Author: admin

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் தொடர்பான விவாதங்களில் ஈடுபடாமல் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபடுமானால், மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றப்படும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த ஜூலை 21-ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 21-ம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு மாத காலத்தில் 21 அமர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டது. எனினும், முதல் நாள் முதல் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. ஆபரேஷன் சிந்தூர், பிஹார் எஸ்ஐஆர் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்த எதிர்க்கட்சிகள், அவையின் பிற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு அவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தின. எதிர்க்கட்சிகளின் தொடர் வலியுறுத்தலை அடுத்து, ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விவாதம் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில், மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கவுரவ் கோகாய், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர்…

Read More

லோகேஷ் கனகராஜ் உடன் மீண்டும் மீண்டும் பணிபுரிய விரும்புகிறேன் என்று நடிகர் நாகார்ஜுனா தெரிவித்துள்ளார். ‘கூலி’ படத்தை தெலுங்கில் விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் லோகேஷ் கனகராஜ், நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வுக்காக பிரத்யேக வீடியோ பதிவு ஒன்றைக் கொடுத்திருந்தார் ரஜினி. இந்த நிகழ்வில் நாகார்ஜுனா பேசும்போது, “லோகேஷ் கனகராஜ் இயக்கியதில் ‘கைதி’ மற்றும் ‘விக்ரம்’ ஆகிய படங்கள் ரொம்பவே பிடிக்கும். ‘கூலி’ கதையைக் கேட்டதும் மிகவும் சுவாரசியமாக இருந்தது. அக்கதையை கேட்டு முடித்தவுடன் எனக்கு எழுந்த கேள்வி, ரஜினி இந்தக் கதையில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாரா என்பதுதான். ஏனென்றால் எனது கதாபாத்திரம் ரஜினிக்கு சமமானதாகவும், வலிமையானதாகவும் இருந்தது. அந்தக் கதையில் கிட்டதட்ட நாயகன் மாதிரி எனது கதாபாத்திரம் இருந்தது. ஏனென்றால் லோகேஷ் கனகாராஜ் வில்லனை நாயகனுக்கு சமமாக காட்டியிருக்கிறார். ‘கைதி’ படம் பார்த்ததில் இருந்து லோகேஷ் கனகராஜ் உடன் பணியாற்ற விரும்பினேன். இப்போது…

Read More

சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டங்களை தற்போதைய பெயரிலேயே தொடர்ந்து செயல்படுத்த அனுமதிக்கக் கோரி, தமிழக அரசின் மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம், ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் முதல்வரின் பெயரை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசுத் திட்டங்களின் பெயர்களில் வாழும் ஆளுமைகளின் பெயர்கள் பயன்படுத்த அனுமதிக்க முடியாது எனவும், திட்டம் தொடர்பான விளம்பரங்களில் முன்னாள் முதல்வர், கட்சியின் கொள்கைத் தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெறக் கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மாற்றியமைக்கக் கோரி, தமிழக பொதுத்துறை செயலாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், மாநில முதல்வர், அரசியல் சாசன அதிகாரி என்பதால், அரசியல் ஆளுமை எனக் கருத முடியாது. முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்களை…

Read More

நாமக்கல்: அமெரிக்காவில் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டதன் எதிரொலியாக நாமக்கல்லில் இருந்து அந்நாட்டிற்கு முட்டை ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. இது நாமக்கல் முட்டை ஏற்றுமதியாளர்களை கவலையடைச் செய்துள்ளது. நாமக்கல்லில் இருந்து நாள்தோறும் வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆப்ரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு மாதம் ஒன்றுக்கு 15 கோடி முட்டைகள் வீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த வர்த்தகத்தின் புதிய தொடக்கமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க அரசு இந்திய முட்டை இறக்குமதிக்கு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் தூத்துக்குடி துறைமுகத்தில் அமெரிக்காவுக்கு நாமக்கல் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. குளிர்சாதன வசதி கொண்ட 21 கண்டெய்னர்களில் தலா 4.75 லட்சம் முட்டைகள் வீதம் 1 கோடி முட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கண்டெய்னர் 30 நாட்களில் அமெரிக்கா சென்றடைந்தது. தொடர்ந்து அமெரிக்காவிற்கு முட்டை ஏற்றுமதி அதிகரிக்கும் என நாமக்கல் கோழிப் பண்ணையாளர்கள் மற்றும்…

Read More

உலகின் மிகவும் விலையுயர்ந்த மசாலாவான குங்குமப்பூ அதன் வேலைநிறுத்தம் செய்யும் சிவப்பு நூல்கள், பணக்கார நறுமணம் மற்றும் சக்திவாய்ந்த மருத்துவ மற்றும் சமையல் பண்புகளுக்கு மதிப்பிடப்படுகிறது. இது பொதுவாக குறிப்பிட்ட காலநிலையில் பயிரிடப்பட்டிருந்தாலும், வீட்டில் வளரும் குங்குமப்பூ வியக்கத்தக்க வகையில் அடையக்கூடியது -பால்கனிகள் அல்லது ஜன்னல் போன்ற சிறிய இடங்களில் கூட. ஒரு சில பானைகள், சரியான நடவு நுட்பங்கள் மற்றும் சில பொறுமை ஆகியவற்றைக் கொண்டு, உங்கள் சொந்த உயர்தர குங்குமப்பூவை அறுவடை செய்யலாம். இந்த வழிகாட்டி முழு செயல்முறையிலும், சிறந்த கோர்ம்களைத் தேர்ந்தெடுப்பது முதல் மென்மையான நூல்களை அறுவடை செய்வது வரை உங்களை அழைத்துச் செல்கிறது, எனவே உள்நாட்டு குங்குமப்பூவின் ஆடம்பரத்தையும் திருப்தியையும் நீங்கள் அனுபவிக்க முடியும்.குங்குமப்பூ ஏன் வீட்டில் வளர வேண்டியது அவசியம்குங்குமப்பூ க்ரோக்கஸ் சாடிவஸ் பூவின் உலர்ந்த களங்கத்திலிருந்து வருகிறது, இது இலையுதிர்காலத்தில் சுருக்கமாக பூக்கும். ஒவ்வொரு மலரும் குங்குமப்பூவின் மூன்று நூல்களை மட்டுமே உற்பத்தி…

Read More

புதுடெல்லி: ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் ரொமுவால்டெஸ் மார்கோஸ் ஜூனியர், பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்திக்க உள்ளார். மனைவி லூயிஸ் அரனெட்டா மார்கோஸ், அமைச்சர்கள் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினருடன் புதுடெல்லி வந்தடைந்த பிலிப்பைன்ஸ் அதிபரை, வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா விமான நிலையத்திற்குச் சென்று வரவேற்றார். விமான நிலையத்தில் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையும் அவருக்கு வழங்கப்பட்டது. நாளை ராஜ்கோட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் பிலிப்பைன்ஸ் அதிபர், அதன் பின்னர் ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க உள்ளார். அப்போது, இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை நடத்த இருக்கிறார்கள். மேலும், இரு நாடுகளின் குழுக்களுக்கு இடையேயான ஆலோசனையும் நடைபெற உள்ளது. இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் உடனான சந்திப்பை…

Read More

லண்டன்: இங்கிலாந்து அணி உடனான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்களில் த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார் இந்தியாவின் சிராஜ். கடைசி டெஸ்ட் போட்டியை டிரா செய்து, தொடரை 2-2 என இந்தியா சமன் செய்துள்ளது. ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின் 5-ம் நாள் ஆட்டத்தில் 35 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் சூழல் இருந்தது. இந்திய அணியின் வெற்றிக்கு 4 விக்கெட் தேவைப்பட்டது. மழை காரணமாக 4-ம் நாள் ஆட்டத்தில் 90 ஓவர்கள் முழுமையாக விளையாட முடியாமல் போனது. நான்காம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 76.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்திருந்தது. களத்தில் ஜேமி ஸ்மித் மற்றும் ஜேமி ஒவ்ர்டன் இருந்தனர். 5-ம் நாள் ஆட்டத்தின் 2-வது ஓவரை இந்தியா சார்பில்…

Read More

மாஸ்கோ: அணு ஆயுதம் குறித்து பேசும்போது மிகுந்த எச்சரிக்கை தேவை என்று கிரம்ளின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை, அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள நாடுகளுக்கு இடையேயான போராக மாறக்கூடும் என ரஷ்ய முன்னாள் அதிபர் திமித்ரி மெத்வதேவ் கூறியது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இரண்டு (அணு ஆயுத) நீர்மூழ்கிக் கப்பல்களை பொருத்தமான பகுதிகளுக்கு நகர்த்த தான் உத்தரவிட்டிருப்பதாக கடந்த 1-ம் தேதி தெரிவித்தார். இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கிரம்ளின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ், “இதன் மூலம், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்கள் போர் கடமையில் உள்ளன என்பது தெளிவாகிறது. இது ஒரு தொடர் செயல்முறை. இதுதான் முதலில் கவனிக்கத்தக்கது. பொதுவாக இதுபோன்ற சர்ச்சைகளில் நாங்கள் ஈடுபட விரும்ப மாட்டோம். எனவே, இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க நாங்கள் விரும்ப மாட்டோம். அதேநேரத்தில், அணு…

Read More

‘கூலி’ ட்ரெய்லரை வைத்து ரசிகர்களின் எண்ண ஓட்டம் குறித்த கேள்விக்கு லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார். ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘கூலி’. தமிழ்நாட்டின் விளம்பரப்படுத்தும் நிகழ்வு பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் தெலுங்கு நிகழ்வு நடைபெற்றது. சமீபத்தில் ‘கூலி’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இதன் காட்சிகளை வைத்து சயின்ஸ் பிக்‌ஷன் கதை, டைம் டிராவல் கதை என்றெல்லாம் இணையத்தில் கருத்துகள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக ஹைதராபாத் நிகழ்வில் லோகேஷ் கனகராஜிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “‘கூலி’ ட்ரெய்லரை பார்த்துவிட்டு மக்கள் சயின்ஸ் பிக்‌ஷன், டைம் டிராவல் படம் என்று சொல்வதைப் பார்த்தேன். கதைக்களம் எதைப் பற்றியது என்று அனைவரும் நினைக்கும் விஷயங்களை படித்தேன். அவை அனைத்து உற்சாகத்தை தந்தது. ஏனென்றால், படம் வெளியான பிறகு மக்கள் ஆச்சரியப்படுவார்கள் என்பது மட்டும் உறுதி” என்று தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம், ‘கூலி’.…

Read More

புதுச்சேரி: தனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நடிகர் விஜய்க்கு, “வெற்றி பெற வேண்டும்” என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து கூறியுள்ளார். முதல்வர் ரங்கசாமிக்கும், விஜய்க்கும் நெருக்கமான நட்பு உண்டு. விஜய்யின் தவெக முதல் மாநில மாநாடு நடந்தபோது முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார். அந்த மாநாட்டை தொலைக்காட்சியில் பார்த்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தாலும் விஜய்யுடன் முதல்வர் ரங்கசாமி நெருக்கம் காட்டி வருகிறார். இந்நிலையில், இன்று (ஆக.4) புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்தநாளை ஒட்டி பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி பலரும் அவருக்கு வாழ்த்து சொன்னார்கள். தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யும் முதல்வர் ரங்கசாமிக்கு தொலைபேசி மூலம் இன்று மதியம் வாழ்த்து தெரிவித்தார். அப்போது முதல்வர் ரங்கசாமி, “வணக்கம்பா-வாழ்த்துக்கள்- நல்லாயிருக்கணும்- வளமாக இருக்கணும். நல்லா வரணும். நல்லா பண்ணுங்க. வெற்றி பெறணும், நல்லது செய்துட்டு வாங்க.” என விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார்.

Read More