Author: admin

சசாரம்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று (ஆகஸ்ட் 17) பிஹாரில் உள்ள சசாரமில் இருந்து தனது 16 நாள் ‘வாக்காளர் அதிகார நடைபயணத்தை’ தொடங்கினார். இன்று தொடங்கும் இந்த யாத்திரை 1,300 கிலோமீட்டர் தூரம் பயணித்து, செப்டம்பர் 1 ஆம் தேதி பாட்னாவில் நடைபெறும் மெகா பேரணியுடன் முடிவடையும். நிறைவுநாள் பேரணியில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். தனது நடைபயணம் குறித்து ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “16 நாட்கள். 20+ மாவட்டங்கள். 1,300+ கி.மீ தூரம் வாக்காளர் உரிமை நடைபயணத்துக்காக நாங்கள் மக்களிடையே வருகிறோம். இது மிகவும் அடிப்படை ஜனநாயக உரிமையான ‘ஒரு நபர், ஒரு வாக்கு’ என்பதை பாதுகாப்பதற்கான போராட்டம் ஆகும். அரசியலமைப்பைக் காப்பாற்ற பிஹாரில் எங்களுடன் சேருங்கள்,” என்று தெரிவித்தார். இந்த யாத்திரை இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் மற்றொரு மைல்கல்லாக இருக்கும் என்று கட்சியின்…

Read More

சென்னை: லாவா பிளேஸ் AMOLED 2 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் மொபைல் போன், ஸ்மார்ட்போன் உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி, விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா பிளேஸ் AMOLED 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை என இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதள அப்டேட் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்களும் இதில் அறிவிக்கப்பட்டுள்ளன. லாவா பிளேஸ் AMOLED 2 ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன? 6.67 இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே மீடியாடெக் டிமான்சிட்டி 7060 சிப்செட் ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் 6ஜிபி ரேம் 128ஜிபி ஸ்டோரேஜ் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்கத்தில்…

Read More

சென்னை: தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த அதிரடி இளம் வீரர் டெவால்ட் பிரேவிஸை சிஎஸ்கே அணி ஐபிஎல் 2025 சீசனில் மாற்று வீரராக ஒப்பந்தம் செய்தது. இது குறித்து அண்மையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஸ்வின், தனது யூடியூப் சேனலில் பேசியிருந்தார். அவரது கருத்து சர்ச்சையான நிலையில் இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் விளக்கம் கொடுத்திருந்தது. இந்த சூழலில் அது குறித்து அஸ்வின் தற்போது தெளிவுப்படுத்தி உள்ளார். >>அஸ்வின் கருத்தால் எழுந்த சர்ச்சை: டெவால்ட் பிரேவிஸ் ஒப்பந்தத்தில் விதிமீறலா? – சிஎஸ்கே அணி நிர்வாகம் விளக்கம்: விரிவாக வாசிக்க “டெவால்ட் பிரேவிஸை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்தது குறித்து விளக்கம் அளித்துள்ளது. எக்ஸ் தளத்தில் அந்த ட்வீட்டை நான் பார்த்தேன். அதில் சிலர் தங்களது கருத்தை கமெண்ட் மூலம் தெரிவித்திருந்தனர். அதில் அஸ்வினிடம் இதை சொல்ல வேண்டும் என சொல்லி இருந்தார்கள். நான் இதை நிச்சயம்…

Read More

திருவண்ணாமலை: “திமுக எம்எல்ஏ நடத்தும் மருத்துவமனையில் கிட்னியை திருடி விற்கப்படுவது குறித்து அதிமுக ஆட்சி அமைந்ததும் முழுமையாக விசாரிக்கப்படும்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பயணத்தில் திருவண்ணாமலை அண்ணா சாலையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அருணாச்சலேஸ்வர திருக்கோயிலை தொல்லியல்துறை கைப்பற்ற முயன்றபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா உச்சநீதிமன்றம் வரை சென்று மீட்டெடுத்தார். திமுகவில் இருக்கும் பல அமைச்சர்கள் அதிமுகவில் இருந்து போனவர்கள். அதாவது டெபுடேஷனில் போயிருக்காங்க. திமுகவில் ஆட்களே இல்லை, அமைச்சரவையில் 8 பேர் இருக்காங்க. திமுகவில் உழைத்தவர்கள் எல்லாம் ஓரம் கட்டப்படுகிறார்கள். அதிமுகவில் இருந்து போனவர்கள் நல்ல இலாகா வாங்கி செழிப்பாக இருக்கிறார்கள். அதிமுக ஜனநாயக பூர்வமான கட்சி. கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் என்னைப்போல பொதுச்செயலாளர் ஆகமுடியும். திமுகவில் அப்படி வர முடியுமா?. உழைத்தால் அதிமுகவில் முதல்வர் ஆகலாம். திமுகவில் கருணாநிதி குடும்பத்தை தவிர வேறு யாரும் பதவிக்கு வரமுடியாது.…

Read More

பாதாம் பசியைக் கொல்ல ஒரு முறுமுறுப்பான வழி என்று நினைக்கிறீர்களா? மீண்டும் சிந்தியுங்கள். உங்கள் டி.என்.ஏவைப் பாதுகாப்பது மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைப்பது போன்ற தினசரி 60 கிராம் பாதாம் சாப்பிடுவது, வயதான, வீக்கம் மற்றும் நாட்பட்ட நோய்களுக்குப் பின்னால் உள்ள அமைதியான குற்றவாளிகளில் ஒன்றாகும். ஃப்ரீ ரேடிக்கல்கள் எனப்படும் தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகள் உடலில் உருவாகும்போது, செல்களை சேதப்படுத்தும் மற்றும் வயதான செயல்முறையை விரைவுபடுத்தும்போது ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் ஏற்படுகிறது. வைட்டமின் ஈ, ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளால் நிரம்பிய பாதாம், சிறிய மெய்க்காப்பாளர்களைப் போல செயல்படுகிறது, இந்த சேதத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் செல்லுலார் மட்டத்தில் உங்கள் உடலை ஆதரிக்கிறது. இதன் பொருள் உங்கள் பாதாம் பழக்கம் ஆரோக்கியமானதல்ல, இது நீண்டகால ஆரோக்கியத்திற்கான ஒரு சிறந்த நடவடிக்கை. இது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கிறது, உங்கள் மரபணுப் பொருளைப் பாதுகாக்க உதவுகிறது, மேலும் வயதான அறிகுறிகளைக் குறைக்கலாம். அடுத்த…

Read More

உலகளாவிய விண்வெளி ஒத்துழைப்புக்கான ஒரு முக்கிய சாதனையில், நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) ஆகியவை உலகின் மிகப்பெரியதை வெற்றிகரமாக பயன்படுத்தியுள்ளன ராடார் சுற்றுப்பாதையில் ஆண்டெனா. கூட்டு நாசா-இஸ்ரோவின் ஒரு பகுதி 33-அடி ஆண்டெனா செயற்கை துளை ரேடார் (NISAR) மிஷன், பூமியின் மேற்பரப்பை முன்னோடியில்லாத வகையில் விரிவாக கைப்பற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது. கிரகத்திலிருந்து சுமார் 460 மைல் தொலைவில் சுற்றியிருக்கும், இந்த பணி மேகங்களுக்குள் ஊடுருவி இரவும் பகலும் இயங்கக்கூடிய உயர்-தெளிவுத்திறன் கொண்ட ரேடார் படங்களை வழங்கும். இந்த திருப்புமுனை விஞ்ஞானிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பேரழிவு-பதில் குழுக்களை உலகளவில் முக்கியமான தரவை வழங்குவதன் மூலம் அதிகாரம் அளிக்கும் காலநிலை மாற்றம்இயற்கை அபாயங்கள் மற்றும் விவசாய போக்குகள். மைல்கல் ஒரு புதிய சகாப்தத்தை குறிக்கிறது பூமி கவனிப்புமேம்பட்ட பொறியியலை சர்வதேச ஒத்துழைப்புடன் இணைத்தல்.நாசா, இஸ்ரோ மற்றும் நிசார்: பூமி அவதானிப்பை மறுவரையறை செய்தல்நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் (ஜே.பி.எல்)…

Read More

சென்னை: தமிழ் அமைப்புகள் கோரும் தமிழ்ப் பாடப் புத்தகங்களை இலவசமாக அனுப்ப முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். ”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி”. நாகரிகத்தை உலகிற்கு கற்றுத் தந்த மொழி தமிழ் மொழி. எத்தனையோ மொழிகள் உலகில் இருந்தாலும், அவற்றிற்கு எல்லாம் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு. இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த, பழமை வாய்ந்த தாய் மொழியை பிற மாநிலங்களில் பயிலும் மாணவ, மாணவியர் கற்றுக்கொள்ள முடியாத அவல நிலையை திமுக அரசு தற்போது ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களின் குழந்தைகள் தமிழ் மொழி கற்க ஏதுவாக அங்கு செயல்படும் தமிழ் அமைப்புகளின் வாயிலாக தமிழ் வழிப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ் மொழியை வளர்க்கும் விதமாக, அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இலவசமாக தமிழ்ப் பாடப் புத்தகங்கள் அனுப்பப்பட்டு வந்தன.…

Read More

கோவை: அமெரிக்க வரி விதிப்பின் தாக்கத்தை சமாளிக்க அவசர கால கடன் உத்தரவாதத் திட்டத்தின் (இசிஎல்ஜிஎஸ்) கீழ் 30 சதவீத பிணையமில்லாத கடன் மற்றும் 5 சதவீத வட்டி மானியத்துடன் நிவாரணத் தொகுப்பு வழங்குவது தொடர்பாக பிரதமரிடம் தமிழக முதல்வர் பரிந்துரைக்க வேண்டும் என தென்னிந்திய மில்கள் சங்கம்(சைமா) கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ‘சைமா’ தலைவர் டாக்டர் எஸ் கே.சுந்தரராமன் கூறியதாவது: நாட்டின் ஒட்டு மொத்த ஜவுளி உற்பத்தித்திறனில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ள தமிழ்நாடு ஜவுளித் தொழில், நாட்டின் மொத்த ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில் 28 சதவீத பங்கைக் கொண்டுள்ளது. உலகளாவிய போட்டித் தன்மையை மேம்படுத்தவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் தமிழக அரசு தொடர் நடவடிக்கைகள் மற்றும் கொள்கைத் தலையீடுகளை மேற்கொண்டு வருகிறது. நூற்பு நவீனமய படுத்துவதற்காக 6 சதவீத வட்டி மானியம், ஆடை, வீட்டு ஜவுளித் துறைக்கு 50 சதவீதம் மூலதன மானியம் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிக்கான ஆலோசகரை…

Read More

ஒரு கனமான கால் வொர்க்அவுட்டிற்குப் பிறகு அந்த வலிக்கும் உணர்வு, ஜிம்மில் தாக்கிய பிறகு உடலில் உள்ள விறைப்பு மற்றும் புண், அனைவருக்கும் நிகழ்கிறது. ஆனால் அது சோர்வைத் தவிர வேறு ஏதாவது அடையாளமாக இருக்க முடியுமா? இந்த புண் உண்மையில் எதைக் குறிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது புத்திசாலித்தனமாகப் பயிற்சியளிக்கும், கடினமாக இல்லை. வலி மற்றும் ஆதாயத்திற்கு இடையில் ஒருவர் எவ்வாறு டிகோட் செய்யலாம் மற்றும் எங்கள் வேகத்தை இழக்காமல் அதை எளிதாக்க ஐந்து வழிகளை ஆராய்வோம்.என்ன தாமதமாக தொடங்கும் தசை புண் (டோம்ஸ்)ஒரு கனமான வொர்க்அவுட்டிற்குப் பிறகு நீடித்த புண், நீங்கள் ஒரு ஆக்ரோஷமான வொர்க்அவுட்டின் மூலம் அடுத்த நாள் உதைக்கும் கடினமான மற்றும் வலி உணர்வு, குறிப்பாக உடல் மிகவும் பழக்கமில்லாத வகையில் புதிதாக அல்லது சவாலான ஒன்றை உட்படுத்தியபோது, டோம்ஸ். தீவிரமான செயல்பாட்டின் போது உங்கள் தசைகள் சிறிய கண்ணீரை அனுபவிக்கும் போது இது நிகழ்கிறது, இது…

Read More

பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான இவர், அம்மாநில இந்துப்பூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருக்கிறார். ஆந்திராவில் ஸ்ரீசக்தி என்ற பெயரில் மகளிர் இலவச பேருந்து பயணத்திட்டத்தை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடங்கியுள்ளார். அதைத் தொடர்ந்து இந்துப்பூர் தொகுதியில், பாலகிருஷ்ணா அந்த திட்டத்தை மிகுந்த ஆரவாரத்துக்கு இடையே தொடங்கி வைத்தார். இணை ஆட்சியர் அபிஷேக் குமார் தேசியக் கொடியை அசைத்ததும் நடிகர் பாலகிருஷ்ணாவே பேருந்தை ஓட்டினார். அதில் ஏறிய பெண் பயணிகள் உற்சாகம் அடைந்தனர். ரசிகர்கள் ‘ஜெய் பாலையா’’என்று கோஷமிட்டனர். பேருந்து நிலையத்திலிருந்து சவுடேஸ்வரி காலனியில் உள்ள தனது இல்லம் வரை பாலகிருஷ்ணா பேருந்தை ஓட்டிச் சென்றார். இதைச் சிலர் தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read More