சென்னை: பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பள்ளிக்கல்வி அமைச்சருடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ஆக.22-ம் தேதி நடக்க இருந்த கோட்டை முற்றுகை போராட்டம் தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக டிட்டோ ஜாக் அமைப்பு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைகளைவது, ஆசிரியர்களின் உரிமைகளை பறிக்கும் அரசாணை எண் 243-ஐ ரத்து செய்வது என்பன உள்பட 10 அம்சகோரக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ-ஜாக்) சார்பில் தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆக.22-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கோட்டை நோக்கி முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என டிட்டோ-ஜாக்அமைப்பு அறிவித்திருந்தது. இந்நிலையில், அந்த அமைப்பின் உயர்நிலைக் குழு உறுப்பினர்களுடன் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமைச் செயலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பள்ளிக்கல்வித் துறை செயலர் டாக்டர்…
Author: admin
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு அமைத்த குழுவிடம் அரசு ஊழியர் – ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் வலியுறுத்தினர். அதோடு தங்கள் கருத்துகளை அறிக்கையாக சமர்ப்பித்தனர். பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் மத்திய அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (யுபிஎஸ்) ஆகியவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ககன்தீப்சிங் பேடி தலைமையில் தமிழக அரசு ஒரு குழுவை அமைத்தது. அந்த குழு தனது அறிக்கையை வரும் செப். 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்தச் சூழலில் ஆக. 18, 25, செப். 1, 8 என 4 நாட்கள் கருத்துகேட்பு கூட்டம் நடந்தது. அதன்படி முதல் சுற்று கூட்டத்தில் தலைமைச் செயலக சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அலுவலக…
சென்னை: பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 24 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள பணப்பலன்களை வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில், தொடர் காத்திருப்பு போராட்டம் சென்னையில் பல்லவன் இல்லம் முன்பு நேற்று நடைபெற்றது. பணி ஓய்வு பெற்ற 3,500 தொழிலாளர்களுக்கு 24 மாதமாக வழங்கப்படாமல் உள்ள ஓய்வுக்கால பலன்களை வழங்க வேண்டும்; பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு 2 ஆண்டு ஊதிய ஒப்பந்த நிலுவையை கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் 21 மையங்களில் போக்குவரத்து ஊழியர்கள், ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழக தலைமையகமான பல்லவன் இல்லம் முன்பு அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் – சிஐடியு சார்பில், தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் ஆர்.துரை தலைமை வகித்தார். சிஐடியு மாநிலத் தலைவர்…
புதுடெல்லி / ஹைதராபாத்: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணியின் பொது வேட்பாளராக ஓய்வுபெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி (79) அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21-ம் தேதி ராஜினாமா செய்தார். இந்தப் பதவிக்கு செப். 9-ல் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த சூழலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ் ணன் அறிவிக்கப்பட்டுள்ள்ளார். தற்போது அவர் மகாராஷ்டிர ஆளுநராக பதவி வகிக்கிறார். அவரை ஏகமனதாக தேர்வு செய்ய பாஜக தலைமை தீவிர முயற்சி செய்தது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் கார்கே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களிடம் ஆதரவு கோரினார். ஆனால், இந்த முயற்சி வெற்றி பெறவில்லை. கடந்த 17-ம் தேதி என்டிஏ கூட்டணி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன…
சென்னை: எந்த நிதிமோசடி வழக்கிலாவது 2 ஆண்டுகளுக்குள் வழக்கை முடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுத்த வரலாறு உள்ளதா என பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்நிறுவன இயக்குநர் தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 6 பேரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி தேவநாதன் யாதவ் உயர் நீதிமன்றத்தில் மூன்றாவது முறையாக தாக்கல் செய்திருந்த மனு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்து வழக்கு விசாரணையை நீர்த்துப்போகச் செய்து விடுவார் என்று குறிப்பிட்டார். அந்த வாதத்தை ஏற்க…
புதுடெல்லி: ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆன்லைன் சூதாட்டத்தில் பல மோசடிகள் நடைபெறுவதால் பலர் தங்கள் சேமிப்பு பணத்தை இழப்பதோடு, கடன் சுமைக்கு உள்ளாகி தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகம் நடைபெறுகின்றன. இதற்கு அபராதம் விதிக்கவோ அல்லது தண்டனை வழங்கவோ மாநில அரசு சட்டங்களில் இடம் இல்லை. இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் அல்லது தடை விதிக்க வேண்டும் என பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பல முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த மசோதா ஆன்லைன் விளையாட்டு தளங்களை சட்ட வரம்புக்குள் கொண்டு வந்து, டிஜிட்டல்…
சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. இதில் 16 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். நடப்பு கல்வி ஆண்டில் (2025-26), பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வின் இறுதி சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையை உறுதி செய்த மாணவர்களுக்கு இன்று (20-ம் தேதி) இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட உள்ளது. இதற்கிடையே, பிளஸ் 2 துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், பொது கலந்தாய்வில் பங்கேற்க தவறிய மாணவர்கள் ஆகியோருக்கான துணை கலந்தாய்வு நாளை (21-ம் தேதி)தொடங்கி 23-ம் தேதி வரை இணையவழியில் நடைபெறுகிறது. இதற்கு 16 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பி்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. துணை கலந்தாய்வு முடிவடைந்த பிறகு, பொறியியல் படிப்பில் எஸ்சி அருந்ததியர் ஒதுக்கீட்டில் உள்ள காலியிடங்களில், எஸ்சி மாணவர்கள் சேருவதற்கான சிறப்பு கலந்தாய்வு வரும் 25, 26-ம் தேதி நடைபெறும். 26-ம் தேதியுடன் ஒட்டு மொத்த கலந்தாய்வு…
சென்னை: ஏறத்தாழ 75 டன் எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்துவதற்காக 40 மாடி உயரம் கொண்ட ராக்கெட்டை உருவாக்கி வருவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இஸ்ரோ தலைவர் வி.நாராயணனுக்கு, தெலங்கானா ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தார். தொடர்ந்து நாராயணன் பேசியதாவது: நடப்பாண்டில் இந்திய ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி அமெரிக்காவின் 6,500 கிலோ எடையுள்ள தகவல் தொடர்பு செயற்கைக்கோளை விண்வெளியில் நிலைநிறுத்தும் பணிகள்மேற்கொள்ளப்பட உள்ளன. இதுதவிர, தொழில்நுட்ப செயல் விளக்கச் செயற்கைக்கோள் (TDS) மற்றும் தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-7ஆர் ஆகியவற்றையும் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள ஜிசாட்-7 (ருக்மிணி) செயற்கைக்கோளுக்கு மாற்றாக இந்திய கடற்படைக்காக ஜிசாட்-7ஆர் பிரத்யேகமாகவடிவமைக்கப்பட்டுள்ளது. மறைந்த விஞ்ஞானி அப்துல் கலாம் உருவாக்கிய முதல் ராக்கெட் 17 டன் எடை கொண்டது. இது35 கிலோ எடையை…
சென்னை: ஆன்லைன் பணமோசடிகளை தடுக்க அறிமுகப்படுத்தப்பட்டதைப் போல, இணையதளங்களில் பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் பதிவேற்றம் செய்வதை, ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் தடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தமிழக டி.ஜி.பி.-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இணையதளங்களில் பகிரப்பட்ட தனது அந்தரங்க வீடியோக்களை அகற்ற கோரி பெண் வழக்கறிஞர் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இன்னும் 8 இணையதளங்களில் தொடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆன்லைன் பண மோசடிகளை தடுக்க ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் சைபர் கண்காணிப்பு நடைமுறை தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல பெண்களுடைய ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்வதை உடனடியாக கண்டறிந்து தடுக்கும் வசதியை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 8 இணையதளங்களில் பகிரப்பட்டு வரும் பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோவை…
மிதமான உணர்ச்சி விழிப்புணர்வுடன் ஜோடியாக இருக்கும்போது, இசை நினைவகத்தை மேம்படுத்த முடியும் என்பதை சமீபத்திய யு.சி.எல்.ஏ ஆய்வு வெளிப்படுத்துகிறது. அல்சைமர் அல்லது பி.டி.எஸ்.டி உள்ள நபர்களில் நினைவகத்தை மேம்படுத்த ஹிப்போகாம்பஸ் மீதான இசையின் செல்வாக்கைப் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது. சரியான உணர்ச்சிபூர்வமான பதிலைத் தூண்டுவதற்கு இசையை வடிவமைத்தல் ஒரு ஆக்கிரமிப்பு அல்லாத சிகிச்சை அணுகுமுறையை வழங்கக்கூடும். இசை சிகிச்சை என்று அறியப்படுகிறது, ஆனால் இது உங்கள் நினைவகத்தை அதிகரிக்க முடியுமா? சரி, அது முடியும். ஒரு புதிய ஆய்வில், இசையைக் கேட்பது மூளையை கூர்மைப்படுத்தும் என்றும், நரம்பியக்கடத்தல் கோளாறுகள் உள்ளவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் ஆற்றலையும் கொண்டுள்ளது. யு.சி.எல்.ஏ நரம்பியல் விஞ்ஞானிகளின் புதிய ஆய்வில் அல்சைமர் நோய், பதட்டம் மற்றும் பி.டி.எஸ்.டி ஆகியவற்றிற்கான இசையின் சிகிச்சை திறனைக் கண்டறிந்தது. ஆய்வின் கண்டுபிடிப்புகள் நியூரோ சயின்ஸ் இதழில் வெளியிடப்படுகின்றன.மூளையில் இசையின் தாக்கம் சில வேலைகளைச் செய்யும்போது இசையைக் கேட்பது செயல்பாட்டை மிகவும் சுவாரஸ்யமாக்குகிறது…