காரக்பூர்: காரக்பூர் ஐஐடியின் பிளாட்டினம் விழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அதானி குழும தலைவர் கவுதம் அதானி பேசியதாவது: உலகம் வழக்கமான போர்களில் இருந்து தொழில்நுட்ப போர்களுக்கு மாறிவிட்டது. இந்நிலையில், எதிர்காலத்தை நிர்ணயிப்பது நமது தயாரிப்புத் திறன்தான். இன்றைய போர்கள் பெரும்பாலும் தொழில்நுட்பம் சார்ந்தவையாக உள்ளன. அவை போர்க்களத்தில் அல்ல, கணினி சர்வர்களில் நடக்கின்றன. துப்பாக்கிகள் அல்ல, ‘அல்காரிதங்கள்’ தான் ஆயுதங்கள். நிலத்தில் அல்ல, ‘டேட்டா சென்டர்களில்’ தான் பேரரசுகள் உருவாகின்றன. வீரர்கள் அல்ல, ‘பாட்நெட்கள்’ தான் படைகள். நம் நாடு தொழில்நுட்பத்தை சார்ந்துள்ள நிலையில், 90% குறைக்கடத்திகளை இறக்குமதி செய்கிறோம். இதில் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரம் முடங்கிப் போகும் அபாயம் உள்ளது. நமக்குத் தேவையான கச்சா எண்ணெயில் 85 சதவீதத்தை இறக்குமதி செய்கிறோம். இதனால் உலகில் எங்கோ நடக்கும் புவி அரசியல் நிகழ்வுகூட நமது வளர்ச்சியை தடுக்கக்கூடும். எனவே, புதிய வகை போர்களுக்குத் தயாராகும்…
Author: admin
சிவப்பு கண்களால் எழுந்திருப்பது ஒரு பொதுவான பிரச்சினையாகும், இது பல்வேறு காரணங்களிலிருந்து பாதிப்பில்லாதது முதல் தீவிரமானது வரை உருவாகிறது. ஒரே இரவில் வறட்சி, ஒவ்வாமை அல்லது காண்டாக்ட் லென்ஸ் பயன்பாடு பெரும்பாலும் எரிச்சல் மற்றும் சிவப்புக்கு வழிவகுக்கும். தூசி அல்லது தூக்கமின்மை போன்ற சுற்றுச்சூழல் காரணிகளும் ஒரு பாத்திரத்தை வகிக்கலாம். தி ஜர்னல் ஆஃப் ஆப்தால்மிக் & விஷன் ரிசர்ச் ஆகியவற்றில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, கண் மேற்பரப்பு கோளாறுகள் மற்றும் மோசமான தூக்க தரம் போன்ற காரணிகள் காலை கண் சிவப்புக்கு கணிசமாக பங்களிக்கும். சில சந்தர்ப்பங்களில், சிவப்பு கண்கள் கான்ஜுன்டிவிடிஸ் அல்லது மருத்துவ கவனிப்பு தேவைப்படும் கண் நிலைமைகள் போன்ற நோய்த்தொற்றுகளை சமிக்ஞை செய்யலாம். சிவத்தல் தொடர்ந்தால், வேதனையானது, அல்லது பார்வை மாற்றங்களுடன் இருந்தால், ஒரு மருத்துவரை அணுகவும். கண் சொட்டுகளைப் பயன்படுத்துதல், நல்ல சுகாதாரத்தை பராமரிப்பது மற்றும் தூக்க பழக்கத்தை மேம்படுத்துவது போன்ற எளிய வைத்தியம் பெரும்பாலும்…
திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றுடன் நேற்று தொடங்கியது. பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா, கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதையொட்டி, சண்டிகேசுவரர் சந்நிதியில் இருந்து கொடி புறப்பாடாகி, கோயிலை வலம் வந்தது.தொடர்ந்து, கொடி மரம் அருகே உற்சவ விநாயகர், சண்டிகேசுவரர், அங்குசத்தேவர் எழுந்தருளினர். பின்னர், கொடிமரத்துக்கும், மூஞ்சூறு வாகனம் வரையப்பட்ட கொடிப்படத்துக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. விழா நாட்களில் காலையில் வெள்ளிக் கேடகத்திலும், மாலையில் சிம்மம், பூதம், கமலம், ரிஷபம், மயில், குதிரை உள்ளிட்ட வாகனங்களிலும் விநாயகர் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை சூரனை விநாயகர் வதம் செய்யும் கஜமுக சூரசம்ஹாரம், 26-ம் தேதி…
சேலம்: ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யாருக்கும் எக்காலத்திலும் அடிபணியாது, என்பதை முன்னாள் முதல்வர் பழனிசாமி அறிந்து கொள்ள வேண்டும்’, என சேலத்தில் நடந்த மாநில மாநாட்டில் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநில மாநாடு சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நேரு கலையரங்கில் கடந்த 4 நாட்களாக நடந்து வருகிறது. நிறைவு நாளான நேற்று சேலம் குகை பகுதி அருகே உள்ள பெரியார் வளைவில் இருந்து செம்படை பேரணி தொடங்கி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள போஸ் மைதானத்தில் நிறை வடைந்தது. அதைத்தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 101 பேர் கொண்ட புதிய மாநில குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது: சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எப்போதும் போராடும் கட்சியாக…
சுவாமி சிவானந்தாவின் போதனைகளின் படி, உணவு ஆரோக்கியத்தின் அடிப்படை கூறுகளை உருவாக்குகிறது. சிவானந்தா ஒரு சாத்விக் உணவை பரிந்துரைத்தார், அதில் காய்கறிகள், முழு தானியங்கள், கொட்டைகள் மற்றும் விதைகள் உள்ளிட்ட தூய மற்றும் ஒளி ஊட்டமளிக்கும் உணவுகள் மட்டுமே இடம்பெற்றன. அவர் பழம் மற்றும் பால் ‘ஆடம்பரமான உணவு’ என்று அழைத்தார், அவற்றை சாப்பிடுவதைத் தவிர்த்தார், அதற்கு பதிலாக பயறு மற்றும் அரிசி சிவானந்தாவை விரும்பினார், அவ்வப்போது உண்ணாவிரதத்துடன் மிதமான உணவு மற்றும் கவனமுள்ள உணவு ஆகிய இரண்டையும் வலியுறுத்தினார், இது செரிமான அமைப்பு ஓய்வெடுக்க உதவுகிறது. சிவானந்தா தனது உணவு அணுகுமுறையின் மூலம், உணவு எவ்வாறு மருந்தாக செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது, ஏனெனில் இது உடல் ஆரோக்கியம் மற்றும் மன நல்வாழ்வு இரண்டிற்கும், நிலையான ஆரோக்கியத்திற்காக பயனளிக்கிறது.
ஒரு ஆடம்பரமான காலை உணவுக்குப் பிறகு அந்த வலி மற்றும் வாயு உணர்வு நாள் முழுவதும் கெடுக்கக்கூடும். குடல் ஆரோக்கியத்திற்கு ஒரு பெரிய பங்கு உண்டு, மனநிலையை அமைப்பதில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியத்திலும். நல்ல ஆரோக்கியத்திற்கான திறவுகோல் உண்மையில் ஒரு மகிழ்ச்சியான குடல். ஆனால் உங்கள் குடலை எவ்வாறு மகிழ்ச்சியாக வைத்திருக்கிறீர்கள்? ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்டில் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் ச ura ரப் சேத்தி, குடலை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதில் விதைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். “இந்த அறிவியல் ஆதரவு விதைகள் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன, அவை உங்கள் குடல் நுண்ணுயிர், செரிமானம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன” என்று மருத்துவர் கூறினார். உங்கள் குடல் ஆரோக்கியத்தை கடுமையாக மேம்படுத்தக்கூடிய 5 சக்திவாய்ந்த விதைகள் இங்கே. சியா விதைகள்மாறிவிடும், சியா விதைகளைச் சுற்றியுள்ள மிகைப்படுத்தல் உண்மையில் உண்மை. சியா விதைகள்…
புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மானம் கொண்டுவர இண்டியா கூட்டணி கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிஹாரில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அங்கு வாக்கு திருட்டு நடைபெறுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார். இந்த விவகாரத்தில், தேர்தல் ஆணையமும், பாஜகவும் இணைந்து செயல்படுவதாகவும் கூறியிருந்தார். இதற்கிடையே, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் இந்த குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ‘‘வாக்கு திருட்டு நடைபெறுவதாக கூறியிருப்பதன் மூலம் அரசியல் சட்டத்தை ராகுல் காந்தி அவமதிக்கிறார்’’ என்று தெரிவித்தார். மேலும், தேர்தல் ஆணையம் மீதான புகார் குறித்து ராகுல் காந்தி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது நாட்டு…
மும்பை: மும்பையில் தொடர்ந்து 3-வது நாளாக கனமழை கொட்டி வருவதால், பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பேருந்து, ரயில், விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் கனமழை பெய்தது. இதனால், பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகளின் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே வெள்ள நீர்தேங்கியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ஆந்திர மாநிலம் அருகே வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, மகாராஷ்டிராவில் கனமழை பெய்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், நேற்று அதிகாலை பெய்த மழையால் அந்தேரி, காட்கோபர், நவி மும்பை மற்றும் தெற்கு மும்பையின் சில முக்கிய பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், வெளியூர் செல்லும் பேருந்து, ரயில், விமான…
சென்னை: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்குமாறு முதல்வர் ஸ்டாலினிடம் மத்திய அமைச்சர்ராஜ்நாத் சிங் தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்துள்ளார். குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கரின் பதவிக் காலம் வரும் 2027 ஆகஸ்ட் வரை உள்ள நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி அவர் தனது பதவியை கடந்த ஜூலை 21-ம் தேதி திடீரென ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டதை அடுத்து, மத்திய அரசிதழிலும் அதுகுறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதையடுத்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் உடனடியாக தொடங்கியது. போட்டி இருக்கும் பட்சத்தில் செப்டம்பர் 9-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. குடியரசு துணைத் தலைவரை மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் இணைந்து தேர்வு செய்வார்கள். மக்களவையில் தற்போது 542 எம்.பி.க்கள் உள்ளனர். ஒரு இடம் காலியாகஉள்ளது.…
பாட்னா: பிஹார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர், விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி மேற்கொள்ளப்பட்டுகடந்த 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 7.24 கோடி பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அவர்களில் 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தவர்கள், 36 லட்சம் பேர் நிரந்தரமாக இடம்பெயர்ந்துவிட்டனர். இதனால் அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இதற்கிடையே, பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சில நாட்களுக்கு முன்புஇந்த வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் அமர்வு, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர்விவரங்களை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர், விவரங்களை…