சென்னை: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை புகாரில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீடு உட்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 16-ம் தேதி சோதனை நடத்தினர். இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், ஐ.பெரியசாமி, அவரது மகன் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ, மகள் இந்திரா ஆகியோரது வீடுகள், ஐ.பெரியசாமி மற்றும் அவரது இளைய மகன் பிரபு ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில், சொத்துகள், பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Author: admin
பல நூற்றாண்டுகளாக, பூண்டு கிராம்பு அவற்றின் சுவையான நறுமணத்திற்காக மட்டுமல்லாமல், பரந்த அளவிலான சுகாதார கவலைகளுக்கு இயற்கையான தீர்வாகவும் பயன்படுத்தப்படுகிறது. பூண்டு உட்கொள்வதற்கான பல வழிகளில், அதன் விளைவுகளை அதிகரிக்க, பூண்டு ஒரு மூல கிராம்பை சாப்பிடுவது, இது சக்திவாய்ந்த நன்மைகளை வழங்குவதாக அறியப்படுகிறது. அதன் கடுமையான வாசனையும் சுவையும் பலவற்றைத் தள்ளிவிடக்கூடும் என்றாலும், பூண்டு பச்சையாக உட்கொள்ளும்போது அதன் செயலில் உள்ள சேர்மங்களை அதிகம் தக்க வைத்துக் கொள்கிறது. மூல பூண்டு ஒரு கிராம்பு மட்டுமே உங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தி, இதய ஆரோக்கியம் மற்றும் பலவற்றை ஆதரிக்கும். நீங்கள் தினமும் ஒரு மூல பூண்டு கிராம்பு சாப்பிட்டால் என்ன ஆகும் என்பதைப் பார்ப்போம்.
பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி, மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று வீராஜ்பேட்டை, மடிகேரி ஆகிய இடங்களில் 148 மில்லிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நேற்று மாலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 124.40 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை பெய்துவருவதால் கபிலா ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மைசூருவில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 22 ஆயிரத்து 142 கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில்,…
பிரபல ஹாலிவுட் நடிகர் டெரன்ஸ் ஸ்டாம்ப் (87). இவர், ஜெனரல் ஸோட் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர். ‘வால் ஸ்ட்ரீட்’ (1987), ‘யங் கன்ஸ்’ (1988), ‘த அட்வெஞ்சர்ஸ் ஆப் பிரிசில்லா: குயின் ஆஃப் டெசர்ட்’ (1994), ‘ஸ்டார் வார்ஸ் 1’, டாம் குரூஸின் ‘வால்கெய்ரி’ (2008) உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கோல்டன் குளோப் விருது, கேன்ஸ் பட விழா விருது என பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இவர், இடையில் சில காலம் சினிமாவில் இருந்து விலகி இந்தியா வந்து யோகா பயின்றார். இந்நிலையில் உடல் நலமில்லாமல் இருந்த அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானதாக அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர் இறப்புக்கான காரணத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை. அவர் மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாவை ஆளுநர் பதவியில் அமர்த்த அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால், தேசிய அளவில் பாஜகவின் கவனம் தமிழகத்தின் பக்கம் திரும்பி உள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இதற்காக வியூகங்களை வகுத்து வருகிறது. அந்தவகையில், தமிழகத்தை சேர்ந்த பாஜகவினருக்கு தேசிய அளவில் கட்சி பதவிகளை வழங்கியும், அமைச்சரவை, ஆளுநர், துணை குடியரசு தலைவர் போன்ற பதவிகளையும் பாஜக வாரி வழங்கி, தமிழகத்துக்கு ஆதரவாக இருப்பது போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், 2026 தேர்தலையொட்டி, தமிழக பாஜகவினருக்கு முக்கியத்துவம் அளிக்க தேசிய தலைமை விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. நாகாலாந்து ஆளுநராக இருந்த இல.கணேசன், கடந்த 15-ம் தேதி காலமானார். இதனால், அம்மாநில ஆளுநர் பதவி காலியாக உள்ளது. அதேபோல், மகாராஷ்டிரா மாநில ஆளுநராக இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன்,…
சிறந்த முடிவுகளுக்கு, இந்த முகமூடியை வாரத்திற்கு ஒரு முறை முயற்சிக்கவும். அதை மிகைப்படுத்துவது உங்களுக்கு ஒரே இரவில் ராபன்ஸல் முடியைக் கொடுக்காது, ஆனால் நிலையான பயன்பாட்டுடன், ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்குள் மென்மையான, பளபளப்பான, வலுவான இழைகளை நீங்கள் கவனிக்கத் தொடங்குவீர்கள்.நன்மைகளை அதிகரிக்க உதவிக்குறிப்புகள்தேங்காய் எண்ணெயை கலப்பதற்கு முன் சற்று சூடேற்றவும், இது ஊட்டச்சத்துக்களை சிறப்பாகக் காண உதவும்.எலும்பு உலர்ந்த அல்ல, ஈரமான கூந்தலில் எப்போதும் தடவவும், எனவே முகமூடி மிகவும் எளிதாக பரவுகிறது.உங்களிடம் எண்ணெய் உச்சந்தலையில் இருந்தால், உங்கள் தலைமுடியின் முனைகளில் அதிக கவனம் செலுத்துங்கள் மற்றும் வேர்களில் குறைந்த எண்ணெயைப் பயன்படுத்துங்கள்.இந்த முகமூடியை ஊட்டச்சத்து நிறைந்த உணவுடன் இணைக்கவும், உங்கள் மிருதுவாக்கலில் சியா விதைகள் மற்றும் உங்கள் சமையலில் தேங்காய் எண்ணெயையும் பாதிக்காது!நீங்கள் என்ன முடிவுகளை எதிர்பார்க்கலாம்?உண்மையாக இருக்கட்டும்: எந்த DIY மாஸ்க் உங்களுக்கு ஒரே இரவில் வளர்ச்சியைக் கொடுக்கப் போவதில்லை. ஆனால் இந்த சியா விதை…
ஹைதராபாத்: கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, நடைபெற்ற தேர்த்திருவிழாவில், மின்சாரம் பாய்ந்து 6 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஹைதராபாத் ராமாந்தபூரில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் கிருஷ்ணாஷ்டமி மற்றும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா இரண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கோயில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் இரவு கோயிலில் தேர்த்திருவிழாவை நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்திருந்தனர். அப்போது, தேரை இழுக்க பயன்படுத்தப்படும் மற்றொரு வாகனம் பழுதடைந்ததால் என்ன செய்வது என தெரியாமல் அனைவரும் சங்கடப்பட்டனர். அப்போது, அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தேரை இழுத்துச் செல்ல முன்வந்தனர். இதனால் தேர்த்திருவிழா களை கட்டியது. சிறிது தூரம் தேர் சென்ற நிலையில், தேரின் மேற்பகுதி அங்குள்ள மின் கம்பியில் உரசியது. உடனே தேரில் மின்சாரம் பாய்ந்தது. இதனால் தேரின் கம்பியை பிடித்து இழுத்து கொண்டிருந்த 9 பக்தர்கள் தூக்கி எறியப்பட்டனர். மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால், அப்பகுதியே இருளில் மூழ்கியது. பின்னர் காயம் அடைந்தவர்கள் காந்தி…
ஷிம்கென்ட்: ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது. அன்மோல் (580), ஆதித்யா மல்ரா (579), சவுரப் சவுத்ரி (576) ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1,735 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது. ஆடவருக்கான ஜூனியர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் கபில் 243 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான ஜோனாதன் கவின் அந்தோனி 220.7 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். ஆடவருக்கான ஜூனியர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியாவின் ஜோனாதன் கவின் அந்தோனி (582), கபில் (562), விஜய் தோமர் (562) ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1,723 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து…
சென்னை: சென்னை, கொருக்குப்பேட்டை போஜராஜன் நகரில், ரூ.30.13 கோடியில் கட்டப்பட்ட வாகன சுரங்கப் பாலத்தை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். வடசென்னை, கொருக்குப்பேட்டை பகுதியில் உள்ள போஜராஜன் நகர் 3 புறமும் ரயில்வே இருப்புப் பாதைகளால் சூழப்பட்டுள்ளதால், இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ரயில்வே கடவுப் பாதை மூலமே வெளியே செல்ல முடியும். மேலும், அவசர காலங்களில் அவர்கள் வெளியே செல்வது மிகவும் சிரமமாக இருந்தது. எனவே, இங்கு வசிக்கும் பொது மக்கள் உள்ளிட்ட வடசென்னைப் பகுதி மக்களின் நீண்ட நாள்கோரிக்கையான, போஜராஜன் நகரில் வாகன சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2023-ம் ஆண்டு, சென்னை மாநகராட்சியின் நிதியின் கீழ் ரூ.30.13 கோடியில் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. இச்சுரங்கப் பாதையின் நீளம் 207 மீட்டர், அகலம் 6 மீட்டர் ஆகும். மேலும், மழைக்காலங்களில் மழை நீரை வெளியேற்ற ஒரு நீர் சேகரிக்கும் கிணறு, 85 எச்பி திறன் கொண்ட மோட்டார் பம்புகள் மற்றும்…
மும்பை: ஜிஎஸ்டி வரி அடுக்குகள் 2 ஆகக் குறைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்ததையடுத்து, சென்செக்ஸ் நேற்று வர்த்தகத்தின் இடையே 1,000 புள்ளிகள் உயர்ந்தது. கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச் சந்தைகள் சரிந்து வந்தன. இந்நிலையில், சுதந்திர தினம் மற்றும் சனி, ஞாயிறு ஆகிய 3 நாள் விடுமுறைக்குப் பிறகு நேற்று காலையில் இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் தொடங்கின. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் வரை உயர்ந்தது. இதுபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிப்டி 350 புள்ளிகள் வரை உயர்ந்து 25 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது. எனினும், பிற்பகலில் பங்குச் சந்தைகள் சற்று இறக்கத்தை சந்தித்தது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 676 புள்ளிகள் உயர்ந்து 81,274-ல் முடிந்தது. நிப்டி 245 புள்ளிகள் உயர்ந்து 24,877-ல் நிலை பெற்றது. தகவல் தொழில்நுட்பத் துறை தவிர வாகனம், ரியல் எஸ்டேட், உலோகம் உட்பட் அனைத்து துறைகளின்…