லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படம் திரையரங்குகளில் வெளியான முதல் நான்கு நாட்களில் ரூ.404 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லாஜிக் ஓட்டைகள், விடையில்லா கேள்விகள் என இணையத்தில் வறுத்தெடுக்கப்பட்டாலும், வசூலில் கவனிக்கத்தக்க முன்னேற்றம் கண்டது. ‘கூலி’ வெளியான நாளிலிருந்து சமூக வலைதளங்களில் அதிகம் பாராட்டப்பட்டவர்கள் இரண்டு பேர். ஒருவர், படத்தில் வில்லனாக நடித்திருந்த மலையாள நடிகர் சவுபின் ஷாஹிர். மற்றொருவர் கன்னட நடிகை ரச்சிதா ராம். வழக்கமாக லோகேஷ் படங்களில், தொடக்கத்தில் முக்கியத்துவம் இல்லாததாக காட்டப்படும் ஒரு கேரக்டர் ஒரு கட்டத்தில் திடீரென வீறுகொண்டு எழுந்து ஆக்ரோஷமாக சண்டையிடும். ‘கைதி’ படத்தில் ஜார்ஜ் மரியான், விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனா போன்றவை உதாரணம். அப்படியான ஒரு கதாபாத்திரம்தான் ‘கூலி’ படத்தில் ரச்சிதாவுக்கு வழங்கப்பட்டது. முந்தைய இரண்டு கதாபாத்திரங்கள் பாசிட்டிவ் ஆனவை என்றால், இந்தப் படத்தில் ரச்சிதாவுக்கு முழுக்க முழுக்க நெகட்டிவ் கதாபாத்திரம். அதை சிறப்பாகவே செய்திருந்தார்…
Author: admin
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கன மழை தொடர்ந்து வருகிறது. கூடலூரில் 140 மி.மீட்டர் மழை பதிவானது. ஊட்டியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் கோயில் சேதமடைந்தது. நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கன மழை காரணமாக ஊட்டி நகரில் உள்ள வண்டி சோலை பகுதியில் இருந்த நூற்றாண்டு பழமையான ராட்சத மரம் திடீரென வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் அங்கிருந்த சங்கிலி முனீஸ்வரர் கோயில் இடிந்து சேதமடைந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ராட்சத மரத்தை 2 மணி நேரத்திற்கு மேலாக வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மரம் விழுந்த போது அந்த வழியாக யாரும் செல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மரம் விழுந்ததில் மாட்டு…
சென்னை: கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக.19) பவுனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. தங்கத்தை மிகவும் பாதுகாப்பான முதலீடாக மக்கள் பார்க்கின்றனர். அதன் காரணமாக தங்கத்தை ஆபரணமாகவும் மற்றும் காசுகளாகவும் மக்கள் வாங்குவது வழக்கம். உலக அளவில் தங்கத்தை அதிகம் வாங்கும் முன்னணி நாடுகளில் இந்தியாவும் உள்ளது. தங்கம் விலை சர்வதேச அளவிலான பொருளாதாரம் மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய காரணிகளாக உள்ளன. கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் இந்தியாவில் ஒரு பவுன் தங்கம் ரூ.58 ஆயிரமாக இருந்தது. பின்னர் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்தது. கடந்த ஜூலை 23-ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.75,040 என்ற புதிய உச்சத்தை எட்டி இருந்தது. பின்னர் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன்…
என பிக் பிரதர் 27 வேகத்தை எடுப்பது, வீட்டிற்குள் இருக்கும் விஷயங்கள் சத்தமிடத் தொடங்குகின்றன, ஆனால் அது வீட்டிற்கு வெளியே உள்ள நாடகம் தான் உண்மையிலேயே தீயில் உள்ளது. போட்டியாளரான ரைலி ஜெஃப்ரீஸை அகற்ற அவசர அழைப்புகளுடன் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகின்றனர். ஏன்? சக ஹவுஸ்ஃப்கெஸ்ட் கேத்ரின் உட்மேன் மீதான அவரது நடத்தை ஃபிளிட்டர்ட்டி முதல் பிளாட்-அவுட் பயமுறுத்தும் வரை கோட்டைக் கடந்துவிட்டது என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர். ஒரு அழகான காதல் கதையாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளன, பலரும் ரைலியின் கட்டுப்பாட்டு, கையாளுதல் மற்றும் உணர்ச்சி ரீதியாக ஆக்கிரமிப்பு நடத்தை என்று குற்றம் சாட்டினர்.சர்ச்சைக்குரிய ஹவுஸ்மேட்டுக்கு எதிரான பின்னடைவு தீவிரமடைந்து வருவதால், ரசிகர்களும் வெளியே ரைலியின் வாழ்க்கையில் ஆழமாக தோண்டுகிறார்கள் பெரிய சகோதரர் வீடு, மற்றும் அவர்கள் கண்டுபிடித்ததாகக் கூறுவது தீக்கு எரிபொருளை மட்டுமே சேர்க்கிறது. வதந்திகள் மற்றும் ரசிகர்களின் ஊகங்களின்படி, ரைலிக்கு ஒரு…
புதுடெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின் சி.பி.ராதாகிருஷ்ணனை போட்டியின்றி தேர்வு செய்ய முயற்சி துவங்கி உள்ளது. இதற்காக முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆதரவு கேட்டுள்ளார். தொடர்ந்து அவர் இண்டியா கூட்டணியிலுள்ள கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளார் எனத் தெரிகிறது. ஆளும் கட்சியின் வேட்பாளர் என்பதால் அதன் தேர்தலில் சிபிஆரின் வெற்றி உறுதி எனக் கருதப்படுகிறது. அதேசமயம், சிபிஆருக்கு எதிராக ஒரு உறுதியான வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் கூட்டணியான இண்டியா சார்பிலும் வியூகம் அமைக்கப்படுகிறது. செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலுக்காக நாடாளுமன்ற சார்பில் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மொத்தம் 782 எம்பிக்கள் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள். அவர்களில் 542 பேர் மக்களவையிலும், 240 மாநிலங்களவையிலும் உள்ளனர். தேர்தலில் வெற்றி பெற 392 எம்பிக்களின்…
ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ’கூலி’ படத்துக்குப் பிறகு ‘கைதி 2’ படத்தினை இயக்கவுள்ளதாக லோகேஷ் கனகராஜ் பல பேட்டிகளில் கூறியிருந்தார். ஆனால், இப்போது அதில் மாற்றம் இருக்கும் என தெரிகிறது. அப்படத்துக்கு முன்னதாக ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படத்தினை இயக்க முடிவு செய்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இதனை ரெட் ஜெயண்ட் நிறுவனம் மற்றும் ராஜ்கமல் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளன. ரஜினி – கமல் – லோகேஷ் கனகராஜ் இணையும் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும், இதன் வெளியீடு ஆண்டு இறுதிக்கு திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் ‘கைதி 2’ தான் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு, இந்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னதாக,…
மதுரை: மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக சார்பில் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். விஜய் கட்சியுடன் கூட்டணி அமைப்பது பற்றி பொறுத்திருந்து பாருங்கள். கூட்டணி குறித்து யாரும் என்னிடம் பேசவில்லை. தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு இருக்குமா என்பதையும் பொறுத்திருந்தே பாருங்கள் என்றார்.
மும்பை: முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் அதன் தினசரி 1ஜிபி மொபைல் டேட்டா ரீசார்ஜ் திட்டத்தை நிறுத்தியுள்ளது. இதனால் இப்போது மொபைல் டேட்டா தேவைப்படும் ஜியோ வாடிக்கையாளர்கள் ரூ.299 என்ற பிளானின் கீழ் ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயத்தை எதிர்கொண்டுள்ளனர். இந்திய டெலிகாம் நிறுவனங்களில் முதன்மையானதாக திகழும் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது ரிலையன்ஸ் ஜியோ. கடந்த 2016-ல் தான் இந்த நிறுவனம் பொது பயன்பாட்டுக்கு சேவையை வழங்கி வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் டெலிகாம் சந்தையில் கிடுகிடுவென வளர்ச்சி கண்டது. அதற்கு காரணம், அந்த நிறுவனத்தின் ஆரம்ப கால ரீசார்ஜ் திட்டங்கள். இந்த சூழலில் தினசரி 1ஜிபி மொபைல் டேட்டா வழங்கும் ரீசார்ஜ் திட்டங்களான ரூ.209 (22 நாட்கள் வேலிடிட்டி) மற்றும் ரூ.249 (28 நாட்கள் வேலிடிட்டி) திட்டத்தை ஜியோ நிறுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் அழைப்புகள் மேற்கொள்ள முடியும். இந்த நிலையில்தான் இது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நாளொன்றுக்கு 1.5ஜிபி…
அர்ஜுனா சால், அர்ஜுனா பார்க் என்றும் அழைக்கப்படுகிறது, இது பாரம்பரியமாக இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கப் பயன்படுகிறது. இயற்கையான கார்டியோடோனிக் பண்புகளுக்கு பெயர் பெற்றது, இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், கொழுப்பின் அளவை நிர்வகிக்கவும், இதய தசையை வலுப்படுத்தவும் உதவுகிறது. ட்ரைடர்பெனாய்டுகள், ஃபிளாவனாய்டுகள், டானின்கள் மற்றும் அர்ஜுனோலிக் அமிலம் ஆகியவற்றில் பணக்காரர், இது இதயத்தை ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் அழற்சியிலிருந்து பாதுகாக்கிறது. விஞ்ஞான ஆராய்ச்சி அதன் ஆக்ஸிஜனேற்ற, அழற்சி எதிர்ப்பு, ஹைப்போலிபிடெமிக் மற்றும் உயர் இரத்த அழுத்த எதிர்ப்பு நன்மைகளை எடுத்துக்காட்டுகிறது, இது ஆஞ்சினா, இதய செயலிழப்பு மற்றும் அதிக கொழுப்பை நிர்வகிப்பதில் குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும். அதன் முழுமையான ஆதரவுடன், அர்ஜுன் சால் இயற்கை மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் இருதய ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதற்கான மதிப்புமிக்க மூலிகை நிரப்பியாக இருக்கிறார்.இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் அர்ஜுன் சால் எவ்வாறு உதவுகிறது1. இதய செயல்பாடு மற்றும் தசையை பலப்படுத்துகிறதுஅர்ஜுனா பார்க் உங்கள்…
கயா: இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் மீதும் ‘வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்தார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிஹாரில் ராகுல் காந்தி 16 நாள் யாத்திரையை தொடங்கியுள்ளார். யாத்திரையின் இரண்டாவது நாளான நேற்று கயாவில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, “தேர்தல் ஆணையத்தின் ‘வாக்கு திருட்டு’ பிடிபட்ட பிறகும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு என்னிடம் தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது. ‘வாக்கு திருட்டு’ என்பது பாரத மாதாவின் ஆன்மாவின் மீதான தாக்குதல். எங்களுக்கு சிறிது நேரம் கொடுங்கள், ஒவ்வொரு சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தொகுதியிலும் உங்கள் திருட்டை நாங்கள் கண்டுபிடித்து, மக்கள் முன் வைப்போம். அப்போது முழு நாடும் உங்களிடம் பிரமாணப் பத்திரம்…