வேலூர்/சென்னை: அணைக்கட்டு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூட்டத்தில் நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ் கடந்து செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ‘அடுத்த கூட்டத்தில் வேண்டுமென்றே ஆளில்லாத ஆம்புலன்ஸ் வந்தால் அதன் ஓட்டுநர் நோயாளியாக செல்வார்’ என பழனிசாமி எச்சரிக்கை விடுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்றுப்பயணத்தில் நேற்று முன்தினம் இரவு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சார வாகனம் வந்து நின்றதும் அருகே இருந்த சிறிய தெருவில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று சைரன் ஒலித்தபடி கடந்து சென்றது. அதில் நோயாளி இல்லாமல் இருப்பதை அதிமுக தொண்டர்கள் பார்த்து கூச்சலிட்டனர். இதனால், அதிருப்தி அடைந்த பழனிசாமி, “என்னோட ஒவ்வொரு கூட்டத்திலும் இதேபோல் ஆளே இல்லாமல் ஆம்புலன்ஸை தொடர்ச்சியா அனுப்பி மக்களை சிரமப்படுத்தும் வேலையை இந்த அரசு செய்கிறது. இதனால் மக்களுக்கு ஏதாவது ஒன்றானால் யார்…
Author: admin
சென்னை: முன்னாள் படைவீரர்கள் வாழ்வாதார மேம்பாட்டுக்கான ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து, தொழில் தொடங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளையும் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க, கொட்டும் மழையிலும், குளிரிலும் தமது இன்னுயிரையும் பொருட்படுத்தாது தாய் நாட்டுக்காக தங்களது இளம் வயதை ராணுவப் பணியில் கழித்து, பணிக்காலம் நிறைவு பெற்ற, ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்களின் நலன் காக்க பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்தாண்டு முதல்வர் ஸ்டாலின், தனது சுதந்திர தின உரையில் ‘‘தாய்நாட்டுக்காகத் தங்கள் இளம் வயதை ராணுவப் பணியில் கழித்து, பணிக்காலம் நிறைவு பெற்ற, ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்கள் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்யவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்’’ என அறிவித்தார். அதன்படி, முதல்வர் ஸ்டாலின், நேற்று “முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டத்தை…
சென்னை: ஓய்வூதியர் பணப்பலன் வழங்குவதற்காக ரூ.1,137 கோடியை போக்குவரத்துக் கழகங்களுக்கு தற்காலிக முன்பணமாக (கடன்) தமிழக அரசு வழங்கியுள்ளது. போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றால், பிற அரசுத்துறை ஊழியர்களைப் போல ஓய்வுபெறும் நாளில் பணப்பலன் வழங்கப்படுவதில்லை. அதன்படி, போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு தற்போது வரை பணப்பலன் வழங்கப்படவில்லை. இதனால் சிஐடியு சார்பில் நேற்று முன்தினம் மாநிலம் தழுவிய அளவில் தொடர் காத்திருப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பணப்பலன் வழங்குவது தொடர்பான அரசாணை வெளியானது. இதுதொடர்பாக போக்குவரத்துத் துறைச் செயலர் சுன்சோங்கம் ஜடக்சிரு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை முதல் நடப்பாண்டு ஜனவரி வரை ஓய்வு, விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கும், பணிக்காலத்தில் மரணமடைந்தவர்களுக்கும் பணப்பலன் வழங்கும் வகையில் நிதியுதவி கோரி போக்குவரத்துத் துறைத் தலைவர் கடிதம் அனுப்பியிருந்தார். இதை பரிசீலித்த அரசு,…
சென்னை: வீட்டுவசதி வாரியத்தால் நோட்டீஸ் கொடுக்கப்பட்ட நிலத்தை வாங்கியவர்களுக்கு, அவர்கள் தாங்கும் அளவிலான தொகை நிர்ணயிக்கப்பட்டு நிலம் விடு விக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார். இதுகுறித்து, தலைமைச்செயலகத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வீட்டுவசதி வாரியத்தால் நீண்ட நாட்களுக்கு முன் கையகப்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு அது முழுமையாக நிறைவேறாத சூழலில் அந்த நிலங்களை வாரியம் பயன்படுத்த முடியவில்லை. அதேநேரம் அதன் உரிமையாளர்களும் முழு உரிமை எடுக்க முடியவில்லை என்ற சூழல் இருந்தது. இது முதல்வர் முதல்வர் கவனத்துக்குச் சென்றதும், எல்லோருக்கும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஒரே மாதிரி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். அதற்காக வீட்டுவசதி வாரியம், வீட்டுவசதித் துறை இணைந்து அந்த நிலங்கள் 5 வகையாக பிரிக்கப்பட்டன. இதுதவிர்த்த 10,575 ஏக்கர் நிலம் எதிர்காலத்தில் எடுக்கலாம் என்று உத்தேசிக்கப்பட்ட நிலமாகும். இந்த இடத்தை அந்த நில உரிமையாளர்கள் மற்றவர்களுக்கு சிறிது, சிறியதாக விற்றுவிட்டு போய்விட்டார்கள். இதில், வாங்கியவர்களும் பாதிக்கப்படக்…
சென்னை: பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பள்ளிக்கல்வி அமைச்சருடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ஆக.22-ம் தேதி நடக்க இருந்த கோட்டை முற்றுகை போராட்டம் தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக டிட்டோ ஜாக் அமைப்பு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைகளைவது, ஆசிரியர்களின் உரிமைகளை பறிக்கும் அரசாணை எண் 243-ஐ ரத்து செய்வது என்பன உள்பட 10 அம்சகோரக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ-ஜாக்) சார்பில் தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆக.22-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கோட்டை நோக்கி முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என டிட்டோ-ஜாக்அமைப்பு அறிவித்திருந்தது. இந்நிலையில், அந்த அமைப்பின் உயர்நிலைக் குழு உறுப்பினர்களுடன் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமைச் செயலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பள்ளிக்கல்வித் துறை செயலர் டாக்டர்…
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு அமைத்த குழுவிடம் அரசு ஊழியர் – ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் வலியுறுத்தினர். அதோடு தங்கள் கருத்துகளை அறிக்கையாக சமர்ப்பித்தனர். பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் மத்திய அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (யுபிஎஸ்) ஆகியவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ககன்தீப்சிங் பேடி தலைமையில் தமிழக அரசு ஒரு குழுவை அமைத்தது. அந்த குழு தனது அறிக்கையை வரும் செப். 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்தச் சூழலில் ஆக. 18, 25, செப். 1, 8 என 4 நாட்கள் கருத்துகேட்பு கூட்டம் நடந்தது. அதன்படி முதல் சுற்று கூட்டத்தில் தலைமைச் செயலக சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அலுவலக…
சென்னை: பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 24 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள பணப்பலன்களை வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில், தொடர் காத்திருப்பு போராட்டம் சென்னையில் பல்லவன் இல்லம் முன்பு நேற்று நடைபெற்றது. பணி ஓய்வு பெற்ற 3,500 தொழிலாளர்களுக்கு 24 மாதமாக வழங்கப்படாமல் உள்ள ஓய்வுக்கால பலன்களை வழங்க வேண்டும்; பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு 2 ஆண்டு ஊதிய ஒப்பந்த நிலுவையை கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் 21 மையங்களில் போக்குவரத்து ஊழியர்கள், ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழக தலைமையகமான பல்லவன் இல்லம் முன்பு அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் – சிஐடியு சார்பில், தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் ஆர்.துரை தலைமை வகித்தார். சிஐடியு மாநிலத் தலைவர்…
புதுடெல்லி / ஹைதராபாத்: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணியின் பொது வேட்பாளராக ஓய்வுபெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி (79) அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21-ம் தேதி ராஜினாமா செய்தார். இந்தப் பதவிக்கு செப். 9-ல் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த சூழலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ் ணன் அறிவிக்கப்பட்டுள்ள்ளார். தற்போது அவர் மகாராஷ்டிர ஆளுநராக பதவி வகிக்கிறார். அவரை ஏகமனதாக தேர்வு செய்ய பாஜக தலைமை தீவிர முயற்சி செய்தது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் கார்கே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களிடம் ஆதரவு கோரினார். ஆனால், இந்த முயற்சி வெற்றி பெறவில்லை. கடந்த 17-ம் தேதி என்டிஏ கூட்டணி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன…
சென்னை: எந்த நிதிமோசடி வழக்கிலாவது 2 ஆண்டுகளுக்குள் வழக்கை முடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுத்த வரலாறு உள்ளதா என பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்நிறுவன இயக்குநர் தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 6 பேரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி தேவநாதன் யாதவ் உயர் நீதிமன்றத்தில் மூன்றாவது முறையாக தாக்கல் செய்திருந்த மனு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்து வழக்கு விசாரணையை நீர்த்துப்போகச் செய்து விடுவார் என்று குறிப்பிட்டார். அந்த வாதத்தை ஏற்க…
புதுடெல்லி: ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆன்லைன் சூதாட்டத்தில் பல மோசடிகள் நடைபெறுவதால் பலர் தங்கள் சேமிப்பு பணத்தை இழப்பதோடு, கடன் சுமைக்கு உள்ளாகி தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகம் நடைபெறுகின்றன. இதற்கு அபராதம் விதிக்கவோ அல்லது தண்டனை வழங்கவோ மாநில அரசு சட்டங்களில் இடம் இல்லை. இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் அல்லது தடை விதிக்க வேண்டும் என பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பல முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த மசோதா ஆன்லைன் விளையாட்டு தளங்களை சட்ட வரம்புக்குள் கொண்டு வந்து, டிஜிட்டல்…