நீல தோற்றம்ஜெஃப் பெசோஸ் தலைமையில், செவ்வாய் கிரகத்திற்கு ஒரு மைல்கல் பணிக்கு தயாராகி வருகிறார், இது நாசாவைத் தொடங்க உள்ளது தப்பிக்கும் ஆய்வுகள் கப்பலில் புதிய க்ளென் ராக்கெட் செப்டம்பர் 29, 2025 அன்று. இது ப்ளூ ஆரிஜினின் முதல் கிரக விமானக் விமானத்தை குறிக்கும் மற்றும் இது குறிப்பிடத்தக்கது, ஏனெனில் இது எலோன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸின் எந்தவொரு செவ்வாய் கிரகத்திற்கும் முன்னதாகவே உள்ளது, அதன் ஸ்டார்ஷிப் இன்னும் வளர்ச்சி மற்றும் சுற்றுப்பாதை சோதனைகளுக்கு உட்பட்டுள்ளது. 80 மில்லியன் டாலர் மதிப்புள்ள எஸ்கேப் மிஷன், செவ்வாய் கிரகத்தின் காந்த மண்டலத்தையும் வளிமண்டலத்தையும் படிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது சூரிய காற்று சிவப்பு கிரகத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பதற்கான முக்கியமான தரவுகளை வழங்குகிறது. இந்த ஏவுதல் வணிக விண்வெளி ஆய்வில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் அரசு விண்வெளி நிறுவனங்களுக்கும் இடையிலான வளர்ந்து வரும் ஒத்துழைப்பை எடுத்துக்காட்டுகிறது.எஸ்கேப்…
Author: admin
சமீபத்தில் இயக்குநர்கள் ஷங்கர் மற்றும் மணிரத்னம் ஆகியோரது படங்கள் பெரும் தோல்வியை தழுவின. இதனால் இணையத்தில் பலரும் இருவரையும் கடுமையாக விமர்சித்தனர். ஆனால், இருவரையும் அவ்வளவு எளிதாக கடந்துவிட முடியாது என்று ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். மணிரத்னம் மற்றும் ஷங்கர் படங்கள் தோல்வி குறித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டி ஒன்றில், “மணி சார் மற்றும் ஷங்கர் சார் இருவரின் ஒரு படத்தின் தோல்வியை வைத்து அவர்களை எடை போட்டுவிட முடியாது. ஷங்கர் சாரை ஒரு சாதாரண கமர்ஷியல் இயக்குநராக எடுத்துக்கொள்ள முடியாது. பிரம்மாண்ட படங்களில் வீட்டுக்கு எடுத்துச் சொல்லக் கூடிய ஒரு மெசேஜ் சொல்கிறார். ரோட்டில் செல்பவர்களுக்கு ஒன்றும் ஆகாது. ஆனால், தனி ஆளாக இறங்கி ரோடு போட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு முள் குத்தும், கல் தடுக்கி விடும். மணி சாருக்கு மட்டும் எப்போதும் முள் குத்துகிறது என்று நினைக்கக் கூடாது. ஏனென்றால் அவர்கள் எல்லாம் ரோடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ரோட்டில்…
சென்னை: சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்தில் கொடியை பயன்படுத்த த.வெ.க.வுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. தங்கள் வணிகச் சின்னமாக பதிவு செய்யப்பட்டுள்ள சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்திலான கொடியை பயன்படுத்த தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என, தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் நிறுவனத் தலைவர் பச்சையப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி விசாரணைக்கு வந்த போது, வணிக சின்னமாக பதியப்பட்ட தங்கள் சபை கொடியை பயன்படுத்துவது வணிக சின்ன சட்டத்தையும், பதிப்புரிமை சட்டத்தையும் மீறிய செயல் எனவும், கொடி ஓரளவு ஒற்றுமையாக இருப்பதால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும் என்பதால், சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்தில் கொடியை பயன்படுத்த த.வெ.க.வுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தரப்பில் வாதிடப்பட்டது.…
கடைசியாக ஆனால் நிச்சயமாக குறைந்தது அல்ல, வைட்டமின் சி இது ஒரு நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர் மட்டுமல்ல, இது முடி வளர்ச்சியில் ஒரு முக்கிய வீரர். வைட்டமின் சி உங்கள் உடலுக்கு முடி கட்டமைப்பை பலப்படுத்தும் புரதமான கொலாஜன் உற்பத்தி செய்ய உதவுகிறது. முடி உதிர்தலைத் தடுப்பதற்கு முற்றிலும் இன்றியமையாத ஒரு கனிமமான இரும்பை உறிஞ்சுவதற்கும் இது உதவுகிறது.சிட்ரஸ் பழங்கள், ஸ்ட்ராபெர்ரி, குவாவாஸ், பெல் பெப்பர்ஸ் மற்றும் ப்ரோக்கோலி ஆகியவற்றிலிருந்து நீங்கள் ஏராளமான வைட்டமின் சி பெறுவீர்கள். எங்கள் உடல்கள் அதைச் சேமிக்காததால், நீங்கள் தடிமனான, வலுவான இழைகளை விரும்பினால் தினமும் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம்.வைட்டமின்கள் உங்களுக்காக எவ்வாறு செயல்படுவதுசப்ளிமெண்ட்ஸ் உதவக்கூடும் என்றாலும், உணவு எப்போதும் சிறந்த ஆதாரமாக இருப்பதை மறந்துவிடாதீர்கள். இலை கீரைகள், புதிய பழங்கள், கொட்டைகள், மீன் மற்றும் முட்டைகளை உள்ளடக்கிய உணவை உருவாக்க முயற்சிக்கவும், உங்கள் பெரும்பாலான தளங்களை இயற்கையாகவே மறைப்பீர்கள்.…
சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையரது ஊடகச் சந்திப்பினை தொடர்ந்து, அது தொடர்பாக 7 கேள்விகளை முதல்வர் ஸ்டாலின் எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இண்டியா கூட்டணியினர் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளிப்பதற்குப் பதிலாக, கூடுதலான கேள்விகளை எழுப்பியிருக்கிறது தலைமைத் தேர்தல் ஆணையரது ஊடகச் சந்திப்பு. பின்வரும் கேள்விகள் எழுகின்றன: 1. வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும், எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்? 2. புதிய வாக்காளர்களின் பதிவு வழக்கத்திற்கு மாறாகக் குறைவாக உள்ளது. இந்த இளம் வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டனரா? தகுதிக்குரிய நாளில் 18 வயது நிறைவுற்ற எத்தனை இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர் என்பதைச் சொல்லும் தரவுகள் ஏதேனும் இருக்கிறதா? 3. Registration of Electors Rules, 1960-இன்கீழ் கொடுக்கப்பட்டுள்ள விசாரணை மற்றும் இரண்டு முறையீடு நடைமுறைக்கான காலவரையறை, எதிர்வரும் பிஹார் மாநிலத் தேர்தலில் பெருமளவிலான வாக்காளர்களை விலக்கும் வாய்ப்புள்ளது. இவ்விவகாரத்தைத் தேர்தல் ஆணையம் எவ்வாறு தீர்க்கப் போகிறது? 4.…
அட்லி – அல்லு அர்ஜுன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை விரைவில் படமாக்கவுள்ளது படக்குழு. தற்போது அல்லு அர்ஜுனுடன் தீபிகா படுகோன், ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாகூர், ஜான்வி கபூர் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களது காட்சிகள் அவ்வப்போது மும்பையில் கடும் கெடுபிடியுடன் படமாக்கப்பட்டு வருகிறது. எந்தவொரு புகைப்படமும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியாகி விடக்கூடாது என்பதில் படக்குழு மிகக் கவனமாக செயல்பட்டு வருகிறது. இப்படத்தின் சண்டைக் காட்சிகளில் முழுமையாக வெளிநாட்டு கலைஞர்களே பணிபுரியவுள்ளனர். மேலும் பல்வேறு ஹாலிவுட் நிறுவனங்கள் இதன் கிராபிக்ஸ் காட்சிகளை மேற்கொள்ள இருக்கிறது. இந்தியாவில் இருந்து தயாராகும் படங்களில் அதிக பொருட்செலவைக்…
சென்னை: அதிமுக இப்போது வரை பலவீனமாகவே உள்ளது. அதை மாற்றுவது தான் என் வேலை. அதை செய்யாவிட்டால் மக்களுக்கு அதிக சிரமம் ஆகிவிடும். அதிமுகவில் நிலவும் சிக்கலை புதிதாக வந்த யாராலும் தீர்க்க முடியாது. அனுபவம் வாய்ந்தவர்களால் மட்டுமே தீர்க்க முடியும் என்று சசிகலா கூறியுள்ளார். சசிகலா தனது 71-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (திங்கள்கிழமை), சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு. ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு என்று செயல்படுகிறது. இதை மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். தூய்மைப் பணியாளர் விவகாரம் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. தூய்மை பணியாளர் விவகாரத்தில், கடந்த 2016 தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் உரிய வழிவகை காண ஜெயலலிதா திட்டமிட்டு இருந்தார். அது குறித்து எனக்கு முழுமையாக தெரியும். ஆனால்…
இந்தியாவின் மிக உயர்ந்த நீர்வீழ்ச்சிகளில் ஒன்றான இது 1,020 அடி உயரமும், மிகச் சிறந்த அடுக்கு வீழ்ச்சியும் ஆகும், மேலும் இந்த வீழ்ச்சியின் பெயர் ‘பால் கடல்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நீர்வீழ்ச்சி கர்நாடகா மற்றும் கோவாவின் எல்லையில் உள்ள மாண்டோவி நதியில் தோன்றுகிறது. இது சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிடித்தது, ஏனெனில் இது அழகில் கம்பீரமானது மற்றும் நான்கு அடுக்குகளுடன் ஒரு நேர்த்தியான பால் வெள்ளை தோற்றத்துடன் உள்ளது. இந்த வீழ்ச்சி மேற்கு காண்டுகள் மலைத்தொடருக்குள் பகவான் மகாவீர் சரணாலயம் மற்றும் மோலெம் தேசிய பூங்காவில் அமைந்துள்ளது. இந்த வீழ்ச்சியை ஜீப் சஃபாரி வழியாக சரணாலயத்தின் மூலம் அணுகலாம், இது எளிதான வழி அல்லது அடர்த்தியான காடுகள் மற்றும் ரயில் பாதைகள் வழியாக ஓடும் மலையேற்ற வழிகள் வழியாக. இந்த நீர்வீழ்ச்சியைப் பார்வையிட சிறந்த நேரம், ஜூன் முதல் செப்டம்பர் வரை பருவமழை வரும்போது, பின்னர் நீர் வழங்கல் பன்மடங்கு…
சிதம்பரம் இயக்கத்தில் அடுத்ததாக ‘பாலன் தி பாய்’ என்ற பெயரில் படம் உருவாகவுள்ளது. சிதம்பரம் இயக்கத்தில் வெளியான படம் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’. இந்தியா முழுக்கவே இப்படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால் சிதம்பரத்தின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமிருந்தன. பல்வேறு முன்னணி நடிகர்களும் அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், அடுத்ததாக முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் படத்தினை இயக்கி வருகிறார் சிதம்பரம். இதன் கதையினை ‘ஆவேஷம்’ இயக்குநர் ஜீத்து மாதவன் எழுதியிருக்கிறார். இப்படத்தினை கே.வி.என் நிறுவனம் மற்றும் தேஸ்பியன் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. சிதம்பரம் இயக்கி வரும் படத்துக்கு ‘பாலன் தி பாய்’ என்று பெயரிட்டு இருக்கிறார்கள். ஒரே கட்டமாக இதன் படப்பிடிப்பை முடித்துவிட்டு, பின்பு பெரிய நடிகர் ஒருவரின் படத்தினை இயக்கவுள்ளார் சிதம்பரம். இதற்கான கதை, திரைக்கதையினை படப்பிடிப்புக்கு இடையே எழுதி வருகிறார்.
“தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கூடாது” என ‘மாற்றுப் பார்வை’யில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியுள்ளது, பல்வேறு தரப்பிலும் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. தனியார்மய எதிர்ப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ரிப்பன் மாளிகை முன்பு 13 நாட்கள் போராடிய தூய்மைப் பணியாளர்களை சமீபத்தில் அதிரடியாக நள்ளிரவில் கைது செய்தது காவல் துறை. உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலான இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலும் கடுமையான கண்டனங்கள் எழுந்தன. ‘சமூக நீதி அரசு என சொல்லிக்கொள்ளும் தமிழக அரசு இப்படித்தான் நடந்துகொள்ளுமா?’ என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள்கூட இந்த கைது நடவடிக்கையை கடுமையாக கண்டித்தன. தூய்மைப் பணியாளர்கள் போராட்டக்களத்துக்குச் சென்றபோதும், அதன்பின்னரும் அவர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் எனப் பேசிக் கொண்டிருந்த விசிக தலைவர் திருமாவளவன், கைது நடவடிக்கைக்குப் பின்னர் மற்றொரு கோணத்தில்…