மும்பை: எதிர்வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விளையாட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் நடந்து முடிந்த 5 போட்டிகள் கொண்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாடி இருந்தார். பணிச்சுமை காரணமாக அவருக்கு இரண்டு போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டது. காயம் சார்ந்த அச்சுறுத்தல் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் அவரை கவனத்துடன் விளையாட வைத்து வருகிறது. இந்த சூழலில் எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் பும்ரா விளையாட வாய்ப்பு உள்ளதாக தகவல். தேர்வுக்குழுவின் வசம் இதை பும்ரா தரப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடைசியாக கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பும்ரா விளையாடி இருந்தார். அதேபோல கடந்த 2023-ல் நடைபெற்ற ஒருநாள் உலகக்…
Author: admin
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபரும் பிரதமரும் மாற்றப்படப் போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என தெரிவித்துள்ள அந்நாட்டின் ராணுவத் தளபதி அசிம் முனிர், தான் பதவிகளை விரும்பவில்லை என கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு அந்நாட்டின் அரசியலில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு ராணுவத் தளபதி அசிம் முனிர் அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து சில வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாகவும் அவர் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டார். இது பாகிஸ்தானில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் ஆழமான விவாதத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே, பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கும் அசிம் முனிருக்கும் இடையே கருத்து மோதல்கள் நிலவி வருவதாக செய்திகள் வெளியாகின. தற்போது, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கும் அசிம் முனிருக்கும் இடையேயும் மோதல் போக்கு நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த பின்னணியில், பாகிஸ்தானில்…
தருமபுரி: ‘ஆளுநர் ஆர்.என்.ரவி உண்மைக்குப் புறம்பாக இல்லாதது பொல்லாததைச் சொல்லி, பீதியை கிளப்புவார். இதை மட்டும் தான் அவர் செய்கிறார்’ என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தருமபுரியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “வரலாற்றுப் பெருமையும், எழில்மிக்க ஒகேனக்கல்லும் இருக்கும் இந்த தருமபுரி மாவட்டத்தில், 362 கோடியே 77 இலட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 73 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 512 கோடியே 52 இலட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 44 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 70 ஆயிரத்து 427 பேருக்கு 830 கோடியே 6 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு, இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு…
சசாரம்: ‘தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து தேர்தல்களைத் “திருடுகிறது” என்பதை முழு நாடும் இப்போது அறிந்திருக்கிறது. வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்காளர்களை சேர்த்தல் மற்றும் நீக்குதல் மூலம் பிஹார் சட்டமன்றத் தேர்தல்களைத் திருட சதி நடக்கிறது’ என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று பிஹாரின் சசாரத்தில் இருந்து தனது 1,300 கி.மீ ‘வாக்காளர் அதிகார நடைபயணத்தை’ தொடங்கினார். இதன் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, “பிஹாரில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நடைபெறவுள்ள ‘வாக்காளர் அதிகார நடைபயணம்’ அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கான போராட்டம். பிஹாரில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் வாக்காளர்களை நீக்கி, சேர்த்து வாக்குகளை “திருட” ஒரு “புதிய சதி” நடக்கிறது. தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து நாடு முழுவதும் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களை திருடுகின்றன. மேலும், பிஹாரில் தேர்தலைத் திருட சிறப்பு தீவிர…
தருமபுரி: பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதி நேர ஆசிரியர்கள், தருமபுரி வந்த முதல்வரிடம் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். அரசு நலத்திட்ட உதவிகள் தொங்கி வைக்க முதல்வர் ஸ்டாலின் இன்று தருமபுரி வந்தார். இந்நிகழ்வில், வேளாண் பெருங்குடி மக்கள் இணையவழியில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விண்ணப்பித்து, ஒரே நாளில் கடன் பெறும் நடைமுறையை முதல்வர் தொடங்கிவைத்தார். தருமபுரி மாவட்டத்தில் 362 கோடியே 77 லட்சம் ரூபாய் செலவிலான 1,073 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்த முதல்வர், 512 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 1,044 புதிய திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் 70,427 பயனாளிகளுக்கு 830 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனிடையே, அதியமான் கோட்டையில் தொடங்கியிருக்கும் உழவர் நலன் காக்கும் இந்த முன்னோடித் திட்டம், விரைவில் தமிழ்நாடு…
கோவை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போளுவாம்பட்டி வனத்துறை அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இன்று (ஆகஸ்ட் 17) ஞாயிற்றுக்கிழமை கோவைக் குற்றாலம் சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடப்படுகிறது. என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணம் எப்போதுமே பெரும்பாலான மக்களுக்கு கவர்ந்திழுக்கும் மற்றும் சாகசமானது. நீங்கள் பயணம் செய்யும் போது, சோர்வடையவும், மன அழுத்தத்தை ஏற்படுத்தவும் சாத்தியமான வாய்ப்புகள் உள்ளன, மேலும் உங்கள் பிரகாசத்தை நீங்கள் அடிக்கடி இழக்கிறீர்கள். எனவே, இங்கே முக்கியமானது என்னவென்றால், உங்கள் பயண பயணம் நிறுத்தப்படும் போது, நாள் முடியும் வரை நீங்கள் பிரகாசிக்கிறீர்கள். பயணம் பெரும்பாலும் உங்கள் தோல் பராமரிப்பு வழக்கம் மற்றும் அழகு பளபளப்பை சவால் செய்கிறது. விமானங்கள், காலநிலை மாற்றங்கள் மற்றும் பிஸியான கால அட்டவணைகளுக்கு இடையில், உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் கதிரியக்கமாகவும் வைத்திருப்பது ஸ்மார்ட் திட்டமிடல் மற்றும் எளிய ஹேக்குகள் தேவைப்படுகிறது. உங்கள் பிரகாசத்தை பராமரிக்கவும், சருமத்தை வளர்க்கவும், நாள் முழுவதும் புதியதாக இருக்கவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட பத்து அத்தியாவசிய அழகு மற்றும் தோல் பராமரிப்பு உதவிக்குறிப்புகள் இங்கே.
லாகூர்: வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அந்த அணியின் அனுபவ வீரர்களான பாபர் அஸம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் இடம்பெறவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவு அந்த நாட்டு கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சி கொள்ள செய்துள்ளது. ஏனெனில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் பாபரும், ரிஸ்வானும் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் பாபர் 18, ரிஸ்வான் 20-வது இடத்திலும் உள்ளனர். பாகிஸ்தான் அணிக்காக கடந்த ஆண்டு இறுதியில் இருவரும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருந்தனர். அதன் பின்னர் இருவருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் டி20 அணியில் வாய்ப்பு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் டி20 கிரிக்கெட் பார்மெட்டில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் இருவருக்கும் அந்த அணி நிர்வாகம் வாய்ப்பு…
சென்னை: வளர்ச்சிக்குத் தேவையான மூலதனச் செலவுகளை செய்வதில் பின் தங்கியிருக்கும் திமுக அரசு வீண் செலவுகளை செய்வதில் மட்டும் தான் முதலிடத்தில் இருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழக அரசின் சார்பில் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மூலதனங்களை உருவாக்குவதற்காக ரூ.4,155.74 கோடி மட்டும் தான் செலவிடப்பட்டிருக்கிறது என்றும், இது முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில் செலவிடப்பட்ட ரூ.5,041.90 கோடியை விட ரூ.886.16 கோடி, அதாவது 17.57% குறைவு என்றும் இந்திய தலைமைக் கணக்காயர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் மூலதனச் செலவுகள் அதிகரித்திருக்கும் நிலையில் தமிழகத்தில் குறைந்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும். சாலைகள், பாலங்கள், பாசனக் கட்டமைப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட சொத்துகளை உருவாக்குவதற்காகவும், பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்வதற்காகவும் செய்யப் படும் செலவுகள் மூலதனச் செலவுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த செலவுகள் மூலம்…
ஆரோக்கியமான அனைத்தும் வெளியில் இருந்து வரவில்லை. மிகவும் சக்திவாய்ந்த, மிகவும் சக்திவாய்ந்த மற்றும் ஆரோக்கியமான பொருட்கள் சில எங்கள் சமையலறைகளில் உள்ளன. ஓக்ரா மற்றும் வெந்தயத்திலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு எளிய காலை பானம் ஒரு எடுத்துக்காட்டு. நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் தாவர இரசாயனங்கள் நிரம்பிய இந்த பண்டைய பானம் செரிமானம், இரத்த சர்க்கரை மற்றும் பலவற்றிற்கு மென்மையான மற்றும் சக்திவாய்ந்த ஊக்கத்தை அளிக்கும். இந்த நீரின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி மேலும் அறிய படிக்கவும்!இரத்த சர்க்கரை சமநிலையில் எய்ட்ஸ்இரத்த சர்க்கரையை நிர்வகிக்க ஓக்ரா மற்றும் வெந்தயம் விதைகள் பாரம்பரியமாக பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகின்றன (நம்பப்படுகின்றன). அவற்றை ஒரே இரவில் தண்ணீரில் ஊறவைப்பது அவற்றின் கூறுகளை திரவத்தில் கரைக்கிறது. வெற்று வயிற்றில் அதைக் குடிப்பது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவும், அத்துடன் எந்த நேரத்திலும் இரத்த சர்க்கரை கூர்முனைகளைத் தடுக்கவும், முன்கணிப்பு அல்லது இன்சுலின் எதிர்ப்பிற்கு எளிது.உட்கார்ந்திருக்கும்போது தொப்பை கொழுப்பை இழக்க சிறந்த வழிகள்என்ன…