Author: admin

புதுடெல்லி: அரசியல் நோக்கங்களுக்காக தேர்தல் ஆணையம் குறிவைக்கப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் குற்றம் சாட்டியுள்ளார். பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதனை முன்வைத்து இன்று முதல் 16 நாட்கள் ராகுல் காந்தி, பிஹாரில் ‘வாக்காளர் அதிகார நடைபயணம்’ நடத்துகிறார். இந்த நிலையில், புதுடெல்லியில் இன்று தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோருடன் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “அரசியல் நோக்கங்களுக்காக வாக்காளர்களை குறிவைக்கும் ஒரு ஏவுதளமாக தேர்தல் ஆணையம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், தேர்தல் ஆணையம் வாக்காளர்களுடன் உறுதியாக நிற்கிறது. தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை, ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. எங்களுக்கு எல்லா கட்சிகளும் ஒன்றுதான். தேர்தல் ஆணையம் அதன் அரசியலமைப்பு பொறுப்பிலிருந்து பின்வாங்காது. வாக்கு…

Read More

சென்னை: தமிழ்நாட்டு மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை ஏற்று, நாளை (18.08.2025) முதல் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் 38 ரயில்கள், கூடுதல் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று எல். முருகன் அறிவித்துள்ளார். சென்னையில் இன்று (17 ஆகஸ்ட் 2025) செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் எல். முருகன், விரைவு ரயில்கள், அதிவிரைவு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்கள் கூடுதல் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை மனுக்கள் மக்களிடமிருந்து தமக்கு வந்ததாகவும், அதை தாம் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் கவனத்துக்கு கொண்டு சென்றதை தொடர்ந்து, அவரது உத்தரவின் பேரில் 38 ரயில்கள் கூடுதல் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் தெரிவித்தார். இந்த அறிவிப்பின்படி சென்னை சென்ட்ரல்- ஷிவமோகா வாராந்திர அதிவிரைவு ரயில் (12691) ஆம்பூரில் நின்று செல்லும். ஷிவமோகாவிலிருந்து சென்னை சென்ட்ரல் வரை (12692) மறு மார்க்கத்திலும்…

Read More

சகிக்கமுடியாத கோடை வெப்பம் மற்றும் திடீர் அறிவிப்பு ‘80% இன்று மழைக்கான வாய்ப்புகள் ‘ – ஒரு நிவாரணம் போல் தெரிகிறது, இல்லையா? ஆனால் மழைக்காலத்தின் மீதான காதல் என்பது மனிதனுக்கு மட்டுமே மசாஜ் அல்ல. டெங்கு வைரஸைக் கொண்டிருக்கும் ஏடிஸ் ஈஜிப்டி கொசு, பெரும்பாலும் தேங்கி நிற்கும் நீரில் இனப்பெருக்கம் செய்கிறது. பழைய டயர்கள் மற்றும் மலர் பானைகளில் சேகரிக்கப்பட்ட தண்ணீர் முதல் ஒருவர் வெறுக்கும் குட்டைகள் வரை, இந்த சிறிய இனப்பெருக்கம் இடங்கள் தீவிர இழப்பு, மரணத்திற்கு கூட காரணமாக மாறும். மழைக்காலம் முழுவதும், ஈரப்பதம் அதிகமாக உள்ளது, இது கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய மிகவும் பிடித்தது, குறிப்பாக 80% அல்லது அதற்கு மேற்பட்ட வரம்பில். இது வெறுமனே ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், நீண்ட காலம் உயிர்வாழவும் அனுமதிக்கிறது. மறுபுறம், மட்டுப்படுத்தப்பட்ட சூரிய ஒளி காரணமாக, இந்தியாவில் ஒரு கோடை கழித்தபின் ஒரு நிவாரணமாக உணரக்கூடும், தேங்கி…

Read More

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியது. தென் மாவட்டங்ளுக்கு புறப்படும் பாண்டியன் விரைவு ரயில் உள்பட முக்கிய ரயில்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியல் வந்தது. நிகழாண்டில் தீபாவளி பண்டிகை வரும் அக்.20-ம் தேதி (திங்கள்கிழமை ) கொண்டாடப்படுகிறது. ரயில் டிக்கெட் முன்பதிவை பொருத்தவரை 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அந்த வகையில், பண்டிகைக்கு சில நாட்கள் முன்பாக, அக்.16-ம் தேதி அன்று சென்னையில் இருந்து விரைவு ரயில்களில் புறப்படுவதற்கு வசதியாக, டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஐஆர்சிடிசி இணையதளம் வழியாகவும், ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூலமாகவும் டிக்கெட் முன்பதிவு நடைபெற்றது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் முக்கிய விரைவு ரயில்களில் 2ம் வகுப்பு தூங்கும்…

Read More

மேம்பட்ட சிறுநீரக நோயில், உடல் திரவத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது, இது வீக்கத்திற்கு வழிவகுக்கிறது, அதே நேரத்தில் கழுத்து நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. இதயம் மற்றும் சிறுநீரக அமைப்புகள் சவால்களை எதிர்கொள்ளும்போது, கழுத்தில் உள்ள நரம்புகள் விரிவாக்கம் அல்லது வீக்கம் மூலம் கவனிக்கப்படுகின்றன. உடலில் அதிகப்படியான திரவம் இரத்த நாளத்தின் அழுத்த உயரத்தை உருவாக்குகிறது, இது ஜுகுலர் நரம்பு விலகல் எனப்படும் இந்த நிலைக்கு வழிவகுக்கிறது. கழுத்தின் பக்கத்தில் அமைந்துள்ள ஒரு வீங்கிய அல்லது நீடித்த நரம்பு, யாரோ ஒருவர் படுத்துக் கொள்ளும்போது அல்லது உடல் ரீதியான சிரமத்தை அனுபவிக்கும் போது தெரியும். எந்தவொரு அசாதாரண நரம்பு வீக்கம் அல்லது கழுத்தில் வீக்கம் ஏற்படுவதற்கு, உடனடி மருத்துவ மதிப்பீடு தேவைப்படுகிறது, ஏனெனில் இது கடுமையான திரவ ஏற்றத்தாழ்வுகள் மற்றும் உறுப்பு மன உளைச்சலைக் குறிக்கிறது.குறிப்பு இணைப்புகள்சிறுநீரக நோய்: இது உங்கள் சருமத்தை பாதிக்கக்கூடிய 11 வழிகள் – அமெரிக்கன் அகாடமி ஆஃப் டெர்மட்டாலஜிhttps://www.aad.org/public/diseases/az/kidney-disease-warning-signsசிறுநீரக…

Read More

மும்பை: எதிர்வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விளையாட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் நடந்து முடிந்த 5 போட்டிகள் கொண்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாடி இருந்தார். பணிச்சுமை காரணமாக அவருக்கு இரண்டு போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டது. காயம் சார்ந்த அச்சுறுத்தல் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் அவரை கவனத்துடன் விளையாட வைத்து வருகிறது. இந்த சூழலில் எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் பும்ரா விளையாட வாய்ப்பு உள்ளதாக தகவல். தேர்வுக்குழுவின் வசம் இதை பும்ரா தரப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடைசியாக கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பும்ரா விளையாடி இருந்தார். அதேபோல கடந்த 2023-ல் நடைபெற்ற ஒருநாள் உலகக்…

Read More

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபரும் பிரதமரும் மாற்றப்படப் போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என தெரிவித்துள்ள அந்நாட்டின் ராணுவத் தளபதி அசிம் முனிர், தான் பதவிகளை விரும்பவில்லை என கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு அந்நாட்டின் அரசியலில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு ராணுவத் தளபதி அசிம் முனிர் அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து சில வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாகவும் அவர் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டார். இது பாகிஸ்தானில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் ஆழமான விவாதத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே, பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கும் அசிம் முனிருக்கும் இடையே கருத்து மோதல்கள் நிலவி வருவதாக செய்திகள் வெளியாகின. தற்போது, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கும் அசிம் முனிருக்கும் இடையேயும் மோதல் போக்கு நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த பின்னணியில், பாகிஸ்தானில்…

Read More

தருமபுரி: ‘ஆளுநர் ஆர்.என்.ரவி உண்மைக்குப் புறம்பாக இல்லாதது பொல்லாததைச் சொல்லி, பீதியை கிளப்புவார். இதை மட்டும் தான் அவர் செய்கிறார்’ என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தருமபுரியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “வரலாற்றுப் பெருமையும், எழில்மிக்க ஒகேனக்கல்லும் இருக்கும் இந்த தருமபுரி மாவட்டத்தில், 362 கோடியே 77 இலட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 73 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 512 கோடியே 52 இலட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 44 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 70 ஆயிரத்து 427 பேருக்கு 830 கோடியே 6 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு, இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு…

Read More

சசாரம்: ‘தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து தேர்தல்களைத் “திருடுகிறது” என்பதை முழு நாடும் இப்போது அறிந்திருக்கிறது. வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்காளர்களை சேர்த்தல் மற்றும் நீக்குதல் மூலம் பிஹார் சட்டமன்றத் தேர்தல்களைத் திருட சதி நடக்கிறது’ என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று பிஹாரின் சசாரத்தில் இருந்து தனது 1,300 கி.மீ ‘வாக்காளர் அதிகார நடைபயணத்தை’ தொடங்கினார். இதன் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, “பிஹாரில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நடைபெறவுள்ள ‘வாக்காளர் அதிகார நடைபயணம்’ அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கான போராட்டம். பிஹாரில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் வாக்காளர்களை நீக்கி, சேர்த்து வாக்குகளை “திருட” ஒரு “புதிய சதி” நடக்கிறது. தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து நாடு முழுவதும் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களை திருடுகின்றன. மேலும், பிஹாரில் தேர்தலைத் திருட சிறப்பு தீவிர…

Read More

தருமபுரி: பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதி நேர ஆசிரியர்கள், தருமபுரி வந்த முதல்வரிடம் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். அரசு நலத்திட்ட உதவிகள் தொங்கி வைக்க முதல்வர் ஸ்டாலின் இன்று தருமபுரி வந்தார். இந்நிகழ்வில், வேளாண் பெருங்குடி மக்கள் இணையவழியில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விண்ணப்பித்து, ஒரே நாளில் கடன் பெறும் நடைமுறையை முதல்வர் தொடங்கிவைத்தார். தருமபுரி மாவட்டத்தில் 362 கோடியே 77 லட்சம் ரூபாய் செலவிலான 1,073 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்த முதல்வர், 512 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 1,044 புதிய திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் 70,427 பயனாளிகளுக்கு 830 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனிடையே, அதியமான் கோட்டையில் தொடங்கியிருக்கும் உழவர் நலன் காக்கும் இந்த முன்னோடித் திட்டம், விரைவில் தமிழ்நாடு…

Read More