ஒரு ஆப்டிகல் மாயை இணைய பயனர்களுக்கு ஒரு கருப்பு மற்றும் வெள்ளை விளக்கத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு உருமறைப்பு விலங்கைக் கண்டுபிடிக்க சவால் விடுகிறது. மரங்கள், பறவைகள் மற்றும் காளான்கள் இடம்பெறும் படம், சோதனை கவனம், கருத்து மற்றும் மன சுறுசுறுப்பு. விலங்கை வெற்றிகரமாக கண்டுபிடிப்பது சராசரியான அவதானிப்பு திறன்களைக் குறிக்கிறது. நீங்கள் அதை தவறவிட்டால், கவலைப்பட வேண்டாம், பயிற்சி சரியானது! விவரங்களுக்கு உங்கள் கவனத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? கூர்மையான பார்வையாளர்களைக் கூட ஸ்டம்ப் செய்யக்கூடிய ஒரு காட்சி சவால் இங்கே. இந்த ஆப்டிகல் மாயை இணையம் முழுவதும் பார்வையாளர்களை குழப்பமடைந்து வருகிறது, ஒரு எளிய கருப்பு மற்றும் வெள்ளை எடுத்துக்காட்டு என்று தோன்றும் விஷயத்தில் மறைக்கப்பட்டுள்ளது. பணி? உயிரினத்தை விரைவில் கண்டுபிடிக்கவும். இந்த படத்தில் இடதுபுறத்தில் ஒரு மரம், வானத்தில் பறக்கும் பறவைகள், நடுவில் இரண்டு காளான் போன்ற குடிசை கட்டமைப்புகள் மற்றும் ஒரு சிறிய ஆலை ஆகியவை…
Author: admin
பாட்னா: தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் பெயர்களை நீக்குகிறது என்பதில் சந்தேகமில்லை என குற்றம்சாட்டியுள்ள ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மற்றும் நிதிஷ் குமாரை நீக்குவதற்கு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் உள்ளவர்களே போதுமானவர்கள் என்று தெரிவித்தார். இதுகுறித்து பேசிய பிரசாந்த் கிஷோர், “தேஜஸ்வி யாதவ் பேசுவதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் பெயர்களை நீக்குகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் உள்ளவர்களே, பாஜக மற்றும் நிதிஷ் குமாரை நீக்க போதுமானவர்கள். எத்தனை பெயர்களை அவர்கள் நீக்குவார்கள்?. பிஹார் மக்கள் வேலைவாய்ப்பு வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர், வெற்றுப் பேச்சுகளை அல்ல. பிஹாரில் யாரும் பொய்யான வாக்குறுதிகளுக்கு ஏமாறப் போவதில்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தேர்தல் ஆணையத்தை எதிர்த்துப் போராடுவார்கள். தேர்தல் ஆணையம் எஜமானர் அல்ல, மக்களே எஜமானர்கள். மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்கள்தான் வெற்றி…
லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிராக ஓவல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகக் குறைந்த ரன் வித்தியாசத்தில் இந்தியா வென்ற ஆட்டங்கள் குறித்து பார்ப்போம். ஆண்டர்சன் டெண்டுல்கர் டிராபி டெஸ்ட் தொடரை 2-2 என சமன் செய்துள்ளது இந்திய அணி. இங்கிலாந்து அணியின் கைவசம் 4 விக்கெட்கள் இருக்க, வெற்றிக்கு வெறும் 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அந்தச் சூழலில் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினர் இந்திய பவுலர்கள். குறிப்பாக, சிராஜ் அதில் 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபார வெற்றியை பெற்றுள்ளது இந்திய அணி. இந்தச் சூழலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகக் குறைந்த ரன் வித்தியாசத்தில் இந்தியா வென்ற ஆட்டங்களின் பட்டியல் இதோ… கடந்த 2006-ல் கிங்ஸ்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் 49 ரன்களில் மேற்கு இந்தியத் தீவுகளை வீழ்த்தியது…
துல்கர் சல்மான் அடுத்து நடிக்கவுள்ள படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. ‘காந்தா’, ‘ஐ யம் கேம்’ உள்ளிட்ட பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் துல்கர் சல்மான். இப்படங்களைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்தின் பணிகள் படப் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதனை எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க, பான் இந்தியா படமாக உருவாகிறது. இதன் வழக்கமான படப்பிடிப்பு படப்பூஜையுடன் ஹைதராபாத்தில் தொடங்கியது. அறிமுக இயக்குநர் ரவி நெலக்குடிடி இயக்கும் இப்படம் துல்கர் சல்மான் நடிக்கும் 41-வது படமாகும். சமகால காதல் கதையாக சுவாரஸ்ய திரைக்கதையுடன் இப்படம் தயாராகிறது என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் பூஜையில் நானி, இயக்குநர் புச்சிபாபு சனா, ஸ்ரீகாந்த் ஓடிலா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இதன் ஒளிப்பதிவாளராக அனய் ஓம்.கோஸ்வாமி, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி ஆகிய இந்திய…
மதுரை: காவல் துறையில் தேர்வாகி 2 ஆண்டாக பணி நியமன ஆணைக்கென காத்திருப்பதாக புதிய எஸ்ஐ-க்கள் புகார் எழுப்பியுள்ளனர். தமிழக காவல் துறையில் காலியிடங்களை நிரப்ப புதிய எஸ்ஐ பணிக்கான தேர்வு குறித்த அறிவிப்பு 2023 மே மாதம் வெளியானது. தமிழ்நாடு சீருடை தேர்வாணையம் சார்பில், இதற்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 26, 27-ம் தேதி நடந்தது. இதில் தேர்வானவர்களுக்கு நவம்பரில் உடல் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்டோருக்கு 2024 ஜனவரியில் நேர்காணல், சான்றிதழ்கள் சரிபார்த்தல் முடிந்து ஜன.30-ல் இறுதி ரிசல்ட் வெளியிடப் பட்டது. தொடர்ந்து பிப்ரவரியில் மருத்துவச் சோதனையில் தேர்வான சுமார் 750-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், தேர்வில் பங்கேற்று வாய்ப்பு கிடைக்காத ஒருவர், புதிய எஸ்ஐ பணிக்கான தேர்வில் முறையில் இன சுழற்சி விதிமுறை சரியாக பின்பற்றவில்லை என, கூறி உயர் நீதிமன்றத்தை அணுகினார். நீதிமன்ற உத்தரவின் பேரில்…
அவை அலமாரியில் பாதிப்பில்லாததாகத் தோன்றலாம், ஆனால் கிரீம் பிஸ்கட் நிரபராதிகளிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. இந்த சர்க்கரை, கிரீம் நிரப்பப்பட்ட சாண்ட்விச் விருந்துகள் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஒரே மாதிரியான சிற்றுண்டாக மாறியுள்ளன, அவை பெரும்பாலும் டிஃபின் பெட்டிகள், அலுவலக இழுப்பறைகள் மற்றும் இரவு நேர சரக்கறை சோதனைகளில் காணப்படுகின்றன. ஆனால் அவற்றின் இனிமையான, ஆறுதலான சுவைக்கு அடியில், நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும் அதி-பதப்படுத்தப்பட்ட பொருட்களின் கலவையாகும். சுத்திகரிக்கப்பட்ட மாவு, செயற்கை சுவைகள், டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் சேர்க்கப்பட்ட சர்க்கரைகள் ஆகியவற்றால் ஏற்றப்பட்ட கிரீம் பிஸ்கட்டுகள் எந்த ஊட்டச்சத்துக்கும் குறைவாகவே வழங்குகின்றன, ஆனால் அவை வயதுக் குழுக்களில் பரவலாக நுகரப்படுகின்றன. அவர்கள் மீது வழக்கமான சிற்றுண்டி இந்த நேரத்தில் பாதிப்பில்லாததாக உணரக்கூடும், ஆனால் காலப்போக்கில், இது உங்கள் இதயம், வளர்சிதை மாற்றம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதிக்கும். உங்கள் உடலுக்கு கிரீம் பிஸ்கட் சரியாக என்ன செய்கிறது? அதை…
புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழுத் தலைவராக மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழு தலைவராக இருந்த சுதிப் பந்தோபாத்யாயா, உடல்நிலை காரணமாக அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும் டயமண்ட் ஹார்பர் தொகுதியில் இருந்து 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவருமான அபிஷேக் பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு 29 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர் என்பதும் இக்கட்சி இண்டியா கூட்டணியின் முக்கிய அங்கமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
“தெலுங்குக்கு எஸ்.எஸ். ராஜமவுலி என்றால், தமிழுக்கு லோகேஷ் கனகராஜ்” என்று நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார். ஹைதராபாத்தில் ‘கூலி’ விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் ‘கூலி’ குறித்து ரஜினி பேசிய வீடியோ பதிவு ஒன்று திரையிடப்பட்டது. அதில் ரஜினி, “திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. இந்த ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எனது ‘கூலி’ திரைப்படம் வெளிவருவதில் மகிழ்ச்சி. ‘கூலி’ எனது வைர விழாப் படம். தெலுங்குக்கு எஸ்.எஸ்.ராஜமவுலி என்றால், தமிழுக்கு லோகேஷ் கனகராஜ். அவருடைய படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட். இன்னொரு சிறப்பு என்னவென்றால், இதில் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, சவுபின் மற்றும் சிறப்புத் தோற்றத்தில் அமீர் கான், பல வருடங்களுக்குப் பிறகு சத்யராஜுடன் ஒரு படம் நடிக்கிறேன். குறிப்பாக, நாகார்ஜுனா இதில் வில்லனாக…
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் சென்னையில் நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்தவிருக்கின்றனர். ‘தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்கையின்போது, டாஸ்மாக் ஊழியர்களுக்கு அறிவித்த ஊதிய உயர்வு ரூ.2,000 அனைவருக்கும் முழுமையாக வழங்கிட வேண்டும். ஊதிய உயர்வு குறித்து டாஸ்மாக் நிறுவனத்தின் 218-வது நிர்வாகக்குழு கூட்ட தீர்மானத்தை ரத்து செய்து ரூ.2,000 சம்பள உயர்வாக அறிவிக்க வேண்டும். விசாரணை ஏதுமின்றி தன்னிச்சையாக தொழிலாளிகளை குற்றவாளியாக்கி இடமாறுதல், தற்காலிக பணி நீக்கம், அபராதம் என ஒரு தவறுக்கு மூன்று தண்டனை வழங்குவதை தவிர்க்க வேண்டும். மேலும், மின்னணு இயந்திரம் மூலம் விற்பனைக்கான இலக்கை நிர்மானிப்பதை நிறுத்த வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.5-ம் தேதி (நாளை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
அமைதியான குழந்தை பெயர் தேர்வுகள்அமைதியைக் குறிக்கும் ஒரு இந்திய குழந்தை பெயரைத் தேர்ந்தெடுப்பது, உங்கள் குழந்தையை அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் ஆசீர்வதிப்பதற்கான ஒரு அர்த்தமுள்ள வழியாகும். இந்த பெயர்கள், பணக்கார கலாச்சார பாரம்பரியம் மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தில் மூழ்கி, வாழ்நாள் முழுவதும் அமைதியையும் அமைதியான ஆவியையும் ஊக்குவிக்கின்றன.