புர்த்வான்: பிஹார் மாநிலத்தை சேர்ந்த சிலர், மேற்கு வங்க மாநிலத்துக்கு புனிதப் பயணம் மேற்கொண்டனர். அங்கிருந்து நேற்று காலை சொந்த ஊர் திரும்பும்போது அவர்கள் வந்த பேருந்து, சாலையோரம் நின்ற லாரி மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த உள்ளூர் மக்கள் காவலர்களுடன் இணைந்து பேருந்துக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 6 குழந்தைகள் உட்பட 36 பயணிகள் புர்த்வான் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. நெடுஞ்சாலையில் சரக்கு லாரியை சட்டவிரோதமாக நிறுத்தியற்காக பஸ் ஓட்டுநர் மீது போலீஸார் வழக்கு் பதிவு செய்தனர்.
Author: admin
சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தை டி.ஆர்.சுந்தரம் 1937-ல் ஆரம்பித்தபோது, அதில் வேலைக்குச் சேர்ந்தார், நடிகையும் பாடகியுமான யு.ஆர்.ஜீவரத்தினம். அவருடைய திறமையைக் கண்ட டி.ஆர்.சுந்தரம், தனது முதல் படமான ‘சதி அகல்யா’வில் (1937) அவரை அறிமுகப்படுத்தினார். பிறகு, ‘சந்தான தேவன்’ (1937), ‘பக்த கவுரி’ (1941) ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடிக்க வைத்தார். அவர் பாடிய பாடல்கள் அப்போது மிகவும் பிரபலமானதை அடுத்து புகழ் பரவியது. அவர் அடுத்து முதன்மை வேடத்தில் நடித்த படம், ‘பூம்பாவை’. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரை, பூம்பாவை என்ற இளம்பெண் காதலித்ததாக நாட்டுப்புறக் கதை ஒன்று இருக்கிறது. அந்தக் கதையின் பின்னணியில் உருவான திரைப்படம் இது. மயிலாப்பூரில் சிவநேசன் என்ற சிவபக்தருக்குத் தெய்வீகக் குழந்தை ஒன்று பிறக்கிறது. பூம்பாவை என்ற பெயர் சூட்டப்பட்ட அவர், சிவனடியார்களிடம் அன்புகொண்டு இருக்கிறார். தனது தம்பி ஏலேலசிங்கனுக்கு திருமணம் செய்துவைத்தால் சிவநேசனின் செல்வம் அனைத்தையும் அனுபவிக்கலாம் என நினைக்கிறார், பூம்பாவையின்…
சேலம்: திமுக கூட்டணிக் கட்சிகள் யாரும் கூட்டணி ஆட்சி, ஆட்சியில் பங்கு குறித்து பேசவில்லை என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறினார். சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: சேலத்தில் தனியார் மின்னணு ஆலை தொடர்ந்து இயங்க வேண்டி முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளோம். பாமகவில் தந்தை, மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினையை, அவர்கள் பேசி தீர்த்துக் கொள்வார்கள். பாமக எனது பழைய வீடு, அவ்வீட்டை பற்றிக் குறை கூற மாட்டேன். திமுக கூட்டணிக் கட்சிகள் யாரும் கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கையை முன்வைக்கவில்லை. அதேபோல, ஆட்சியில் பங்கு குறித்தும் யாரும் பேசவில்லை. இது சம்பந்தமாக இரண்டாம் கட்ட தலைவர்கள், அவரவர் ஆசையை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் யாரும் அதைப்பற்றி பேசவில்லை. அந்த எண்ணமும் இல்லை. திமுக கூட்டணியை உடைப்பதற்காக எதிர்கட்சிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் ஒருபோதும் பலிக்காது. நான் சட்டப்பேரவையில் கோபமாக பேசினாலும்,…
பெங்களூரு: பெங்களூருவை சேர்ந்த இளம் பொறியாளர் ஒருவர் தனது ரெடிட் சமூக வலைதள பக்கத்தில், ‘‘நான் கடந்த சில மாதங்களாக தோசை சுடும் ரோபோவை வடிவமைத்திருக்கிறேன். காஸ் அடுப்பில் தோசை கல்லை வைத்துவிட்டால், இந்த ரோபோ தானாகவே தோசை சுட்டு தரும். இந்த ரோபோவுக்கு திண்டி (சிற்றுண்டி) என பெயர் வைத்துள்ளேன். என் வீட்டில் பெண்கள் தோசை சுட கஷ்டப்பட்டதால், இந்த ரோபோவை உருவாக்கியுள்ளேன்” என குறிப்பிட்டு, ரோபோ தோசை சுடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏராளமான பெண்களும் குறிப்பாக திருமணம் ஆகாத ஆண்களும் ‘‘இந்த ரோபோ எப்போது சந்தைக்கு வரும்” என ஆர்வமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
நவீன விஞ்ஞானம் ஒரு காலத்தில் குணமடையாத நோய்களைக் குணப்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிந்து, ஆயுர்வேதம் கணக்கிட முடியாத ஆதாரம், மருந்துகள் மற்றும் நுட்பங்களுடன் நாம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இது எங்கள் கால்கள், அவை “இரண்டாவது இதயம்” என்று அழைக்கப்படுகின்றன, விஞ்ஞானம் அதை “சோலியஸ் தசை” என்று மிகவும் பெருமையுடன் அழைக்கிறது, ஆனால் ஆயுர்வேதம் ஏற்கனவே அதை நம் உடலின் இயற்கையான போதைப்பொருள் அமைப்பு என்று வகைப்படுத்துகிறது. ஆச்சரியப்படும் விதமாக, எங்கள் கால்கள் நடைபயிற்சி மட்டுமல்ல; இது நம் உடல்களையும் நச்சுத்தன்மையாக்குகிறது. உடலின் உண்மையான போதைப்பொருள் பாதைகள் தரையில் இருந்து தொடங்குகின்றன, ஆனால் குடல் அல்ல. மேலும் அறிய படிக்கவும்!இந்த “இரண்டாவது இதயம்” என்ன, எங்கே?கன்று தசைகள் சில நேரங்களில் “எங்கள் இரண்டாவது இதயம்” என்று அழைக்கப்படுகின்றன, குறிப்பாக சோலஸ் தசை. சிரை இரத்தத்தை இதயத்தை நோக்கி பம்ப் செய்ய கன்று தசையை விளக்குவதால், இரண்டாவது இதயம் என்ற சொல் இந்த வார்த்தையின் மிகவும்…
விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா, விண்வெளி வீரர் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயருடன் சேர்ந்து, மத்திய விண்வெளி அமைச்சர் ஜிதேந்திர சிங், டெல்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் டெல்லி விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் வி நாராயணன் ஆகியோரிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெறுகிறார் புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐ.எஸ்.எஸ்) தனது வரலாற்று பணியைத் தொடர்ந்து, இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா டெல்லியின் ஐ.ஜி.ஐ விமான நிலையத்தில் ஒரு சிவப்பு கம்பள வரவேற்பைப் பெற்றார், அவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அமெரிக்காவிலிருந்து நாட்டிற்கு திரும்பினார். ஆக்சியம் -4 பணியின் ஒரு பகுதியாக விண்வெளி சேவையை விண்வெளி நிலையத்திற்கு கொண்டு சென்ற சுக்லா, மத்திய விண்வெளி அமைச்சர் ஜிதேந்திர சிங், டெல்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் இஸ்ரோ தலைவர் வி நாராயணன் ஆகியோரும், விமான நிலையத்தில் ஒரு பெரிய விண்வெளி ஆர்வலர்களும் வரவேற்றனர்.Posting on X later, minister Jitendra Singh…
புதுடெல்லி: டெல்லி அருகேயுள்ள குருகிராமில் பாடகர் எல்விஷ் யாதவ் வீட்டின் மீது மர்ம நபர்கள் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தினர். டெல்லி அருகே உள்ள குருகிராமை சேர்ந்தவர் எல்விஷ் யாதவ் (27). பாடகர், யூ டியூபர், தொழிலதிபர் என பன்முகத்தன்மை கொண்ட அவர் கடந்த 2023-ம் ஆண்டு இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் பரிசை வென்றார். அவரது யூ டியூப் சேனலில் 1.5 கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் உள்ளனர். இதுவரை 13 இசை ஆல்பங்களை அவர் வெளியிட்டு உள்ளார். பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளார். யூ டியூப், இசை ஆல்பங்கள் மூலம் மிக குறுகிய காலத்தில் அவர் ரூ.50 கோடி வருவாய் ஈட்டி உள்ளார். சிஸ்டம் என்ற பெயரில் ஆடைகள் விற்பனை நிறுவனத்தையும், ஆன்லைன் விளையாட்டு தொடர்பான யூ டியூப் சேனலையும் அவர் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். டெல்லி குருகிராமின் ரயில் விகார் பகுதியில் எல்விஷ் யாதவின் வீடு…
தருமபுரி: தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி தமிழகத்தின் மொழி, இன உணர்வுகளை அணையாமல் பார்த்துக் கொள்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தருமபுரி அடுத்த தடங்கம் ஊராட்சியில் நேற்று நடைபெற்ற விழாவில், ரூ.363 கோடியில் முடிவுற்ற 1,073 திட்டங்களை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின், ரூ.513 கோடியில் 1,044 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். மேலும், 70,427 பயனாளிகளுக்கு ரூ.830 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை தருமபுரிக்கு தந்தது திமுக அரசு தான். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.447 கோடியில் 43.86 லட்சம் பயனாளிகளுக்கு நலத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் திமுக அரசு குறித்து சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர். திமுக தேர்தல் வாக்குறுதிபடி ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே விடியல் பயணம் திட்டத்துக்கு…
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் புளிப்பு இலைகளின் திறனை சமீபத்திய ஆய்வு ஆராய்கிறது, இது பெண்களில் நான்காவது மிகவும் பொதுவான புற்றுநோயாகும். புளிப்பு இலைகளுக்குள், குறிப்பாக எஸ்.ஐ.ஆர்-எஸ்.எம் 2, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உயிரணுக்களுக்கு எதிராக வலுவான ஆன்டிகான்சர் விளைவுகளை வெளிப்படுத்தும் போது, சாதாரண உயிரணுக்களுக்கு குறைவான தீங்கு விளைவிக்கும் போது ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டனர். உலகளவில் மரணத்திற்கு புற்றுநோய் இரண்டாவது முக்கிய காரணம். 2018 ஆம் ஆண்டில், புற்றுநோய் 9.6 மில்லியன் உயிர்களைக் கொன்றது, இது 6 இறப்புகளில் 1 ஆகும் என்று WHO தெரிவித்துள்ளது. பெண்களில், மார்பகம், பெருங்குடல், நுரையீரல், கர்ப்பப்பை வாய் மற்றும் தைராய்டு புற்றுநோய் ஆகியவை மிகவும் பொதுவானவை. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், நான்காவது பொதுவான புற்றுநோயான, 2022 ஆம் ஆண்டில் 660,000 பெண்களில் கண்டறியப்பட்டது, மேலும் சுமார் 350,000 பெண்கள் உலகளவில் இந்த நோயால் இறந்தனர். அறுவை சிகிச்சை, கீமோதெரபி, ஹார்மோன் சிகிச்சை,…
திருவண்ணாமலை: திட்டங்களுக்கு பெயர் வைத்துக்கொள்வதில் முதல்வர் ஸ்டாலினுக்கு இணையில்லை. 4 ஆண்டுகளாக நிறைவேற்றாத திட்டங்களை, 7 மாதங்களில் நிறைவேற்றப் போகிறார்களா என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டுள்ள பழனிசாமி, திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே நேற்று முன்தினம் இரவு பொதுமக்களிடையே பழனிசாமி பேசியதாவது: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலை தொல்லியல் துறை கைப்பற்ற முயன்றபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா உச்ச நீதிமன்றம் வரை சென்று, கோயிலை மீட்டெடுத்தார். இந்தியாவிலேயே கடன் வாங்குவதில்தான் சூப்பர் முதல்வராக இருக்கிறார் மு.க.ஸ்டாலின். ஏறத்தாழ ரூ.5.38 லட்சம் கோடி கடன் வைத்துள்ளனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. தற்போது ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்று ஒரு திட்டம்…