புதுடெல்லி: பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவர் தாஹிர் ஹபீப். இவர் ஜம்மு-காஷ்மீரில் நடந்த மகாதேவ் ஆபரேஷனில் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது இறுதிச் சடங்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள அவரது கிராமத்தில் நடைபெற்றது. இதுதொடர்பாக டெலிகிராம் சேனல்களில் வெளியான வீடியோ மற்றும் புகைப்படங்களில் முன்னாள் பாகிஸ்தான் ராணுவ வீரரும், லஷ்கர்-இ-தொய்பா செயல்பாட்டாளருமான தாஹிர் ஹபீப்பின் இறுதிச் சடங்கில் ராவல்கோட்டில் உள்ள கை காலா கிராமத்தைச் சேர்ந்த முதியவர்கள் கூடியிருந்தனர். உள்ளூர் லஷ்கர்-இ-தொய்பா தளபதி ரிஸ்வான் ஹனிப் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முயன்றபோது அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதிலிருந்து பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கின்போது, லஷ்கர் இயக்கத்தினர் துக்கத்தில் ஈடுபட்டவர்களை துப்பாக்கியால் மிரட்டினர், ஆனால், கிராம மக்கள் அதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த சம்பவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு எதிராக மக்களின் எதிர்ப்பு அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுவதாக…
Author: admin
லெக்சிங்டன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், அனிருத் சந்திரசேகர் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் உள்ள லெக்சிங்டன் நகரில் ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் இறுதிச் சுற்றுப் போட்டியில் ராம்குமார், அனிருத் ஜோடி 6-4, 6-4 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் யூ ஹிசியூ ஹுசு, ரே ஹோ ஹுவாங் ஜோடியை வீழ்த்தியது.
சென்னை: சென்னையில் மெரினா கடற்கரை மற்றும் நீர்நிலை பகுதிகளில் ஏராளமான மக்கள் குவிந்து நேற்று ஆடிப்பெருக்கு விழாவை உற்சாகத்துடன் கொண்டாடினர். புதிய தாலி மாற்றிக்கொண்டு வழிபாடு செய்தனர். ஆண்டுதோறும் ஆடி மாதம் 18-ம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. நீர்வளம் பெருகி, பயிர்கள் செழிக்க வேண்டும், மக்கள் வளம் பெற வேண்டும் என்று பிரார்த்தித்து, ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் மக்கள் இந்த நாளில் பூஜை செய்து வழிபடுவார்கள். தமிழகத்தில் திருச்சி காவிரி கரை, மதுரை வைகை ஆற்றங்கரை, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றங்கரை உள்ளி்ட்ட இடங்களில் ஆடிப்பெருக்கு விழா நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், கோவளம் கடற்கரை பகுதிகள், ஏரிக்கரைகளில் மக்கள் ஏராளமாக குவிந்து ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர். புத்தாடை உடுத்தி வந்த புதுமண தம்பதியர், தாலியை மாற்றிக்கொண்டு வழிபாடு நடத்தினர். திருமணம் ஆகாத இளம்பெண்கள், மஞ்சள் சரடு அணிந்து பிரார்த்தனை செய்து,…
திருவள்ளூர்: தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தனது முதற்கட்ட சுற்றுப்பயணத்தை நேற்று கும்மிடிப்பூண்டியில் தொடங்கினார். முன்னதாக, கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் விநாயகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். ’உள்ளம் தேடி’ ’இல்லம் நாடி’, ’கேப்டனின் ரதயாத்திரை’ ’மக்களை தேடி மக்கள் தலைவர்’ ஆகிய பெயர்களில் தொடங்கப்பட்டுள்ள இந்த பயணத்தில், விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்துக்காக பயன்படுத்தும் வாகனத்தில் சென்று பிரச்சாரம் செய்தார். ஆரம்பாக்கம், எளாவூர், கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை, மாதர்பாக்கம், பாலவாக்கம், சீத்தஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்தார். அப்போது, அவர் தேநீர் கடை ஒன்றில் தேநீர் அருந்தினார். வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான தேமுதிக தொண்டர்கள் தங்கள் கட்சி கொடியை ஏந்தி வரவேற்றனர். பிரச்சாரத்தின்போது பிரேமலதா பேசியதாவது: இந்த சுற்றுப்பயணம் ஆடிப் பெருக்கு நாளில் தொடங்கப்பட்டுள்ளது. ஆகவே, இனி தேமுதிக தொடர்ந்து வெற்றியை பெறும். தேமுதிக இடம்பெறும் கூட்டணி, வரும்…
குழந்தை பெயரைத் தேர்ந்தெடுப்பது தனிப்பட்டது. சில பெற்றோருக்கு, இது அர்த்தத்தைப் பற்றியது. மற்றவர்களுக்கு, இது அழகு பற்றியது. சில நேரங்களில், இது கலாச்சாரம், வரலாறு அல்லது குடும்பத்திற்கு ஒரு ஒப்புதல். எப்போதாவது, இது ஒரு பெயர், அவர்கள் சத்தமாக சொல்வதை நிறுத்த முடியாது.ஆனால் ஒவ்வொரு முறையும், அவர்கள் காதலிக்கும் பெயர்… சிக்கலானது. அதில் வசீகரம் இல்லாததால் அல்ல, ஆனால் மற்றவர்கள் அதைச் சரியாகச் சொல்வதாகத் தெரியவில்லை. ஆசிரியர் ரோல் அழைப்பில் இடைநிறுத்தப்படுகிறார். காபி கோப்பைகளில் பாரிஸ்டாஸ் ஸ்கிரிபிள் காட்டு யூகங்கள். அந்நியர்கள் கேட்கிறார்கள், “நீங்கள் அதை மீண்டும் எப்படி சொல்கிறீர்கள்?”இன்னும், பல பெற்றோர்கள் தங்கள் விருப்பப்படி நிற்கிறார்கள். ஒரு பெயர் வெறும் ஒலியை விட அதிகமாக இருப்பதால், அது அடையாளம், நோக்கம் மற்றும் கதை. அமெரிக்காவில் மிகவும் தவறாக உச்சரிக்கப்படும் குழந்தை பெயர்கள் இங்கே உள்ளன, அவை ஏன் இன்னும் மிகவும் நேசிக்கப்படுகின்றன.
உங்கள் நண்பர் ஏன் லாவெண்டர் மீது ஊசலாடுகிறார் என்று எப்போதாவது யோசித்துப் பாருங்கள், ஆனால் அது டிஷ் சோப் போல வாசனை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? . மாறிவிடும், இது ஸ்னோபரி அல்லது வித்தியாசமான சுவை அல்ல, இது உங்கள் டி.என்.ஏ. ஆமாம், விஞ்ஞானிகள் சுற்றித் திரிந்து வருகின்றனர் (அதாவது) மற்றும் நம் மரபணுக்கள் நாம் எவ்வாறு வாசனையை அனுபவிக்கிறோம் என்பதை வியத்தகு முறையில் பாதிக்கக்கூடும் என்பதைக் கண்டறிந்தது. வாசனை நீங்கள் நினைப்பதை விட தனிப்பட்டது. இது நினைவகம் அல்லது அதிர்வுகளைப் பற்றியது மட்டுமல்ல, இது உங்கள் மரபணு வரைபடத்தைப் பற்றியது. கொலோன் இடைகழி முதல் சில உணவுகளுக்கு உங்கள் எதிர்வினை வரை, உங்கள் மூக்கின் சுவை உங்கள் டி.என்.ஏவில் எழுதப்பட்டுள்ளது. ஆகவே, உங்களுக்கு பிடித்த மெழுகுவர்த்தியை வெறுப்பதற்காக யாரையாவது தீர்மானிப்பதற்கு முன், அதற்கு பதிலாக அவர்களின் ஆல்ஃபாக்டரி ஏற்பிகளைக் குறை கூறலாம். டி.என்.ஏ மற்றும் எப்படி என்று டைவ் செய்வோம்…
போபால்: மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சவுர் மாவட்டத்தில் உள்ள ஜவாசியா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஷோஹன்லால் ஜெயின் (71), அம்பலால் பிரஜாபதி (51). இவர்கள் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள். ஷோஹன்லால் கடந்த இரண்டு ஆண்டுகளாக புற்றுநோயால் போராடி வந்த நிலையில் அண்மையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால் சாவதற்கு முன்பாக அவர் எழுதிய கடிதத்தில் தனது இறுதி ஊர்வலத்தின்போது எனது உயிர் நண்பர் அம்பலால் பிரஜாபதி நடனமாடி என்னை வழியனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். ஷோஹன்லாலின் கடைசி ஆசையை நிறைவேற்றும் விதமாக அவரது நண்பர் அம்பலால் இறுதிச் சடங்கில் பங்கேற்று கண்ணீருடன் நடனமாடினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இதுகுறித்து அம்பலால் கூறுகையில், “எனது நண்பருக்கு சத்தியம் செய்து கொடுத்திருந்தேன். அவரது இறுதி ஊர்வலத்தின்போது நடனம் ஆடுவேன் என்று. அதனை இப்போது நிறைவேற்றியுள்ளேன். நண்பருக்கும் மேலானவர் அவர். ஷோஹன்லால் எனது நிழல் போன்றவர்’’ என்றார். ‘‘நல்ல…
லண்டன்: இந்தியாவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 4வது இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக், ஜோ ரூட் ஆகியோர் சதம் விளாசினர். இங்கிலாந்து அணி 76 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும், 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டி கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 224 ரன்களும், இங்கிலாந்து அணி 247 ரன்களும் எடுத்தன. 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி…
சென்னை: “நான் திமுக உடன் கூட்டணி வைக்கப் போவதாகவும், அக்கட்சியில் இணையப் போவதாகவும் பரவும் தகவலில் எள்ளளவும் உண்மையில்லை” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அண்மையில் முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தார் ஓபிஎஸ். அதோடு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு அறிவித்தது. அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இது அரசியல் ரீதியாக பேசு பொருளானது. இது குறித்து திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக, பாஜக கூட்டணி கட்சியினர் தங்களது கருத்தை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இன்று (ஆக.4) ஓபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியவர்களை அவர்களது இல்லம் தேடிச் சென்று நலம் விசாரிப்பதும், உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்து துக்கம் விசாரித்து அஞ்சலி செலுத்துவதும் தமிழ்ப் பண்பாடு. இந்த வகையில், முதல்வர் ஸ்டாலின்…
தியானத்தைப் பற்றி விந்தையான மிரட்டல் ஒன்று இருக்கிறது. இது ஒரு அதிசய சிகிச்சை சிறந்த கவனம், குறைந்த மன அழுத்தம், சிறந்த தூக்கம், அமைதியான மனநிலைகள் போல மக்கள் இதைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால் பின்னர் அவர்கள் “நீங்கள் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு மணிநேரம் செய்ய வேண்டும்” அல்லது “90 நாட்கள் சீரான பயிற்சிக்குப் பிறகு மட்டுமே முடிவுகளைப் பார்ப்பீர்கள்” போன்ற விஷயங்களைச் சொல்கிறார்கள், திடீரென்று நீங்கள் செய்ய வேண்டிய பட்டியலில் நீங்கள் சரியாகச் செய்யவில்லை என்று மற்றொரு விஷயமாக உணர்கிறீர்கள்.எனவே இங்கே ஒரு மூச்சு எடுப்போம். ஒவ்வொரு நாளும் நீங்கள் எவ்வளவு நேரம் தியானிக்க வேண்டும் என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், இது உங்கள் அடித்தளமான, நேர்மையான வழிகாட்டி.முதலில், தியானம் உண்மையில் என்ன?தியானம் என்பது ஒரு இமயமலை சிகரத்தில் தூபம், கோஷமிடுதல் அல்லது துறவி போல உட்கார்ந்திருக்கும் சில மாய செயல்கள் அல்ல. அதன் மையத்தில், தியானம் என்பது…