வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வாஷிங்டனில் இன்று சந்தித்துப் பேசுகிறார். அமெரிக்க அதிபர் ட்ரம்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம், ஆங்கரேஜ் நகரில் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினர். அப்போது ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை நிறுத்துவது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அதிபர் டொனால்டு ட்ரம்பை வாஷிங்டனில் இன்று சந்தித்துப் பேசுகிறார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லியென், ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ், பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இத்தாலி பிரதமர் மெலோனி ஆகியோரும் ஜெலன்ஸ்கியோடு இணைந்து அதிபர் ட்ரம்பை சந்திப்பார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து உக்ரைன் வட்டாரங்கள் கூறியதாவது: உக்ரைனின் டோன்ஸ்க் பகுதியில் சுமார் 70 சதவீத நிலப்பரப்பை ரஷ்யா கைப்பற்றி உள்ளது. அந்த பிராந்தியம் முழுவதையும் ரஷ்யா சொந்தம் கொண்டாடுகிறது.…
Author: admin
திருச்சி: சாதிய படுகொலைகளை விசாரிக்க தனி விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். திருநெல்வேலியில் ஐ.டி. ஊழியர் கவின் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, புதிய தமிழகம் கட்சி சார்பில் திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். நிர்வாகி ஷியாம் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் கிருஷ்ணசாமி கூறியதாவது: ஐ.டி. ஊழியர் கவின் படுகொலை விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை மூலம் தீர்வு கிடைக்குமா என்று தெரியவில்லை. எனவே, அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். நான் எம்எல்ஏவாக இருந்த 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை நூற்றுக்கணக்கான சாதிய படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. அப்போது இருந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால், தற்போது வரை இது தொடர்கதையாகி வருகிறது. எனவே, தமிழகத்தில் சாதிய படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். அந்த…
புதுடெல்லி: வாக்கு திருட்டு குற்றச்சாட்டை நிராகரித்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மக்களை தவறாக வழிநடத்தும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அரசியல் சாசன சட்டத்தை அவமதிக்கிறார் என கூறியுள்ளார். பிஹாரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தேர்தல் ஆணையம், ஆளும் பாஜக.,வுடன் கூட்டு சேர்ந்து வாக்கு திருட்டு சதி செய்வதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் டெல்லியில் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் ஆணையத்துக்கு எதிரிகளும் இல்லை, ஆதரவாளர்களும் இல்லை. எங்களுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் சரி சமம்தான். வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து கட்சிகளும் கடந்த 20 ஆண்டுகளாக, கோரிக்கை விடுத்து வந்தன. அதனால் தேர்தல் ஆணையம் வாக்காளர்…
சென்னை: தேர்தல் ஆணைய முறைகேடு தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த 1 கோடி பேரிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தேசிய செயலாளர் சூரஜ் ஹெக்டே ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள், தேர்தலுக்கு தயாராவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது இக்கூட்டத்தில், தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகள் நடந்ததாக ராகுல்காந்தி வெளியிட்ட தரவுகள் குறித்து தேசிய செயலாளர் பிரவீன் சக்ரவர்த்தி காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தமிழில் விளக்கினார். தொடர்ந்து, எழுத்தாளர் வா.மு.சேதுராமன், பேராசிரியர் வசந்தி தேவி, காங்கிரஸ் நிர்வாகிகள் சுஜாதா, இரா.வாசன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேர்தல் ஆணையம் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி, அதற்கு கண்டனம் தெரிவித்தும், முறை கேடுகளை…
சென்னை: ஒடுக்கப்பட்டவர்களின் தலைநிமிர்வுக்காக தொடர்ந்து களத்தில் நிற்போம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். விசிக தலைவர் திருமாவளவனின் 63-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, சென்னை காமராஜர் அரங்கத்தில் ‘மதச்சார்பின்மை காப்போம்’ என்ற கருப்பொருளுடன் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தி பேசினர். இதில் ஏற்புரை நிகழ்த்தி திருமாவளவன் பேசியதாவது: விசிக என்பது தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தி, தமிழகத்தின் எதிர்காலம் என்பதை, இந்த விழாவில் பங்கேற்ற ஒவ்வொருவரும் ஆற்றிய உரை உறுதிப்படுத்தி உள்ளது. நாம் மேலும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்ற உணர்வை இது தருகிறது. ஒடுக்கப்பட்டவர்களின் தலை நிமிர்வுக்காக நாம் களத்தில் நிற்கிறோம், தொடர்ந்து நிற்போம். இந்த நிலையில், தூய்மைப் பணியாளர் பிரச்சினையில் திருமாவளவன் ஏன் அரசை எதிர்த்து போராடவில்லை என்று விமர்சிக்கின்றனர். குப்பை அள்ளுவோரை பணி நிரந்தரம் செய்து, நீங்கள் தொடர்ந்து அந்த தொழிலையே செய்து கொண்டிருங்கள் என்று…
ஆல்கஹால் குடிப்பது மற்றும்/அல்லது புகைபிடித்தல்கல்லீரல் செல்கள் மது அருந்துதல் மற்றும் புகைபிடிக்கும் பழக்கம் இரண்டிலிருந்தும் சேதத்தை அனுபவிக்கின்றன. கொழுப்பு கல்லீரல் நோயை சிரோசிஸ் மற்றும் புற்றுநோயாக முன்னேற்றுவது எந்த அளவு ஆல்கஹால் குடிப்பதன் மூலம் துரிதப்படுத்தப்படுகிறது. மறுபுறம், சிகரெட்டுகள் நச்சுப் பொருட்களை வெளியிடுகின்றன, அவை கல்லீரல் உயிரணு சேதம் மற்றும் உடலில் வீக்கம் ஆகிய இரண்டிற்கும் வழிவகுக்கும். ஆரோக்கியமான நடவடிக்கை புகைப்பழக்கத்திலிருந்து முழுமையான விலகலை உள்ளடக்கியது, அதே நேரத்தில் உங்கள் மது அருந்துவதை சாத்தியமான அளவுக்கு கட்டுப்படுத்துகிறது. உங்கள் கல்லீரல் ஆரோக்கியம் கருப்பு காபி மற்றும் மூலிகை தேநீர் போன்ற பாதுகாப்பான பானங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பயனடைகிறது. இந்த பழக்கங்களை நீக்குவது கல்லீரல் பாதுகாப்புக்கு வழிவகுக்கிறது, இது உங்கள் முழு உடலிலும் ஒட்டுமொத்த சுகாதார மேம்பாடுகளுக்கு நீண்டுள்ளது.குறிப்புகள்உங்கள் கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் ஐந்து பொதுவான பழக்கவழக்கங்கள்: https://theconversation.com/five-common-habits- that-might-be-harming-your-liver-256921கொழுப்பு கல்லீரல் நோயைத் தவிர்க்க வேண்டிய 10 விஷயங்கள்: https://chennailiverfoundation.org/liver/10-things-to-avide-fatty-liver-disease/கொழுப்பு கல்லீரல் நோயை…
இந்தியாவின் பண்டைய ஆயுர்வேத பாரம்பரியம் இயற்கையான குணப்படுத்துதலுக்காக சமையலறை பொருட்களைப் பயன்படுத்துகிறது. இருமல்களுக்கான தீர்வுகள் இஞ்சி, மிளகு மற்றும் தேன் ஆகியவற்றை இணைக்கின்றன, அதே நேரத்தில் அஜீரணம் கேரம் விதைகள் மற்றும் கருப்பு உப்புடன் உரையாற்றப்படுகிறது. அமிலத்தன்மை பெருஞ்சீரகம், பாறை சர்க்கரை மற்றும் பால் ஆகியவற்றில் நிவாரணம் காண்கிறது, மேலும் காய்ச்சல் துளசி, இஞ்சி மற்றும் மிளகு சேர்த்து போரிடுகிறது, இது வீட்டு வைத்தியங்களின் சக்தியைக் காட்டுகிறது. இயற்கையாகவே குணமடைய ஆயுர்வேதத்தைப் பயன்படுத்துவதற்கான பணக்கார மற்றும் நீண்ட பாரம்பரியம் இந்தியாவுக்கு உள்ளது. பல நூற்றாண்டுகளாக வயதான நோய்களை குணப்படுத்த எளிய சமையலறை பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை பாதுகாப்பானவை, பயனுள்ளவை, இன்று பெரும்பாலான மருந்துகள் வைத்திருக்கும் தீங்கு விளைவிக்கும் பக்க விளைவுகள் இல்லை. இப்போது, இருமல், அஜீரணம், அமிலத்தன்மை மற்றும் காய்ச்சல் போன்ற பொதுவான வியாதிகளுக்காக பலர் இந்த வீட்டு வைத்தியங்களுக்குத் திரும்புகிறார்கள்.இருமல் மற்றும் குளிர் வீட்டு தீர்வுஇருமல் மற்றும் குளிர் நிவாரணத்திற்கு,…
ஆவடி: சென்னை, அம்பத்தூர் பகுதியில் திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளத்தில் வாகனங்கள் விழுந்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, அம்பத்தூரில் இருந்து கொரட்டூருக்கு, வெங்கடாபுரம், மேனாம்பேடு, கருக்கு வழியாக செல்லும் சாலை, கருக்கு பிரதானச் சாலை. மாநகராட்சி சாலையான, இச்சாலையை அம்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர், வில்லிவாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு எளிதாக செல்ல பயன்படுத்தி வருகின்றனர். ஆகவே, காலை, மாலை வேளைகளில் பரபரப்பாக காணப்படும் இச்சாலையில், இன்று மதியம் கருக்கு, அம்மா உணவகம் அருகில் சாலையின் மையப்பகுதியில் திடீர் ராட்சத பள்ளம் ஏற்பட்டது. அப்பள்ளத்தில் அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனம் விழுந்தது; தொடர்ந்து பின்னால் வந்த லாரி ஒன்றின் முன்சக்கரமும் பள்ளத்தில் சிக்கியது. இதைப் பார்த்த பொதுமக்கள், இரு சக்கர வாகனத்துடன் பள்ளத்தில் விழுந்த இளைஞரை மீட்டனர். அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ…
மனதை வளைக்கும் ஆப்டிகல் மாயை பார்வையாளர்களை எட்டு வினாடிகளுக்குள் 23 களின் கட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு தனி ’22’ கண்டுபிடிக்க சவால் விடுகிறது. வடிவங்களை அங்கீகரிக்கும் மூளையின் போக்கு வஞ்சகத்தைக் கண்டறிவது கடினம். வெற்றிக்கு கவனம் செலுத்தும் ஸ்கேனிங் தேவைப்படுகிறது, ஒவ்வொரு எண்ணும் ’23’ என்ற மூளையின் அனுமானத்தை முறியடிக்கிறது. ஆப்டிகல் மாயைகள் மிகவும் சுவாரஸ்யமானவை, ஏனென்றால் அவை மூளையை எவ்வளவு எளிதில் வடிவங்கள் மற்றும் மறுபடியும் மறுபடியும் ஏமாற்ற முடியும் என்பதை நிரூபிக்கின்றன. இந்த படம் எளிமையாகத் தோன்றுகிறது, ஒரு கட்டம் 23 எண்ணுடன் அழகாக நிரப்பப்பட்டுள்ளது. உங்கள் மூளை உடனடியாக வடிவத்தை ஏற்றுக்கொள்கிறது, மேலும் ஒவ்வொரு எண்ணும் ஒரே மாதிரியானது என்று நம்புகிறார். ஆனால் இங்கே சோதனை, அந்த 23 களுக்கு இடையில், ஒரு தனி “22.”படம்: ஜாக்ரான் ஜோஷ்ஒற்றைப்படை எண் 22 ஐக் கண்டுபிடிப்பதே உங்கள் சவால், இங்கே கேட்ச், நீங்கள் அதை 8 வினாடிகளில்…
திருப்பூரை சேர்ந்த மகாராஷ்டிர மாநில ஆளுநரான 68 வயதான சி.பி.ராதாகிருஷ்ணன், துணை குடியரசுத்தலைவர் பதவிக்கு பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டிருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். திருப்பூரை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் 1957-ம் ஆண்டு அக். 20-ம் தேதி திருப்பூரில் பிறந்தவர். தந்தை பொன்னுச்சாமி. தாய் ஜானகி அம்மாள். மனைவி சுமதி. மகன் ஹரி சஷ்டிவேல். மகள் அபிராமி. இருவருக்கும் திருமணமாகிவிட்டது. சி.பி.ராதாகிருஷ்ணன் குடும்பம் திருப்பூர் ஷெரீப் காலனியில் வசித்து வருகிறது. வணிக நிர்வாகத்தில் பட்டப்படிப்பை முடித்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன். 1974-ம் ஆண்டு பாரதிய ஜனசங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்தார். 1996-ம் ஆண்டு தமிழ்நாடு பாஜக செயலாளராக இருந்தார். பாஜகவில் 1998, 1999 ஆகிய மக்களவைத் தேர்தல்களில் கோவை தொகுதியில் போட்டியிட்டு எம்.பி., ஆனார். கடந்த 40-க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக பாஜகவில் உள்ளார். 2004-2007-ம் ஆண்டு வரை தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக பதவி வகித்தார். அப்போது கன்னியாகுமரி முதல் சென்னை வரை யாத்திரை…