சென்னை: தமிழகம் முழுவதும் 950 மையங்களில் தமிழ் மொழி இலக்கியத் திறனறி தேர்வு நேற்று நடைபெற்றது. பிளஸ் 1 மாணவர்கள் 2.70 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.பள்ளி மாணவர்களிடம் தமிழ்மொழி இலக்கியத் திறனை மேம்படுத்த, திறனறி தேர்வை பள்ளிக்கல்வி இயக்ககம் நடத்துகிறது. பிளஸ் 1 பயிலும் மாணவர்கள் இந்த தேர்வை எழுதலாம். இதில், 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்கள், எஞ்சிய 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் பிற தனியார் பள்ளி மாணவர்கள் என அதிக மதிப்பெண் பெறும் 1,500 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 2 ஆண்டுக்கு மாதம்தோறும் ரூ.1,500 கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
Author: admin
சென்னை: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் என்எஸ்டபிள்யூ ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் ராதிகா சுதந்திரா சீலன், போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் நியூஸிலாந்தின் எம்மா மெர்சனுடன் மோதினார். 32 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ராதிகா சுதந்திரா சீலன் 11-9, 11-7, 11-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இந்நிலையில், அமெரிக்க விமானப் படை தொடர்பான ரகசிய ஆவணங்களை பதுக்கியது மற்றும் ஓட்டலில் சீன அரசு அதிகாரிகளை சந்தித்து பேசியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் ஆஷ்லே டெல்லிஸை எப்பிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். முன்னதாக வெர்ஜினியாவில் உள்ள அவரது வீட்டில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது 1,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ ரகசியங்கள் அடங்கிய ஆவணங்களை புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைப்பற்றினர். அமெரிக்க பாதுகாப்புத் துறை மற்றும் வெளியுறவுத் துறை அலுவலகங்களில் இருந்த ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளார் என்று எப்பிஐ புலனாய்வுத் துறை சிறப்பு ஏஜென்ட் ஜெப்ரி ஸ்காட் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.மேலும், கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2025-ம் ஆண்டு செப்டம்பர் வரை வெர்ஜினியாவில் உள்ள பிரபல ஓட்டலில் சீன அதிகாரிகளை ஆஷ்லே டெல்லிஸ் சந்தித்து பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. ஆஷ்லே மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டு சிறை தண்டனையும்…
சாம் ஆண்டன் இயக்கத்தில் அனுராக் கஷ்யாப் நடிக்கும் படத்துக்கு ‘அன்கில்_123’ என தலைப்பிட்டு இருக்கிறார்கள். சாம் ஆண்டன் இயக்கத்தில் அனுராக் கஷ்யாப் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். தமிழில் உருவாகும் இப்படத்துக்கு ‘அன்கில்_123’ என தலைப்பிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இப்படத்தினை வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் போஸ்டர் மற்றும் அனுராக் கஷ்யாப்பின் லுக் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது, இப்படம் சைக்கோ கில்லர் கதை போன்று தெரிகிறது.
அதனால், 100 வார்டுகளிலும் இரு கட்சி நிர்வாகிகளும், அதன் கவுன்சிலர்களும் திரைமறைவு அதிகார மோதலில் ஈடுபட்டுள்ளனர். மேயர் இல்லாததால் அவரது இடத்தில் துணைமேயர் நாகராஜன் தங்கள் வார்டுகளில் வந்து மக்கள் குறை கேட்பது, ஆய்வு செய்வதையும் திமுக கவுன்சிலர்கள் விரும்பவில்லை. இந்த நேரத்தில் திமுகவுடன் மோதினால், அது சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தி விடும் என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் அடக்கி வாசிக்கின்றனர்.ஆனாலும், துணை மேயருக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் திரைமறைவு அரசியல் மோதல் அனைத்து நிலைகளிலும் நடந்து வருகிறது. அதன் காரணமாகவே, நேற்று முன்தினம் துணைமேயர் பங்கேற்ற ரூ.2,300 கோடி மதிப்பிலான பாதாள சாக்கடை திட்ட ஆலோசனைக் கூட்டத்தை பெரும்பாலான திமுக கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.
புதுடெல்லி: இந்தியாவின் 2 என்எம் சிப் உலக சந்தையை புரட்டிப் போடும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: தரவுகள் (டேட்டா) என்பது தற்போது கச்சா எண்ணெய்க்கு இணையாகவும் தரவு மையங்கள் (டேட்டா சென்டர்கள்) என்பது எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளாகவும் கருதப்படுகின்றன. தற்போது டேட்டா மற்றும் டேட்டா சென்டர்களே ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தீர்மானிக்கின்றன. இந்தத் துறையில் இந்தியா முன்வரிசையை எட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
உங்கள் நாள் முடிந்துவிட்டதாக நீங்கள் நினைக்கும் போது நள்ளிரவு ஆசைகள் தோன்றும். உலகம் அமைதியாக இருக்கிறது, உங்கள் மன உறுதி குறைவாக உள்ளது, குளிர்சாதன பெட்டி திடீரென்று காந்தமாக உணர்கிறது. தாமதமாக இரவில் சாப்பிடுவது தூக்கத்தையும் செரிமானத்தையும் சீர்குலைக்கும் என்று ஆய்வுகள் காட்டினாலும், நள்ளிரவில் பசி என்பது ஏற்ற இறக்கமான ஹார்மோன்கள் மற்றும் மன அழுத்தத்தால் இயக்கப்படும் ஒரு உண்மையான உடலியல் தூண்டுதல் என்றும் ஆராய்ச்சி கூறுகிறது. தந்திரம் உங்கள் ஆரோக்கியத்தை சமரசம் செய்யாமல் ஆறுதல் தரும் தின்பண்டங்களைத் தேர்ந்தெடுப்பது.ஆரோக்கியமான நள்ளிரவு சிற்றுண்டி அது உண்மையில் இடத்தைத் தாக்கியதுபெர்ரிகளுடன் கிரேக்க தயிர்உணவியல் வல்லுநர்கள் பெரும்பாலும் கிரேக்க தயிரை பரிந்துரைக்கிறார்கள், ஏனெனில் இது மெதுவாக ஜீரணிக்கும் கேசீன் புரதத்தை வழங்குகிறது, இது இரவு முழுவதும் பசியை சீராக வைத்திருக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த பெர்ரிகளுடன் ஜோடியாக, இது இரத்த சர்க்கரை ஸ்பைக் இல்லாமல் இனிப்பை வழங்குகிறது. பிரிட்டிஷ் டயட்டெடிக் அசோசியேஷன் தயிரை இரவு நேரத்தில்…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் உண்டியல் மூலம் செலுத்தும் பணத்தை எண்ணும் இடத்தை ‘பரகாமணி’ என்றழைக்கின்றனர். தீவிர சோதனை, கண்காணிப்பு கேமராக்கள் போன்ற கெடுபிடிகள் இருந்தாலும், தேவஸ்தான சீனியர் அஸிஸ்டெண்டாக பணிபுரிந்து வந்த ரவிக் குமார் கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிநாட்டு கரன்ஸிகளை எடுத்து ஒளித்து வைத்து கொண்டிருந்தபோது, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த திருமலை திருப்பதி தேவஸ்தான உதவி பாதுகாப்பு அதிகாரி (ஏவிஎஸ்ஓ) சதீஷ் குமார் கையும் களவுமாக பிடித்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சுமார் ரூ.100 கோடி வரை திருடியதையும் தான் திருடிய சொத்துகளில் 2 வீடுகளை மட்டும் வைத்து கொண்டு மீதமுள்ள அனைத்து சொத்துகள் அனைத்தையும் மீண்டும் தேவஸ்தானத்திற்கே திருப்பி தானமாக கொடுத்து விடுவதாகவும் கூறினார். இதனிடையே ஆந்திராவில் ஆட்சி மாறியதையடுத்து, இது தொடர்பாக ஆந்திர உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு சிஐடி போலீஸார் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. சமீபத்தில் இந்த விசாரணைக்கு ரவிக்குமாரை கைது செய்த…
மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில், நீண்ட காலமாகவே புவியியல் காரணிகள் முக்கிய பங்காற்றி வந்துள்ளன. கள்ளக்குறிச்சியின் கல்வராயன் மலை, நீலகிரியின் குக்கிராமங்கள் மற்றும் தருமபுரி, ஈரோட்டில் வனங்களுக்கு அருகில் வாழும் மாணவர்கள், பள்ளிக்குச் செல்ல பல மைல்கள் பயணிக்க வேண்டியிருந்தது.மழைக்காலத்தில் பாதைகள் துண்டிக்கப்பட்டு, பள்ளி வருகை குறைவதுடன், இடைநிற்றல் விகிதமும் உயர்வது வாடிக்கையாக இருந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, மாநில அரசு ரூ.3.62 கோடி மதிப்பீட்டில் ‘தொல்குடி திட்டம்’ மூலம் பள்ளிக்கென 26 தனி வாகனங்களை திருச்சி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களுக்கு வழங்க பழங்குடியினர் நலத்துறை நடவடிக்கை எடுத்தது.இதனால் 74 உண்டி உறைவிடப் பள்ளிகளில் பயிலும் 3600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைவர். கல்வராயன்மலை இன்னாடு கிராமத்தில் இந்த வாகனப் போக்குவரத்து திட்டத்தை ஒரு முன்னோடித் திட்டமாக தொடங்கியபோது, மாணவர்களின் வருகைப்பதிவு அதிகரித்த தையும், இடைநிற்றல் குறைந்ததையும் கண்டறிய முடிந்தது.
சென்னை: 6-வது ஏசியன் தனிநபர் சாம்பியன்ஷிப் செஸ் தொடர் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை எஸ்ஆர்எம்ஐஎஸ்டி-யில் 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவரான வி.எஸ்.ராகுல் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்த தொடரில் இன்னும் ஒரு சுற்று மீதம் உள்ள நிலையில் ராகுல் சாம்பியன் பட்டம் வெல்வதை உறுதி செய்தார்.மேலும் லைவ் ரேட்டிங்கில் ராகுல் 2,400 புள்ளிகளை எட்டிய நிலையில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்கான இறுதி நார்ம்ஸை பூர்த்தி செய்தார். இதன் மூலம் 21 வயதான ராகுல், இந்தியாவின் 91-வது கிராண்ட் மாஸ்டராகி உள்ளார்.
