Author: admin

திருப்பூர் சுண்டமேட்டை சேர்ந்த வடிவேல் என்பவர் கூறும்போது, “திருப்பூரில் தொழிலாளர்கள் பகல் நேரங்களில் வேலைக்கு சென்றுவிடுகின்றனர். அதேபோல் பெரும்பாலான தொழிலாளர்கள் வாடகை வீட்டில் வாழ்பவர்கள் என்பதால், அடிக்கடி வீட்டை மாற்றிக்கொண்டு வாழ்பவர்கள். பணிபுரிபவர்களில் பலருக்கும் ஆதார், கியாஸ் இணைப்பு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என ஒவ்வொன்றும் வெவ்வேறு முகவரியில் இருப்பதை பார்க்கிறோம்.ஆனால் அவர்கள் குடும்ப அட்டையில் உள்ள முகவரிக்கு வந்து, நியாயவிலைக் கடையில் பொருட்களை இன்றைக்கும் பல குடும்பங்கள் வாங்கி செல்கின்றன. வேலை செய்யும் பனியன் நிறுவனங்கள் அடிக்கடி மாறுவது, வீட்டின் வாடகை இவற்றை கணக்கில் கொள்வதால், முகவரி மாற்றத்தை பெரியதாக பொருட்படுத்துவதில்லை” என்றார்.

Read More

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று தீபாவளி புத்தாடைகள் விற்பனை களைகட்டியது. கொட்டும் மழையிலும் தியாகராய நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நாளைய தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாகவே கடைவீதிகளில் படிப்படியாக வியாபாரம் சூடுபிடித்து வருகிறது. குறிப்பாக தீபாவளிக்கு ஒரு நாளே இருக்கும் நிலையில் நேற்றும் குழந்தைகள், பெற்றோர், உறவினர்களுக்கு புத்தடைகளை வாங்க பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். இதனால் சென்னை, புறநகர் பகுதிகளில் உள்ள துணிக்கடைகளில் நேற்று காலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது. குறிப்பாக தியாகராய நகர், ரங்கநாதன் தெரு முழுவதும் மனித தலைகளாக காணப்பட்டன.

Read More

உங்கள் குளிர்சாதனப்பெட்டியை சுத்தமாகவும், துர்நாற்றமில்லாததாகவும் வைத்திருப்பது உணவு சுகாதாரத்தைப் பேணுவதற்கும், வீண்விரயத்தைக் குறைப்பதற்கும் மற்றும் வீட்டில் ஆற்றல் செயல்திறனை ஆதரிப்பதற்கும் அவசியம். ஆயினும்கூட, பல குடும்பங்கள் ஆழமான சுத்தம் செய்வதை ஒத்திவைக்கின்றன, ஏனெனில் பனிக்கட்டி உறைதல் கடினமானதாகவும் நேரத்தை எடுத்துக்கொள்ளும், குறிப்பாக உறைவிப்பான் பெட்டி அல்லது பின் பேனலைச் சுற்றி உறைபனியின் அடர்த்தியான அடுக்குகள் உருவாகும்போது. உண்மை என்னவென்றால், பனி உருகுவதற்கு நீங்கள் மணிநேரம் காத்திருக்க வேண்டியதில்லை அல்லது கூர்மையான கருவிகளைக் கொண்டு ஸ்கிராப்பிங் செய்வதன் மூலம் சேதம் ஏற்படும். நீங்கள் குளிர்சாதனப்பெட்டியின் உறைபனி மற்றும் கெட்ட நாற்றங்களை உடனடியாக சூடான நீரில் அகற்றினால், உங்கள் சாதனத்தை விரைவாகப் புதுப்பிக்கலாம், சரியான குளிரூட்டும் சுழற்சியை மீட்டெடுக்கலாம் மற்றும் குளிர்சாதன பெட்டியின் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்தலாம். இந்த எளிய அணுகுமுறை பனியை மென்மையாக்க மென்மையான நீராவியைப் பயன்படுத்துகிறது, இது சக்தியின்றி பாதுகாப்பாக சரிய உதவுகிறது. இது கசிவுகள், கறைகள் மற்றும் மறைக்கப்பட்ட மூலைகளை…

Read More

பாட்னா: பிஹார் மாநிலம் மதுபானி மாவட்டம், பெனிபட்டி கிராமத்தைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்குர் (25). பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட மைதிலிக்கு பாஜக வாய்ப்பளித்தது. அதன்படி, பிஹாரின் அலிநகர் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் செல்வாக்குமிக்க பினோத் மிஸ்ரா போட்டியிட்டார்.

Read More

காட்டாங்கொளத்தூர்: தொழில் முனை​வோ​ராக செயல்​பட்டு மாணவர்​கள் அனை​வரும் இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு பாடுபட வேண்​டும் என்று மத்​திய அமைச்​சர் நிதின் கட்​கரி தெரி​வித்​துள்​ளார். செங்​கல்​பட்டு மாவட்​டம், காட்​டாங்​கொளத்​தூரில் உள்ள எஸ்​ஆர்​எம் அறி​வியல் மற்​றும் தொழில்​நுட்ப நிறு​வனத்​தின் 21-ம் ஆண்டு பட்​டமளிப்பு விழா நிறுவன வளாகத்​தில் உள்ள கலையரங்​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. இந்​நிகழ்ச்​சிக்​கு, எஸ்​ஆர்​எம் நிறு​வனர் மற்​றும் வேந்​தர் டி.ஆர். பாரிவேந்​தர் தலைமை தாங்கினார்.துணைவேந்​தர் பேராசிரியர் சி. முத்​தமிழ்ச்​செல்​வன் வரவேற்​புரை ஆற்றி ஆண்டு அறிக்​கையை தாக்​கல் செய்​தார். சிறப்பு விருந்தின​ராக மத்​திய சாலைப் போக்​கு​வரத்து மற்​றும் நெடுஞ்​சாலைகள் துறை அமைச்​சர் நிதின் கட்​கரி பங்​கேற்று பொறி​யியல் மற்​றும் தொழில்​நுட்​பம், அறி​வியல் மற்​றும் மனிதநே​யம், மருத்​து​வம் மற்​றும் சுகா​தார அறி​வியல், மேலாண்​மை, சட்​டம் மற்​றும் வேளாண் அறி​வியல் ஆகிய பிரிவு​களில் முனை​வர், இளங்​கலை மற்​றும் முதுகலை பட்​டப்​படிப்பு மற்​றும் டிப்​ளமோ படிப்​பு​களை வெற்​றிகர​மாக முடித்த 15,105 மாணவ – மாணவிகளுக்கு பட்​டங்​களை வழங்​கி​னார். அகம​தா​பாத்​ இந்​திய…

Read More

புதுடெல்லி: 31-வது சுல்​தான் அஸ்​லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் வரும் நவம்​பர் 23 முதல் 30 வரை மலேசி​யா​வின் இபோ நகரில் நடை​பெறுகிறது. இந்த தொடருக்​கான இந்​திய ஹாக்கி அணி அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதில் பெரும்​பாலான சீனியர் வீரர்​களுக்கு ஓய்வு கொடுக்​கப்​பட்​டுள்​ளது. கேப்​டன் ஹர்​மன்​பிரீத் சிங், அனுபவம் வாய்ந்த நடுகள வீர​ரான மன்​பிரீத் சிங், ஸ்டிரைக்​கர் மன்​தீப் சிங், கோல் கீப்​பர்​களான கிருஷ்ணன் பகதூர் பதக், சுராஜ் கார்​கீரா ஆகியோ​ருக்கு ஓய்வு கொடுக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் டிபன்​ட​ரான சஞ்​சய் கேப்​ட​னாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். அவருடன் அனுபவம் வாய்ந்த் ஜுக்​ராஜ் சிங், அமித் ரோஹி​தாஸ் இடம் பெற்​றுள்​ளனர். தமிழகத்தை சேர்ந்த முன்கள வீர​ரான செல்​வம் கார்த்​திக்​கும் இடம் வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் நவம்​பர் 23-ல் கொரி​யா​வுடன் மோதுகிறது.

Read More

காபூல்: பாகிஸ்​தானுக்கு சொந்​த​மான ராணுவ டாங்​கி​களை ஆப்​கானிஸ்​தான் ராணுவம் சிறைபிடித்​த​தாக தலி​பான் செய்​தித்​தொடர்​பாளர் ஜபிஹுல்லா முஜாகித் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “எல்​லைப் பகு​தி​களில் பாகிஸ்​தான் நடத்​திய துப்​பாக்​கிச் சூட்​டுக்கு ஆப்​கானிய படைகள் தகுந்த பதிலடி கொடுத்​தன. இதில், ஏராள​மான பாகிஸ்​தான் வீரர்​கள் கொல்​லப்​பட்​டனர். பாகிஸ்​தானுக்கு சொந்​த​மான ராணுவ டாங்​கி​கள் மற்​றும் ஆயுதங்​கள் கைப்​பற்​றப்​பட்​டன. பாகிஸ்​தானின் ராணுவ கட்​டமைப்​பு​களை ஆப்​கன் படைகள் அழித்​து​விட்​டன” என்று தெரி​வித்​துள்​ளார்.

Read More

மறைந்த நடிகர் அபினய் குறித்து நடிகை விஜி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: “சென்னை 28’ படத்துக்குப் பிறகு ஒரு பெரிய விளம்பரப் படத்தில் நடித்தேன். அதில் அபினய்யும் நடித்தார். அப்போது அபினய் விளம்பர உலகில் நம்பர் 1 ஆக இருந்தார். நான்கு நாட்கள் படப்பிடிப்புக்காக டெல்லி சென்றிருந்தோம். ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்டில் தங்கியிருந்தோம். ஒவ்வொரு நாள் மாலையும் ஒரு வட இந்திய குழு எங்களை அங்கே இறக்கிவிட்டு சென்று விடுவார்கள். அப்போது இந்த விஜியாக இருக்கவில்லை. நான் மிகவும் பயந்த சுபாவம் கொண்ட, புதியவர்களை கண்டு அஞ்சக்கூடிய, உலகில் என்னுடைய இடத்தை தேடக்கூடிய ஒரு பெண்ணாக இருந்தேன். அந்த சூழலில் அறிமுகம் இல்லாத ஒரு ஆணுடன் என்னை தனியா தங்க வைத்தது எனக்கு மிகுந்த கலாச்சார அதிர்ச்சியாக இருந்தது.

Read More

சென்னை: சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில் முறைகேடுகளுக்குக் காரணமான திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் நாளை (நவ. 17) நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் நவம்பர் 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியான அறிக்கையில், “சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி திமுக-வினரால் நிகழ்த்தப்படும் பல்வேறு முறைகேடுகளுக்குக் காரணமான திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த சென்னை மாவட்டங்களின் சார்பில், 17.11.2025 – திங்கட் கிழமை காலை 10 மணியளவில், எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

Read More

இதனால் அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஈரோடு டவுன் போலீஸ் டிஎஸ்பி முத்துக்குமரன் தலைமையிலான போலீஸார் மறியலில் ஈடுபட்ட கடை உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பு முதல் மணிக்கூண்டு வரை சாலையோரம் ஏராளமான ஜவுளி கடைகளை அமைத்ததால், வணிக வளாகத்திற்குள் பொதுமக்கள் செல்வது குறைந்துள்ளது.இதுதொடர்பாக அனைத்து சிறு, ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மாநகராட்சி ஆணையர், போலீஸ் எஸ்பி, ஆட்சியர் ஆகியோரிடம் தனித்தனியாக மனு அளிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Read More