இதனால் அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஈரோடு டவுன் போலீஸ் டிஎஸ்பி முத்துக்குமரன் தலைமையிலான போலீஸார் மறியலில் ஈடுபட்ட கடை உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பு முதல் மணிக்கூண்டு வரை சாலையோரம் ஏராளமான ஜவுளி கடைகளை அமைத்ததால், வணிக வளாகத்திற்குள் பொதுமக்கள் செல்வது குறைந்துள்ளது.இதுதொடர்பாக அனைத்து சிறு, ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மாநகராட்சி ஆணையர், போலீஸ் எஸ்பி, ஆட்சியர் ஆகியோரிடம் தனித்தனியாக மனு அளிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Author: admin
22 வயதான பெங்களூரு இளைஞன் ஒரு திட்டமும் இல்லாமல் வேலையை விட்டு வெளியேறுவது பற்றிய வெளிப்படையான இன்ஸ்டாகிராம் வீடியோ வைரலாகி, எரிந்துபோன கார்ப்பரேட் இளைஞர்களிடையே எதிரொலித்தது. அன்ஷுல் உதய்யா தனது வேலை மற்றும் தற்போதைய வாழ்க்கை சூழ்நிலையில் அதிருப்தியை ஒப்புக்கொண்டார், இது பரவலான தொடர்புத்தன்மையைத் தூண்டியது. அவரது பயணம், இப்போது தொழில் குழப்பத்தின் வைரலான பிரதிபலிப்பு, மில்லியன் கணக்கான பார்வைகள் மற்றும் குறிப்பிடத்தக்க ஆன்லைன் கவனத்தைப் பெற்றுள்ளது. பெங்களூரு இளைஞர் ஒருவர் எதிர்பாராதவிதமாக, குழப்பமடைந்த, எரிந்துபோன ஒவ்வொரு ஊழியரின் இணையத்தின் புதிய குரலாக மாறியுள்ளார். 22 வயதான ஆன்ஷுல் உதய்யா, திங்களன்று தனது வேலையை விட்டுவிடுவது பற்றி இன்ஸ்டாகிராமில் ஒரு நேர்மையான வீடியோவை வெளியிட்டார், மேலும் இந்த கிளிப் இந்தியாவின் அதிக வேலை செய்யும் கார்ப்பரேட் இளைஞர்களிடையே உடனடியாக வெடித்தது. “ஞாயிறு அலைச்சல்” என்று அவர் சாதாரணமாக பெயரிடப்பட்ட அவரது வீடியோவில், அன்ஷுல் அடுத்த நாள் வேலைக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும், அதன்பிறகு…
பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் முதல்முறையாக இம்முறை வாக்குப்பதிவு நாளில் வன்முறை தொடர்பான உயிரிழப்பு ஏதுமில்லை. எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப்பதிவுக்கு உத்தர விடப்படவில்லை. பிஹாரில் கடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் வன்முறை, உயிரிழப்புகள் ஏற்பட்டதும், மறுவாக்குப் பதிவுக்கு உத்தரவிடப்பட்டதும் அதிகாரப்பூர்வ தரவுகள் மூலம் தெரியவருகிறது. கடந்த 1985-ம் ஆண்டு தேர்தலில் 63 உயிரிழப்பு ஏற்பட்டு, 156 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவுக்கு உத்தரவிடப்பட்டது. 1990-ம் ஆண்டு தேர்தல் வன்முறைகளில் 87 பேர் உயிரிழந்தனர்.
சென்னை: சைபர் பாதுகாப்பு துறையில் புதிய பட்டப் படிப்பை, சென்னை விஐடி மற்றும் ஆஸ்திரேலியாவின் டீகின் பல்கலைக்கழகம் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளன. உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக, பல்வேறு புதிய முன்னெடுப்புகளை விஐடி கல்வி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலியாவின் டீகின் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சைபர் பாதுகாப்பு துறையில் புதிய படிப்பை சென்னை விஐடி அறிமுகம் செய்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், டீகின் பல்கலைக்கழகத்தின் இணை முதல்வர் பாஸ்கரன் ஆகியோர் கையொப்பமிட்டனர். இதன் மூலம், சென்னை விஐடியில் இருந்து கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (சைபர் பாதுகாப்பு) பட்டம், டீகின் பல்கலை.யில் இருந்து இளநிலை சைபர் பாதுகாப்பு (Bachelor of Cyber Security-Honours) பட்டம் ஆகிய 2 படிப்புகளை மாணவர்கள் கற்க முடியும்.
சிட்னி: ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் வரும் 21-ம் தேதி முதல் விளையாட உள்ளன. இந்த தொடரில் அனுபவமே தங்கள் பலம் என ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார். இந்த தொடரின் முதல் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள 15 வீரர்களில், 14 பேர் 30+ வயதை கடந்தவர்கள். குறிப்பாக பந்து வீச்சாளர்களான நேதன் லயன் (38), ஹேசில்வுட் (34), மிட்செல் ஸ்டார்க் (35), ஸ்காட் போலண்ட் (36) ஆகியோர் முதல் போட்டிக்கான அணியில் உள்ளனர்.
புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியின் ரூ.13,500 கோடி நிதி மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி மெகுல் சோக்ஸியை நாடுகடத்த பெல்ஜியம் நாட்டில் உள்ள ஆண்ட்வெர்ப் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவின் நாடுகடத்தல் தொடர்பான கோரிக்கையை ஏற்று கடந்த ஏப்ரல் மாதம் மெகுல் சோக்ஸியை கைது செய்தது பெல்ஜியம். நிதி மோசடி தொடர்பான வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் சார்பில் மும்பை நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதை சுட்டிக்காட்டி இந்தியா தரப்பில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதனை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத விஜய் சுகுமார் இயக்கியுள்ளார். தேவா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த மே மாதம் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்று கவனம் ஈர்த்தது. இந்த நிலையில் தற்போது கேன்ஸ் நகரத்தில் நடைபெற்ற மற்றொரு சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று சிறந்த சமூக நீதிக்கான திரைப்படம் என்ற பிரிவில் தேர்வாகியுள்ளது. மேலும் இத்தாலியில் நடைபெற்ற ஓதிஸ்மோஸ் திரைப்பட விழாவில் இப்படத்துக்கு கலாச்சார பாரம்பரியம் மற்றும் உள்ளூர் அடையாளம் என்ற பிரிவில் விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன், தவெக தலைவர் விஜய் சந்திப்பு நடத்தினாரா என்ற சர்ச்சைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பதிலளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, “சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் இருமுடியை விமானத்தில் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் பாஜக இந்துக்களுக்கு விரோதமான கட்சி என்பதை மக்கள் தெளிவுப்படுத்துவார்கள். எஸ்ஐஆருக்கு எதிராக தவெக ஆர்ப்பாட்டம் நடத்தியதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. ஜனநாயக சக்திகள் அனைவரும் எஸ்ஐஆருக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்” என்றார்.
கரூர்: கரூர் மாவட்டம் ஜவஹர் பஜாரில் தரைக்கடை போட்டியிருந்த வியாபாரிகள் 30 பேரை காவல்துறை வாகனத்தில் ஏற்றி போலீஸார் காவல் நிலையம் அழைத்து சென்றனர். நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்களை விடுவித்த போலீஸார், திருவள்ளுவர் மைதானத்தில் கடை போட்டுக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளனர். தீபாவளியை முன்னிட்டு கரூர் மாநகராட்சி கூட்டத்தில் ஜவஹர் பஜார் தவிர பிற இடங்களில் தரைக்கடைகள் அமைத்து கொள்ள அனுமதி வழங்கி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து காவல் துறை சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பே ஜவஹர் பஜார் தவிர பிற இடங்களில் தரைக்கடைகள் அமைத்துக் கொள்ளமாறு அறிவுறுத்தப்பட்டு பதாகை வைக்கப்பட்டிருந்தது.
சமீபத்திய புதுப்பிப்பில், 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 5 முதல் டிசம்பர் 14 ஆம் தேதி வரை, புது தில்லியில் உள்ள புகழ்பெற்ற செங்கோட்டை பொதுப் பார்வையாளர்களுக்காக மூடப்பட்டிருக்கும். இதற்குக் காரணம் மிகவும் மதிப்புமிக்கது. இந்த நினைவுச்சின்னம் யுனெஸ்கோ (ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு) அருவமான கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான அரசுகளுக்கிடையேயான குழுவை நடத்த தயாராக உள்ளது. கலாச்சார மற்றும் கட்டிடக்கலை அதிசயம் மிகவும் மதிப்புமிக்க கலாச்சார பாரம்பரிய நிகழ்வுக்கு தயாராகி வருகிறது. இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) வெளியிட்ட திருத்தப்பட்ட உத்தரவில் இருந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முந்தைய அறிவிப்பு நவம்பர் 19 அன்று வெளியிடப்பட்டது, இது டிசம்பர் 3 முதல் மூடுவதற்கு முன்மொழியப்பட்டது.. இந்த நிகழ்வு டிசம்பர் 8 முதல் 13 வரை நடைபெறும் மற்றும் இது ஒரு உயர்மட்ட கூட்டம் என்பதால், ASI மற்றும் உள்ளூர் அதிகாரிகள் முடிவு எடுக்க வேண்டியிருந்தது. விரிவான…
