Author: admin

சென்னை: எந்த நி​தி​மோசடி வழக்​கிலா​வது 2 ஆண்​டு​களுக்​குள் வழக்கை முடித்து பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுத்த வரலாறு உள்​ளதா என பொருளா​தார குற்​றப்​பிரிவு போலீ​ஸாருக்கு உயர் நீதி​மன்​றம் கண்​டனம் தெரி​வித்​துள்​ளது. சென்னை மயி​லாப்​பூரில் செயல்​பட்டு வந்த தி மயி​லாப்​பூர் இந்து பெர்​மனென்ட் ஃபண்ட் நிதி நிறு​வனத்​தில் முதலீடு செய்த முதலீட்​டாளர்​களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்​த​தாக அந்​நிறுவன இயக்​குநர் தேவ​நாதன் யாதவ் உள்​ளிட்ட 6 பேரை சென்னை பொருளா​தார குற்​றப்​பிரிவு போலீ​ஸார் கைது செய்து சிறை​யில் அடைத்​துள்​ளனர். இந்த வழக்​கில் ஜாமீன் கோரி தேவ​நாதன் யாதவ் உயர் நீதி​மன்​றத்​தில் மூன்​றாவது முறை​யாக தாக்​கல் செய்​திருந்த மனு, நீதிபதி ஜி.ஜெயச்​சந்​திரன் முன்​பாக நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது அரசு தரப்​பில் ஆஜரான கூடு​தல் குற்​ற​வியல் வழக்​கறிஞர் ஆர்​.​முனியப்​ப​ராஜ், அவருக்கு ஜாமீன் வழங்​கி​னால் சாட்​சிகளை கலைத்து வழக்கு விசா​ரணையை நீர்த்​துப்​போகச் செய்து விடு​வார் என்​று குறிப்​பிட்​டார். அந்த வாதத்தை ஏற்க…

Read More

புதுடெல்லி: ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆன்லைன் சூதாட்டத்தில் பல மோசடிகள் நடைபெறுவதால் பலர் தங்கள் சேமிப்பு பணத்தை இழப்பதோடு, கடன் சுமைக்கு உள்ளாகி தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகம் நடைபெறுகின்றன. இதற்கு அபராதம் விதிக்கவோ அல்லது தண்டனை வழங்கவோ மாநில அரசு சட்டங்களில் இடம் இல்லை. இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் அல்லது தடை விதிக்க வேண்டும் என பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பல முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த மசோதா ஆன்லைன் விளையாட்டு தளங்களை சட்ட வரம்புக்குள் கொண்டு வந்து, டிஜிட்டல்…

Read More

சென்னை: பொறி​யியல் மாணவர் சேர்க்​கைக்​கான துணை கலந்​தாய்வு நாளை தொடங்​கு​கிறது. இதில் 16 ஆயிரம் மாணவர்​கள் பங்​கேற்​கின்​றனர். நடப்பு கல்வி ஆண்​டில் (2025-26), பொறி​யியல் மாணவர் சேர்க்​கைக்​கான கலந்​தாய்​வின் இறுதி சுற்று தற்​போது நடை​பெற்று வரு​கிறது. இதில் கலந்​து கொண்டு தற்​காலிக ஒதுக்​கீட்டு ஆணையை உறுதி செய்த மாணவர்​களுக்கு இன்று (20-ம் தேதி) இறுதி ஒதுக்​கீட்டு ஆணை வழங்​கப்பட உள்​ளது. இதற்​கிடையே, பிளஸ் 2 துணை தேர்​வில் தேர்ச்சி பெற்ற மாணவர்​கள், பொது கலந்​தாய்​வில் பங்​கேற்க தவறிய மாணவர்​கள் ஆகியோ​ருக்​கான துணை கலந்​தாய்வு நாளை (21-ம் தேதி)தொடங்கி 23-ம் தேதி வரை இணை​ய​வழி​யில் நடை​பெறுகிறது. இதற்கு 16 ஆயிரம் மாணவர்​கள் விண்​ணப்​பி்த்​துள்​ளனர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. துணை கலந்​தாய்வு முடிவடைந்த பிறகு, பொறி​யியல் படிப்​பில் எஸ்சி அருந்​த​தி​யர் ஒதுக்​கீட்​டில் உள்ள காலி​யிடங்​களில், எஸ்சி மாணவர்​கள் சேரு​வதற்​கான சிறப்பு கலந்​தாய்வு வரும் 25, 26-ம் தேதி நடை​பெறும். 26-ம் தேதி​யுடன் ஒட்டு மொத்த கலந்​தாய்வு…

Read More

சென்னை: ஏறத்​தாழ 75 டன் எடை கொண்ட செயற்​கைக்​கோள்​களை விண்​ணில் நிலைநிறுத்​து​வதற்​காக 40 மாடி உயரம் கொண்ட ராக்​கெட்டை உரு​வாக்கி வரு​வ​தாக இஸ்ரோ தலை​வர் நாராயணன் கூறி​னார். தெலங்​கானா மாநிலம் ஹைதரா​பாத்​தில் உள்ள உஸ்​மானியா பல்​கலைக்​கழக பட்​டமளிப்பு விழா​வில் சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்ற இஸ்ரோ தலை​வர் வி.​நா​ராயணனுக்​கு, தெலங்​கானா ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா கவுரவ டாக்​டர் பட்​டம் வழங்கி சிறப்​பித்​தார். தொடர்ந்து நாராயணன் பேசி​ய​தாவது: நடப்​பாண்​டில் இந்​திய ராக்​கெட்​டு​களைப் பயன்​படுத்தி அமெரிக்​கா​வின் 6,500 கிலோ எடை​யுள்ள தகவல் தொடர்பு செயற்​கைக்​கோளை விண்​வெளி​யில் நிலைநிறுத்​தும் பணி​கள்மேற்​கொள்​ளப்பட உள்​ளன. இதுத​விர, தொழில்​நுட்ப செயல் விளக்​கச் செயற்​கைக்​கோள் (TDS) மற்​றும் தகவல் தொடர்பு செயற்​கைக்​கோளான ஜிசாட்​-7ஆர் ஆகிய​வற்​றை​யும் விண்​ணில் ஏவ திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. தற்​போதுள்ள ஜிசாட்-7 (ருக்​மிணி) செயற்​கைக்​கோளுக்கு மாற்​றாக இந்​திய கடற்​படைக்​காக ஜிசாட்​-7ஆர் பிரத்​யேக​மாகவடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது. மறைந்த விஞ்​ஞானி அப்​துல் கலாம் உரு​வாக்​கிய முதல் ராக்​கெட் 17 டன் எடை கொண்​டது. இது35 கிலோ எடையை…

Read More

சென்னை: ஆன்லைன் பணமோசடிகளை தடுக்க அறிமுகப்படுத்தப்பட்டதைப் போல, இணையதளங்களில் பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் பதிவேற்றம் செய்வதை, ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் தடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தமிழக டி.ஜி.பி.-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இணையதளங்களில் பகிரப்பட்ட தனது அந்தரங்க வீடியோக்களை அகற்ற கோரி பெண் வழக்கறிஞர் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இன்னும் 8 இணையதளங்களில் தொடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆன்லைன் பண மோசடிகளை தடுக்க ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் சைபர் கண்காணிப்பு நடைமுறை தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல பெண்களுடைய ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்வதை உடனடியாக கண்டறிந்து தடுக்கும் வசதியை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 8 இணையதளங்களில் பகிரப்பட்டு வரும் பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோவை…

Read More

மிதமான உணர்ச்சி விழிப்புணர்வுடன் ஜோடியாக இருக்கும்போது, இசை நினைவகத்தை மேம்படுத்த முடியும் என்பதை சமீபத்திய யு.சி.எல்.ஏ ஆய்வு வெளிப்படுத்துகிறது. அல்சைமர் அல்லது பி.டி.எஸ்.டி உள்ள நபர்களில் நினைவகத்தை மேம்படுத்த ஹிப்போகாம்பஸ் மீதான இசையின் செல்வாக்கைப் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது. சரியான உணர்ச்சிபூர்வமான பதிலைத் தூண்டுவதற்கு இசையை வடிவமைத்தல் ஒரு ஆக்கிரமிப்பு அல்லாத சிகிச்சை அணுகுமுறையை வழங்கக்கூடும். இசை சிகிச்சை என்று அறியப்படுகிறது, ஆனால் இது உங்கள் நினைவகத்தை அதிகரிக்க முடியுமா? சரி, அது முடியும். ஒரு புதிய ஆய்வில், இசையைக் கேட்பது மூளையை கூர்மைப்படுத்தும் என்றும், நரம்பியக்கடத்தல் கோளாறுகள் உள்ளவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் ஆற்றலையும் கொண்டுள்ளது. யு.சி.எல்.ஏ நரம்பியல் விஞ்ஞானிகளின் புதிய ஆய்வில் அல்சைமர் நோய், பதட்டம் மற்றும் பி.டி.எஸ்.டி ஆகியவற்றிற்கான இசையின் சிகிச்சை திறனைக் கண்டறிந்தது. ஆய்வின் கண்டுபிடிப்புகள் நியூரோ சயின்ஸ் இதழில் வெளியிடப்படுகின்றன.மூளையில் இசையின் தாக்கம் சில வேலைகளைச் செய்யும்போது இசையைக் கேட்பது செயல்பாட்டை மிகவும் சுவாரஸ்யமாக்குகிறது…

Read More

சென்னை: “ரசிகர்களுக்கு நல்ல படம் கொடுக்க வேண்டும் என்று தான் நாம் நினைக்க வேண்டும். ஒரு நல்ல படம் நிறைய வசூலிப்பது வேறு. ஆனால் ஒரு மோசமான படம் அதிகம் வசூலித்தால் அது நல்ல படம் ஆகிவிடாது” என்று இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். விஜயகாந்த் நடிப்பில் அவரது 100-வது படமாக வெளியாகி மாபெரும் வசூல் சாதனை செய்த படமாக மாறியது ‘கேப்டன் பிரபாகரன்’. இந்தப் படத்தை 34 வருடங்கள் கழித்து தற்போதைய 4கே தொழில்நுட்பத்தில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு மறுவெளியீடு செய்யப்படவுள்ளது. ஆர்.கே.செல்வமணி இயக்கிய இப்படம் வரும் ஆகஸ்ட் 22 அன்று ரீரிலீஸ் ஆகிறது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, “ஒருவர் ரூ.100 கோடி சம்பளம் வாங்கினால் உடனே எனக்கு ரூ.100 கோடி சம்பளம் வேண்டும் என்று நினைப்பது. அந்த படம் ரூ.1000 கோடி வசூலித்து விட்டதென்றால் உடனே என் படமும் ரூ.1000 கோடி வசூலிக்க வேண்டும் என்று நினைப்பது.…

Read More

சென்னை: நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய அரசு, தனது சட்டங்களை மீறி செயல்படலாமா என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், செம்மஞ்சேரியில் நீர் நிலையை ஆக்கிரமித்து பல கட்டுமானங்கள் உள்ள நிலையில், காவல் நிலையத்துக்கு எதிராக மட்டும் வழக்கு தொடர்ந்த அறப்போர் இயக்கத்துக்கும் கண்டனம் தெரிவித்துள்ளது. செம்மஞ்சேரியில் நீர் நிலையில் காவல் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறப்போர் இயக்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2019-ஆம் ஆண்டு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குறிப்பிட்ட அந்த நிலம், மேய்க்கால் தாங்கல் சாலை என்பது மேற்கால் சாலை என வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், உயர் நீதிமன்றம் நியமித்த குழுவின் அறிக்கையிலும், காவல்…

Read More

உங்கள் வீடு மற்றும் தோட்டத்திற்கு உடனடி கவர்ச்சியைக் கொண்டுவரும் துடிப்பான தவழல்களை வளர்ப்பதற்கான சிறந்த நேரம் பருவமழை. சிறந்த தேர்வுகளில் லட்சுமன் பூட்டி, குல்தாரி வைன் என்றும் அழைக்கப்படுகிறது, இது வேகமாக வளர்ந்து வரும் ஆலை அதன் வண்ணமயமான பூக்களின் கொத்துக்களுக்காக விரும்பப்பட்டது. மழைக்காலத்தில் செழித்து, இந்த குறைந்த பராமரிப்பு க்ரீப்பர் சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிற நிழல்களில் பூக்களை உருவாக்கி, இயற்கையான அழகை உருவாக்குகிறது. பால்கனிகள், ரெயில்கள், சுவர்கள் அல்லது தொங்கும் பானைகளுக்கு ஏற்றது, குல்தாரி கொடியின் அலங்காரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உங்கள் இடத்திற்கு ஒரு பாரம்பரிய, கலாச்சார தொடர்பையும் சேர்க்கிறது.லட்சுமன் பூட்டி கட்டாயம் வளரும் ஆலை என்பதற்கான காரணங்கள்பருவமழை தோட்டங்களுக்கு ஒரு வண்ணமயமான ஆலைகுல்தாரியின் கவர்ச்சி அதன் சிறிய, பிரகாசமான பூக்களில் கொத்துக்களில் பூக்கும், உடனடியாக மந்தமான மூலைகளை வண்ணத்தின் கண்களைக் கவரும் இடங்களாக மாற்றுகிறது. ஆலை தனித்துவமானது, ஏனெனில் இது மழைக்காலத்திற்கு மிகவும்…

Read More

ரஷ்யாவிடமிருந்து வாங்கும் கச்சா எண்ணெயிலிருந்து இந்தியா லாபம் ஈட்டுவதாக, அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் விமர்சித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், “மாஸ்கோவிலிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி அதை சுத்திகரிக்கப்பட்ட பொருளாக மறுவிற்பனை செய்யும் இந்தியாவின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை. அவர்கள் இதன் மூலம் லாபம் ஈட்டுகின்றனர். என்று பெசென்ட் விமர்சித்துள்ளார். பெசென்ட் இந்தியாவை விமர்சிப்பது இது முதல்முறையல்ல. கடந்த வாரம் அளித்த ஒரு பேட்டியில், “அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நடத்தும் பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை என்றால், இந்தியா மீது அமெரிக்கா மேலும் வரிகளை விதிக்கக்கூடும்” என்று பெசென்ட் எச்சரித்திருந்தார். கடந்த 10 நாட்களில், ஸ்காட் பெசென்ட், ரஷ்யாவுடனான எரிசக்தி வர்த்தகத்திற்காக இந்தியாவை மீண்டும் மீண்டும் குறிவைத்து விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிற்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 50 சதவீத வரியை அதிபர் ட்ரம்ப் ஏற்கனவே அறிவித்துள்ளார்.…

Read More