வாஷிங்டன்: உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்பும் ரஷ்ய அதிபர் புதினும் 3 மணி நேரம் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனின் 22 சதவீத பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி உள்ளது. கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், இருநாடுகள் இடையிலான போரை நிறுத்த முயற்சி செய்து வருகிறார். இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அதிபர் ட்ரம்ப் 4 முறை தொலைபேசியில் ஆலோசனை நடத்தி உள்ளார். இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம், ஆங்கரேஜ் நகரில் உள்ள ராணுவ தளத்தில் அமெரிக்கா, ரஷ்ய அதிபர்கள் நேற்று நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஆங்கரேஜ் விமான தளத்தில் தரையிறங்கிய அதிபர் புதினை, அதிபர் ட்ரம்ப் வரவேற்று அழைத்துச் சென்றார். அப்போது வானில் அமெரிக்காவின் பி2, எப்22 ரக போர் விமானங்கள்…
Author: admin
முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்கள் இருப்பதாக அனுராக் தாகூர் எம்.பி தெரிவித்த குற்றச்சாட்டுக்கு தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 19,476 வாக்காளர்கள் சந்தேகத்துக்குரியவர்களாக இருக்கிறார்கள். 9,133 வாக்காளர்கள் போலி முகவரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் 84-ம் வாக்குச்சாவடியில் உள்ள ஒரே வீட்டில் 30 வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் என்றும், அதில் ரஃபியுல்லா என்று ஒரே பெயரில் மூன்று வாக்காளர்கள் உள்ளனர் என்றும் பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் தெரிவித் திருந்தார். அவர் பேசும் வீடியோவையும் சமூக வலைதளத்தில் தமிழக பாஜக பதிவிட்டிருந்தது. முதல்வர் ஸ்டாலின் போட்டியிட்டு வென்ற கொளத்தூர் தொகுதியில் ஒரே முகவரியில் 30 வாக்காளர்கள் இருக்கிறார்களா? என்பது குறித்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விசாரணை மேற்கொண்டது. இந்நிலையில், அது தனி வீடல்ல, அடுக்குமாடி குடியிருப்பு என தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து தமிழக…
எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இயங்கும் போது இசையைக் கேட்பது மன சோர்வுக்கு எதிராக போராடவும் செயல்திறனை மேம்படுத்தவும் உதவும் என்பதைக் கண்டுபிடித்தனர். மன வேலைகளுக்குப் பிறகு தங்களுக்கு விருப்பமான இசையைக் கேட்ட ஓட்டப்பந்தய வீரர்கள் சோர்வடையாதபோது இதேபோல் செயல்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதை எதிர்கொள்வோம். நீங்கள் ஒரு உடற்பயிற்சி ஆர்வலராக இருக்கலாம், ஆனால் மன சோர்வு உங்கள் காலணிகளை கூட ஒரு சவாலாக உணர வைக்கும் நாட்கள் உள்ளன. சுறுசுறுப்பாக இருப்பது முன்பை விட இப்போது முக்கியமானது, குறிப்பாக வாழ்க்கை முறை நோய்கள் அதிகரித்து வரும் நேரத்தில். ஆனால் நீங்கள் உங்களை எவ்வாறு ஊக்குவிக்கிறீர்கள் மற்றும் மன சோர்வை எதிர்த்துப் போராடுகிறீர்கள்? உங்கள் தினசரி ஓட்டத்தில் ஒரு சிறிய மாற்றங்கள் வேலையைச் செய்யக்கூடும் என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஒரு ஆய்வில், இயங்கும் போது இசையைக் கேட்பது மன சோர்வுக்கு எதிராக போராடக்கூடும் என்று கண்டறியப்பட்டது.…
புதுடெல்லி: சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் நேற்று முன்தினம் தேசியக் கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது சுதர்சன சக்கர வான் பாதுகாப்பு கவசம் குறித்த மிக முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டார். இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2010-ம் ஆண்டில் இஸ்ரேல் ராணுவம், அயர்ன் டோம் என்ற வான் பாதுகாப்பு கவசத்தை நிறுவியது. எதிரிகளின் போர் விமானங்கள், ஏவுகணைகள், ட்ரோன்களை அயர்ன் டோமில் இருந்து புறப்படும் ஏவுகணைகள் நடுவானில் அழித்துவிடும். இதை அடிப்படையாக வைத்து இந்தியாவின் வான் பாதுகாப்புக்காக சுதர்சன சக்கர வான் பாதுகாப்பு கவசம் உருவாக்கப்பட உள்ளது. ஆபரேஷன் சிந்தூரின்போது ஆகாஷ்தீர் என்ற வான் பாதுகாப்பு கவசத்தை பயன்படுத்தினோம். தற்போது ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு கவசத்தில் எஸ்400 ஏவுகணைகள், பிரளயம், பிருத்வி, ஏஏடி, ஆகாஷ், எஸ்125 பெசோரா, ஸ்பைடர், 9கே33 ஓசா, 2கே12 கப், பரக், கியூஆர்எஸ்ஏஎம், எஸ்200 ஆகிய ஏவுகணைகள்…
சாதிய தடைகள் நீக்கப்பட்ட பின்புதான், நாம் ஒரே தேசமாக, ஒரே மக்களாக இணைய முடியும் என்று திருமாவளவன் பிறந்த நாள் விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 63-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி. சென்னை, காமராஜர் அரங்கில் நேற்று மதச் சார்பின்மை காப்போம்’ என்னும் கருப்பொருளை மையப்படுத்தி சிறப்பு நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது. மாலை 4 மணி அளவில் விழா தொடங்கியது. விழா மேடைக்கு வந்த திருமாவளவனுக்கு சிறுமி பூ கொடுத்து வரவேற்றார். அவரது வாழ்க்கை வரலாறு குறித்து, ஏஐ தொழில்நுட்பத் தில் உருவாக்கப்பட்ட ஆவணப்படமும் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, மதச்சார்பின்மை காப்போம் தலைப் பில் கவியரங்கம் நடைபெற்றது. இதில், இயக்குநர் கே.பாக்ய ராஜ், கவிஞர் விவேகா, ஆண்டாள் பிரியதர்ஷினி, இளைய கம் பன், தஞ்சை இனியன், அருண் பாரதி, லாவரதன், புனிதஜோதி ஆகியோர் பங்கேற்றனர். பின் னர்.…
புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைதான யூ டியூபர் ஜோதி மல்ஹோத்ரா மீதான குற்றச்சாட்டுக்கு வலுவான ஆதாரம் இருப்பதாக 2,500 பக்க குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிராவல் வித் ஜோ என்ற பெயரில் யூடியூப் நடத்தி வந்த ஹரியானாவைச் சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா (33) பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, கடந்த மே மாதம் ஹரியானா போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக ஹிசார் நீதிமன்றத்தில் ஜோதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது. இந்நிலையில், 2,500 பக்க குற்றப் பத்திரிகையை ஹிசார் நீதிமன்றத்தில் எஸ்ஐடி தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியாக இருந்த ஈசன்-உர்-ரஹிம் (எ) டேனிஷ் அலியுடன் ஜோதி தொடர்பில் இருந்துள்ளார். ஒரு முறை கர்த்தார்பூர் காரிடார் வழியாக பாகிஸ்தான் சென்ற அவர், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மகள்…
Last Updated : 17 Aug, 2025 07:05 AM Published : 17 Aug 2025 07:05 AM Last Updated : 17 Aug 2025 07:05 AM லாட்டரி கடை ஊழியருடன் ஜெயேஷ் குமார். (கண்ணாடி அணிந்திருப்பவர்). கல்பெட்டா: கேரள மாநிலம் கல்பெட்டா பகுதியில் தனியார் பேருந்து ஓட்டுனராக வேலை செய்பவர் ஜெயேஷ் குமார். இவர் கல்பெட்டா புது பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள அம்மா லாட்டரி கடையில் உள்ள ஊழியர்களிடம் 5 தனலட்சுமி லாட்டரி டிக்கெட்டுகளை எடுத்து வைக்கும்படி கூறியுள்ளார். அதற்கான பணத்தை பிறகு கொடுப்பதாக கூறியுள்ளார். அதன்படி ஜெயேஷ் குமாருக்கு 5 லாட்டரி டிக்கெட்டுகளை ஊழியர் ஸ்வாதி சத்யன் தனியாக எடுத்து வைத்து விட்டார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை குலுக்கல் நடைபெற்றது. அதில் ஜெயேஷ் குமாருக்காக எடுத்து வைத்திருந்த 5 டிக்கெட்டுகளில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.1 கோடி பரிசு விழுந்திருந்தது. உடனடியாக குமாரை அழைத்து…
புதுடெல்லி: இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை விரைவில் அறிமுகமாவதற்கு முன்பாகவே முக்கிய சோதனைகளில் அது தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள பல்வேறு பாரம்பரிய மலைப்பாதைகளில் ‘‘ஹைட்ரஜன் பார் ஹெரிட்டேஜ்’’ திட்டத்தின் கீழ் 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎப்) உருவாக்கப்பட்டுள்ள இந்த ரயில் சுத்தமான எரிசக்தி ஆதாரமான ஹைட்ரஜன் எரிபொருளில் இயக்கப்பட உள்ளது. பூஜ்ய கார்பன் உமிழ்வு இலக்குகளை அடையும் வகையில் பசுமை போக்குவரத்து தொழில்நுட்பத்தை நோக்கிய பயணத்தில் ஹைட்ரஜன் ரயில் இந்தியாவை முன்னோக்கி நகர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஐசிஎப் பொது மேலாளர் யு.சுப்பாராவ் கூறியதாவது: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹைட்ரஜன் ரயில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சுமை சோதனைகளை இந்த ரயில் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அதன் செயல்பாட்டில் சிறப்பான முன்னேற்றம் காணப்படுகிறது. இது குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு சுப்பாராவ் தெரிவித்தார்.…
சென்னை: வீட்டில் கால் தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த நிலையில், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இல. கணேசன் நேற்று காலமானார். நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் (80). பாஜகவில் மாநில தலைவர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். சமீபத்தில் சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்துக்கு வந்திருந்தார். இந்நிலையில் கடந்த 8-ம் தேதி காலை வீட்டில் அவர் கால் தவறி கீழே விழுந்ததில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்த, அவருக்கு பல்துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவரது உடல்நிலை யில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக, அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே வந்தது. நேற்று அவரது உடல்நிலை கவலைக்கிடமான…
புதுடெல்லி: 12 சதவீத வரம்பில் உள்ள 99% பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறையும் என தெரிகிறது. டெல்லி செங்கோட்டையில் நேற்று முன்தினம் நடைபெற்ற 79-வது சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி, தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி விகிதம் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இப்போது ஜிஎஸ்டி கட்டமைப்பில் 5, 12, 18 மற்றும் 28 என 4 வரி அடுக்குகள் உள்ளன. அத்தியாவசிய பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. அல்லது குறைந்த வரி விதிக்கப்படுகிறது. அதேநேரம், அத்தியாவசியமற்ற மற்றும் ஆடம்பர பொருட்கள் மிக உயர்ந்த வரி அடுக்கின் கீழ் (28%) வருகின்றன. ஜிஎஸ்டி விகித முறையை 2 அடுக்குகளாக குறைக்குமாறு அமைச்சர்கள் குழுவுக்கு ஆலோசனை வழங்கி இருப்பதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்தது. ஜிஎஸ்டி வரிக் கட்டமைப்பில் ‘ஸ்டாண்டர்டு’ மற்றும் ‘மெரிட்’ என 2 வகைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்று மத்திய அரசு மாநில…