இந்தி நடிகர் ரன்வீர் சிங் நடித்துவரும் படம்,’துரந்தர்’. இதில், மாதவன், சஞ்சய் தத், அக்ஷ்ய் கன்னா, சாரா அர்ஜுன் என பலர் நடிக்கின்றனர். ஆதித்யா தர் இயக்கும், ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் படமான இதன் படப்பிடிப்பு காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் குழந்தைகள் உள்பட சுமார் 600-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உணவு உண்ட பின், திடீரென, குழந்தைகள் உள்பட சுமார் 120 பேருக்கு கடுமையான வயிற்று வலி, வாந்தி மற்றும் தலைவலி ஏற்பட்டடு. இதை அடுத்து, அவர்கள் அருகிலுள்ள எஸ்என்எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை அளித்த மருத்துவர்கள், உணவு விஷமானதால் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். பெரும்பாலானோர் திங்கட்கிழமை மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மற்றவர்கள் விரைவில் டிஸ்சார்ஜ் ஆவார்கள் என்று கூறப்படுகிறது.
Author: admin
தலைமுடிக்கு உலகளாவிய நன்மைகளைக் கொண்ட உள்ளூர் இந்திய புதையல், மண்டு கி இம்லி, அல்லது பாபாப் எண்ணெய் ஆகியவற்றின் அதிசயங்களைக் கண்டறியவும். வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பிய இந்த ஊட்டச்சத்து நிறைந்த எண்ணெய், உச்சந்தலையை வளர்ப்பது, முடியை வலுப்படுத்துகிறது, மீண்டும் வளர்ப்பை ஊக்குவிக்கிறது. வழக்கமான பயன்பாடு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன் இணைந்து, தடிமனான, பளபளப்பான மற்றும் வலுவான கூந்தலுக்கு வழிவகுக்கும், இது பல்வேறு முடி கவலைகளுக்கு இயற்கையான தீர்வாக அமைகிறது. நீங்கள் எப்போதாவது மத்திய பிரதேசத்தில் உள்ள மண்டுவுக்குச் சென்றிருந்தால், நீங்கள் ஒரு கதைப்புத்தகத்திலிருந்து வெளியே வந்ததைப் போல தோற்றமளிக்கும் உயரமான, ரஸ-டிரங்க் மரங்களைக் கண்டிருக்கலாம். அதுதான் பாபாப் மரம், அல்லது உள்ளூர்வாசிகள் அதை அழைப்பது போல, மண்டு கி இம்லி. பெயர் அதன் உறுதியான பழத்திலிருந்து வருகிறது, இது ஒரு பெரிய புளி நெற்று போல் தெரிகிறது. ஆனால் உள்ளே, இது நன்மையின் முழு புதையல் மார்பு.இந்த மரம் ஆப்பிரிக்காவில்…
சூரத்: குஜராத் மாநிலம், சூரத் நகரில் வைரங்கள் பட்டை தீட்டப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நகரின் கபோத்ரா பகுதியில் தேவேந்திர சவுத்ரி என்பவர் வைரங்களுக்கு பட்டை தீட்டும் தொழிற்கூடம் நடத்தி வருகிறார். கடந்த திங்கட்கிழமை இவரது தொழிற்கூடத்தில் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு, பக்கத்து கடைக்காரர் அவருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து தேவேந்திர சவுத்ரி விரைந்து வந்து பார்த்ததில் தொழிற்கூடத்தில் இருந்த இரும்பு பெட்டகம், காஸ் கட்டர் மூலம் வெட்டி எடுக்கப்பட்டு அதில் இருந்த வைர கற்கள் கொள்ளைபோனது தெரியவந்தது. இரும்பு பெட்டகத்தில் ரூ.32.48 கோடி மதிப்பிலான பட்டை தீட்டப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்படாத வைர கற்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த 15-ம் தேதி பிற்பகலுக்கு பிறகு கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வாராந்திர விடுமுறை காரணமாக தொழிற்கூடம் மூடப்பட்டிருந்து. இந்நிலையில் தொடர் விடுமுறையை பயன்படுத்தி கொள்ளையர்கள் வைர கற்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும் தொழிற்கூடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா சாதனங்களையும் அவர்கள்…
ராஜ்கிர்: ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் வரும் 29-ம் தேதி முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை பிஹார் மாநிலம் ராஜ்கிரில் நடைபெறுகிறது. 8 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி வரும் 2026-ம் ஆண்டு பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கு நேரடியாக தகுதி பெறும். பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா நடத்திய சிந்தூர் ஆபரேஷன் நடவடிக்கையால் ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்பது நிச்சயமற்றதாக இருந்தது. எனினும் இந்த தொடரில் கலந்து கொள்வதற்கு பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்தது. ஆனால் பாகிஸ்தான் ஹாக்கி அணி பாதுகாப்பு காரணங்களை கூறி வரமறுத்தது. இந்நிலையில் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் பாகிஸ்தான், ஓமன் அணிகளுக்கு பதிலாக வங்கதேசம், கஜகஸ்தான் அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இதன்படி ‘ஏ’ பிரிவில் இந்தியா, சீனா, ஜப்பான், கஜகஸ்தான்…
ஆண்ட்ரியா நடித்துள்ள ‘மனுஷி’ படத்தை கோபி நயினார் இயக்கியுள்ளார். இயக்குநர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. இதில் 37 ஆட்சேபகரமான காட்சிகளும், வசனங்களும் உள்ளதாகக் கூறி அந்த காட்சிகள், வசனங்களை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வெற்றிமாறன் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நடந்தது. அப்போது வெற்றி மாறன் தரப்பி்ல், ‘மனுஷி’ படத்தில் எந்தவொரு ஆட்சேபகரமான காட்சிகளும் இடம்பெறவில்லை. விதிகளுக்கு புறம்பாக, தணிக்கை வாரியம் 37 காட்சிகளை நீக்கக்கோரியுள்ளது. இந்த விஷயத்தில் உயர் நீதிமன்றம் தான் முடிவெடுக்க முடியும், என வாதிடப்பட்டது. அதையடுத்து நீதிபதி, அந்த படத்தில் ஆட்சேபகரமான காட்சிகள் உள்ளதா, இல்லையா என்பதை படத்தைப் பார்த்து அதன்பிறகே முடிவுக்கு வரமுடியும். எனவே ஆக.24 அன்று இப்படத்தை சென்னை இசைக்கல்லூரியில் உள்ள திரையரங்கில் பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்ய படக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார். அப்போது தணிக்கை…
புதுடெல்லி: அமெரிக்காவுக்கான இந்திய பொருட்களின் ஏற்றுமதி 7 மடங்கு வரை அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான புதிய வரி விகிதங்களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதன்படி இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக 25 சதவீத வரி விதிப்பு கடந்த 7-ம் தேதி அமலுக்கு வந்தது. மேலும் 25 சதவீத வரி விதிப்பு வரும் 27-ம் தேதி அமலுக்கு வரும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்படுகிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளார். இந்த சூழலில் அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு அமலுக்கு வருவதற்கு முன்பாக அந்த நாட்டுக்கு அனுப்பப்படும் இந்திய பொருட்களின் அளவு சுமார் 7 மடங்கு வரை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பொருளாதார நிபுணர்கள் கூறியதாவது:…
மலச்சிக்கல் உண்மையில் அமெரிக்காவில் மிகவும் பொதுவானது. மக்கள்தொகையில் சுமார் 15% நாள்பட்ட மலச்சிக்கலுடன் கையாள்கிறது, மதிப்பீடுகள் எவ்வாறு வரையறுக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்து சுமார் 9% முதல் 20% வரை கூட உள்ளன. அதாவது பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் இந்த பிரச்சினையுடன் போராடுகிறார்கள்! இது ஒரு “பழைய நபரின் பிரச்சினை” மட்டுமல்ல – இது 65 வயதிற்கு மேற்பட்டவர்களில் அடிக்கடி நிகழ்கிறது (மூன்றில் ஒரு பங்கு பாதிக்கப்படலாம்), இது எந்த வயதிலும் நிகழலாம். பெண்கள் மலச்சிக்கல் என்று சொல்வதை விட ஆண்களை விட மூன்று மடங்கு அதிகம், மேலும் இது அல்லாத மக்களிடையே அதிகம் புகாரளிக்கிறது.மக்கள் பெரும்பாலும் அதைப் பற்றி தங்கள் மருத்துவர்களிடம் பேசுவதில்லை – இது சங்கடமாக இருந்தாலும் கூட. பெரும்பாலான மக்கள் அதை மருந்துகளை விட மேலதிக தீர்வுகளுடன் கையாள முயற்சிக்கிறார்கள். நீங்கள் மலச்சிக்கலை உணர்ந்தால், நீங்கள் நிச்சயமாக தனியாக இல்லை, மேலும் மக்கள் ஜி.ஐ. மருத்துவரைப் பார்ப்பதற்கு இது மிகவும்…
மும்பை: மும்பையில் தொடரும் கனமழை காரணமாக அரசு அலுவலங்கள், தனியார் நிறுவனங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு தனியார் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் கடந்த 4 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. நேற்று பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் புரண்டோடியது. மேலும் முக்கிய சாலை சந்திப்புகளில் வெள்ளம் சூழ்ந்து நிற்பதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. மும்பை உட்பட மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. கனமழை காரணமாக மும்பையில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை, வெள்ளம் காரணமாக மும்பையில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த…
கெய்ன்ஸ்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது ஆஸ்திரேலிய அணி. ஆஸ்திரேலியாவின் கெய்ன்ஸ் நகரில் உள்ள கசாலிஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 296 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான எய்டன் மார்க்ரம் 81 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் விளாசினார். கேப்டன் தெம்பா பவுமா 74 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 65 ரன்களும், மேத்யூ ப்ரீட்ஸ்கே 56 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 57 ரன்களும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் டிராவிஸ் ஹெட் 4 விக்கெட்களையும், பென் டூவார்ஷுயிஸ் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 297 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 40.5 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் மிட்செல் மார்ஷ் 96 பந்துகளில்,…
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சல்மான் கான் நடித்த இந்தி படம், ‘சிக்கந்தர்’. இதில் ராஷ்மிகா மந்தனா , பிரதீக் பப்பர், சத்யராஜ் என பலர்நடித்தனர். பிரம்மாண்ட ஆக் ஷன் படமான இது வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இந்தப் படத்தின் தோல்விக்கு தான் மட்டுமே காரணம் இல்லை என ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “சல்மான் கானை வைத்து படப்பிடிப்பு நடத்துவது எளிதானதல்ல. அவர் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் பகலிலும் பொதுவெளியிலும் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. அவர் இரவு 8 மணிக்குத்தான் படப்பிடிப்புக்கு வருவார். காலையில் இருந்து நாங்கள் படப்பிடிப்பில் இருப்போம். ஒவ்வொரு இரவிலும் பகல் போல ‘செட்’ அமைத்து படப்பிடிப்பு நடத்தினோம். எல்லாக் காட்சிகளையும் கிரீன் மேட், கிராபிக்ஸில் எடுத்தால் எப்படி இருக்கும்? ஆனால் இந்தக் கதை என் மனதுக்கு நெருக்கமானது” எனக் கூறியுள்ளார். முருகதாஸின் இந்தக் கருத்து, சல்மான் கான் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.…