நாகப்பட்டினம் / திருவாரூர்: நாகை, திருவாரூரில் விஜய் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது, விஜய் பிரச்சார வாகனத்தை யாரும் பின்தொடர வேண்டாம் என்று தவெக வேண்டுகோள் விடுத்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கடந்த 13-ம் தேதி திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை விஜய் தொடங்கினார். தொடர்ந்து, அரியலூரில் பிரச்சாரம் செய்த விஜய், நள்ளிரவு நேரமானதால், பெரம்பலூர் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தார். ஒரே நாளில் 3 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியாததால், விஜய் சுற்றுப்பயணத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி, ஒரு நாளில் 2 மாவட்டங்களில் மட்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், இன்று (செப்.20 திருவாரூர், நாகையில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நாகை புத்தூர் அண்ணா சிலை சந்திப்பில் காலை 11 மணிக்கும், திருவாரூர் நகராட்சி அலுவலகம் அருகே தெற்கு வீதியில் பிற்பகல் 3 மணிக்கும் பொதுமக்கள் மத்தியில் விஜய் உரையாற்ற உள்ளார். அனுமதி அளிப்பதில் தாமதம்: இதனிடையே, விஜய் சுற்றுப்பயண நிகழ்ச்சிக்கு போலீஸார்…
Author: admin
இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய தொழில்நுட்ப முகமது நிஜாமுதீன், பணியிட இன துன்புறுத்தல் “ஊதிய-மோசடி, தவறான பணிநீக்கம் மற்றும் நீதிக்கு இடையூறு ஆகியவற்றை உள்ளடக்கியதாகக் குற்றம் சாட்டினார்.”குற்றச்சாட்டுகள்” சகாக்கள், முதலாளி, வாடிக்கையாளர், துப்பறியும் மற்றும் அவர்களின் சமூகம் “”நான் இன வெறுப்பு, இன பாகுபாடு, இன துன்புறுத்தல், சித்திரவதை, ஊதிய-மோசடி, தவறான பணிநீக்கம் மற்றும் நீதிக்கு இடையூறு விளைவிப்பதால் நான் பலியாகிவிட்டேன்” என்று லிங்க்ட்இன் குறித்த இடுகை கூறியது.”இன்று நான் எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராக என் குரலை உயர்த்த முடிவு செய்தேன். போதும் போதும், வெள்ளை மேலாதிக்கம் / இனவெறி வெள்ளை அமெரிக்க மனநிலை முடிவுக்கு வர வேண்டும். கார்ப்பரேட் கொடுங்கோலர்களின் அடக்குமுறை முடிவுக்கு வர வேண்டும், அதில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும், “என்று மேலும் கூறியது.அவர் தனது முதலாளியை “தவறாக” தனது வேலையை நிறுத்திவிட்டு “ஒரு இனவெறி துப்பறியும் மற்றும் குழுவின்…
புதுடெல்லி: காங்கிரஸ் நடத்தும் போராட்டங்களுக்கு ரூ.100 கொடுத்து பெண்கள் அழைத்து வரப்படுகின்றனர் என்று பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத் கூறி வருகிறார். மேலும், டெல்லி விமானநிலையத்தில் பெண் சிஆர்பிஎப் வீராங்கனை ஒருவர் கங்கனாவை அறைந்தார். நடிகை கங்கனா ரனாவத் தமிழகத்துக்கு வந்தால், அவர் மீது சுமத்தப்பட்ட அவதூறு வழக்குகளை நினைவு கூர்ந்து அவர் “அறையப்பட வேண்டும்” என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி அண்மையில் கூறியிருந்தார். பாஜக எம்.பி.யை அவ்வாறு இவர் விமர்சித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நடிகை கங்கனா ரனாவத் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: நான் தமிழ்நாடு வரும்போது என்னை அறைய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியிருக்கிறார். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். நான் தமிழ்நாடு செல்வதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இது நமது இந்தியா. நாம் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.…
அபுதாபி: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் ‘ஏ’ பிரிவில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா – ஓமன் அணிகள் மோதின. இந்திய அணியில் ஜஸ்பிரீத் பும்ரா, வருண் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 45 பந்துகளில், 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 56 ரன்கள் விளாசினார். அவர், 41 பந்துகளில் அரை சதம் கடந்திருந்தார். சர்வதேச டி20 அரங்கில் சஞ்சு சாம்சனுக்கு இது 3-வது அரைசதமாக அமைந்தது. முன்னதாக ஷுப்மன் கில் 5 ரன்களில் ஷா ஃபைசல் பந்தில் போல்டானார். அபிஷேக் சர்மா 15 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்த…
யாஷ் ஹீரோவாக நடித்து வரும் படம், ‘த டாக்ஸிக்’. கீது மோகன்தாஸ் இயக்கும் இதில் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி என பலர் நடித்து வருகின்றனர். கன்னடம், ஆங்கில மொழிகளில் உருவாகும் இந்தப் படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. ஆக் ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படத்தில் ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநர் ஜேஜே பெர்ரி பணியாற்றியுள்ளார். இந்தப் படத்துக்கான ஆக் ஷன் காட்சிகளின் படப்பிடிப்பு, மும்பையில் 45 நாட்கள் நடந்தது. இந்திய சினிமாவுக்கு இந்த ஆக்ஷன் காட்சிகள் புதுமையாக இருக்கும் என்கிறார்கள். இந்நிலையில் மும்பை படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் பெங்களூருவில் நடக்க இருக்கிறது. அதோடு ஷூட்டிங் முடிவடைகிறது.
திருப்பூர்: தண்ணீரில் இருந்து எடுக்கப்படும் ஹைட்ரஜன் எரிவாயுவை சமையல் மற்றும் தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தும் முறையை விஞ்ஞானி பேளூர் ராமலிங்கம் கார்த்திக் கண்டறிந்துள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வஞ்சிபாளையம் முருகம்பாளையத்தில் ஹன்க் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை விஞ்ஞானி பேளூர் ராமலிங்கம் கார்த்திக், தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் எரிவாயுவை பிரித்தெடுத்து, சமையல் மற்றும் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளார். ‘ஹன்க் காஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய கண்டுபிடிப்பு அறிமுக நிகழ்ச்சி, அவிநாசி அருகே நேற்று நடந்தது. முதன்மை விஞ்ஞானி பேளூர் ராமலிங்கம் கார்த்திக் செயல்முறை விளக்கம் அளித்தார். இதில் நடிகரும், ஹன்க்காஸ் நிறுவனத்தின் முதன்மை இயக்குநருமான சரத்குமார், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர். நாகராஜன் ஆகியோர் பங்கேற்று, புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தினர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் விஞ்ஞானி பேளூர் ராமலிங்கம் கார்த்திக் கூறியதாவது: இயற்கையான முறையில், கார்பன் இல்லாத நிலையில் தண்ணீரை கொண்டு, அதிலிருந்து கிரீன் ஹைட்ரஜன்…
பாரிஸ்: அமெச்சூர் வானியலாளர்களின் உதவியுடன், விஞ்ஞானிகள் விண்வெளியில் இருந்து ஒரு சிறுகோள் எவ்வாறு பயணித்தார்கள், பூமியின் வளிமண்டலத்தில் உடைந்து, உமிழும் துண்டுகளை தரையில் சுட்டுக் கொன்றனர், இந்த விண்வெளி பாறைகள் எவ்வாறு சிதைந்து போகின்றன என்பது பற்றிய புதிய தகவல்களை சேகரித்தன.பிப்ரவரி 13, 2023 அன்று மாலை 4:00 மணியளவில் (1400 ஜிஎம்டி) வடமேற்கு பிரான்சில் சிதைந்ததால், சிறுகோள் 2023 சிஎக்ஸ் 1 சுருக்கமாக வானத்தை ஏற்றியது.ஏழு மணி நேரத்திற்கு முன்னர், ஒரு ஹங்கேரிய வானியலாளர் சிறிய சிறுகோளைக் கண்டார் – இது ஒரு மீட்டர் (முற்றத்தில்) அகலத்திற்கும் குறைவாகவும், 650 கிலோகிராம் எடையும் (1,400 பவுண்டுகளுக்கு மேல்) – பூமியிலிருந்து சுமார் 200,000 கிலோமீட்டர் (125,000 மைல்).அடுத்த நிமிடங்கள் மற்றும் மணிநேரங்களில், நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் விஞ்ஞானிகள் முன்னோடியில்லாத துல்லியத்துடன் அதன் வம்சாவளியின் இருப்பிடத்தையும் காலவரிசையையும் கணக்கிட முடிந்தது.உலகெங்கிலும் உள்ள ஆய்வகங்கள் அதன் பயணத்தின் ஒவ்வொரு அம்சத்தையும்…
புதுடெல்லி: அமெரிக்காவில் உள்ள அதிகாரிகளுடனும், கலிபோர்னியாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் தெலுங்கானாவைச் சேர்ந்த ஒரு நபரின் குடும்பத்தினருடனும் தொடர்பு இருப்பதாக வெளிவிவகார அமைச்சகம் (MEA) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. “கலிஃபோர்னியாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது, நாங்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறோம், உள்ளூர் அதிகாரிகளால் விசாரணை நடந்து வருகிறது என்பதையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம். உள்ளூர் காவல் துறை ஒரு வீடியோ அறிக்கையை வெளியிட்டு, சூழ்நிலைகளின் விவரங்களை அளித்ததையும் நீங்கள் கண்டிருப்பீர்கள். நாங்கள் குடும்பத்துடன் தொடர்பில் இருக்கிறோம், இந்த விஷயத்தில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவோம்” என்று மீ ஸ்போஸ்பிஸ்பர்சன் ராண்டர் ஜெய்சால் கூறினார். பாதிக்கப்பட்டவர் மகாபுப்நகர் மாவட்டத்தில் வசிக்கும் முகமது நிஜாமுதீன் என அடையாளம் காணப்பட்டார். அவரது உடலை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர உதவுமாறு அவரது குடும்பத்தினர் மையம் மற்றும் தெலுங்கானா அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். நிஜாமுதீனின் தந்தை, முகமது ஹசனுதீன் அனியிடம், “எனது மகன் 2016 ஆம் ஆண்டில் புளோரிடா கல்லூரியில்…
புதுடெல்லி: அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல பாடகர் ஜூபீன் கார்க் (வயது 52). யா அலி என்றும் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வந்தார். இவர் அசாம், பெங்கால், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடல்கள் பாடி புகழ்பெற்றவர். இவர் அண்மையில் சிங்கப்பூரில் நடைபெறும் நார்த் ஈஸ்ட் சுற்றுலா விழாவில் பங்கேற்க சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று அவர், ஆழ்கடலில் நடத்தப்படும் ஸ்கூபா டைவிங் சாகசத்தில் ஈடுபட்டார். அப்போது ஜூபின் கார்க்குக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி ஜூபின் கார்க் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜூபின் கார்க் இறந்ததைத் தொடர்ந்து அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்: அமெரிக்காவின் சாண்டா கிளாரா பகுதியில் இந்திய இளைஞரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். தெலங்கானா மாநிலத்தின் மஹபூப்நகரை சேர்ந்தவர் முகமது நிசாமுதீன் (32). கடந்த 2016-ம் ஆண்டில் அவர் அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு புளோரிடாவில் உயர் கல்வி பயின்றார். பின்னர் கலிபோர்னியா மாகாணம், சாண்டா கிளாரா பகுதியில் சாப்ட்வேர் இன்ஜினீயராக அவர் பணியாற்றி வந்தார். அங்குள்ள வாடகை வீட்டில் முகமது நிசாமுதீனும் மற்றொரு நபரும் தங்கியிருந்தனர். கடந்த 3-ம் தேதி இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அ்பபோது நிசாமுதீன், சக நண்பரை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சாண்டா கிளாரா பகுதி போலீஸார், முகமது நிசாமுதீனை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது உடலில் 4 குண்டுகள் பாய்ந்தன. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து நிசாமுதீனின் தந்தை ஹஸ்னுதீன் கூறியதாவது: எனது மகன் நிசாமுதீனை எவ்வித விசாரணையும் இன்றி…