ஒருநாள் அக்காவின் கணவர் அகமது ஜலாலுதீனுடன் கடற்கரையில் நடந்துகொண்டிருந்தார் கலாம். அப்போது வானில் பறவைகள் பறந்துகொண்டிருந்ததை ஆச்சரியத்துடன் பார்த்தவர், ‘இந்தப் பறவைகள் எப்படிப் பறக்கின்றன?’ என்று கேட்டார். ‘பறவைகள் என்ன, மனிதனே இப்போது விமானத்தில் பறக்க ஆரம்பித்துவிட்டான். உங்க அண்ணன் சம்சுதீன் செய்தித்தாள் முகவர். அவரிடம் கேட்டு, தினமும் செய்தித்தாள் படி. நம்ம மாணிக்கத்தின் நூலகத்துக்குப் போனால், நிறைய புத்தகங்கள் இருக்கும். அவற்றை எல்லாம் படித்தால் உன் அறிவு விரிவாகும்’ என்றார் ஜலாலுதீன். அன்றிலிருந்து பாடக் கல்வி அல்லாத பிறவற்றையும் படிக்க ஆரம்பித்தார் கலாம்.
Author: admin
இந்தியா-ஏ, தென் ஆப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ வெற்றி பெற்றது. துருவ் ஜுரெல் 2 இன்னிங்ஸ்களிலும் சதமடித்தார். ரிஷப் பண்ட்டின் பிரதம போட்டியாளரான துருவ் ஜுரெல் இப்படி ஆட, ரிஷப் பண்ட்டோ 3 முறை சரியான அடி வாங்கி காயத்தினால் வெளியேறவும் செய்தார். இங்கிலாந்து பயணத்தின் போது தேவையில்லானல் கிறிஸ் வோக்ஸ் பந்தை ரிவர்ஸ் ஷாட் ஆடுகிறேன் என்று ஃபுல்டாசில் பாதத்தில் வாங்கி கடும் காயமடைந்து சிகிச்சை முடிந்து இப்போது தான் திரும்பி வருகிறார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வரவிருக்கும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட அணியிலும் ரிஷப் பண்ட் இடம்பெற்றுள்ளார்.
மாஸ்கோ: ரஷ்யா – உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈடுபட்டார். இதனால் அதிபர் ட்ரம்ப்பும் – ரஷ்ய அதிபர் புதினும் அலாஸ்காவில் கடந்த ஆகஸ்ட் மாதம் சந்தித்து பேசினர். ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதலில் ஈடுபட்டது. இது அதிபர் ட்ரம்ப்புக்கு ஏமாற்றத்தை அளித்தது. இதனால் உக்ரைனுக்கு மீண்டும் ஆயுதம் வழங்க அமெரிக்கா முடிவு செய்தது. தொலைதூரம் சென்றும் தாக்கும் அமெரிக்காவின் டொம ஹாக் ஏவுகணையை, உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா முடிவு செய்தது.
கிஷோர், டிடிஎஃப் வாசன், குஷிதா, அபிராமி, சிங்கம் புலி, ஹரிஷ் பெரேடி, ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘ஐபிஎல் -இந்தியன் பீனல் லா’. கருணாநிதி இயக்கியுள்ள இப்படத்தை ராதா ஃபிலிம் இன்டர் நேஷனல் சார்பில் ஜி.ஆர்.மதன் குமார் தயாரித்துள்ளார். பிச்சு மணி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு அஸ்வின் விநாயக மூர்த்தி இசை அமைத்துள்ளார். நவ.28-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இப்பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்டு முடிக்க அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களின் பங்கானது இன்றியமையாதது. அரசியல் கட்சிகளின் முழுமையான பங்களிப்பை உறுதி செய்யும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் தனது கடந்த அக்.27-ம் தேதியிட்ட கடிதத்தில் தெரிவித்துள்ள வழிகாட்டுதல்கள்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிஎல்ஏ-க்கள், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டுக்கு முன்பு வரை நாள்தோறும் அதிகபட்சம் 50 எண்ணிக்கையிலான நிரப்பப்பட்ட எஸ்ஐஆர் படிவங்களை பெற்று வழங்க அனுமதி அளித்து உள்ளது.தண்டனைக்குரியது: அவ்வாறு படிவங்களை சமர்ப்பிக்கும்போது பிஎல்ஏக்கள் “என்னால் வழங்கப்படும் இந்த தகவல்கள் அனைத்தும் என் பாகத்துக்கு உட்பட்ட வாக்காளர் பட்டியல் உடன் சரிபார்க்கப்பட்டது என உறுதி அளிக்கிறேன். தவறான தகவல்கள் அளிப்பது மக்கள் பிரதிநித்துவ சட்டம் 1950, பிரிவு 31-ன் படி தண்டனைக்கு உரியது என்பதையும் நான் அறிவேன்” என்ற உறுதிமொழியையும் இணைத்து அலுவலர்கள் அளிக்க வேண்டும்.
இந்த சூழ்நிலையில் இரு நாடுகளுக்கிடையிலான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் அக்டோபர் 26-ம் தேதி முதல் சீனாவுக்கு நேரடி விமான சேவை இயக்கப்படும் என மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் கடந்த 2-ம் தேதி அறிவித்தது. இதன்படி, இந்தியாவின் இண்டிகோ நிறுவனம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கொல்கத்தா- குவாங்சு (சீனா) இடையே 26-ம் தேதி முதல் தினசரி விமான சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதுபோல, டெல்லி-குவாங்சு இடையே நவம்பர் 10-ம் தேதி முதல் விமான சேவை தொடங்கும் என அறிவித்துள்ளது.இதுபோல, இந்த ஆண்டு இறுதிக்குள் சீனாவுக்கு நேரடி விமான சேவை இயக்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சூழலில், ஷாங்காய்-டெல்லி இடையே நவ.9-ம் தேதி விமான சேவை (வாரத்துக்கு 3 நாள்) தொடங்கப்படும் என சீனாவைச் சேர்ந்த ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
விரைவாக தப்பிக்க ஏங்கும் ஆனால் நாட்கள் மிச்சமில்லாமல் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் இது பொருந்தும். சரியான மாற்று மருந்து என்பது ஒரு நாள் பயணமாகும்-பாதுகாப்பாகவும் சமாளிக்கக்கூடியதாகவும் உணரும் அளவுக்கு நெருக்கமாக உள்ளது, ஆனால் உண்மையான இடைவெளியைப் போல் உணரும் அளவுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. கலாச்சாரம், அமைதி, இயற்கை அல்லது சிறந்த உணவு என நீங்கள் எதைத் தேடினாலும் முக்கிய இந்திய நகரங்களில் இருந்து இந்த எட்டு ஒரு நாள் பயணங்கள் எளிதான மற்றும் உற்சாகத்தின் சரியான கலவையை வழங்குகின்றன. பட்டியலில் மேலும் நகரங்களைச் சேர்க்க விரும்பினால், கருத்துகள் பிரிவில் உங்கள் எண்ணங்களைப் பகிரவும்.டெல்லியில் இருந்து: நீம்ரானா கோட்டை ஒரு அரச இடைநிறுத்தத்திற்கு டெல்லியில் இருந்து இரண்டு மணிநேரத்தில், 15 ஆம் நூற்றாண்டின் நீம்ரானா கோட்டை அரண்மனை, அந்த ஏகபோகத்தை உடைக்க அந்த விரைவான பின்வாங்கலுக்கான குறைபாடற்ற தளம் போல ஆரவல்லியின் மீது நிற்கிறது. இந்த பின்வாங்கல் வரலாற்றுக்கு ஆறுதலின் சிறந்த விகிதத்தை…
அதேநேரம் ஜன் சுராஜ் கட்சியின் வேட்பாளர் சஞ்சல் குமார் வெறும் 3,086 வாக்குகளை மட்டுமே பெற்றார். லாலு பிரசாத் யாதவ் குடும்பத்துக்கு மிகவும் பாதுகாப்பான கோட்டையாக ரகோபூர் தொகுதி உள்ளது. இங்கு இவர்களது குடும்பத்தினருக்கு செல்வாக்கு அதிகம். அதனால்தான், கடந்த தேர்தல்களில் ராப்ரி தேவி, லாலு பிரசாத் யாதவ் இந்த தொகுதியில் பலமுறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து தேஜஸ்வி இத்தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேஜஸ்வி 38,000-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். ஆனால், இந்த முறை வெறும் 14,000 வாக்குகளில் மட்டுமே அவர் வெற்றி சாத்தியமாகியுள்ளது. இது, தேஜஸ்வியின் செல்வாக்கு அத்தொகுதியில் குறைந்து வருவதை எடுத்துக்காட்டுவதாக அரசியல் திறனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
‘தூக்கத்தில் காண்பது கனவல்ல; நம்மைத் தூங்க விடாமல் செய்வதே கனவு’ என்று சொன்னவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். ’கனவு உலகத்தில் வாழ்ந்தால் நனவுலகம் நழுவிப் போகும்’ என்று கூறப்பட்ட காலக்கட்டத்தில், தான் கண்ட கனவுகளின் கைபிடித்து நடை போட்டு வெற்றிகளை அள்ளியவர் கலாம். கனவுகளை லட்சியங்களுக்கான விதைகளாகவும் கண்டறிதல்களுக்கான தொடக்கப்புள்ளிகளாகவும் நோக்கியவர் கலாம். விண்வெளி அறிவியலில் சாதிக்கத் துடிப்பவர்களுக்கு மட்டுமல்லாமல், பல துறைகளுக்கும் பொருத்த மானதாக அமைந்தன கனவுகள் குறித்த கலாமின் கருத்துகள்.
சிட்னி: என்எஸ்டபிள்யூ ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீராங்கனை ராதிகா சுதந்திர சீலன் 2-வது இடம் பிடித்தார். ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ராதிகாவும், கனடாவின் இமான் ஷாஹீனும் மோதினர். 61 நிமிடங்கள் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இமான் ஷாஹீன் 11-8, 11-3, 4-11, 10-12, 12-10 என்ற புள்ளிகள் கணக்கில் ராதிகாவை வீழ்த்தி பட்டம் வென்றார்.
