வாஷிங்டன்: உலகில் பல போர்களை முடிவுக்குக் கொண்டு வந்த தனக்கு பாகிஸ்தான் – ஆப்கனிஸ்தான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது எளிதானதே என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் இணைந்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டொனால்டு ட்ரம்ப், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அப்போது அவர், “பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவதை நான் புரிந்து வைத்திருக்கிறேன். அந்த மோதலை தீர்க்க விரும்பினால், அது எனக்கு எளிதானதே. இதற்கிடையில் நான் அமெரிக்காவை நடத்த வேண்டும். ஆனாலும், போர்களை முடிவுக்குக் கொண்டு வருவதை நான் விரும்புகிறேன்.
Author: admin
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் மத எல்லைகளைத் தாண்டி, பெண்கள் வளர்ச்சிக்காகத் தன்னலமற்ற சேவைகளை செய்தவர், கன்னியாஸ்திரி ராணி மரியா. அவர் வாழ்க்கைச் சம்பவங்களை மையப்படுத்தி உருவாகியுள்ள படம், ‘த ஃபேஸ் ஆப் த ஃபேஸ்லெஸ்’ (முகமற்றவரின் முகம்).ட்ரை லைட் கிரியேஷன்ஸ் தயாரித்த இந்த திரைப்படம், 2024ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 123-க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்ற இப்படத்தில், வின்சி அலாய்சியஸ், சோனாலி மொஹந்தி, ஜீத் மத்தாரு, அஜிஸ் ஜோசப் நடித்துள்ளனர். 136 நிமிடங்கள் ஓடும் இப்படம் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழில் நவ.21ம் தேதி வெளியாகிறது.
சென்னை: தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்: தேங்கிய நீர், அசுத்தமான அல்லது மாசடைந்த நீரில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரும் குளிக்கக்கூடாது. குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள் அனைத்தும் தூய்மையான சூழலில் இருப்பதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். தனியார் மற்றும் அரசு நீச்சல் குளங்கள் அனைத்தும் அரசு வழிகாட்டுதலின்படி தூய்மையாக பராமரிக்க வேண்டும். தண்ணீரில் குறிப்பிட்ட அளவு குளோரின் கலந்திருத்தல் வேண்டும். மூளையழற்சி அறிகுறிகளுடன் மருத்துவமனைகளுக்கு வருபவர்களை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். உயர்சிறப்பு சிகிச்சைகள் தேவைப்படுபவர்களுக்கு, அந்த வசதிகள் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
சென்னை: தீபாவளி பண்டிகை இன்று நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்து இனிப்பு வழங்கி வீடுதோறும் தீபம் ஏற்றி வைத்து பண்டிகையை மக்கள் கொண்டாடினர். இதை முன்னிட்டு சென்னையில் ஜவுளி, பட்டாசு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனை அமோகமாக நடந்தது. தீபாவளி பண்டிகை என்றாலே, துணிக்கடைகள் அதிகம் உள்ள சென்னையின் முக்கிய கடை வீதிகளில் கூட்ட நெரிசல் இயல்பாகவே அதிகரித்து விடும். அந்தவகையில், தீபாவளிக்கு முந்தைய நாளான நேற்று, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலையிலும், நேற்று விடுமுறை நாள் என்பதால் மக்கள் தங்களது குடும்பத்தினருடன் ஜவுளி கடைகள், பட்டாசு கடைகளை நோக்கி படையெடுத்தனர்.
சால்மன் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதங்களின் வளமான மூலமாகும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே, இது இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இருப்பினும், சுற்றுச்சூழல் மாசுபாடுகள், ஒட்டுண்ணி நோய்த்தொற்றுகள் மற்றும் தொழில்துறை விவசாய முறைகள் காரணமாக சால்மன் நுகர்வு சில ஆரோக்கிய அபாயங்களையும் அளிக்கிறது. வளர்க்கப்படும் சால்மனில் உள்ள அசுத்தமான அளவுகள் காட்டு சால்மன் மீன்களை விட அதிகமாக உள்ளது, ஏனெனில் அதில் அதிக அளவு PCB கள் (பாலிகுளோரினேட்டட் பைபினைல்கள்) மற்றும் பிற மாசுக்கள் உள்ளன, இது புற்றுநோய் அபாயத்தையும் ஹார்மோன் பிரச்சனைகளையும் அதிகரிக்கும். எப்படி என்று பார்ப்போம்…வளர்க்கப்பட்ட சால்மனில் உள்ள அசுத்தங்கள்சால்மன் மீன் வளர்ப்பில் பயன்படுத்தப்படும் மீன் தீவனம், PCBகள், டையாக்ஸின்கள் மற்றும் கன உலோகங்கள் உள்ளிட்ட நிலையான கரிம மாசுகளைக் கொண்டுள்ளது. மீன் தீவனத்தில் உள்ள அசுத்தங்கள் அசுத்தமான மூலங்களிலிருந்து உருவாகின்றன, பின்னர் அவை தீவனத்தில் குவிகின்றன. காட்டு சால்மன் மீன்களை…
ஹைதராபாத்: ஹைதராபாத், ஜூப்ளி ஹில்ஸ் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நவீன் யாதவ், 24,729 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.ஹைதராபாத், ஜூப்ளி ஹில்ஸ் தொகுதி பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ மாகண்டி கோபிநாத் கடந்த ஜூன் மாதம் உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் இந்த தொகுதிக்கு கடந்த 11-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இத் தேர்தலில் காங்கிரஸ், பிஆர்எஸ், பாஜக வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 58 பேர் போட்டியிட்டனர். 49 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாயின.
இளையோரின் நேசன்: ‘சமூகத்தைப் புரட்டிப்போடக்கூடிய சக்திவாய்ந்த கருவி கல்வி’ என்றார் கலாம். இதனை அவர் ஆழமாக நம்பியதால்தான் விஞ்ஞானியாக, குடியரசுத் தலைவராகப் பல உயரிய பொறுப்புகளை வகித்த பிறகும் தனது இறுதி மூச்சுவரை மாணவர்களைத் தேடிச் சென்று உரையாடினார். இளையோருக்கு வாழ்க்கையின் சாராம்சத்தைப் போதித்து அவர்களுக்கு உத்வேகம் அளிப்பதில் நாட்டம் கொண்டிருந்தார். பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளுக்குச் சென்று அங்குள்ள மாணவர்களிடம் தாம் பெற்ற படிப்பினையைப் பகிர்ந்தார்.இதுபோக, உலக மாணவர் நாள் மேலும் பல காரணங்களுக்காகக் கடைப்பிடிக்கப் படுகிறது. எதிர்காலத் தலைவர்களாக, புதிய கண்டறிதல்களை நிகழ்த்துபவர்களாக மாணவர்கள் உருவாக அழைப்புவிடுக்கும் நாள் இது. கல்வி எவ்வாறு ஒருவரின் தலையெழுத்தைத் திருத்தி சிறப்பாக எழுத வல்லது என்பதை உரக்கச் சொல்லும் நாள் இது. ஆண்டுதோறும் இந்நாளுக்கான கருப்பொருள் மற்றும் உபதலைப்புகள் தெரிவு செய்யப்படுவது வழக்கம்.
ஏதென்ஸ்: ஏதென்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் ஏதென்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றில் ஜோகோவிச் 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் இத்தாலி வீரர் லோரென்சோ முசெட்டியை வீழ்த்தி பட்டத்தைக் கைப்பற்றினார். அவர் வெல்லும் 101-வது பட்டமாகும் இது.
இஸ்லாமாபாத்: எந்தவொரு தாக்குதல் நடவடிக்கைக்கும் தீர்க்கமான பதிலடி கொடுக்கப்படும் என்று இந்தியாவுக்கு பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கைபர் பக்துன்க்வாவின் அபோட்டாபாத்தில் உள்ள முதன்மை பாகிஸ்தான் ராணுவ அகாடமியில் நடைபெற்ற ராணுவ கேடட் பயிற்சி பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர், “அணுசக்திமயமாக்கப்பட்ட சூழலில் போருக்கு இடமில்லை என்று இந்திய ராணுவத் தலைமைக்கு நான் அறிவுறுத்துகிறேன், உறுதியாக எச்சரிக்கிறேன். இந்தியாவுடனான நான்கு நாள் மோதலின்போது பாகிஸ்தான் வெளியிலிருந்து ஆதரவைப் பெற்றதாகக் கூறுவது தவறானது.
சுமார் 3,800-க்கும் மேற்பட்ட ஏழை குழந்தைகளின் இதய அறுவைச் சிகிச்சைக்கு உதவிய பாடகி பலக் முச்சால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.பிரபல பின்னணி பாடகி பலக் முச்சால். பாலிவுட் பாடகியான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, மராத்தி உள்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியிருக்கிறார். தமிழில் அனுஷ்கா நடித்த ‘இஞ்சி இடுப்பழகி’ உள்பட சில படங்களில் பாடியுள்ள இவர், தனது சகோதரர் பலாஷுடன் இணைந்து, அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார்.
