ஒரு ஆப்டிகல் மாயை பார்வையாளர்களுக்கு மீண்டும் மீண்டும் ஒரு வடிவத்திற்குள் ஒரு மறைக்கப்பட்ட எண்ணைக் கண்டுபிடிக்க சவால் விடுகிறது. படம் “4576” என்ற எண்ணை பல முறை காட்டுகிறது, ஆனால் புத்திசாலித்தனமாக “4567” எண். பங்கேற்பாளர்கள் ஒற்றைப்படை எண்ணை 8 வினாடிகளுக்குள் கண்டுபிடிப்பதில் பணிபுரிகிறார்கள். தீர்வு “4567” 7 வது வரிசை மற்றும் 2 வது நெடுவரிசையில் அமைந்துள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது. உங்கள் பார்வை கூர்மையானது மற்றும் உங்கள் கவனம் வெல்ல முடியாதது என்று நினைக்கிறீர்களா? இந்த ஆப்டிகல் மாயை அதைச் சோதிக்க இங்கே உள்ளது, மேலும் இது முதல் பார்வையை விட கடினமாக உள்ளது!படத்தில், முழு காட்சியிலும் மீண்டும் மீண்டும் “4576” என்ற அதே எண்ணைக் கொண்ட ஒரு வடிவத்தை நீங்கள் காண்பீர்கள். ஆனால் இந்த வடிவத்திற்குள் கவனமாக மறைக்கப்பட்டிருப்பது ஒற்றைப்படை எண் “4567”. ஒற்றைப்படை வார்த்தையை 8 வினாடிகளுக்குள் கண்டுபிடிப்பது உங்கள் சவால்.படம்: ஃப்ரீஜோபாலெர்ட்.காம்இது எளிமையானதாகத் தோன்றலாம், ஆனால்…
Author: admin
வேலூர்: இந்தியா வளர்ந்த நாடாக மாற கல்வி வளர்ச்சி முக்கியம் என்று விஐடி பல்கலை. வேந்தர் கோ.விசுவநாதன் கூறினார். வேலூர் விஐடி பல்கலை.யின் 40-வது பட்டமளிப்பு விழா மற்றும் அப்துல் கலாம்-ஜெகதீஷ் சந்திரபோஸ் மாணவர் விடுதி திறப்பு விழா நேற்று நடைபெற்றது. வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை வகித்தார். உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார். விழாவில் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசியதாவது: நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் நிதியை கல்விக்கு ஒதுக்க வேண்டும். மத்திய அரசு பட்ஜெட்டில் 2.5 சதவீதம் மட்டுமே கல்விக்கு ஒதுக்கப்படுகிறது. அதேநேரத்தில், தமிழகம் 21 சதவீதத்தை கல்விக்கு ஒதுக்கி நாட்டிலேயே முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. புதிய கல்விக் கொள்கையில் உயர்கல்வி மாணவர் சேர்க்கையை 50 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கையை 8 கோடியாக உயர்த்த வேண்டும். இதற்கு அதிக உட்கட்டமைப்பு…
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடமேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஆக. 18-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால் வட தமிழகத்தில் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று (ஆக.17) இடி, மின்ன லுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், 19 முதல் 21-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், 22-ம் தேதி சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில்கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான…
புதுடெல்லி: சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலமாக கிடப்பில் போட்டதையடுத்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஏப்ரல் மாதம், தமிழக ஆளுநரின் இந்த செயல் சட்டவிரோதம் என அறிவித்து அந்த 10 மசோதாக்களும் உடனடியாக சட்டமாக அமலுக்கு வந்துவி்ட்டதாக அறிவித்தனர். மேலும் சட்டப் பேரவையில் மறுநிறைவேற்றம் செய்து அனுப்பி வைக்கப்படும் சட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திலும், குடியரசுத் தலைவர் 3 மாதங்களிலும் முடிவுஎடுக்க வேண்டும் எனவும் காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்டனர். இந்த உத்தரவையடுத்து, குடியரசுத் தலைவர்…
சென்னை: இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கு 4,200-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். தரவரிசைப் பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படுகிறது. ஐந்தரை ஆண்டுகள் கொண்ட இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்டப்படிப்புக்கு (BNYS) 2025-26-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnayushselection.org ஆகிய சுகாதாரத்துறை இணையதளத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், மாணவ, மாணவிகளின் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிக்கும் அவகாசம் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அந்த வகையில், 4,200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த வாரம் தகுதியான மாணவர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
திருவள்ளூர்: அரோகரா கோஷம் விண்ணை முட்ட திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலில், ஆண்டுதோறும் ஆடிக் கிருத்திகை திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு ஆடிக் கிருத்திகை திருவிழா, கடந்த 14-ம் தேதி ஆடி அஸ்வினி விழாவோடு தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான ஆடிக் கிருத்திகை திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை 4 மணி அளவில் மூலவருக்கு சிறப்பு அபிஷே கம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. தங்கவேல், தங்க கீரிடம், பச்சை மாணிக்க மரகதக்கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதேபோல், காவடி மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த உற்சவருக்கு தீபாராதனை நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிறமாநிலங்களில் இருந்தும்…
சென்னை: பட்டியல் சாதியினரை ஆதிதிராவிடர் என எந்த அகராதியின் அடிப்படையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த எஸ்.மாரிமுத்து என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது: சாதிய ரீதியிலான தீண்டாமை கொடுமைகளை களையும் விதமாக பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அரசின் அனைத்து திட்டங்களிலும், தேர்தலிலும் முன்னுரிமையுடன் கூடிய இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பட்டியலினத்தவர்களுக்கான பிரிவில் ஆதிதிராவிடர், ஆதி ஆந்திரா, ஆதி கர்நாடகா, தேவேந்திரகுளத்தான் உள்ளிட்ட 76 சாதியினர் உள்ளனர். இதில் ஆதிதிராவிடர் என்பதும் ஒரு பிரிவுதான். ஆனால், தமிழகத்தில் பட்டியல் சாதியினத்தவர்களுக்கான நலத்துறையை தமிழக அரசு கடந்த 1969-ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை என பெயர் மாற்றம் செய்துள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு புறம்பானது. எனவே, ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயரை பட்டியல் சாதியினர் நலத்துறை என பெயர்…
புதுடெல்லி: டெல்லியில் இன்று நடைபெறும் பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் தேர்வு குறித்து ஆலோசிக்கப்படுகிறது. குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர் கடந்த ஜூலை 21-ம் தேதி ராஜினாமா செய்தார். இதையடுத்து, ‘குடியரசு துணைத் தலைவர் தேர்வு ஒருமனதாக நடைபெற்றால் வழக்கம் போல நியமனம் நடைபெறும். அப்படி இல்லாமல் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டால், குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறும்’ என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணி சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்றுநடைபெறுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வது குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி,…
சென்னை: பள்ளிக்கல்வித் துறையில் 20 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: நடப்பு கல்வியாண்டில் (2025-26) 20 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது அறிவிப்பு வெளியிட்டார். அதை செயல்படுத்தும் விதமாக தற்போது 20 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி கடலூர் (பண்ருட்டி),கள்ளக்குறிச்சி (ரிஷிவந்தியம்), கிருஷ்ணகிரி (நேரளகிரி), செங்கல்பட்டு (பேரனூர் கிராமம்), திண்டுக்கல் (வளவிசெட்டிபட்டி),மதுரை (செட்டிகுளம்), திருச்சி (கள்ளக்காம்பட்டி), திருப்பத்தூர் (திம்மாம்பேட்டை), சென்னை (மாத்தூர்), விழுப்புரம் (கஞ்சனூர்), திருச்சி (கலைஞர் கருணாநிதி நகர்), விழுப்புரம் (மேல்கரணை), ராமநாதபுரம் (வாலிநோக்கம்), திருப்பூர் (முதலிபாளையம்), கிருஷ்ணகிரி (பாத்தகோட்டா), சேலம் (லக்கம்பட்டி), திருவண்ணாமலை (வேளானந்தல்), நாகப்பட்டினம் (கணபதிபுரம்), ராமநாதபுரம் (புதுமடம்), கன்னியாகுமரி (வாரியூர்) ஆகிய 20 இடங்களில் செயல்பட்டுவரும் உயர்நிலைப் பள்ளிகள் அரசு…
நிவின் பாலி, நயன்தாரா நடிப்பில் வெளியாகவுள்ள ‘டியர் ஸ்டூடன்ட்ஸ்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு வெளியான ‘லவ் ஆக்ஷன் டிராமா’ படத்துக்குப் பிறகு நிவின் பாலி, நயன்தாரா இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் ‘டியர் ஸ்டூடன்ட்ஸ்’. இதனை அறிமுக இயக்குநர்கள் ஜார்ஜ் பிலிப் ராய் மற்றும் சந்தீப் குமார் எழுதி இயக்கியுள்ளனர். இப்படத்தை நிவின் பாலியின் பாலி ஜூனியர் பிக்சர்ஸ் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்பபடத்தில் அஜு வர்கீஸ், ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் முருகதாஸ், சரத் ரவி, உதய் மகேஷ், வெட்டை முருகன், ஜெயகுமார் ஜானகிராமன், விஜய் சத்யா, மாத்யூ வர்கீஸ், ராஜா ராணி பாண்டியன், தீப்தி, உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது காமெடி, ஆக்ஷன் கலந்த எண்டர்டெய்னராக இப்படம் உருவாகியுள்ளதை டீசரின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. இது சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.