப்​பால், தென்​மேற்கு வங்​கக் கடல் பகு​தி​களில் காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி நில​வு​கிறது. இது வடமேற்கு திசை​யில் மெது​வாக நகர்ந்து செல்​லக் கூடும். இதன் காரண​மாக இன்று (நவ.17) தமிழக கடலோரப் பகு​தி​களில் பெரும்​பாலான இடங்​களி​லும், உள் தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களி​லும் இடி, மின்​னலுடன் கூடிய, லேசான அல்​லது மித​மான மழை பெய்​யக்கூடும்.

Read More

சென்னை: சென்னையில் இன்று (அக்.21) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.2,080 அதிகரித்துள்ளது. மீண்டும் ஒரு பவுன் ரூ.97 ஆயிரத்தைக் கடந்து விற்பனையாகிறது. எச்​1பி விசா கட்​ட​ணத்தை அமெரிக்க அரசு உயர்த்​தி​யது, அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாய் மதிப்பு வீழ்ச்​சி, வட்டி விகிதத்தை அமெரிக்க ஃபெடரல் வங்கி குறைத்​தது உள்ளிட்ட காரணங்களால் முதலீட்​டாளர்​களின் பார்வை தங்கத்​தின் பக்​கம் திரும்​பியது. இதனால், தங்​கம் விலை தொடர்ந்து உயர்ந்​து வருகிறது.

Read More

ஹாலிவுட் நடிகை எமி ஷுமர், அவரது வியத்தகு 50-பவுண்டு எடை இழப்பு மற்றும் மெலிதான தோற்றம் பற்றிய பரவலான ஊகங்களுக்கு உரையாற்றினார். டிசம்பர் 1 இன்ஸ்டாகிராம் பதிவில், “சூடான தோற்றத்திற்காக” உடல் எடையை குறைக்கவில்லை என்று “ஐ ஃபீல் ப்ரீட்டி” நட்சத்திரம் பகிர்ந்துள்ளார், மாறாக “உன்னைக் கொல்லக்கூடிய” ஒரு நோயிலிருந்து “உயிர்வாழ்வதற்காக” இதைச் செய்தேன். எமியின் 6 வயது மகனால் படம்பிடிக்கப்பட்ட வீடியோவில், ஒரு வாசகம் உள்ளது, அதில் எமி தனது உடல் எடையை குறைத்தது ஒரு தீவிர மருத்துவ நிலை காரணமாக இருந்தது என்று தெளிவுபடுத்தினார். ஷுமர் முன்பு தனது உடல்நலப் போராட்டங்களைப் பற்றி வெளிப்படையாகக் கூறினார். “நியூஸ் நாட் நோஸ்” பதிவர் ஜெசிகா யெலின் ஒரு நேர்காணலில், ஷுமர் தனக்கு ‘குஷிங் சிண்ட்ரோம்’ இருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறினார். மருத்துவ நிலை குஷிங் சிண்ட்ரோம் என்பது அதிக அளவு மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலை நீண்டகாலமாக வெளிப்படுத்துவதால் ஏற்படும் ஹார்மோன்…

Read More

ஜம்மு: ஜம்முவின் நக்ரோடா சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட தேவயானி ரானா 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாந்தர்ஸ் பார்ட்டி வேட்பாளர் ஹர்ஷ் தேவ் சிங் தோல்வி அடைந்தார்.

Read More

என் பெயர் சரண்யா. நான் காஞ்சிபுரத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் படித்து முடித்தேன். ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவியாக, திறன் பயிற்சிகளுக்காக தனியாக செலவு செய்ய முடியாது என்ற ஒரு வரம்பு எப்போதும் இருந்தது. அந்த நேரத்தில், எங்களுக்கு நான் முதல்வன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு செமஸ்டரிலும் ஒரு திறன் பயிற்சி கட்டாயமாக சேர்க்கப்பட்டதால், கல்வியுடன் சேர்த்து தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப திறன்களையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இது எனது துறைக்கு நேரடியாக இணைந்த பயிற்சி என்பதால், படித்து முடிந்தவுடன் வேலை தேடுவதற்கான நம்பிக்கை மேலும் உறுதியானது.

Read More

சாக்ஸ்டன்: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்​கெ​தி​ரான 3-வது டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் நியூஸிலாந்து அணி 9 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. இந்த போட்டி நெல்​சன் பகு​தி​யிலுள்ள சாக்​ஸ்​டன் ஓவல் மைதானத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் முதலில் விளை​யாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்​களில் 9 விக்​கெட் இழப்​புக்கு 177 ரன்​கள் குவித்​தது. நியூஸிலாந்து அணி​யின் டெவன் கான்வே 56, டிம் ராபின்​சன் 23, ரச்​சின் ரவீந்​திரா 26, டேரில் மிட்​செல் 41, மைக்​கேல் பிரேஸ்​வெல் 11 ரன்​கள் எடுத்​தனர்.

Read More

இந்​நிலை​யில் இந்த தாக்​குதலில் 3 கிரிக்​கெட் வீரர்​கள் உட்பட 8 பேர் உயி​ரிழந்​த​தாக ஆப்​கானிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யம் (ஏசிபி) தெரி​வித்​துள்​ளது.இதுகுறித்து ஏசிபி வெளியிட்ட அறிக்கையில், “நட்​பு ரீ​தியி​லான ஒரு ஆட்​டத்​தில் பங்​கேற்க எங்​கள் கிரிக்​கெட் வீரர்​கள் பாகிஸ்​தான் எல்​லைக்கு அரு​கில் உள்ள உர்​குனில் இருந்து ஷரா​னா​வுக்கு சென்​றனர். அவர்​கள் மீண்​டும் உர்​குன் திரும்​பிய பிறகு அவர்​கள் குறி​வைத்து தாக்​கப்​பட்​டனர். இதில் கபீர், சிப்​கதுல்​லா, ஹாரூன் ஆகிய 3 வீரர்​கள் உட்பட 8 பேர் உயி​ரி ழந்​தனர். பாகிஸ்​தானின் இந்த தாக்​குதல் கோழைத்​தன​மானது.

Read More