Author: admin

இப்படத்தினை சீக்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனம் இந்தியாவின் முதல் ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படமான ’தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’, ’தி லஞ்ச்பாக்ஸ்’, ’மசான்’, ’பாக்லைட்’ உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளது. இந்நிறுவனத்துடன் முதன்முறையாக கைகோர்த்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ். இந்தப் புதிய படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதை படக்குழு அறிவிக்கவில்லை. இதற்கு ஒளிப்பதிவாளராக திருநாவுக்கரசு பணிபுரிந்து வருகிறார்.இந்தப் படம் குறித்து சீக்யா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர் குனீத் மோங்கா கபூர். “பல்வேறு கலாச்சாரங்களை கடந்து பார்வையாளர்களை சென்றடையும் மண்சார்ந்த கதைகளை சொல்வதில்தான் நாங்கள் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளோம். அந்த நம்பிக்கையை நிச்சயம் கார்த்திக் சுப்பராஜ் காப்பாற்றுவார். அவரது கதைகள் புதுமையாகவும் உலகளவில் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கும் விதமாகவும் அமையும். கார்த்திக்குடன் இந்தப் பயணத்தில் இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

Read More

பெண்கள் பொருளாதார வலிமை பெற, காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட மகிளா வங்கியை மத்திய பாஜக அரசு மூடிவிட்டதாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, ‘இந்தியாவின் இந்திராவை கொண்டாடு வோம்’ எனும் விழா, மகளிர் காங்கிரஸ் தலைவி ஹசினா சையத் தலைமையில், அம்பத்தூரில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. அதில், மகளிர் காங்கிரஸாருக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

Read More

சென்னை: சென்​னை​யில் தங்​கம் விலை நேற்று ரூ.97 ஆயிரத்தை தாண்​டி, மீண்​டும் வரலாறு காணாத புதிய உச்​சத்தை தொட்​டது. எச்​1பி விசா கட்​ட​ணத்தை அமெரிக்க அரசு உயர்த்​தி​யது, அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாய் மதிப்பு வீழ்ச்​சி, வட்டி விகிதத்தை அமெரிக்க ஃபெடரல் வங்கி குறைத்​தது, முதலீட்​டாளர்​களின் பார்வை தங்​கத்​தின் பக்​கம் திரும்​பியது உள்​ளிட்ட காரணங்​களால் தங்​கம் விலை தொடர்ந்து உயர்ந்​து வருகிறது.

Read More

வைட்டமின் சி, அஸ்கார்பிக் அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு பரந்த அளவிலான உடலியல் செயல்முறைகளுக்கு அவசியமான நீரில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும். ஸ்கர்வி போன்ற கிளாசிக்கல் குறைபாடு நோய்களைத் தடுப்பதற்கு அப்பால், இது ஆக்ஸிஜனேற்ற பாதுகாப்பு, நோயெதிர்ப்பு செயல்பாடு, கொலாஜன் உருவாக்கம் மற்றும் நரம்பியக்கடத்தி தொகுப்பு ஆகியவற்றிற்கு பங்களிக்கிறது. இருதய செயல்பாடு, ஆக்ஸிஜனேற்ற அழுத்த மேலாண்மை, தோல் ஒருமைப்பாடு மற்றும் நரம்பியல் பாதுகாப்பு ஆகியவற்றில் சாத்தியமான தாக்கங்கள் உட்பட, ஆரோக்கியத்தில் அதன் பரந்த பங்கை அறிவியல் ஆராய்ச்சி தொடர்ந்து ஆராய்கிறது. வைட்டமின் சி இந்த செயல்முறைகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது நவீன உணவுகளில் குறிப்பாக பொருத்தமானது, அங்கு பழம் மற்றும் காய்கறி நுகர்வு போதுமானதாக இருக்காது. ஆதாரங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம் தனிநபர்கள் ஊட்டச்சத்து மற்றும் சப்ளிமெண்ட்ஸ் பற்றிய தகவலறிந்த தேர்வுகளை செய்ய அனுமதிக்கிறது, அதே நேரத்தில் ஒட்டுமொத்த நீண்ட கால ஆரோக்கியம் மற்றும் நாள்பட்ட மற்றும் கடுமையான…

Read More

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் நடக்கும் காட்டாட்சியை பாஜக வேரோடு அகற்றும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் 200+ தொகுதிகளை வசப்படுத்திய ஐக்கிய ஜனதா தளம் – பாஜக இணைந்த என்டிஏ மகத்தான வெற்றியுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. பெரும்பான்மைக்கு 122 இடங்களின் வெற்றி தேவை எனும் நிலையில், என்டிஏ பதிவு செய்திருப்பது வரலாற்று வெற்றியாக கருதப்படுகிறது. அதேவேளையில், 35 இடங்களை வெல்லவே திக்குமுக்காடிய ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸின் மகா கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது.

Read More

இவ்வாறு 2 விடுமுறை நாட்களில் பணிபுரிவதால், தொடர்ந்து 14 நாட்கள் ஓய்வின்றி பணியாற்றும் நிலை உருவாகியுள்ளது. இது ஆசிரியர்களின் உடல்நிலையை மட்டுமின்றி மனநிலையையும் சோர்வாக்கும். மேலும், பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தி வரும் சூழலில் இந்தப் பணிச் சுமை கற்பித்தலில் பின்னடைவை ஏற்படுத்தும்.எனவே, இந்த நிலையை மாற்றுவதற்கு பள்ளிக்கல்வித் துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல், தமிழ் திறனறித் தேர்வில் தனியார் பள்ளி மாணவர்களும் பங்கு கொள்வதால் தனியார் பள்ளி ஆசிரியர்களையும் கண்காணிப்புப் பணிகளில் பயன்படுத்த வேண்டும். அதனுடன் 2 நாட்கள் தேர்வில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுப்பும் வழங்கிட வேண்டும்” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read More

இந்நிலையில், தொடரின் கடைசி போட்டி சனிக்கிழமை அன்று பைசலாபாத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி 37.5 ஓவர்களில் 143 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஷாஹின் அப்ரிடி, முகமது நவாஸ், சல்மான் ஆகா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் அணி விரட்டியது. சயீம் அயூப் 77, பாபர் அஸம் 27 மற்றும் முகமது ரிஸ்வான் 32 ரன்கள் எடுத்தனர். 25.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்து ஆட்டத்தையும், தொடரையும் பாகிஸ்தான் அணி வென்றது.

Read More

அந்த வகையில், அமெரிக்க அதிபர்கள் வரிசையில் கடைசியாக ட்ரம்ப்பும் நேற்று மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஓர் அடிப்படை மாற்றம் வர வேண்டும் என்பதைப் பற்றிப் பேசினார். “பயங்கரவாதமும், மரணங்களும் முற்றுப்பெறும் தருணம். மாறாக நம்பிக்கையும், இறையருளும் தொடங்கும் காலம். இது இஸ்ரேலுக்கும், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளுக்கும் ஒரு நீடித்த நல்லிணக்கத்தின் தொடக்கக் காலம். இது விரைவில் பிரம்மாண்டமான பிராந்தியமாகும் என்பதை நான் வலுவாக நம்புகிறேன். புதிய மத்திய கிழக்கின் வரலாற்று விடியல்” என்று மத்திய கிழக்கின் புதிய முகத்தைப் பற்றிப் பேசினார்.அவரது பேச்சு நெடுகிலுமே, காசா அமைதி ஒப்பந்தம் ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் நிலவும் சிக்கல்களுக்குமான தீர்வு என்ற தொனியிலேயே இருந்தது. ஆனால், ‘பாலஸ்தீனர்களின் நில உரிமை மீட்கப்படும் வரை, இஸ்ரேல் அவர்களின் நிலத்தை கட்டுப்படுத்தும் வரை நீடித்த அமைதிக்கும், ஸ்திரத்தன்மைக்கும் வாய்ப்பில்லை’ என்கின்றனர் பாலஸ்தீன உரிமைக்காக குரல் கொடுக்கும் ஆர்வலர்கள்.

Read More

குரலற்றவர்களின் குரல் தான் ’மாஸ்க்’ திரைப்படம் என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். The Show Must Go On மற்றும் Black Madras Films ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘மாஸ்க்’. இப்படம் வெற்றிமாறன் மேற்பார்வையில் நடைபெற்று முடிந்துள்ளது. விகர்ணன் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா, ருஹானி சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

Read More

விருதுநகர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுகதான் போட்டியிடும் என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். விருதுநகரில் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை வகித்துப் பேசியதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை பார்த்து திமுக பதற்றப்படுகிறது. திமுகவினர் போலி வாக்காளர்களை நம்பி தான் தேர்தலில் நிற்க முடியும்.

Read More