புதுடெல்லி: பிஹார் தேர்தலில் போட்டியிட்ட இடங்களில் எல்லாம் விகாஷீல் இன்சான் கட்சி (விஐபி) கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஓர் இடத்தில் கூட அக்கட்சியால் வெற்றிபெற முடியவில்லை. தேர்தலில் விஐபி கட்சி 12 இடங்களில் வேட்பாளரை நிறுத்தி களம் கண்டது. மகாகத்பந்தன் கூட்டணி வெற்றி பெற்றால் விஐபி கட்சியின் நிறுவனரான முகேஷ் சாஹ்னிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று தகவலும் வெளியானது.
Author: admin
சென்னை: அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை சார்பில் 10,000 மாணவர்களுக்கு ரூ.12 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் கூறினார். இது தொடர்பாக வேலூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கும் ஸ்டார்ஸ் திட்டத்தில் நடப்பாண்டில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் உயர்கல்வியைப் பெறும் வகையில் ‘அனைவருக்கும் உயர் கல்வி’ அறக்கட்டளை சார்பில் 10 ஆயிரம் பேருக்கு ரூ.12 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் 2007 ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்காவின் ஹெர்ஷல் கிப்ஸ் ஒரே ஒவரில் 6 சிச்கர்களையும் அதே 2007 முதல் டி20 உலகக்கோப்பையில் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்சர்களையும், இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸின் கிரன் போலார்டு ஒரே ஓவரில் 6 சிக்சர்களையும் விளாசி உள்ளனர்.ஆகாஷ் குமார் சவுத்ரி 25 வயதாகும் மேகாலயா அணி வீரர். இயற்பெயர் ஆகாஷ்குமார் சவுத்ரி. வலது கை பேட்டர், வலது கை வேகப்பந்து வீச்சாளர். இதுவரை 30 முதல்தரப் போட்டிகளில் ஆடி 503 ரன்களையும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 28 போட்டிகளில் 203 ரன்களையும் டி20களில் 30 ஆட்டங்களில் 107 ரன்களையும் எடுத்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில், ‘‘அமெரிக்க அதிபர் ட்ரம்பை பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார்’’ என்று விமர்சித்தார்.இந்நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ பாடகியும் நடிகையுமான மேரி மில்பென் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
சினிமாவில் ஒரு காட்சி, நான்கு பக்கங்களைக் கொண்ட ஒரு சட்டகத்துக்குள் (ஃப்ரேம்) அடைக்கப்படுகிறது. இந்தச் சட்டகம் வெறும் ஒரு எல்லை மட்டுமே அல்ல, மாறாக, அது ஒரு கதைச்சொல்லியின் தேர்வு மற்றும் தத்துவார்த்தப் பார்வை. ஒரு ஒளிப்பதிவாளர், கேமரா லென்ஸுக்குள் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியைச் சட்டகமிடும் போது, அவர் வெளிச்சத்தை மட்டுமல்ல, அந்த வெளிக்குள் உள்ள உறவுகள், அதிகாரச் சமநிலை மற்றும் கதாபாத்திரங்களின் மனவெளி ஆகியவற்றை வடிவமைக்கிறார். இந்தக் காட்சி அமைப்பு (கம்போஷிஷன்) மற்றும் சட்டகமிடுதல் (ஃப்ரேமிங்) ஆகிய உத்திகளே சினிமாவின் விஷுவல் மொழியாக செயல்படுகின்றன. கம்போஷிஷன்: சமநிலை, காட்சி வழிகாட்டல்: கம்போஷிஷன் (காட்சி அமைப்பு) என்பது ஒரு சட்டகத்துக்குள் உள்ள அனைத்துக் கூறுகளையும் (கதாபாத்திரங்கள் பொருட்கள், பின்னணி) கலைநயத்துடன் வைப்பது. இது பார்வையாளரின் கண்களைக் காட்சியின் மையத்தை நோக்கி இட்டுச் செல்லும் நுட்பமான வழிகாட்டுதல் ஆகும்.
இதுகுறித்து கோவை விமான நிலைய நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாதுகாப்பு காரணங்களுக்காக பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு கோவை விமான நிலையத்தில் தற்காலிகமாக சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி விமான நிலைய வளாக நுழைவாயில் முன் நவம்பர் 18-ம் தேதி காலை 6 மணி முதல் நவம்பர் 19-ம் தேதி மாலை 6 மணி வரை வாகனங்களை நிறுத்த முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது.நுழைவாயில் பகுதியில் பயணிகளை இறக்கி விடவும், ஏற்றிச் செல்லவும் மூன்று நிமிடங்கள் வழங்கப்படும் கால அவகாசம் வழக்கம் போல் நடைமுறையில் இருக்கும். பாதுகாப்பு காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவும், நவம்பர் 18, 19-ம் தேதிகளில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள பயணிகள் மேற்குறிப்பிட்ட புதிய கட்டுப்பாடுகளை பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சென்னை: கோட்டக் மஹிந்திரா சொத்து மேலாண்மை நிறுவனம், கோட்டக் தங்கம் வெள்ளி பாசிவ் பண்ட் ஆப் பண்ட் (FoF) திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. ஓப்பன்-எண்டட் திட்டமான இது, கோட்டக் கோல்ட் ஈ.டி.எப். மற்றும் கோட்டக் சில்வர் ஈ.டி.எப். திட்டங்களில் முதலீடு செய்கிறது. இந்த புதுமையான திட்டம், நீண்டகால மூலதனப் பெருக்கத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உங்கள் முழு இருதயத்தோடும் ஆன்மாவோடும் எதையாவது அடைய முயற்சிக்கும்போது, உங்களை வெற்றிபெறச் செய்ய முழு பிரபஞ்சமும் உங்களுடன் வேலை செய்கிறது என்று அடிக்கடி கூறப்படுகிறது. பிரபஞ்சம் என்பது நம் வாழ்வின் உண்மையான உண்மைகளில் ஒன்றாகும். ஆனால் பெரும்பாலும் நமது பிஸியான வாழ்க்கையில், நாம் பல விஷயங்களையும் சூழ்நிலைகளையும் சமாளிக்க முயற்சிக்கிறோம், அதனால் நம் வாழ்க்கை நோக்கத்தை நோக்கி நம்மை வழிநடத்தும் நுட்பமான தூண்டுதல்களை இழக்கிறோம். இந்த நட்ஜ்களை நாம் கவனிக்கத் தொடங்கும் போது, அவற்றை உள்ளுணர்வு மற்றும் தெய்வீக நேரம் என்று நாங்கள் குறிப்பிடுகிறோம், ஆனால் பெரும்பாலும், இது முழு நேரமும் உங்களுக்கு ஒரு செய்தியை அனுப்ப முயற்சிக்கும் பிரபஞ்சம். பிரபஞ்சத்திற்கு அதன் சொந்த தொடர்பு மொழி உள்ளது, ஆனால் பெரும்பாலும் மக்கள் அதை இழக்கிறார்கள். நீங்கள் அதைப் புரிந்துகொண்டு கவனிக்கத் தயாராக இருக்கும்போதுதான் செய்திகள் சத்தமாகவும் தெளிவாகவும் மாறும். இந்த அறிகுறிகள் வியத்தகு வெளிப்பாடுகளாக வரவில்லை, ஆனால் மீண்டும் மீண்டும்…
புதுடெல்லி: பிஹாரில் முதல் கட்ட தேர்தலுக்கு தொடக்கத்தில் சில நாட்கள் பிரச்சாரத்தை மேற்கொண்ட ராகுல் காந்தி அதன் பிறகு மாயமாகிவிட்டார். தற்போது பிஹார் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளன. இண்டியா கூட்டணியில் இந்த இக்கட்டான சூழலை சமாளிக்க ராகுல் காந்தி இந்தியாவில் இல்லாமல் வேறு எங்கு ஓடி ஒளிந்து கொண்டாரா என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
ஒருநாள் அக்காவின் கணவர் அகமது ஜலாலுதீனுடன் கடற்கரையில் நடந்துகொண்டிருந்தார் கலாம். அப்போது வானில் பறவைகள் பறந்துகொண்டிருந்ததை ஆச்சரியத்துடன் பார்த்தவர், ‘இந்தப் பறவைகள் எப்படிப் பறக்கின்றன?’ என்று கேட்டார். ‘பறவைகள் என்ன, மனிதனே இப்போது விமானத்தில் பறக்க ஆரம்பித்துவிட்டான். உங்க அண்ணன் சம்சுதீன் செய்தித்தாள் முகவர். அவரிடம் கேட்டு, தினமும் செய்தித்தாள் படி. நம்ம மாணிக்கத்தின் நூலகத்துக்குப் போனால், நிறைய புத்தகங்கள் இருக்கும். அவற்றை எல்லாம் படித்தால் உன் அறிவு விரிவாகும்’ என்றார் ஜலாலுதீன். அன்றிலிருந்து பாடக் கல்வி அல்லாத பிறவற்றையும் படிக்க ஆரம்பித்தார் கலாம்.
