Author: admin

மதுரை: மதுரை பாரபத்தியில் ஆகஸ்ட் 21-ம் தேதி (நாளை மறுநாள்) நடக்கும் விஜய்யின் தவெக மாநில மாநாட்டுக்கான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி, மாநாட்டு திடல் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மதுரை அருகே அருப்புக்கோட்டை – தூத்துக்குடி சாலையில் பாரபத்தி என்ற இடத்தில் தவெகவின் 2-வது மாநில மாநாடு நாளை மறுநாள் (ஆக.21) நடக்கிறது. சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் எல்இடி திரைகளுடன் கூடிய டிஜிட்டல் விடிவிலான மேடை, பார்வையாளர்கள் கேலரிகள், வாகன பார்க்கிங், மாநாட்டுத் திடலை சுற்றிலும் கட்சி கொடி தோரணங்கள், பேனர்கள், தற்காலிக கழிப்பறைகள், குடிநீர், மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், திடலை சுற்றிலும் வண்ண மின் விளக்குகள் என மாநாடுக்கான பல்வேறு ஏற்பாடுகளும் இறுதிக் கட்டத்தை எட்டியபோதிலும் மாநாட்டு திடல் ஏறக்குறைய தயார் நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் மதுரை மாவட்ட செயலாளர்கள் கல்லாணை, தங்கப் பாண்டி…

Read More

விறைப்புத்தன்மை (ED) என்பது உலகெங்கிலும் பல ஆண்களை பாதிக்கும் ஒரு பொதுவான நிலை, இது பாலியல் செயல்திறனை மட்டுமல்ல, நம்பிக்கை மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கிறது. இது இதய நோய் அல்லது நீரிழிவு போன்ற உடல் ஆரோக்கிய பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற உளவியல் காரணிகளால் ஏற்படலாம். வழக்கமான சிகிச்சையுடன் தங்கள் பாலியல் ஆரோக்கியத்தை ஆதரிப்பதற்கான இயற்கையான வழிகளை பல ஆண்கள் தேடுகிறார்கள்.ஆயுர்வேத மருத்துவத்தில் பிரபலமான மூலிகையான அஸ்வகந்தா, மன அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் ஹார்மோன் அளவைக் குறைக்கும் திறனுக்காக அறியப்படுகிறது, குறிப்பாக டெஸ்டோஸ்டிரோன். சுகாதார அறிவியல் அறிக்கைகளில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, அஸ்வகந்தா ரூட் சாறு வயதுவந்த ஆண்களில் பாலியல் ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்தியது. 8 வார காலப்பகுதியில், பங்கேற்பாளர்கள் 300 மி.கி அஸ்வகந்தா தினசரி இரண்டு முறை எடுத்துக் கொண்டனர்.விறைப்புத்தன்மை மற்றும் அஸ்வகந்தாவின் பங்கு ஆகியவற்றைப் புரிந்துகொள்வதுவிறைப்புத்தன்மை (ED) என்பது பாலியல் செயல்பாடுகளுக்கு…

Read More

புதுடெல்லி: உக்​ரைன் போர் தொடர்​பாக பிரதமர் நரேந்​திர மோடி​யும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் தொலைபேசி​யில் நேற்று முக்​கிய ஆலோ​சனை நடத்​தினர். கடந்த 2022-ம் ஆண்டு முதல் ரஷ்​யா, உக்​ரைன் இடையே போர் நடை​பெற்று வரு​கிறது. இரு நாடு​கள் இடையே போர் நிறுத்​தத்தை ஏற்​படுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமரச முயற்​சி​யில் ஈடு​பட்​டிருக்​கிறார். இதுதொடர்​பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அமெரிக்க அதிபர் ட்ரம்​பும் கடந்த 15-ம் தேதி அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாணம் ஆங்​கரேஜ் நகரில் சந்​தித்​துப் பேசினர். மூன்று மணி நேரம் நீடித்த இந்த சந்​திப்​பின்​போது எந்த ஒப்​பந்​த​மும் கையெழுத்​தாக​வில்​லை. எனினும் பல்​வேறு விவ​காரங்​களில் உடன்​பாடு எட்​டப்​பட்டு இருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்​புடன் நடத்​திய பேச்​சு​வார்த்தை குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நெருங்​கிய நட்பு நாடு​களிடம் விவரித்து வரு​கிறார். இதன் ஒரு பகு​தி​யாக அதிபர் புதின் நேற்று பிரதமர் மோடியை…

Read More

‘பைசன்’ மூலம் கிடைத்த அனுபவங்கள் தொடர்பாக சிலாகித்துப் பேசியிருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பைசன்’. தீபாவளிக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் மூலம் கிடைத்த அனுபவம் தொடர்பாக பேட்டியொன்றில் கூறியிருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன். ‘பைசன்’ தொடர்பாக அனுபமா பரமேஸ்வரன், “எனக்கு ‘பைசன்’ ரொம்பவே ஸ்பெஷலான படம். ‘பரியேறும் பெருமாள்’ கதையினை மாரி செல்வராஜ் முதலில் என்னிடம் தான் கூறினார். அந்தச் சமயத்தில் பல்வேறு தெலுங்கு படங்களில் நடித்து வந்ததால் தேதிகள் ஒதுக்கி கொடுக்க முடியவில்லை. ஏனென்றால் அவர் இறுதிகட்டத்தில் என்னை அழைத்தார். அதில் நடிக்க முடியாமல் போனதற்கு இப்போது வரை வருந்திக் கொண்டிருக்கிறேன். ‘மாமன்னன்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தார். அப்போதும் பல்வேறு படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் நடிக்க முடியவில்லை. கடைசியாக ‘பைசன்’ படத்துக்காக அழைத்து பேசினார்.…

Read More

வேலூர்: அணைக்கட்டு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள எடப்பாடி கே.பழனிசாமி வந்த நிலையில், கூட்டத்தில் நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ் கடந்து செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ‘அடுத்த கூட்டத்தில் வேண்டுமென்றே ஆளில்லாத ஆம்புலன்ஸ் வந்தால் அதன் ஓட்டுநர் நோயாளியாக செல்வார்’ என எடப்பாடி கே.பழனிசாமி எச்சரிக்கை விடுத்தார். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்றுப்பயணத்தில் நேற்று இரவு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அணைக்கட்டில் பேசுவதற்காக எடப்பாடி பழனிசாமி வாகனம் வந்து நின்ற உடனே, அருகே இருந்த சிறிய தெருவில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் வந்தது. அதில் நோயாளி இல்லாமல் இருப்பதை அதிமுக தொண்டர்கள் கண்டுபிடித்தனர். இந்த தகலால் அதிருப்தி அடைந்த எடப்பாடி கே.பழனிசாமி, “என்னோட ஒவ்வொரு கூட்டத்திலும் இதேபோல் ஆளே இல்லாமல் ஆம்புலன்சை தொடர்ச்சியா அனுப்பி மக்களை சிரமத்துக்கு உள்ளாக்கும் வேலையை இந்த கேவலமான அரசு செய்கிறது. இதனால்…

Read More

மும்பை கடந்த மூன்று நாட்களாக பெய்த மழையை அனுபவித்து வருகிறது. மும்பை தொடர்ந்து நனைந்து போவதால் மழையில் நீர்ப்பாசனம், உள்ளூர் ரயில் சேவைகளில் இடையூறு ஏற்படுவது மற்றும் பல இந்திய விமான நிறுவனங்கள் பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளன. உள்ளூர் செய்தி அறிக்கையின்படி, மழை ஏழு அப்பாவி உயிர்களைக் கொன்றது மற்றும் அன்றாட வாழ்க்கையை கடுமையான மட்டத்தில் தொந்தரவு செய்தது. இந்திய வானிலை ஆய்வு துறை (ஐஎம்டி) மும்பைக்கு சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அனி அறிக்கையின்படி, மும்பை சுமார் 300 மில்லிமீட்டர் (மிமீ) மழையைப் பெற்றது, அடுத்த சில மணிநேரங்களுக்கு கொங்கன் மற்றும் காட் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை செல்லுபடியாகும். மும்பை மற்றும் அண்டை மாவட்டங்களில் தானே, பால்கர் மற்றும் ராய்காட் உள்ளிட்ட “சிவப்பு” எச்சரிக்கையின் (செவ்வாய்க்கிழமை) கீழ் உள்ள அண்டை மாவட்டங்களில் ரயில் தொடர வாய்ப்புள்ளது என்றும் வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், இண்டிகோ ஒரு பயண ஆலோசனையை வெளியிட்டது, இது…

Read More

புதுடெல்லி: ககன்யான் திட்டம் உலக மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பின்போது விண்வெளி வீரர் குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லா தெரிவித்துள்ளார். வரலாற்று சிறப்புமிக்க சர்வதேச விண்வெளி நிலையத்துக்கான பயணத்தை வெற்றிகரமாக முடித்த விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா, நேற்று (ஆக.18) பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது இருவருக்கும் இடையே நடந்த கலந்துரையாடலின்போது, பிரதமர் மோடி எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு ஷுபன்ஷு சுக்லா பதில் அளித்தார். அதன் விவரம்: பிரதமர் மோடி: சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்தியர் நீங்கள். இதை எவ்வாறு உணருகிறீர்கள்? மக்கள் எத்தகைய கேள்விகளைக் கேட்கிறார்கள்? சுபன்ஷு சுக்லா: நான் எங்கு சென்றாலும், யாரைச் சந்தித்தாலும், எல்லோரும் என்னைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர், மிகவும் உற்சாகமடைகின்றனர். இதில் முக்கிய விஷயம், விண்வெளித் துறையில் இந்தியா என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். பலரும் ககன்யான் பற்றி அதிக உற்சாகமடைந்துள்ளனர்.…

Read More

‘மீசைய முறுக்கு 2’ மூலம் மீண்டும் இயக்குநராக களமிறங்க இருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி. ஹிப் ஹாப் ஆதி கடைசியாக இயக்கி, நடித்து தயாரித்த படம் ‘கடைசி உலகப் போர்’. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதனை தொடர்ந்து பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார். ஆனால், எதுவுமே அடுத்த கட்டத்துக்கு நகராமல் இருந்தது. இதனால், தனது அடுத்த படத்தினை தானே இயக்கி நடிக்க முடிவு செய்துவிட்டார் ஹிப் ஹாப் ஆதி. சுந்தர்.சி தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. ‘மீசைய முறுக்கு 2’ என்ற பெயரில் உருவாகும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய பொறுப்புகளை ஏற்று நடிக்கவும் உள்ளார் ஹிப் ஹாப் ஆதி. ‘மீசைய முறுக்கு’ படத்தினை எழுதி, இயக்கி, நடித்திருந்தார் ஹிப் ஹாப் ஆதி. அப்படம் மாபெரும் வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து 2-ம்…

Read More

கல்லீரல் முறைகேட்டை விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து பெறப்படும் உடல் உறுப்புகள், ஏற்கெனவே பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தானம் அளிக்கப்படுகிறது. அதேநேரம், உயிருடன் இருப்பவர்கள் சிறுநீரகம், கல்லீரலை தானம் அளித்து வருகின்றனர். இந்நிலையில், ஏழ்மை நிலையில் உள்ள மக்களை பயன்படுத்தி, இடைத்தரகள்கள், பணத்துக்காக ஒரு சிறுநீரகம், கல்லீரலில் ஒரு பகுதியை பெற்று விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக, போலி ஆவணங்களை தயாரித்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற முறைகேடுகள் நடந்து வருவதாக கூறப்படும் நிலையில், நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் அதிகளவு முறைகேடு நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த முறைகேட்டுக்கு காரணமாக இருந்த தனியார் மருத்த்டுவமனைகள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய நிரந்தர தடை விதிக்கப்பட்டது. இந்த முறைகேட்டில் இவற்றை தாண்டி வேறு நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், அதே மாவட்டத்தில் கல்லீரல் முறைகேடு…

Read More

உலகெங்கிலும் உள்ள பல்வேறு அரச குடும்பங்கள் பெரும்பாலும் மக்களால் பார்க்கப்படுகின்றன- அவர்கள் தங்கள் வாழ்க்கை, பேஷன் சென்ஸ் அல்லது அதற்கு மேற்பட்டவற்றை நடத்தும் விதத்தில் இருக்கலாம். இருப்பினும், சில நேரங்களில் ராயல்கள் கவனத்தை ஈர்க்கின்றன, ஆனால் எல்லா தவறான காரணங்களுக்காகவும். மரியஸ் போர்க் ஹைபியின் சமீபத்திய செய்தி- நோர்வேயின் ராயல் குடும்பத்தின் உறுப்பினர்- ஒரு புதிய ஊழலின் மத்தியில் உள்ளவர்.நோர்வேயை அதிர்ச்சிக்குள்ளாக்கிய மற்றும் உலகளாவிய கவனத்தை ஈர்த்த ஒரு வழக்கில், கிரீடம் இளவரசி மெட்டே-மாரிட்டின் 28 வயதான மகன் மரியஸ் போர்க் ஹைபி, 32 கடுமையான குற்றவியல் குற்றங்களுக்காக முறையாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார், இதில் நான்கு கற்பழிப்பு, வீட்டு வன்முறை, தாக்குதல் மற்றும் பல குற்றங்கள் உட்பட, அறிக்கையின்படி. 2026 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஹைபி விசாரணையை எதிர்கொள்வார் என்று வழக்குரைஞர்கள் உறுதிப்படுத்தினர், குற்றச்சாட்டுக்கு ஆளானால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.ராயல் சர்ச்சை பற்றிஒஸ்லோ மாநில வழக்கறிஞர் ஸ்டர்லா…

Read More