Author: admin

ஏதென்ஸ்: ஏதென்ஸ் ஓபன் டென்​னிஸ் போட்​டி​யில் செர்​பிய வீரர் நோவக் ஜோகோ​விச் சாம்​பியன் பட்​டம் வென்​றார். கிரீஸ் நாட்​டின் ஏதென்ஸ் நகரில் ஏதென்ஸ் ஓபன் டென்​னிஸ் போட்டி நடை​பெற்று வந்​தது. நேற்று நடை​பெற்ற இந்​தப் போட்​டி​யின் இறு​திச் சுற்​றில் ஜோகோ​விச் 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்​கில் இத்​தாலி வீரர் லோரென்சோ முசெட்​டியை வீழ்த்தி பட்​டத்​தைக் கைப்​பற்​றி​னார். அவர் வெல்​லும் 101-வது பட்​ட​மாகும் இது.

Read More

இஸ்லாமாபாத்: எந்தவொரு தாக்குதல் நடவடிக்கைக்கும் தீர்க்கமான பதிலடி கொடுக்கப்படும் என்று இந்தியாவுக்கு பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கைபர் பக்துன்க்வாவின் அபோட்டாபாத்தில் உள்ள முதன்மை பாகிஸ்தான் ராணுவ அகாடமியில் நடைபெற்ற ராணுவ கேடட் பயிற்சி பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர், “அணுசக்திமயமாக்கப்பட்ட சூழலில் போருக்கு இடமில்லை என்று இந்திய ராணுவத் தலைமைக்கு நான் அறிவுறுத்துகிறேன், உறுதியாக எச்சரிக்கிறேன். இந்தியாவுடனான நான்கு நாள் மோதலின்போது பாகிஸ்தான் வெளியிலிருந்து ஆதரவைப் பெற்றதாகக் கூறுவது தவறானது.

Read More

சுமார் 3,800-க்கும் மேற்பட்ட ஏழை குழந்தைகளின் இதய அறுவைச் சிகிச்சைக்கு உதவிய பாடகி பலக் முச்சால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.பிரபல பின்னணி பாடகி பலக் முச்சால். பாலிவுட் பாடகியான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, மராத்தி உள்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியிருக்கிறார். தமிழில் அனுஷ்கா நடித்த ‘இஞ்சி இடுப்பழகி’ உள்பட சில படங்களில் பாடியுள்ள இவர், தனது சகோதரர் பலாஷுடன் இணைந்து, அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார்.

Read More

சென்னை: சென்னை உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி தமிழக ஐஎன்​டி​யுசி தேர்​தல் நேற்று நடை​பெற்​றது. இதில்தலை​வ​ராக மு.பன்​னீர்​செல்​வம், செய​லா​ள​ராக கோவை செல்​வம் வெற்றி பெற்​றனர். இந்​திய தேசிய தொழிற்​சங்க காங்​கிரஸ்​ஸின் தமிழக ஐஎன்​டி​யுசி மாநில நிர்​வாகி​கள் தேர்​தலை, ஐஎன்​டி​யுசி சட்ட விதி​கள்​படி நடத்​தும்​படி, சென்னை உயர்நீதி​மன்ற நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யன் மற்​றும் முகமத் ஷஃபி ஆகியோர் கொண்ட அமர்வு உத்​தர​விட்​டது. இதையடுத்​து, தமிழக ஐஎன்​டி​யுசி அவசர செயற்​குழு கூட்​டம், கடந்த அக்​.31-ம் தேதி நடந்​தது.

Read More

சென்னை: சரக்​கு​களை கையாளும் நிறு​வனங்​களை, ஊக்​கப்​படுத்த தெற்கு ரயில்வே சலுகைகள் அளித்து வருகிறது. அந்த வகையில், தமிழ்​நாடு சிவில் சப்​ளைஸ் கார்ப்​பரேஷனின் கோரிக்​கைகளுக்கு இணங்க, தெற்கு ரயில்வே தமிழகத்​தின், டெல்டா மாவட்​டங்​களுக்கு நேரடி கொள்​முதல் மையங்​கள் வாயி​லாக கொள்​முதல் செய்​யப்​படும் நெல்லை எடுத்து வர சரக்கு ரயிலை இயக்​கியது. தஞ்​சை, நாகப்​பட்​டினம், நீடா​மங்​கலம், கும்​பகோணம், சீர்​காழி, மயி​லாடு​துறை, பேரளம், மன்​னார்​குடி, திருத்​துறைப்​பூண்​டி, திரு​வாரூர், பட்​டுக்​கோட்​டை, விருத்​தாச்​சலம், செங்​கை, புதுக்​கோட்டை ஆகிய இடங்​களில் உள்ள கூட்ஸ் ஷெட்​டு​களில் சரக்கு ரயில்கள் இயக்​கப்​பட்​டுள்​ளன. தமிழகம் முழு​வதும் அக்​.1-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 85 ரயில்​கள் இயக்​கப்​பட்​டு, 2.3 லட்​சம் டன் சரக்​கு​கள் கையாளப்​பட்​டுள்​ளன.

Read More

மாரடைப்பு மற்றும் இருதய நோய்கள் உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இதயம் தொடர்பான நிலைமைகளால் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் உயிரை இழக்கின்றனர், பெரும்பாலும் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள் கவனிக்கப்படாமல் அல்லது புறக்கணிக்கப்படுவதால். டாக்டர் சஞ்சய் போஜ்ராஜ், போர்டு-சான்றளிக்கப்பட்ட இருதயநோய் நிபுணரும், 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள செயல்பாட்டு மருத்துவ நிபுணரும், இதய நோயின் ஆரம்பக் குறிகாட்டிகளாக இரத்த அழுத்தத்தில் ஏற்படும் நுட்பமான மாற்றங்களை அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறார். அவரைப் பொறுத்தவரை, இந்த மாற்றங்கள் மார்பு வலி அல்லது சோர்வு போன்ற பொதுவான அறிகுறிகள் தோன்றுவதற்கு ஒரு தசாப்தத்திற்கு முன்பே மாரடைப்பைக் கணிக்க முடியும்.ஒரு பெரிய நிஜ உலக ஆய்வு, 2006 மற்றும் 2010 இல் அளவிடப்பட்ட இரத்த அழுத்தத்துடன், 96,000 க்கும் மேற்பட்ட நபர்களில் நிலை 1 உயர் இரத்த அழுத்தத்துடன் இணைக்கப்பட்ட நீண்ட கால இருதய ஆபத்தை ஆய்வு செய்தது. இருதய நோய் (CVD)…

Read More

இதுகுறித்து பாஜக ஐ.டி. பிரிவு தலை​வர் அமித் மாள​வியா நேற்று சமூக வலை​தளத்​தில் ஒரு வரைபடம் வெளி​யிட்​டார். அதில் ராகுல் காந்தி சந்​தித்த தேர்​தல்​களில் அடைந்த தோல்வி​கள் குறித்து பட்​டியலிட்​டுள்​ளார். இதுகுறித்து அமித் மாள​வியா வெளி​யிட்ட பதி​வில், ‘‘இன்​னொரு தேர்​தல்​… இன்​னொரு தோல்​வி. கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை கடந்த 20 ஆண்​டு​களில் ராகுல் காந்​தி​யின் வழி​காட்​டு​தலில் காங்​கிரஸ் கட்சி பல மாநிலங்​களில் ஆட்​சியை இழந்​துள்​ளது. தேர்​தல் நிலைத்​தன்​மைக்கு விருது வழங்​கலாம் என்​றால், எல்லா விருதுகளை​யும் ராகுல் காந்தி தட்டிச் செல்​வார்’’ என்று விமர்​சித்​துள்​ளார்.அமித் மாள​வியா வெளி​யிட்ட வரைபடத்​தில், இமாச்​சல் (2007, 2017), பஞ்​சாப் (2007, 2012, 2022), குஜ​ராத் ( 2007, 2012, 2017, 2022), மத்​திய பிரதேசம் ( 2008, 2013, 2018, 2023), மகா​ராஷ்டிரா (2014, 2019, 2023) மற்​றும் டெல்​லி, ஹரி​யா​னா, உ.பி., பிஹார், வடகிழக்கு மாநிலங்​கள், ஒடி​சா, ஆந்​திரா யூனியன்…

Read More

டாக்டர் அப்துல் கலாமின் நினைவைப் போற்றும் தேசிய நினைவகம், அவரின் சொந்த ஊரான ராமேசுவரம் தீவில் உள்ள பேக்கரும்பு பகுதியில் அவர் மறைவுக்குப் பிறகு நிறுவப்பட்டது. இதுதவிர கலாமின் பூர்விக வீடு, டெல்லியில் கலாம் நினைவகம், திருவனந்தபுரத்தில் கலாம் விண்வெளி அருங்காட்சியகம் ஆகியவற்றின் வழியாக இன்றளவும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். விண்வெளி அருங்காட்சியகம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் டாக்டர் கலாம் ஸ்மிருதி சர்வதேச அறிவியல் மற்றும் விண்வெளி அருங்காட்சியகம் உள்ளது. இங்கு கலாமின் அரிய ஒளிப்படங்கள், அவருடைய பெரும் பங்களிப்பில் உருவாக்கப்பட்ட ஜிஎஸ் எல்வி எம்கே- 3 ஏவுகணை, ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்களின் சிறிய மாதிரி வடிவங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

Read More

ஹாங்​காங்: ஹாங்​காங் சிக்​ஸஸ் கிரிக்​கெட் போட்​டி​யில் பாகிஸ்​தான் அணி 43 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் குவைத் அணியை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்​றது.ஹாங்​காங் நாட்​டிலுள்ள மாங்​காக்​கில் ஹாங்​காங் சிக்​ஸஸ் கிரிக்​கெட் போட்டி நடை​பெற்று வந்​தது. இறு​திப் போட்​டி​யில் பாகிஸ்​தான், குவைத் அணி​கள் நேற்று மோதின. இதில் முதலில் விளை​யாடிய பாகிஸ்​தான் அணி 6 ஓவர்​களில் 3 விக்​கெட் இழப்​புக்கு 135 ரன்​கள் குவித்​தது.

Read More

விமானப் படையின் தீயணைப்புப் பிரிவுகளும் மீட்புப் பணியில் இணைந்துள்ளதாக வங்கதேச சிவில் விமானப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து விமானங்களின் தரையிறக்கங்களும், புறப்படுதலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றும், அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக உள்ளன என்றும் அதிகாரிகள் கூறினர்.டாக்காவில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்த ஒன்பது விமானங்கள் தீவிபத்து காரணமாக சட்டோகிராம் மற்றும் சில்ஹெட்டில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. அவற்றில் எட்டு விமானங்கள் சட்டோகிராமிலும், ஒன்று சில்ஹெட்டிலும் தரையிறங்கியது. சரக்கு முனையத்தில் சேமிக்கப்பட்டிருந்த ரசாயனங்கள் தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் சவாலாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவம், விமானப்படை, கடற்படை மற்றும் வங்கதேச எல்லைக் காவல்படை (BGB) வீரர்கள் தீயணைப்பு படையினர் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Read More