இன்று உலக புகைப்பட தினத்தை உலகம் கொண்டாடுவதால், இந்தியாவின் ஐந்து மிக அழகான யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களை ஆராய இது சிறந்த நேரம், இது புகைப்பட ஆர்வலர்களுக்கு ஏற்றது. ஆகஸ்ட் 19 அன்று கொண்டாடப்படும் நாள் கலை, அறிவியல் மற்றும் புகைப்படத்தின் வரலாறு குறித்து மரியாதை அளிக்கிறது. இது அவர்களின் கேமராக்களை எடுத்துக்கொண்டு அவர்களைச் சுற்றியுள்ள அழகைக் கைப்பற்ற தொடக்க புகைப்படக் கலைஞர்களையும் தூண்டுகிறது. இந்தியாவில் பயணிகள் மற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கு, 42 வெவ்வேறு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் உள்ளன. ஃபோ ஒப் முடிவற்றது, ஆனால் சிலர் தங்கள் மூச்சடைக்கக்கூடிய அழகு மற்றும் காட்சி முறையீட்டிற்காக தனித்து நிற்கிறார்கள். இந்தியாவின் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் கைப்பற்றப்படக் காத்திருக்கும் பல கேள்விகளைக் கேட்காத பல கதைகளை வழங்குகின்றன – இவை காதல், துரோகம், மரணம், ஆன்மீகம் மற்றும் கல்லில் பொறிக்கப்பட்ட படைப்பாற்றல் ஆகியவற்றின் கதைகள். முதல் ஐந்து மடங்கு…
Author: admin
புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட இண்டியா கூட்டணி எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றம் இன்று வழக்கம்போல் காலை 11 மணிக்குக் கூடியது. மக்களவை கூடியதும் கேள்வி நேரம் தொடங்குவதாக சபாநாயகர் ஒம் பிர்லா அறிவித்தார். இதை எதிர்த்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தைக் கண்டித்தும் வாக்குகள் திருடப்படுவதாகக் குற்றம் சாட்டியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். கேள்வி நேரம் தொடர ஒத்துழைக்குமாறும் சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார். எனினும், எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி காரணமாக அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார். மாநிலங்களவை அதன் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தலைமையில் கூடியது. பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி 20 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் எனினும் அவை ஏற்கப்படாது என்றும் அவர் கூறினார். இதையடுத்து, மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில்…
டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இத்தனைப் போட்டிகள்தான் ஆடுவேன் என்று பணிச்சுமையைக் குறைக்க பும்ரா முடிவெடுப்பதை விட சில அர்த்தமற்ற ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடாமல் இருக்கலாமே. அவருக்கு பிசிசிஐ இந்தத் தொடர்களிலிருந்து ஓய்வு கொடுக்கலாம் தானே என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் பும்ரா மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் ஆடி இந்திய அணியை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்குத் தகுதி பெறச் செய்வதுதான் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர். இது தொடர்பாக தனியார் ஊடக நிறுவனம் ஒன்றுக்கு அவர் எழுதியுள்ள பத்தியில்: “இந்தியா இன்னும் இந்த ஆண்டில் 4 டெஸ்ட் போட்டிகளில்தான் ஆடப்போகிறது. வெள்ளைப்பந்து தொடர் என்றால் ஆசிய கோப்பை மட்டும்தான் பெரிய தொடர். மற்றபடி ஆஸ்திரேலியாவில் வெள்ளைப்பந்து தொடர், பிறகு நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா இந்தியா வந்து வெள்ளைப்பந்து தொடரில் ஆடுகின்றனர்” என தெரிவித்துள்ளார். இதில்…
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி குப்பையை வெள்ளியம்பாளையம் ஊராட்சி பாறைக்குழியில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை குண்டுக்கட்டாக போலீஸார் கைது செய்தனர். திருப்பூர் மாநகராட்சி சார்பில் குப்பை கொட்டுவதற்கு பல்வேறு பகுதிகளில் பயன்பாடற்ற பாறைக்குழிகளை தேர்வு செய்து குப்பை கொட்டப்பட்டு வந்தது. இதையடுத்து திருப்பூர் மாநகரை ஒட்டிய காளம் பாளையம், பொங்குபாளையம் என பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி குப்பை கொட்டுவதற்கு பொதுமக்கள் கடும் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதன் காரணமாக திருப்பூர் மாநகர் பகுதிகளில் சுமார் 15 நாட்களுக்கு மேலாக குப்பை எடுக்காமல் அனைத்து பகுதிகளுமே குப்பை மலை போல தேங்கி இருக்கிறது. திருப்பூர் மாநகரில் சுமார் 20,000 டன் குப்பை தேங்கி இருப்பதாக பல்வேறு கட்சிகளால் குற்றம் சாட்டப்படும் நிலையில், திருப்பூர் மாநகராட்சி குப்பையை ஊத்துக்குளி வட்டம் வெள்ளியம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பயன்பாடற்ற பாறைக்குழியில் மாநகராட்சி சார்பில் இன்று ( ஆக.19) காலை சுமார்…
பெரும்பாலும் ‘அமைதியான கொலையாளி’ என்று அழைக்கப்படுகிறது, உயர் இரத்த அழுத்தம் அல்லது உயர் இரத்த அழுத்தம் என்பது இதயம், மூளை, சிறுநீரகங்கள் மற்றும் தமனிகளை சேதப்படுத்தும் ஒரு கொடிய நிலை, சிறிய அல்லது எச்சரிக்கையுடன். உயர் இரத்த அழுத்தத்தின் அவசரம் மற்றும் அதிகரித்து வரும் நிகழ்வுகளைப் பார்த்து, அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (ஏ.எச்.ஏ) மற்றும் அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரி (ஏ.சி.சி) ஆகியவை இரத்த அழுத்தம் மற்றும் அதை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை விளக்கும் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன.உயர் இரத்த அழுத்தம் மற்றும் அறிவாற்றல் வீழ்ச்சி, பக்கவாதம் மற்றும் பிற மருத்துவ சிக்கல்கள் போன்ற சிக்கல்களுக்கு இடையிலான சரியான தொடர்பை அறிய இந்த வழிகாட்டுதல்களைப் புரிந்துகொள்வது கட்டாயமாகும். எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய முதல் 10 அத்தியாவசியங்கள் இங்கே
பாட்னா: உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியை அடுத்த தராளி கிராமத்தில் கடந்த 5-ம் தேதி மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டியது. ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் காணாமல் போயினர். இதனிடையே, பிஹார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 19 வயதுடைய 3 இளைஞர்கள் உத்தரகாசி பகுதிக்கு கூலி வேலைக்கு சென்றுள்ளனர். அவர்களை தொடர்பு கொள்ள குடும்பத்தினர் முயன்றுள்ளனர். ஆனால், முடியவில்லை. இதனால் வெள்ளத்தில் சிக்கி 3 பேரும் உயிரிழந்திருக்கலாம் என கருதிய அவர்களுடைய குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளை செய்தனர். இந்நிலையில், அந்த 3 பேரும் உயிருடன் வீடு திரும்பியதால் அவர்களுடைய குடும்பத்தினர் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “சம்பவம் நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பே அங்கிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கங்கோத்ரி பகுதிக்கு வேலைக்காக சென்றோம். இதனால் நாங்கள் உயிர் தப்பினோம்” என்றார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வீரர்கள் ஒப்பந்தத்தை வெளியிட்டுள்ளது, அதில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் தங்களின் முந்தைய உயர் நிலையிலிருந்து கீழே இறக்கப்பட்டுள்ளனர். ஆசியக் கோப்பை டி20 தொடருக்கான அணியிலிருந்து பாபர் அசாம், ரிஸ்வான் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக இவர்கள் நிலை ஏ-யிலிருந்து பி-நிலைக்கு இறக்கப்பட்டுள்ளது. இந்த முறை பிரிவு-ஏ என்ற வகையே இல்லாமல் செய்து விட்டது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். பாபர் அசாம், ரிஸ்வான் இருவரும் கடந்த வருட வீரர்கள் ஒப்பந்தத்தில் ஏ-பிரிவில் இருந்த இரண்டு வீரர்களாக இருந்தனர். இப்போது இவர்கள் பி-பிரிவுக்கு இறக்கப்பட்டுள்ளனர். பி- பிரிவில் 10 வீரர்கள்: அப்ரார் அகமது, பாபர் அசாம், ஃபகர் ஜமான், ஹாரிஸ் ராவுஃப், ஹசன் அலி, முகமது ரிஸ்வான், சயிம் அயூப், சல்மான் அலி ஆகா, ஷதாப் கான், ஷாஹின் ஷா அஃப்ரீடி. சி-பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள 10 வீரர்கள்: அப்துல்லா ஷஃபீக், ஃபாஹீம் அஷ்ரஃப், ஹசன் நவாஸ்,…
சென்னை: தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தொடரும், காவல் துறையிடம் அனுமதி கோரி கடிதம் வழங்கப்பட்டுள்ளது என உழைப்போர் உரிமை இயக்கம் தெரிவித்துள்ளது. சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் உழைப்போர் உரிமை இயக்க ஆலோசகர் வழக்கறிஞர் குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது: 13 நாட்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களை பொது நல வழக்கு என்ற நாடகத்தை நடத்தி, காவல் துறையைப் பயன்படுத்தி கலைத்தனர். இந்த பொதுநல வழக்கைத் தொடர்ந்த தேன்மொழி காவல் துறையினரின் படங்களை ஆவணமாக சமர்ப்பித்துள்ளார். இந்த வழக்கு காவல் துறையின் தூண்டுதலால்தான் தொடரப்பட்டுள்ளது. காவல் துறையின் அடக்குமுறை நடவடிக்கைகளை உயர் நீதிமன்றம் கண்டித்து, கைது செய்தவர்களை விடுவிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் போராட்டம் நடத்த தூய்மைப் பணியாளர்களுக்கு இடம் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. எங்களின் போராட்டம் இன்னும் முடியவில்லை; தொடரும். காவல் துறையிடம் போராட்டம் நடத்த அனுமதி கோரி கடிதம் வழங்கியுள்ளோம். அனுமதி வழங்கவில்லை எனில் அனுமதி…
சிறுநீரக கல் நோய் (கே.எஸ்.டி) என்பது உலகளவில் மிகவும் பொதுவான சிறுநீரக நிலைமைகளில் ஒன்றாகும், மேலும் அதன் பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வருகிறது. பாரம்பரியமாக ஆண்களில் மிகவும் பொதுவானதாகக் கருதப்படும், தேசிய மருத்துவ நூலகத்தால் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், பெண்கள், குறிப்பாக இளம் பருவத்தினர் மற்றும் இளைய பெரியவர்கள் ஆகியோரும் கணிசமாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. நிகழ்வுகளுக்கு அப்பால், ஆண்களிலும் பெண்களிலும் உள்ள சிறுநீரக கற்கள் வேறுபடுகின்றன என்பதை ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. வலி இருப்பிடம், அறிகுறி தீவிரம் மற்றும் வாழ்க்கைத் தர தாக்கம் ஆகியவை பெரும்பாலும் பாலினத்தால் வேறுபடுகின்றன, ஹார்மோன்கள், உடற்கூறியல் மற்றும் தொற்று ஆபத்து போன்ற காரணிகளால் பாதிக்கப்படுகின்றன. இந்த வேறுபாடுகளைப் புரிந்துகொள்வது நோயாளிகளுக்கு ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளை அடையாளம் காணவும், தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சை அணுகுமுறைகளுக்கு மருத்துவர்களை வழிநடத்தவும் உதவும்.சிறுநீரக கற்களில் பொதுவான வலி பகுதிகள்ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரில், சிறுநீரக கற்கள் பொதுவாக சிறுநீரக பெருங்குடல் எனப்படும் திடீர்,…
மும்பை: சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் மூத்த தலைவர் பிரியங்கா சதுர்வேதி. மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கிறார். அண்மையில் அவர் செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டியளித்தார். அப்போது, எதிர்க்கட்சி அணியில் உள்ள நீங்கள், பிரதமர் மோடியுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறீர்கள். இதன் காரணம் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த பிரியங்கா, “நான் எங்கு செல்கிறேன். என் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை அறிய சிலர் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். அவர்களை வெறுப்பேற்ற சில விஷயங்களை செய்கிறேன்” என்று தெரிவித்தார். அப்போது செய்தியாளர் கூறும்போது, “நீங்கள் சேலை அணிந்த சசி தரூர்” என்று குறிப்பிட்டார். காங்கிரஸ் மூத்த தலைவரான சசி தரூர், பிரதமர் நரேந்திர மோடியுடன் நெருக்கமாக உள்ளார். இதை செய்தியாளர் மறைமுகமாக சுட்டிக் காட்டினார். இதற்கு பதில் அளித்த பிரியங்கா, “இது புகழ்ச்சியா, வஞ்ச புகழ்ச்சியா என்று புரியவில்லை. இதை சசி தரூர் எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பார்…