Author: admin

‘கூலி’ படத்தில் தனது கதாபாத்திரத்துக்கு வரவேற்பு கிடைத்திருப்பதால் நடிகை ரச்சிதா ராம் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘கூலி’. இப்படத்தின் கதாபாத்திர வடிவமைப்புக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதில் சவுபின் சாஹிர் மற்றும் ரச்சிதா ராம் ஆகியோரின் கதாபாத்திரத்துக்கு மட்டுமே வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக ரச்சிதா ராம் கதாபாத்திரம் மற்றும் நடிப்புக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். தனது கதாபாத்திரத்துக்கு கிடைத்த வரவேற்பு குறித்து ரச்சிதா ராம், “‘கூலி’ படத்தில் எனது கல்யாணி கதாபாத்திரத்திற்கு வரவேற்பு அதிகமாக கிடைத்திருக்கிறது. என் கதாபாத்திரத்திற்கு கிடைத்த விமர்சனங்களும், அன்பும் என்னை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஊடகம், விமர்சகர்கள், மீம்கள், ட்ரோல் செய்தவர்கள் என அனைவருக்கும் என் நன்றிகள். என்னை நம்பி இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு சிறப்பு நன்றி. லெஜண்ட்கள் பலருடன் பணிபுரிந்த அனுபவம் மறக்க முடியாதது. ‘கூலி’ படத்தின் வெற்றிக்கு வாழ்த்துகள்” என்று…

Read More

சென்னை: தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தொடரும் என உழைப்போர் உரிமை இயக்கம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தூய்மைப் பணியாளர்கள் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உழைப்போர் உரிமை இயக்க ஆலோசகர் வழக்கறிஞர் குமாரசாமி, “13 நாட்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களை பொது நல வழக்கு என்ற நாடகத்தை நடத்தி, காவல் துறையைப் பயன்படுத்தி கலைத்தனர். எங்களின் போராட்டம் இன்னும் முடியவில்லை. இது தொடரும். காவல் துறையிடம் போராட்டம் நடத்த அனுமதி கோரி கடிதம் வழங்கியுள்ளோம். அனுமதி வழங்கவில்லை எனில் அனுமதி கோரிப் போராட வேண்டிய நிலை ஏற்படும். காவல் துறை தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாகச் செயல்படுமா அல்லது நீதிமன்ற உத்தரவின்படி எங்களுக்கு சாதகமாக நடவடிக்கை எடுக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம். தமிழகம் முழுவதும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டங்கள் மேலும் வலுவடையும்” என்றார். மேலும், “திருமாவளவன்…

Read More

சென்னை: நடப்பு ஆகஸ்ட் மாதத்தின் முதல் 15 நாட்களில் ரஷ்யாவில் இருந்து இந்தியாவின் எண்ணெய் கொள்முதல் நாளொன்றுக்கு 2 மில்லியன் பீப்பாய்களாக உயர்ந்துள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தங்களது கொள்முதல் சார்ந்த விவகாரத்தில் பொருளாதார ரீதியான முன்னுரிமையை தொடர்ந்து அளித்து வருவது இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது. ஆகஸ்ட் (2025) மாதத்தின் முதல் பாதியில் நாளொன்றுக்கு சுமார் 5.2 பில்லியன் பீப்பாய் என்ற அளவில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி இருந்துள்ளது. இதில் சுமார் 38 சதவீதம் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. இதை நிகழ் நேரத்தில் உலகளாவிய தகவலை வழங்கும் Kpler எனும் பகுப்பாய்வு தரவு நிறுவனம் வழங்கியுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் ரஷ்யாவில் இருந்து இந்தியாவின் எண்ணெய் கொள்முதல் நாளொன்றுக்கு 1.6 மில்லியன் பீப்பாய்களாக இருந்துள்ளது. இதனால் ஈராக் மற்றும் சவூதி அரேபியாவில் இருந்து இந்தியாவின் எண்ணெய் கொள்முதல் நாளொன்றுக்கு 7.30 லட்சம் மற்றும் 5.26 லட்சம் பீப்பாய்களாக…

Read More

சமீபத்திய வாலெதப் ஆய்வு 2025 ஆம் ஆண்டில் வாழ்ந்த மிக மோசமான அமெரிக்க மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு, பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரம் போன்ற காரணிகளை பரிசீலித்து வைத்துக் கொள்ள இந்த அறிக்கை தயாராக உள்ளது. (அன்றாட வாழ்க்கை). சில மாநிலங்கள் பிரகாசிக்கும்போது, மற்றவர்கள் ஒவ்வொரு நாளும் வாழ்க்கை சவால்களுடன் போராடுகிறார்கள். மிகக் குறைந்த தரவரிசை மாநிலங்களைப் பாருங்கள்:

Read More

பிரதமர் நரேந்திர மோடியுடன் திங்கள்கிழமை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அலாஸ்காவில் கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் தாம் நடத்திய சந்திப்பு குறித்து தனது கருத்துகளை பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் புதின் பகிர்ந்து கொண்டார். உக்ரைன் போர் குறித்து ரஷ்ய அதிபரிடம் பிரதமர் மோடி கூறும்போது, மோதல்களுக்கு தூதரக ரீதியில் பேச்சுவாரத்தை மூலம் அமைதி வழியில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது என்றும், இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்தியா – ரஷ்யா இடையே உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது என்றும், பல்வேறு விவகாரங்களில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து தொடர் பேச்சுவார்த்தை நடத்துவது என்றும் இந்த தொலைப்பேசி உரையாடலின்போது இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். முன்னதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்​பும் ரஷ்ய அதிபர் விளாடிதிர் புதினும்…

Read More

‘சூர்யா 46’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அனில் கபூர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 45% படப்பிடிப்பு முடிந்திருக்கும் எனத் தெரிகிறது. தற்போது இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனில் கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது படக்குழு. அவரும் கதையைக் கேட்டுவிட்டு நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். 1980-க்குப் பிறகு இப்போது தான் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் அனில் கபூர். அனைத்தும் ஒப்பந்தம் ரீதியாக முடிவானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளது படக்குழு. சூர்யா – அனில் கபூர் சம்மந்தப்பட்ட காட்சிகள் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்கிறார்கள். மேலும், இப்படத்துக்கு ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ என்று பெயரிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. வெங்கட் அட்லுரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘சூர்யா 46’. நாகவம்சி தயாரித்து வரும் இப்படத்துக்கு…

Read More

மதுரை: மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்பு பணிகள் நிறைவடையும் நிலையில், அக்டோபரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் கூறினார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம், அதன் வளாகத்தில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் தமிழ்நாடு அரசு சார்பில், ரூ.50 லட்சத்தில் மேற்கொள்ளப்படும் புனரமைப்புப் பணிகளையும் அவர் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் புனரமைப்பு பணிகள் நடக்கின்றன. இப்பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்தேன். அக்டோபர் மாதம் இறுதியில் பணிகள் அனைத்தும் நிறைவுற்று மீண்டும் பொது மக்கள் பயன்பாட்டுக்காக காந்தி நினைவு அருங்காட்சியகம் திறக்கப்படும்,’ என்றார். ஆய்வின்போது, மதுரை ஆட்சியர் பிரவீன் குமார், தமிழ்…

Read More

பூண்டு நீண்ட ஆயுளுடன் இணைக்கப்பட்டுள்ளது. எந்தவொரு உணவும் நீண்ட ஆயுளுக்கு உத்தரவாதம் அளிக்காது, பூண்டின் ஒருங்கிணைந்த நன்மைகள், சிறந்த இதய ஆரோக்கியம், மேம்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நச்சுத்தன்மை ஆகியவை ஆரோக்கியமான ஆயுட்காலம் பங்களிக்கின்றன. இது என்றென்றும் வாழ்வது பற்றி குறைவாகவும், சிறப்பாக வாழ்வதைப் பற்றியும் அதிகம்.மறுப்பு: இந்த கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மருத்துவ ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அடிப்படை சுகாதார நிலைமைகள் அல்லது பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் உள்ள எவரும் பூண்டுகளை தங்கள் அன்றாட வழக்கத்தின் வழக்கமான பகுதியாக மாற்றுவதற்கு முன் மருத்துவரை அணுக வேண்டும்.​

Read More

‘டாக்சிக்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ருக்மணி வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். யஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டாக்சிக்’. இதன் படப்பிடிப்பு பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை சிறிய டீஸர் மட்டுமே படத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ருக்மணி வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை இரண்டு கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டதாகவும், விரைவில் அடுத்தகட்டப் படப்பிடிப்பிலும் கலந்துக் கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படம் பல்வேறு உலக மொழிகளில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதற்காக கன்னடம் மற்றும் ஆங்கிலம் என ஒவ்வொரு காட்சியையும் இரண்டு முறை படப்பிடிப்பு நடத்தியுள்ளது படக்குழு. இதன் இசையமைப்பாளர் யார் என்று படக்குழு இன்னும் முடிவு செய்யவில்லை. கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கைரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘டாக்சிக்’. கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தினை…

Read More

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் நாளை (செவ்வாய்கிழமை) ரயில் மறியல் போராட்டம் நடத்துவுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, கடந்த 2 மாதங்களில் 64 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆறு மாதம், ஓராண்டு, 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று 24 மீனவர்கள் தண்டனைக் கைதிகளாக உள்ளனர். இதனைத் தொடர்ந்து, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யய வேண்டும், கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும், இந்தியா – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்திரத் தீர்வு காணவும், கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை பெற்றுத் தரவும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 11 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் நடத்தி வருகின்றனர். மேலும், ஆகஸ்ட் 13 அன்று கண்டன ஆர்ப்பாட்டம், ஆகஸ்ட் 15 அன்று உண்ணாவிரதப் போராட்டத்தில்…

Read More