நாகார்ஜுனாவின் 100-வது படத்தை இயக்கும் வாய்ப்பு ‘நித்தம் ஒரு வானம்’ படத்தை இயக்கிய ரா.கார்த்திக் வசம் வந்துள்ளது அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி உள்பட பலர் நடித்த படம், ‘நித்தம் ஒரு வானம்’. கடந்த 2022-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதை ரா.கார்த்திக் இயக்கி இருந்தார். இந்த நிலையில், நாகார்ஜுனாவின் 100-வது படத்தை இயக்கும் வாய்ப்பு ரா.கார்த்திக் வசம் வந்துள்ளது. இதனை நாகார்ஜுனா பேட்டி ஒன்றில் உறுதி செய்திருக்கிறார். இது குறித்து கூறிய அவர், “தமிழ் இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில் என்னுடைய 100-வது படம் உருவாகிறது. இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட்டிருக்கிறோம். ‘கூலி’ தற்போது வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படுகிறது. “இது ஆக்ஷன், ஃபேமிலி சென்டிமென்ட், டிராமா கலந்து உருவாகும் படம். இதில் நான் கதாநாயகனாக நடிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் நாகார்ஜுனா.
Author: admin
வைகை அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை நெருங்கி வருகிறது. இதனால் நீர்தேக்கப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் நீர் புகுந்ததுடன், சாலைகளையும் அணை நீர் மூழ்கடித்தது. இதனால் கிராமப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் 21 கிலோ மீட்டர் சுற்றளவில் தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. அணையின் முழுக் கொள்ளளவான 71 அடியாக நீர்மட்டம் உயரும்போது அரப்படித்தேவன்பட்டி, கருப்பத்தேவன்பட்டி, குன்னூர், வைகைப்புதூர், கீழக்காமக்காபட்டி உள்ளிட்ட கிராமங்கள் வரை நீர் கடல்போல் தேங்கி நிற்கும். தற்போது தொடர் நீர்வரத்தினால் கடந்த 5ம் தேதி நீர்மட்டம் 69 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. மேலும் முழுக் கொள்ளளவுக்கு நீரை தேக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் நீர்மட்டம் இன்று 69.70 அடியை எட்டியுள்ளது. முழுக் கொள்ளளவை நெருங்கியுள்ளதால் வைகை அணையைச் சுற்றியுள்ள கிராமங்கள் வரை நீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாக பெரியகுளம் ஒன்றியம் சர்க்கரைப்பட்டி-மேலக்காமக்காபட்டி இடையே நீர் சூழ்ந்துள்ளது.…
கிரீடம் இளவரசி மெட்டே-மாரிட்டின் 28 வயதான மகன் மரியஸ் போர்க் ஹைபி மீது 32 கிரிமினல் குற்றங்கள் மீது முறையாக குற்றம் சாட்டப்பட்ட பின்னர், நான்கு பாலியல் பலாத்காரம், வீட்டு வன்முறை, தாக்குதல் மற்றும் பிற கடுமையான குற்றங்கள் உட்பட 32 கிரிமினல் குற்றங்களுக்காக முறையாக நோர்வே தற்போது உலகளாவிய கவனத்தின் மையத்தில் உள்ளது.ஹைபி நான்கு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குரைஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர், சில சந்தர்ப்பங்களில் அவர்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது, ரகசியமாக சம்மதமின்றி தாக்குதல்களை படமாக்கினர். ஒரு பெண்ணை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுகளையும் அவர் எதிர்கொள்கிறார்- அவர் முன்பு டேட்டிங் செய்திருந்தார்- மரண அச்சுறுத்தல்கள், காழ்ப்புணர்ச்சி, கட்டுப்பாட்டு உத்தரவுகளை மீறுதல் மற்றும் போக்குவரத்து குற்றங்கள். உள்நாட்டு வன்முறையுடன் கைது செய்யப்பட்ட பின்னர் 2024 ஆம் ஆண்டில் அவரது சட்ட சிக்கல்கள் முதன்முதலில் வெளிவந்தன, இது ஒரு பரந்த விசாரணைக்கு வழிவகுத்தது, இது 2018 ஆம் ஆண்டிற்கு முந்தைய குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தியது.மரியஸ்…
திருப்பூர்: விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்க, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இ-மெயில் மூலம் இந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் திருப்பூரில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ‘நம்ம சாமி, நம்ம கோயில், நாமே காப்போம்’ எனும் தலைப்பில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட உள்ளோம். தமிழ்நாடு முழுவதும் ஒன்றரை லட்சம் இடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 15 லட்சம் வீடுகளில் கடந்த ஆண்டு விநாயகர் சிலை வைக்கப்பட்டது. இந்த ஆண்டு இந்த எண்ணிக்கு இன்னும் அதிகமாகும். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, இந்து முன்னணி சார்பில் இ-மெயில் அனுப்பி உள்ளோம். ரம்ஜானுக்கு கஞ்சி தயாரிக்க பல ஆயிரம் டன் அரிசி வழங்கும் அரசு, விநாயகர் சதுர்த்தி விழாவை அனைத்து வீடுகளிலும் இந்துக்கள் கொண்டாடும் வகையில் அரை அடி…
100 வயதான உடற்பயிற்சி ஐகானான ரூத், தனது அசைக்க முடியாத கமிட்முக்கு உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளார்உடல்நலம் மற்றும் நீண்ட ஆயுள். சீரான உடற்பயிற்சி, வழக்கமான நடைபயிற்சி, சீரான ஊட்டச்சத்து மற்றும் போதுமான தூக்கம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் அவரது அன்றாட வழக்கம், வயது என்பது உயிர்ச்சக்தியைப் பேணுவதற்கு ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கிறது. ஒழுக்கமான வாழ்க்கை முறையைத் தழுவுவதன் மூலம், ஆரோக்கியமான வயதானவர்களின் முக்கிய கொள்கைகளை ரூத் எடுத்துக்காட்டுகிறார், எல்லா தலைமுறையினரின் மக்களுக்கும் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கிறார். வயதானவர்கள் உடல் செயல்பாடுகளை குறைக்க வேண்டும் என்ற பொதுவான கருத்துக்கு மாறாக, ஒரு நூற்றாண்டில் கூட சுறுசுறுப்பாகவும், ஆற்றல் மிக்கதாகவும், சுயாதீனமாகவும் இருப்பது அடையக்கூடியது என்பதை அவர் நிரூபிக்கிறார். அவரது கதை ஆயுட்காலம் மற்றும் வாழ்க்கைத் தரம் இரண்டையும் விரிவுபடுத்துவதில் உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகளின் உருமாறும் சக்தியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, ஆரோக்கியமான பழக்கங்களை ஏற்றுக்கொள்ள மில்லியன் கணக்கானவர்களை ஊக்குவிக்கிறது.100 வயது பெண்…
புது டெல்லி: கடந்த அக்டோபரில் ராணுவ மோதல் முடிவுக்கு வந்ததில் இருந்து இந்தியாவும் சீனாவும் தங்கள் எல்லையில் உருவான அமைதி மற்றும் நிலைத்தன்மையால் பயனடைந்துள்ளன என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உடனான பேச்சுவார்த்தையின்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறினார். இந்தியா – சீனா இடையேயான நீண்டகால எல்லைப் பிரச்சினையைக் கையாள்வதற்கான மிக உயர்ந்த அமைப்பான சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையின் 24-வது சுற்றுக்காக, சீனா வெளியுறவு அமைச்சர் வாங் யி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று டெல்லியில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின்போது, கடந்த ஒன்பது மாதங்களில் இந்தியா- சீனா உறவுகளில் வளர்ச்சி போக்கு ஏற்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட தோவல், “எல்லைகள் சண்டை சச்சரவுகள் இன்றி அமைதியும் இருந்தன. இதில் நமது இருதரப்பு பங்களிப்பு மிகவும் மேம்பட்ட நிலையில் இருந்தன” என்று கூறினார். ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் தியான்ஜினில் நடைபெறும்…
சென்னை: எஸ்.ஐ தேர்வில் இனி காவல் துறை இட ஒதுக்கீடு கிடையாது, அனைவருக்கும் ஒரே மாதிரியான எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், 1,299 காவல் உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மே 4-ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதையடுத்து, சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். வழக்கமாக காவல் துறையில் 2-ம் நிலை, முதல்நிலை மற்றும் தலைமைக் காவலர்களாக பணியில் உள்ளவர்களும் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு விண்ணபிப்பார்கள். இவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும். மீதம் உள்ள 80 சதவீதம் பொதுத் தேர்வர்களுக்கானது. காவலர்களாக பணியில் சேர்ந்தவர்களுக்கு சட்டம் – ஒழுங்கு, உளவியல் தொடர்புடைய கேள்விகள் கேட்கப்படும். அவர்கள் ஏற்கெனவே உடல் தகுதியை நிரூபித்து காவல் பணிக்கு சேர்ந்தவர்கள் என்பதால் உடல் தகுதி தேர்வு கிடையாது.…
அமெரிக்கா, தி நேஷன் ஆஃப் ட்ரீம்ஸ், அதன் வசீகரம், இயற்கை அழகு, வேலை வாய்ப்புகள், வாழ்க்கைத் தரம், மதிப்பு கல்வி, நல்ல சுகாதார மற்றும் வேலை-வாழ்க்கை சமநிலை ஆகியவற்றால் அறியப்படுகிறது. இந்த நாட்டை வீட்டிற்கு அழைக்க வேண்டும் என்று பலர் கனவு காண்கிறார்கள், அவர்களுக்கு அவர்களின் சொந்த காரணங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும், வாலெதப் அனைத்து 50 மாநிலங்களையும், 2025 முடிவுகளும் ஏற்கனவே இங்கே உள்ளன!2025 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் வாழ சிறந்த 10 சிறந்த மாநிலங்களின் பட்டியலைப் பார்ப்போம்.
பெங்களூரு: தெரு நாய் கடித்ததில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு, கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக உயிருக்குப் போராடிய தாவனகேரைச் சேர்ந்த நான்கு வயது சிறுமி உயிரிழந்தார். சாஸ்திரி லேஅவுட்டைச் சேர்ந்த கதீரா பானு எனும் 4 வயது சிறுமி கடந்த ஏப்ரல் 27 அன்று தனது வீட்டுக்கு வெளியே விளையாடும்போது தெரு நாய்க்கடியால் பாதிக்கப்பட்டார். சிறுமியின் முகம் மற்றும் உடலின் பிற பகுதிகளில் நாய் பலமாக கடித்தது. தொடக்கத்தில் அவருக்கு தாவனகேரில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பின்னர் உயர் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள இந்திரா காந்தி குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஏப்ரல் 28 அன்று ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட கதீரா, சிகிச்சைக்குப் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால், இம்மாத தொடக்கத்தில் கடுமையான மூளைக்காய்ச்சல் ஏற்பட்டதால், சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. பரிசோதனைகளின் முடிவில் சிறுமிக்கு பக்கவாதத்தை ஏற்படுத்தும் ‘டம்ப் ரேபிஸ்’ நோய் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில்…
சென்னை: ‘அரசுப் பள்ளிகளின் ஆங்கிலப் பிரிவு வகுப்புகளில் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இல்லாவிட்டால் அவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும்’ என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆண்டுதோறும் மாணவர் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. அதன்படி நடப்பு கல்வியாண்டில் ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியாளர் நிர்ணயம் மேற்கொள்ளப்பட வேண்டும். அதாவது, 1 முதல் 5-ம் வகுப்புக்கு 60 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்களும், 61 முதல் 90 வரை 3 ஆசிரியர்களும், 91 முதல் 120 வரை 4 ஆசிரியர்களும், 121 முதல் 200 வரை 5 ஆசிரியர்களும் இருக்க வேண்டும். இதேபோல், ஒவ்வொரு 40 மாணவர்களுக்கும்…