புதுடெல்லி: டிஜிபி அனுராக் குப்தாவுக்குப் பணி நீட்டிப்பு கோரிய ஜார்க்கண்ட் அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. இதனிடையே, அனுராக் குப்தாவை தற்காலிக டிஜிபியாக ஜார்க்கண்ட் அரசு நியமித்ததற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. மாநிலத்தின் 3 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளில் ஒருவராக இருக்க வேண்டும். அவரது பதவிக்காலம் 6 மாதம் நிலுவையில் இருக்க வேண்டும். டிஜிபியாக நியமிக்கப்படுபவர் 2 ஆண்டுகள் பதவியில் இருக்க வேண்டும் போன்ற விதிமுறைகளை பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் வகுத்தது. இது மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வு இன்று விசாரிக்கிறது.
Author: admin
இஸ்லாமாபாத்: வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடருக்கான பாகிஸ்தான் அணி தேர்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் அனுபவம் மிகுந்த வீரர்களான பாபர் அசம், முகமது ரிஸ்வான் ஆகியோர் இடம்பெறவில்லை. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. டி20 வடிவில் நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. தலா 4 அணிகள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்று போட்டிகள் நடைபெறும். இதில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். இந்தச் சுற்றில் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் செப். 28-ம் தேதி நடைபெறவுள்ள இறுதிச் சுற்றில் கோப்பையை வெல்ல பலப்பரீட்சை…
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத்தை இயக்கி இருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதையடுத்து, அஜித் நடிக்கும் 64-வது படத்தையும் ஆதிக் இயக்க இருக்கிறார். இந்த தகவலை அவர் சமீபத்தில் உறுதிப்படுத்தி இருந்தார். இதில் மிஷ்கின் வில்லனாகவும் ஸ்ரீலீலா நாயகியாகவும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆதிக், அஜித்தின் 64வது படம் குறித்து தெரிவித்துள்ளார். “குட் பேட் அக்லி அஜித் ரசிகர்களைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது. அஜித்தின் 64-வது படம் அனைவருக்குமான படமாகவும் வித்தியாசமானதாகவும் இருக்கும். அஜித்தை புதிய கோணத்தில் காண்பிக்கத் திட்டமிட்டிருக்கிறேன். அது அவர் ரசிகர்களுக்குப் பிடிக்கும் விதமாக இருக்கும்” என்றார். படத்தை 2026-ம் ஆண்டு கோடையில் வெளியிட இருப்பதாகக் கூறப்படுகிறது.
சென்னை: தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து சென்னையில் நேற்று விலங்குகள் நல ஆர்வலர்கள் பேரணியாகச் சென்றனர். தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் டெல்லியில் உள்ள தெருநாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகத்தில் அடைக்குமாறு உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் பேரணியும் நடைபெற்றது. இந்நிலையில், தெரு நாய்களை காப்பகத்தில் அடைக்கும் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விலங்குகள் நல அமைப்புகளைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் 500-க்கும் மேற்பட்டோர் சென்னை, புதுப்பேட்டை லாங்ஸ் கார்டன் சாலையில் இருந்து பேரணியாகப் புறப்பட்டு, எழும்பூர் வழியாக ராஜரத்தினம் விளையாட்டரங்கம் வரை சென்றனர். பின்னர் பேரணியில் பங்கேற்ற விலங்குகள் நல ஆர்வலர்கள் கூறியதாவது: தெரு நாய்களை காப்பகங்களில் அடைப்பது தீர்வாகாது. அவற்றுக்கு கருத்தடை செய்வது மட்டுமே தீர்வாகும். நகர்ப்புறங்களில் திருட்டைத் தடுப்பதில் தெரு நாய்கள்…
புதுடெல்லி: டெல்லியில் ரூ.11,000 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், உள்நாட்டு பொருட்களை மட்டுமே வியாபாரிகள் விற்பனை செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். தலைநகர் டெல்லியின் சிவமூர்த்தி பகுதியில் இருந்து ஹரியானாவின் குருகிராம் வரை 29 கி.மீ. தொலைவுக்கு புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. இதில் ஹரியானாவுக்கு உட்பட்ட 19 கி.மீ. தொலைவு சாலை கடந்த ஆண்டு மார்ச் மாதம் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டெல்லி எல்லைக்கு உட்பட்ட 10 கி.மீ. தொலைவு சாலை பணி ரூ.5,360 கோடியில் மேற்கொள்ளப்பட்டது. துவாரகா நெடுஞ்சாலை என்றழைக்கப்படும் இந்த சாலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். இதேபோல டெல்லியின் அலிப்பூர் முதல் டிச்சான் கலான் பகுதி வரை ரூ.5,580 கோடியில் நகர்ப்புற விரிவாக்க சாலை அமைக்கப்பட்டு உள்ளது. டெல்லியின் 3-வது ரிங் சாலை என்றழைக்கப்படும் இந்த சாலையை பிரதமர் நரேந்திர மோடி…
முடி மெலிந்து ஒரு எளிய சமையலறை தீர்வைக் கொண்டு உரையாற்றலாம்: முட்டை. புரதம், வைட்டமின்கள் மற்றும் நல்ல கொழுப்புகளால் நிரம்பிய, முட்டைகள் வேர்களை வலுப்படுத்துகின்றன, முடி வீழ்ச்சியைக் குறைக்கின்றன, மேலும் அளவைச் சேர்க்கின்றன. ஆலிவ் எண்ணெய், தயிர், தேன் அல்லது தேங்காய் எண்ணெய் போன்ற பொருட்களுடன் முட்டைகளைப் பயன்படுத்தி எளிதான DIY முகமூடிகள் வழக்கமான பயன்பாட்டுடன் முடியை புத்துயிர் பெறலாம், இது உள் ஊட்டச்சத்துக்காக முட்டை நிறைந்த உணவால் பூர்த்தி செய்யப்படுகிறது. உங்கள் தலைமுடியின் பல இழைகளை குளியலறை தரையில் படுத்துக் கொண்டிருப்பதைப் பார்ப்பதை விட பயங்கரமான எதுவும் இல்லை அல்லது உங்கள் தூரிகையில் சிக்கிக்கொண்டது. முடி மெலிந்து போவது என்பது நம்மில் பெரும்பாலோர் ஒரு கட்டத்தில் கையாள்வது, அது உங்கள் நம்பிக்கையுடன் உண்மையில் குழப்பமடையக்கூடும். மன அழுத்தம், மோசமான தூக்கம், வெப்ப ஸ்டைலிங், மாசுபாடு, வெறும் மரபியல் கூட, முடி செயல்படத் தொடங்குவதற்கு பல காரணங்கள் உள்ளன.ஆனால் வேலை செய்யக்கூடிய…
புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு அகாடெமி, இந்திய ராணுவ அகாடெமி உள்ளிட்ட ராணுவப் பயிற்சி பள்ளியில் பயில்பவர்கள் சில நேரங்களில் பயிற்சியின்போது படுகாயமடைந்து மாற்றுத்திறனாளியாகி விடுவது உண்டு. இதுபோன்ற சூழ்நிலையில், அவர்களை பணியில் சேர்க்காமல் வீட்டுக்கு அனுப்பி விடுகின்றனர். இவர்களுக்கு முன்னாள் ராணுவ வீரர் என்ற அந்தஸ்தும் வழங்கப்படுவதில்லை. இதனால், முன்னாள் ராணுவ வீரர்கள் பங்களிப்பு சுகாதார திட்டத்தின் கீழ் ராணுவ மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்படுகிறது. பணியில் சேர்ந்த பிறகு காயம் ஏற்பட்டால் மட்டுமே மேற்கண்ட சலுகைகளை பெற முடியும் என ராணுவம் தெரிவிக்கிறது. ராணுவ பயிற்சியின்போது காயமடைந்து மாற்றுத்திறனாளி யாகிவிட்டதால் வேறு வேலைக் கும் செல்ல முடியாமல் சிரமப் படுகின்றனர். இதுபோன்ற சூழலில் மருத்துவ செலவுகள் ஒரு பக்கம் நெருக்கடி தருகிறது. இது தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியானது. இதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் கடந்த 12-ம் தேதி தாமாக முன்வந்து வழக்கு பதிவு…
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’, ஆக.14-ம் தேதி வெளியானது. இதில் நாகார்ஜுனா, சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் இதில், சைமன் என்ற எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நாகார்ஜுனா, ரஜினியுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “நானும் ரஜினியும் திரையில் சந்திக்கும்போது, ஒரு காந்த சக்தி இருப்பதை ரசிகர்கள் உணர்கிறார்கள். சிறப்பான படத்தின் ஒரு பகுதியாக இருப்பதை நாங்கள் அறிந்திருந்தோம். படத்தைச் சுற்றியிருந்த ‘எனர்ஜி’, அதை எங்களுக்கு உணர்த்தியது. எனது கதாபாத்திரத்துக்குக் கிடைத்த வரவேற்பு மிகவும் சிறப்பானது. சிறந்த திரைப்படம் என்பது, அனைவரின் ஒத்துழைப்பு, நடிகர்களின் கெமிஸ்ட்ரி, படம் முடிந்த பின்னும் பார்வையாளர்களுக்கு எப்போதும் மறக்கமுடியாத அனுபவத்தைத் தரும் உற்சாகம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்படுவது என்பதை, இந்தப் படம் நினைவூட்டுகிறது. திரையரங்குகளில் கொண்டாட்டத்தைக்…
குன்னூர்: நீலகிரி வனக்கோட்டம் குந்தா வனச் சரகத்துக்கு உட்பட்ட கிளிஞ்சாடா கிராமத்தில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் பெண் சிறுத்தை இறந்து கிடப்பதாக நேற்று வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற வனத் துறையினர், சிறுத்தையின் உடலைக் கைப்பற்றினர். தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய வழிகாட்டுதல்படி, நீலகிரி வனக்கோட்ட உதவி வனப் பாதுகாவலர் தலைமையில், முதுமலை புலிகள் காப்பக உதவி வனக் கால்நடை மருத்துவர் மற்றும் அதிகரட்டி உதவி கால்நடை மருத்துவர் ஆகியோர் கொண்ட குழுவினரின் மேற்பார்வையில், சிறுத்தையின் சடலம் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. வேறு வன விலங்குகளுடன் ஏற்பட்ட மோதலால், சிறுத்தை இறந்திருக்கலாம் என்று வனத் துறையினர் தெரிவித்தனர்.
புர்த்வான்: பிஹார் மாநிலத்தை சேர்ந்த சிலர், மேற்கு வங்க மாநிலத்துக்கு புனிதப் பயணம் மேற்கொண்டனர். அங்கிருந்து நேற்று காலை சொந்த ஊர் திரும்பும்போது அவர்கள் வந்த பேருந்து, சாலையோரம் நின்ற லாரி மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த உள்ளூர் மக்கள் காவலர்களுடன் இணைந்து பேருந்துக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 6 குழந்தைகள் உட்பட 36 பயணிகள் புர்த்வான் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. நெடுஞ்சாலையில் சரக்கு லாரியை சட்டவிரோதமாக நிறுத்தியற்காக பஸ் ஓட்டுநர் மீது போலீஸார் வழக்கு் பதிவு செய்தனர்.