சென்னை: நாமக்கல் மாவட்டத்தில் பெருமளவில் சிறுநீரகக் கொள்ளை நடந்ததால் மக்களிடம் ஏற்பட்ட அச்சமும், பதட்டமும் விலகுவதற்கு முன் பாகவே, அதே மாவட்டத்தில் ஏழைகளைக் குறிவைத்து கல்லீரல் திருட்டும் நடைபெற்றிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்: “நாமக்கல் மாவட்டத்தில் பெருமளவில் சிறுநீரகக் கொள்ளை நடந்ததால் மக்களிடம் ஏற்பட்ட அச்சமும், பதட்டமும் விலகுவதற்கு முன்பாகவே, அதே மாவட்டத்தில் ஏழைகளைக் குறிவைத்து கல்லீரல் திருட்டும் நடைபெற்றிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. போதைப் பொருள் விற்பனையில் தொடங்கி மனித உடல் உறுப்புத் திருட்டு வரை அனைத்து சட்டவிரோத செயல்களையும் திமுக அரசு ஊக்குவித்து வருவது கண்டிக்கத்தக்கது. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் நகரத்தைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் கந்து வட்டிக்கு வாங்கியக் கடனை அடைக்க முடியாமல் தடுமாறி வந்த நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அவரை அணுகிய இடைத்தரகர்கள் அவரது சிறுநீரகத்திற்கு…
Author: admin
எடை இழப்பு ஒரு புதிய டிஜிட்டல் சகாப்தத்தில் நுழைகிறது, செயற்கை நுண்ணறிவு (AI) தனிப்பட்ட ஆரோக்கிய பயணங்களில் ஒரு சக்திவாய்ந்த தோழராக மாறுகிறது. உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி நிபுணர் சிம்ரன் வலெச்சா சமீபத்தில் ஒரு எளிய சாட்ஜிப்ட் வரியில் பயன்படுத்தி 10 கிலோவை எவ்வாறு வெற்றிகரமாக இழந்தார் என்பதைப் பகிர்ந்து கொண்டார். AI ஐ மேம்படுத்துவதன் மூலம், அவர் தனது அன்றாட அட்டவணை, செயல்பாட்டு நிலைகள் மற்றும் உணவு விருப்பங்களைச் சுற்றி வடிவமைக்கப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட இந்திய உணவு விளக்கப்படத்தை உருவாக்கினார், இதனால் அவரது எடை இழப்பு திட்டத்தை நடைமுறை மற்றும் நிலையானது. இந்த அணுகுமுறை ஊட்டச்சத்தை சமரசம் செய்யாமல் பிடித்த உணவுகளை அனுபவிக்கவும், பொதுவான உணவு முறைகளைத் தவிர்க்கவும், சீராக இருக்கவும் அனுமதித்தது. வடிவமைக்கப்பட்ட, நெகிழ்வான மற்றும் பயனுள்ள எடை மேலாண்மை உத்திகளை வடிவமைப்பதில் AI இன் திறனை அவரது பயணம் நிரூபிக்கிறது, நீண்டகால உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி இலக்குகளை அடைய…
புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சுதர்ஷன் ரெட்டி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரை அறிவிக்கும் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திமுக எம்பி கனிமொழி, திரிணமூல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ’பிரையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து வேட்பாளரை தேர்வு செய்துள்ளன. ஒருமித்த கருத்தின் அடிப்படையில் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது இந்திய ஜனநாயகத்துக்கும், அரசியலமைப்புக்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றி. அரசியலமைப்பு ஆபத்தில் இருக்கும்போதெல்லாம் அதைக் காப்பாற்ற நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுகிறோம். இந்த தேர்தலில், நாட்டுக்கு நல்ல…
‘சிக்கந்தர்’ தோல்விக்கான காரணங்களை வெளிப்படையாக விவரித்து இருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் வெளியான படம் ‘சிக்கந்தர்’. இப்படம் மாபெரும் தோல்வி படமாக அமைந்தது. ஏ.ஆர்.முருகதாஸ் படங்களில் பெரும் தோல்வியை தழுவிய படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘மதராஸி’ படத்தினை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ‘மதராஸி’ படத்தினை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில், ‘சிக்கந்தர்’ தோல்வி குறித்து பேசியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அதில், “படப்பிடிப்பு தளத்தில் மாற்றங்கள் இருப்பது ஒரு கட்டத்தில் எவ்வளவு பெரிய இயக்குநராக இருந்தாலும் கதையில் இருந்து கனெக்ட் ஆகாமல் போய்விடுவோம். இதே மாதிரி நிறைய விஷயங்கள் இருக்கிறது. அனைத்தையும் வெளியே சொல்ல முடியாது.கதையில் மெருக்கேற்றுவது என்பது வேறு. ஆனால் கதையில் மாற்றங்கள், முழுக்க இரவு நேரம் மட்டுமே படப்பிடிப்பு, காலையில் எடுக்க வேண்டிய காட்சிகளை எல்லாம் அரங்குகளுக்குள் விளக்குகளை வைத்து படமாக்க வேண்டும். சல்மான்கானை வைத்து பொது இடத்தில் படப்பிடிப்பு நடத்த முடியாது.…
சென்னை: ‘மனுஷி’ படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க கூறியதை எதிர்த்து தயாரிப்பாளர் வெற்றிமாறன் தாக்கல் செய்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் படத்தை ஆகஸ்ட் 24ம் தேதி பார்வையிடவுள்ளார். நடிகை ஆன்ட்ரியா நடித்துள்ள ‘மனுஷி’ திரைப்படத்தை, இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. படத்தை இயக்குநர் கோபி நயினார் இயக்கியுள்ளார். படத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தில் 37 ஆட்சேபகரமான காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, அந்த காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க சென்சார் போர்டு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, பட தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, விதிகளுக்கு முரணாக சென்சார் போர்டு இந்த ஆட்சேபங்களை தெரிவித்துள்ளதாகவும், 37 காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க கூறியுள்ளதாகவும் வெற்றிமாறன் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு மாற்று…
செல்லப்பிராணிகளாக பறவைகளை வைத்திருப்பது உங்கள் வாழ்க்கைக்கு அழகைச் சேர்ப்பது மட்டுமல்லாமல், நிறைய மகிழ்ச்சியையும் தோழமையையும் ஒரு வீட்டிற்கு கொண்டு வருகிறது. எனவே, இங்கே சில தொடக்க நட்பு செல்லப்பிராணி பறவைகளை பட்டியலிடுகிறோம். இருப்பினும், ஒரு வீட்டைப் பெறுவதற்கு முன்பு உங்கள் உள்ளூர்/ நாட்டின் சட்டங்களை சரிபார்க்கவும்:
புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். ‘தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும். ஏனெனில், அவர் இந்த பொறுப்புக்கு சரியான மற்றும் சிறந்த தேர்வு என கருதுகிறோம். அவர் மிகவும் பணிவானவர். இது தொடர்பாக அமைச்சர் ராஜ்நாத் சிங், அனைத்து கட்சி தலைவர்கள் உடன் பேசி வருகிறார்’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாக தகவல். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளராக தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். இந்த சூழலில் இன்று (ஆக.19) காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்துக்கு பிறகு எதிர்க்கட்சி சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில்…
சென்னை: திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு மனைவியும் , அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகா தேவி பாலுவின் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலுவின் துணைவியாரும், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகாதேவி பாலு மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். கணவரும் மகனும் பொதுவாழ்க்கையில் ஈடுபட உறுதுணையாக இருந்து, தமது அன்பாலும் அரவணைப்பாலும் அவர்களது பணிகளுக்கு ஊக்கமளித்து, அமைதியாக அவர்களது வெற்றியின் பின்னணியாக இயங்கியவர் ரேணுகா தேவி பாலு. அத்தகைய பெருந்துணையின் மறைவு எவராலும் ஈடுசெய்யவியலாத பேரிழப்பு. அன்னாரை இழந்து தவிக்கும் நண்பர் டி.ஆர்.பாலு, தம்பி டி.ஆர்.பி. ராஜா ஆகியோருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இன்று உலக புகைப்பட தினத்தை உலகம் கொண்டாடுவதால், இந்தியாவின் ஐந்து மிக அழகான யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களை ஆராய இது சிறந்த நேரம், இது புகைப்பட ஆர்வலர்களுக்கு ஏற்றது. ஆகஸ்ட் 19 அன்று கொண்டாடப்படும் நாள் கலை, அறிவியல் மற்றும் புகைப்படத்தின் வரலாறு குறித்து மரியாதை அளிக்கிறது. இது அவர்களின் கேமராக்களை எடுத்துக்கொண்டு அவர்களைச் சுற்றியுள்ள அழகைக் கைப்பற்ற தொடக்க புகைப்படக் கலைஞர்களையும் தூண்டுகிறது. இந்தியாவில் பயணிகள் மற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கு, 42 வெவ்வேறு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் உள்ளன. ஃபோ ஒப் முடிவற்றது, ஆனால் சிலர் தங்கள் மூச்சடைக்கக்கூடிய அழகு மற்றும் காட்சி முறையீட்டிற்காக தனித்து நிற்கிறார்கள். இந்தியாவின் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் கைப்பற்றப்படக் காத்திருக்கும் பல கேள்விகளைக் கேட்காத பல கதைகளை வழங்குகின்றன – இவை காதல், துரோகம், மரணம், ஆன்மீகம் மற்றும் கல்லில் பொறிக்கப்பட்ட படைப்பாற்றல் ஆகியவற்றின் கதைகள். முதல் ஐந்து மடங்கு…
புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட இண்டியா கூட்டணி எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றம் இன்று வழக்கம்போல் காலை 11 மணிக்குக் கூடியது. மக்களவை கூடியதும் கேள்வி நேரம் தொடங்குவதாக சபாநாயகர் ஒம் பிர்லா அறிவித்தார். இதை எதிர்த்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தைக் கண்டித்தும் வாக்குகள் திருடப்படுவதாகக் குற்றம் சாட்டியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். கேள்வி நேரம் தொடர ஒத்துழைக்குமாறும் சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார். எனினும், எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி காரணமாக அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார். மாநிலங்களவை அதன் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தலைமையில் கூடியது. பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி 20 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் எனினும் அவை ஏற்கப்படாது என்றும் அவர் கூறினார். இதையடுத்து, மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில்…